Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் மனிதவுரிமை மீறல்களை பட்டியல் இடுகிறது சிறிலங்கா! - டில்லியை கையாள கொழும்பின் திட்டம்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் மனிதவுரிமை மீறல்களை பட்டியல் இடுகிறது சிறிலங்கா! - டில்லியை கையாள கொழும்பின் திட்டம்!

இலங்கையில் இந்தியப் படையினர் நிலை கொண்டிருந்த காலப்பகுதியில் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் பட்டியல் ஒன்றைத் தயாரிக்கும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து நம்பகமான - சுதந்திரமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ள.

நிலையில், சிறிலங்கா அரசாங்கம் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதன் பிரகாரம் இலங்கையில் இந்தியப் படையினர் நிலை கொண்டிருந்த காலப்பகுதியில் அவர்களால் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்பில் கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொள்ள சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

சிறிலங்காவின் சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இது தொடர்பிலான தயாரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

இதன் முதற்கட்டமாக ஜே.வி.பியின் இரண்டாவது கிளர்ச்சி இடம்பெற்ற காலப்பகுதியில் கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் சொத்து இழப்புகள் தொடர்பிலான கணக்கெடுப்பை மேற்கொள்ள சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்தக் கணக்கெடுப்பு அடுத்த மாதம் ஆரம்பமாகி, ஆறு மாதங்களுக்குள் முடிவடையும் என சிறிலங்காவின் சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தலைவர் சி.ஏ.குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

குறிப்பாக 1980களின் இறுதியில் இடம்பெற்ற ஜே.வி.பி கிளர்ச்சியின் போது பாதிக்கப்பட்ட பொலன்னறுவ மாவட்டத்தின் பகுதிகள், வவுனியா மற்றும் முல்லைத்தீவு போன்ற இடங்களில் இது தொடர்பிலான ஆய்வுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதையடுத்து, 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்துக்கும், 1990ஆம் ஆண்டு மார்ச் மாத்த்துக்கும் இடையிலான காலப்பகுதியில் இந்தியப் படையினரால் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்பிலான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், விடுதலைப் புலிகள் மற்றும் ஏனைய இயக்கத்தவர்களால் கொல்லப்பட்ட தமிழ் மக்கள், மற்றும் இயக்கங்களுக்குள்ளும், இயக்கங்களுக்கு இடையிலும் இடம்பெற்ற மோதல்களின் போது கொல்லப்பட்டவர்கள் தொடர்பிலான விபரங்களும் இந்தக் கணக்கெடுப்பின் போது கவனத்தில் கொள்ளப்படவுள்ளது.

1980இன் ஆரம்பத்தில் இலங்கையில் இடம்பெற்ற இந்தியத் தலையீட்டுக்குப் பின்னரான காலப்பகுதியில் கொல்லப்பட்டவர்களின் விபரங்களை வெளிப்படுத்துவதே இந்தக் கணக்கெடுப்பின் நோக்கமாகும்.

இதனை அடிப்படையாக வைத்து போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து நம்பகமான - சுதந்திரமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்தியா தன் மீது பிரயோகிக்கும் அழுத்தங்களைக் குறைக்க சிறிலங்கா அரசாங்கம் முயல்வதாகக் கருதப்படுகிறது.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=2e77a732-7764-4b09-8a15-a5b006473541

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்ட, காயப்பட்டவர்களின் விவரங்களையும் குணவர்த்தன சேகரிக்கவேண்டும்..!

இந்த செய்திகளால் சிங்கள இனவாதிகள் தங்களையே மகிழ்வு செய்யலாம். அவ்வளும்தான் தான் முடியும் !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.