Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன முரண்பாட்டைத் தூண்ட பாதுகாப்புச் செயலர் முயற்சி; குற்றஞ்சாட்டுகிறார் ஹக்கீம்

Featured Replies

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, பொதுபல சேனா அமைப்பின்
கூட்டங்களில் கலந்து கொள்வதன் மூலம் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல்களை
நடத்த ஊக்குவிக்கிறார் என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் குற்றம்
சாட்டியுள்ளார்.

பிக்கு ஒருவர் தலைமையிலான குழுவொன்று, அண்மையில், பெப்பிலியான பிரதேசத்தில்
உள்ள பெசன் பார்க் நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பாக
கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பொதுபல சேனாவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இனங்களுக்கு இடையில்
விரோதத்தையும், குரோதத்தையும் ஏற்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் அரசு
துரித நடவடிக்கை எடுக்காது போனால், அது தொடர்பாக சர்வதேசத்தின் கவனம்
திரும்பும் எனவும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொதுபல சேனா அமைப்பினால், தொடர்ந்தும் இலங்கை முஸ்லிம் மக்களுக்கு எதிராக
மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகள் தொடர்பாக அவசர அமைச்சரவைக் கூட்டம்
ஒன்றைக் கூட்டுமாறு தாம் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்து விட்டார்
எனவும் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

தனது கோரிக்கைக்கு பதிலளித்த ஜனாதிபதி, முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள்
குறித்து நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக்
கூட்டத்தின் போது கலந்துரையாடப்படும் என உறுதியளித்தார்.

எனினும், அது போதுமானதல்ல என்பதே எனது நிலைப்பாடு எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://onlineuthayan.com/News_More.php?id=416141936601871374

ஹக்கீம்!  உங்கள் கும்பல் அவரது மனிதாபிமா ன நடவடிக்கைகளை ஆதரிப்பதுதான் நல்லது. அதுவும் ஐ.நாடுகள் சபை வரை சென்று ஆதரிப்பதுதான் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
எதை வேண்டும் என்றாலும் சொல்லுங்க, ஆனால் கோத்தாவை குறை சொன்னால் எனக்கு கேட்ட கோபம் வரும், ஹக்கீம் நானா!  
 
இந்த ஹக்கீம், முள்ளிவாய்கால் அவலமே நடக்கவில்லை, மக்கள் அழிவு எல்லாமே பொய் என்று மேற்குலக TV ஒன்றிக்கு நாக்கினைப் புரட்டி பொய் சொன்ன போதே, அடப்பாவி அடுத்தது உனது இனம் தான் தாக்கப்படும்  என்று உணரவில்லையா என்று நினைத்தேன்.
 
அட்டகாசம் பண்ணிய ரிசாத் பதியுதின், சம்பந்தர் உடன் பேச வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு அடி, சாத்து விழுகுது போல.
 

First they came for you in 1915,
we did speak for you.

Then they came for us,
you did not speak because you were ONLY Muslim.

Now they came for you,

and they knew that we were weakened up enough NOT to be able to speak for you.

So my dear Muslim friends let Allah save you!

 

 

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.