Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் நிலையான சமாதானத்தையும் அதிகார பகிர்வையும் கொண்டுவரும் முயற்சிகளில் இந்தியா தோல்வியடைந்துவிட்டது - ரணில் விக்கிரமசிங்க

Featured Replies

இலங்கையில் நீடித்து நிலைக்கக் கூடிய நிலையான சமாதானத்தையும் அதிகார பகிர்வையும் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் இந்தியா தோல்வியடைந்துவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


கிழக்கு மாகாணத்திற்கு சென்றுள்ள ரணில் விக்ரமசிங்க, இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு நகரில் உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டார்.

 

2009-ம் ஆண்டு தம்மிடமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழர் தரப்பிடமும் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தவும் அதற்கு மேலும் சென்று அதிகாரத்தைப் பகிரவும் இலங்கை அரசு உறுதியளித்துள்ளதாக இந்திய அரசு கூறியது. ஆனால் அந்த உறுதிமொழி இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்று ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.


இலங்கை அரசு தமக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றச்செய்வதில் இந்திய அரசு தோல்வியடைந்துள்ளதால் இனிமேல் அந்த பாதையில் பயணிக்க முடியும் என தான் நம்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

'நாட்டிலுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஓரே வழி அனைத்து சமுகங்களும் இணைந்து பணியாற்றுவதே. காரணம் பெரும்பான்மை சமூகம் மீது சில கோரிக்கைகளை திணித்து அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தால் எதுவுமே செய்ய முடியாத நிலை ஏற்படும்' என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

 

'நாட்டில் தமிழ் மக்கள் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். அவர்களது பிரச்சனை தற்போது சர்வதேச ரீதியில் பெரும் பிரச்சனையாக எழுந்துள்ளது. இந்தியா உட்பட பல இடங்களில் இப்போது இது எதிரொலிக்கிறது.இந்த விவகாரம் இந்தியாவை ஆளும் அரசாங்கத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது' என்றும் ரணில் மேலும் குறிப்பிட்டார்.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/03/130330_ranilindia.shtml

  • தொடங்கியவர்

பிரபாகரன் பாரிய சிக்கலை தோற்றுவித்துள்ளார்: ரணில்

 

'கடந்த 2005ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பொதுமக்களை வாக்களிக்க விடாமல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தடுத்தார். இதனால் அவர், பொதுமக்களுக்கு பாரிய சிக்கலை தோற்றுவித்துள்ளார்' என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

 

 

மட்டக்களப்புக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, இன்று சனிக்கிழமை பகல் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் மாதாந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இது ஒரு முக்கியமான தருணம். இன்று நாம் மேற்கொள்கின்ற காரியங்கள் எதிர்காலத்தில் ஒரு அரசியல் மாற்றத்தைத் தீர்மானிக்கும். ஏனெனில் இந்த அரசு விருப்பத்தின் பேரில் தனது அதிகாரங்களைக் கைவிடாது. அதனை நாம் ஏற்படுத்தும் சூழ்நிலையில் இருக்கின்றோம். எனவே வன்முறையற்ற ஓர் ஐக்கிய ஒற்றுமையை நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் தான் தேர்தலுக்குச் செல்ல வேண்டும்' என்றார்.

 

'நான் கடந்த காலத்தைப் பற்றி பேச விரும்பவில்லை. எல்லோரும் தவறு விட்டிருக்கின்றோம். நான் ஒன்று கூறினால் அதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா என்று தெரியவில்லை. இருப்பினும் நான் அதைக் கூறியே ஆக வேண்டும். 2005ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது பொதுமக்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வாக்களிக்கச் செல்ல விடாதமையினால் மக்களுக்கு பாரிய ஒரு சிக்கலை உருவாக்கியிருக்கின்றார் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதன் மூலம் அவர் தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாது நாட்டின் ஏனைய இன மக்களுக்கும் சிக்கலான நிலையினையே ஏற்படுத்தியுள்ளார்' என்றார்.


'பிரபாகரனின் வாரிசுகளும் இன்று அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுகின்றனர். பிரபாகரனை ஏற்றிச்செல்ல வந்த கப்பலுக்கும் என்னவாயிற்று? எல்லாக் கதைகளும் முடிந்து விட்டன. இப்போதாவது நாம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தியாவுடன் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது. தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவினால் எதனையும் செய்ய முடியாது இதில் இரண்டு விடயங்கள் உள்ளன. ஒன்று இலங்கை அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீர்மானங்களை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. மற்றையது தற்போது இலங்கையின் பிரச்சனை அந்நிய பிரச்சினையாகிவிட்டது.

 

இதனால் அவர்கள் இன்னுமொரு தேர்தலுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.  2009ம் ஆண்டு தீர்மானங்களை செய்ய வேண்டம் என்று ஊலகம் இன்று கேட்கிறது. அதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றைய பெரிய கட்சி ஐ.தே.கட்சி தான் இந்த பின்னனியில் கொள்கைகள் பற்றிதான் நாம் இப்போது பேசிக்கொண்டிருக்கின்றோம்.

 

தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் நாம் பேச்சுவார்த்தை மேற்கொண்ட வண்ணமே இருக்கின்றோம். எமது கொள்கைகள் கல்வி சம்மந்தமாகவும் அமைந்திருக்கின்றது. கொள்கைகள் வந்த பின் தான் நிறுவன மயமாக்கலை உருவாக்க வேண்டும் என்று நாம் காத்திருக்க முடியாது சமாந்தரமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


இதன் அடிப்படையில் நாம் அனைத்து மாவட்டங்களையும் நோக்குகையில் மட்டக்களப்பு மாவட்டம் பின்னணியில் இருக்கின்றது. தென் மாகாணத்தில் பிரசாரத்தில் நாம் முன்னனியில் நிற்கின்றோம். திருகோணமலையில் நாம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுகின்றோம் வடக்கிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இருக்கின்றது.

மட்டக்களப்பை பொறுத்த வரையில் எந்த அமைப்புகளும் இல்லை ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தலில் வெற்றி பெறுகின்றது. எமக்கு தேவை இங்கு ஒரு அமைப்பினை உருவாக்குவது. நாம் உருவாக்கலாம் நாம் தைரியமாகச் சொல்லாம.; ஐ.தே.கட்சிக்கு இது ஒரு நல்ல நேரம்.


இரண்டு விடயங்கள் உள்ளன. இதில், எவ்வாறு சிவில் சமுகம் மக்கள் படையணியில் சேர்ந்து கொள்வதென்பது மற்றையது யார் இவற்றில் முன்னணி வகிப்பது என்பது தமிழ் பிரதேசங்களில் யார் முன்னிலை வகிப்பது எனபதை த.தே.கூ தீர்மானிக்கும் முஸ்லீம் பிரதேசங்களைப் பிரதேசத்த பொறுத்தவரையில் வரையில் ஐ.தே.க தீர்மானிக்கும்.

ஐ.தே.கட்சியில் நிலைப்பாட்டை எவ்வாறு மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதனை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். அதனை தீர்மானித்து கொழும்பில் இருக்கும் எமது காரியாலயத்தில் வந்து தெரிவிக்கலாம்' என ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறினார்.


மட்டக்களப்பு இணையத்தின் தலைவர் வி.கமலதாஸ் தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் செயலாளர் லவகுமார் மற்றம் பொருளாளர் செல்வகுமார் மற்றும் செல்வேந்திரன், சல்மா ஹம்ஸா மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்க மற்றும் கட்சியின் பொருளாளர் டி.பி.சுவாமிநாதன் மற்றும் ஹர்ஸ குணவர்தன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-14-24/62178-2013-03-30-11-39-59.html

2005 ம் ஆண்டுதேர்தலில் பிழைவிடவேண்டி வந்தது ரணில் கேட்டுக்கொண்டதற்கமையவே. ரணில் புலிகள் அமைப்பிலிருந்து வெற்றிகரமாக கருணாவை உடைத் தெடுத்து தமிழ் மக்களின் எதிர் காலத்தை கேள்விக்குறியாக்கினார். அதாவது புலிகளின் இருப்பை அழித்து அவர்களை தனக்கு எதிராக செயல்ப்படும் கேட்டார்.

 

சிங்கள் மக்கள் மீது இனி இந்தியா தீர்வை திணிக்காது. காங்கிரஸ் போய்ச்சேர்ந்த்துவிடும். தமிழ்மக்கள் சிங்கள மக்கள் மீது தீர்வை திணிக்காமல் இருப்பத்தற்கு ஒரே வழி அவர்கள் தமது நாட்டை பெற்றுக்கொள்வது. அவர்கள் தங்கள் நாட்டை தாங்கள் பெற்றுக்கொள்வது எந்த வகையிலும் சிங்கள மக்கள் மீது திணிப்பாகாது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அணில் முகமே..ஒரு தரித்திரம் பிடித்த மாதிரி..ஒன்றுக்குமே ஏலாத ஒன்று...இது தமிழனிடம் போய் தான் ஒரு தலைவன் என்று காட்டி...கூட்டப்மை பைஉடைக்கிறதுக்கு மகிந்தவின் தரகராகத்த் திரியுது ..உது தெரியாமல் சம்பந்து கொடிபிடிக்குது...எங்கடையள் கோவில் குளமெல்லாம்  கூட்டித்திரிந்து  பிள்ளை வரம்  பெற்றுக் குடுக்குது....நம்ம சனம் திருந்தவே திருந்தாது....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.