Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச சமூகம் கிளிநொச்சி தாக்குதல் சம்பவத்திற்குப் பதில் கூற வேண்டும்! - சுரேஷ் பிரேமச்சந்திரன்

Featured Replies

சர்வதேச சமூகம் கிளிநொச்சி தாக்குதல் சம்பவத்திற்குப் பதில் கூற வேண்டும்! - சுரேஷ் பிரேமச்சந்திரன்

                                               6bd5334f-210f-4ad5-9506-1a1e0830a9171.jp

  

'இலங்கை அரசுக்கெதிராக நடவடிக்கைகளை எடுக்காமல் கால அவகாசம் வழங்கிக்கொண்டிருக்கும் சர்வதேசம் சமூகம் தான் கிளிநொச்சி தாக்குதல் சம்பவத்திற்கு பதில் கூறவேண்டும்.'

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் கிளிநொச்சி அலுவலகம் மீதும், அங்கு நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் மீதும் குண்டர்களினால் நடத்தப்பட்ட கல்லெறித் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்தவை வருமாறு:-

சர்வதேசத்தின் பார்வை தற்போது வடக்கு மீது இருந்துகொண்டிருக்கும் நிலையில் இராணுவத்தினர், புலனாய்வுப் பிரிவினர் மற்றும் குண்டர்கள் இணைந்து இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதற்குப் பொலிஸார் பாதுகாப்பு வழங்கியுள்ளனர். நீதியை நிலைநாட்ட வேண்டிய பொலிஸார் காடைத்தனங்களுக்குத் துணைபோகின்றனர்.

வடக்கில் இராணுவ அடக்குமுறையின் உச்சமாகவே பொதுமக்கள் மீதும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் அலுவலகம் மீதும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனவே, இலங்கை அரசுக்கெதிராக நடவடிக்கைகளை எடுக்காமல் கால அவகாசம் வழங்கிக்கொண்டிருக்கும் சர்வதேசம் சமூகம் தான் இதற்குப் பதில் கூறவேண்டும் என்று தெரிவித்தார்.

இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பில் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கருத்துத் தெரிவிக்கும்போது,

பொதுமக்களை கூட்டமைப்பினர் சந்திப்பதைக் குழப்பியடிப்பதை நோக்கமாகக்கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரச படைகளின் அட்டூழியங்கள் வடக்கில் நாளுக்குநாள் அதிகரித்து வருவதை இந்தத் தாக்குதல் சம்பவம் எடுத்துக்காட்டியுள்ளது.

இதில் காயமடைந்த எமது மக்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களை சென்று நாம் பார்வையிட்டுள்ளோம்.

மக்கள் மீதும் எமது அலுவலகம் மீதும் அரச படைகளினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த அராஜகத்தை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வோம். எமக்கு நீதி வேண்டும் என்று தெரிவித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்.

 

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=6bd5334f-210f-4ad5-9506-1a1e0830a917

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் கிளிநொச்சி அலுவலகம் மீது அரசதரப்பினர் தாக்குதல்! - பலர் காயம்!!
<p>நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் கிளிநொச்சி அலுவலகம் மீது அரசதரப்பினர் தாக்குதல்! - பலர் காயம்!!</p>



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் கிளிநொச்சி அலுவலகம் சிறிலங்கா படைத்தரப்பின் புலனாய்வாளர் மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், மாவை சேனாதிராஜா, சுமந்திரன் மற்றும் சரவணபவன் ஆகியோர் கிளிநொச்சியில் பொதுமக்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பை நடத்திக் கொண்டிருந்த போதே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என 13 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்கள் பலவும் சேதமாக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, இக்கூட்டத்துக்கு பாதுகாப்பு வழங்க என நின்றிருந்த சிறிலங்கா பொலிஸார் முன்னிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அத்துடன், இத்தாக்குதலில் ஈடுபட்ட சிலர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலக வளாகத்தினுள் பிரவேசிக்க முயன்றபோது, முதலில் இருவரையும் பின்னர் மற்றுமொருவரையும் அங்கிருந்தவர்கள் பிடித்து சிறிலங்கா பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஆயினும் நடந்த தாக்குதல் சம்பவத்திற்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை எனக் கூறி அவர்களை சிறிலங்கா பொலிசார் விடுவித்து விட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.

மூன்றாவதாகப் பிடிபட்டவரை சிறிலங்கா பொலிசார் சோதனையிட்டபோது, அவரிடம் சிறிலங்கா படைத்தரப்பு புலனாய்வாளரின் அடையாள அட்டை இருந்ததாகவும், எனினும் அவர் அப்பொழுதுதான் அவ்விடத்திற்கு வந்ததாகக் கூறி அவரையும் சிறிலங்கா பொலிசார் விடுவித்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=d690c6a7-fcc7-4d3c-bbd8-4154b92a13e2
 

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசம்.. :D

  • தொடங்கியவர்

அரச படைகளின் பாதுகாப்புடன் வந்த குண்டர்களே கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்தினர்! - சரவணபவன்


2865c448-0b14-4e40-9422-9858d555e0b51.jp


'இராணுவம், பொலிஸார், புலனாய்வுப் பிரிவினர் ஆகியோரின் பாதுகாப்புடன் சிங்கக்கொடியுடன் வந்த குண்டர்களே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலகம் மீதும் மக்கள் மீதும் தாக்குதல் நடத்தி அராஜகம் புரிந்துள்ளனர். இதனூடாக வடக்கில் இராணுவ ஆட்சி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது என்பது நிரூபணமாகியுள்ளது.'

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் கிளிநொச்சி அலுவலகத்தில் இன்று மக்கள் சந்திப்புக் கூட்டம் ஒன்று நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற இக்கூட்டத்தில் நானும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிறிதரன், சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு மக்களுடன் உரையாடிக்கொண்டிருந்தோம். இதில் இருநூற்றுக்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

அவ்வேளை, முற்பகல் 11 மணியளவில் கூட்டத்தைக் குழப்புவதற்கென 50 இற்கு மேற்பட்ட குண்டர்கள் இராணுவம், பொலிஸார், புலனாய்வாளர்கள் ஆகியோரின் பாதுகாப்புடன் வாகனத்தில் கொண்டுவரப்பட்டு கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலகத்திற்கு அருகாமையில் இறக்கப்பட்டனர்.

ஆர்ப்பாட்டம் நடத்துவது போல அங்கு வந்திறங்கிய இவர்கள், இலங்கையின் தேசியக் கொடியான சிங்கக்கொடியை கைகளில் ஏந்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக கட்சி அலுவலகத்தை நோக்கி வந்தனர்.

இவ்வாறு வந்த குண்டர்கள், திடீரென கட்சி அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து சரமாரியாகக் கற்களை வீசி மக்கள் மீதும், அலுவலகம் மீதும் தாக்குதல் நடத்தி பெரும் அராஜகத்¬தைப் புரிந்துள்ளனர். இதில் கூட்டத்தில் கலந்துகொண்ட 20 இற்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். அத்துடன் அலுவலகத்தின் உடமைகளும் சேதமடைந்தன.
அரச படைகளின் பாதுகாப்புடன் வந்த குண்டர்களே கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்தினர்! - சரவணபவன்

அதேவேளை, குறித்த அலுவலகம் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்கள் மீதும் மேற்படி குண்டர்கள் கற்களை வீசி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

ஆனால், இவர்கள் இந்த அராஜகத்தைப் புரிந்த வேளை கூட்டத்துக்கு பாதுகாப்பு வழங்கவென வந்திருந்த பொலிஸார், அலுவலகத்திற்கு வெளியில் நின்ற கிளிநொச்சி பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இதனைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். அதாவது தாக்குதல் நடத்தியவர்களுக்கே அவர்கள் பாதுகாப்பு வழங்கிக்கொண்டிருந்தனர்.

சுமார் 15 நிமிடத்திற்கு மேல் தமது அட்டகாசத்தைக் காட்டிய குண்டர்கள் பின்னர் அங்கிருந்து வெளியேறினர்.
2865c448-0b14-4e40-9422-9858d555e0b54.jp
இதன்போது குண்டர்களில் ஒருவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார். அந்நபர் தான் இராணுவ புலனாய்வுப்பிரிவு என அடையாள அட்டை மூலம் தெரியப்படுத்தியுள்ளார். இதனையடுத்து அவரை மக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். எனினும், பொலிஸார் குறித்த நபரை கைதுசெய்யாமல் அந்த இடத்திலேயே விடுவித்துள்ளனர்

இந்தக் காட்டுமிராண்டித்தனமான சம்பவம் அரச தரப்பின் அனுமதியுடனும் பொலிஸார், இராணுவம், புலனாய்வுப் பிரிவினர் ஆகியோரின் பாதுகாப்புடனும் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என்பது நிரூபணமாகியுள்ளது. அத்துடன் இந்தத் தாக்குதல் சம்பவத்தில் இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர் என்பது அம்பலமாகியுள்ளது.

இதனூடாக வடக்கில் இராணுவ ஆட்சி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

இவ்வாறு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்தார்.

 

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=2865c448-0b14-4e40-9422-9858d555e0b5

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

கிளிநொச்சியில் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து விட்டனர்: பிரபா காட்டம்
கிளிநொச்சியில் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து விட்டனர்: பிரபா காட்டம்

March 30, 2013 05:46 pm
Bookmark and Share
கிளிநொச்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நடத்திய கூட்டத்தின் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தியமை காட்டுமிராண்டித்தனமானதும் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயலானதும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது,

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அமைதியான முறையில் கிளிநொச்சியில் நடத்திய கூட்டத்தின் மீது கல்லெறிந்த சம்பவத்தினை கேள்விப்பட்டவுடன் இது சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவனுடன் தொடர்புகளை ஏற்படுத்திய பொழுது அவர் மூலமாக முழுமையான சம்பங்களை தெரிந்து கொண்டேன். தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் அவர்களது அரசியல் ரீதியான கொள்கைகளுடன் எமக்கு முரண்பாடு இருந்தாலும் இவ்வாறான அனாகரீக காட்டு மிராண்டித்தனமான செயல்களை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்திய பொழுது அங்கு கடமையிலிருந்த பொலிஸார் கல்லெறிந்தவர்களை கைது செய்யவோ அல்லது தடுக்க முற்படவோ முற்படவில்லை என்பதை பார்க்கும் பொழுது இது திட்ட மிட்ட செயல் என்பதை ஊர்ஜிதப்படுத்துகின்றது.

அதே போல் பாராளுமன்ற உறுப்பினர்களின் மெய்பாதுகாவலர்கள் முறையான பாதுகாப்பை இவர்களுக்கு வழங்கவில்லை. குறைந்தபட்சம் தமது துப்பாக்கிகளை கூட அவர்கள் வெளியில் எடுக்கவில்லை என்பது கவலைக்குறிய விடயமாகும். பாராளுமன்ற உறுப்பினரின் வேண்டுகோளுக்கமைய பிடிபட்ட ஒருவரும் பொலிஸ் புலனாய்வுத் துறையைச் சார்ந்தவர் என்பது அவரது அடையாள அட்டை மூலம் நிரூபணமாகின்றது.

1970களில் தமிழாயச்சி மாநாடு இடம்பெற்ற போது அப்போதிருந்த தமிழ் தலைவர்கள் மீது பெரும்பான்மையின பொலிஸார் நடத்திய தாக்குதலின் மூலமாகவே இளைஞர்கள் ஆயுதம் ஏந்த முற்பட்டனர் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் இப்படியான ஒரு நிலையை நாட்டில் தோற்றுவிப்பதற்கு இடம் பெறும் முயற்சிகளை உடனடியாக முறியடிக்க வேண்டும்.

இது சம்பந்தமான முழுமையான விசாரணை நடைபெற வேண்டும். நடைபெற்ற சம்பவத்திற்கு எனது முழுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு இது சம்பந்தமாக விசாரணையை முன்னெடுப்பதற்கு அரச உயர் மட்டத்தின் கவனத்திற்கும் கொண்டு வருவேன் என குறிப்பிட்டுள்ளார்.

http://www.adaderana.lk/tamil/news.php?nid=37061

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு சர்வதேச ரீதியில் ராஜதந்திர, அரச பிரதிநிதிகள், ஊடகங்கள் என பலருடன் தொடர்பில் இருக்க வேண்டும். தமிழருக்கான சிங்கள அரசின் அடாவடி தனங்கள் நொடிப்பொழுதில் உலகின் ஊடகங்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும். மீண்டும் தற்போது தமிழ் மக்கள், தலைவர்களின் உயிர், உடமை சர்வதேசத்தால்  மட்டுமே காப்பாற்ற முடியும்.

  • தொடங்கியவர்

 

 

இலங்கை நிலமை மோசமாகும்! – கிளிநொச்சித் தாக்குதலுக்கு முஸ்லிம் காங்கிரஸ் கண்டனம்!!

 

5c56af98-82fc-4347-b4c2-363f1943ca0f1.jp

 

 

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சிக் கூட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

 

கிளிநொச்சியிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற கூட்டத்தின் மீது சிங்கக்கொடியுடன் வந்த குண்டர்கள் மிலேச்சத்தனமான தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டனர்.

 

இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்து கருத்து வெளியிட்ட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹஸனலி மேலும்  கூறியவை வருமாறு:

 

கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அந்தக் கருத்தைச் சொல்வதற்குரிய உரிமை பாதுகாக்கப்படவேண்டும் என்ற விடயத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுதியாக இருக்கின்றது.

 

எதிர்க்கட்சிகள் என்பதால் அவை செய்யும் அனைத்தையும் குறை கூறிவிட முடியாது. பிரசாரங்களை முன்னெடுப்பதற்குரிய சுதந்திரம் இருத்தல் அவசியமாகும். அந்த அடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கின்றது.

 

அதுமட்டுமன்றி, அண்மைக் காலமாக இந்த நாட்டில் மத சுதந்திரம் கேள்விக்குறியாகியுள்ளது. எடுத்ததற்கெல்லாம் காடைத்தனம் கையிலெடுக்கப்படுகின்றது. சிலர் சட்டத்தைக் கையிலெடுத்துச் செயற்படுகின்றனர். எனவே, ஒரு சீரான சட்டம் ஒழுங்கைக் கொண்டுவராவிட்டால் இலங்கை மோசமான நிலைக்குச் செல்லும்.

 

இவ்வாறு முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹஸனலி தெரிவித்தார்.

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=5c56af98-82fc-4347-b4c2-363f1943ca0f

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.