Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கான நிதியுதவியை 20 சதவிகிதம் குறைக்கிறது அமெரிக்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

john%20heri.jpg

இலங்கைக்கு அளித்து வரும் நிதியுதவில் 20 சதவீதத்தை குறைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்கான பரிந்துரையை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான்கெர்ரி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்பித்துள்ளார்.

இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்த பிறகும் மனித உரிமை மீறல் அதிகரித்து வருவதாலும், மறுசீரமைப்பு மற்றும் அரசியல் நடவடிக்கைகள் மேம்படுத்தப்படாததாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் வடகிழக்கு பகுதியில் போரால் இடம்பெயர்ந்த மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த அமெரிக்கா முயற்சி மேற்கொண்டபோதிலும், அதற்கு பலன் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.அங்கு செயல்படுத்தப்படும் திட்டங்களில் ராணுவத்தின் தலையீடு அதிகமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதனால், அடுத்தாண்டு இலங்கைக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டிருந்த 8 பில்லியன் டாலர் நிதியுதவி, 6 பில்லியன் டாலராக குறைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அமெரிக்கா அளித்து வரும் நிதியுதவியில் பெருமளவு, நிதித்துறை சீர்திருத்தங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. வங்கதேசத்திற்கான நிதி உதவியையும் குறைத்துள்ள அமெரிக்கா, மாலத்தீவிற்கான நிதியுதவியை அதிகரித்துள்ளது.

 

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=20262:--20---&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

 

யாழில் இராணுவ (கோத்தா) ஆட்சியே நடக்கின்ற காரணத்தால் அமெரிக்க உதவிகள் குறைக்கப்படுகின்றன.

 

இராணுவத்தை அகற்றாமல் அங்கே மக்கள் ஆட்சி சாத்தியமில்லை.

உதவிகளும் மக்களை சென்றடைய போவதில்லை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தமாதிரியான சிறிய அழுத்தங்களுக்கு எல்லாம் சிறிலங்கா அடிபணியாது என்று அல்லது சீனா உதவும் என்று நாளை ஊடக அமைச்சர்  ஒரு அறிக்கை விடுவார்.   :icon_mrgreen:

 

 

580125182sri_lanka_flag.jpg

அமெரிக்க உதவி குறைப்பால் இலங்கைக்கு பாதிப்பில்லை

April 15, 2013  03:10 pm


 

அமெரிக்கா தான் வழங்கும் உதவிகளில் 20 சதவீதம் குறைத்தால் அதன்மூலம் இலங்கைக்கு பெரியளவு பாதிப்புக்கள் ஏற்படாதென இலங்கையின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா இலங்கைக்கு பண அடிப்படையில் உதவிகள் வழங்குவதில்லை எனவும் இலங்கைக்கு அமெரிக்கா வழங்கும் வள உதவிகள் ஒரு கல்வி வட்டியாகவே அமையும் எனவும் அந்த அதிகாரி குறிப்பிடுள்ளார்.

 

 

http://www.adaderana.lk/tamil/news.php?nid=37762

 

 

 

Edited by மல்லையூரான்

இலங்கைக்கான ஆடைகள் ஏற்றுமதி உதவிகளை நிறுத்தினால், ஜி.எஸ்.பி. சலுகை, இலங்கை மடிந்து விடும் !

இலங்கைக்கான ஆடைகள் ஏற்றுமதி உதவிகளை நிறுத்தினால், ஜி.எஸ்.பி. சலுகை, இலங்கை மடிந்து விடும் !

 

தொடரும் ஊடக அடக்குமுறையைக் காட்டி இதை நிறுத்தவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'அமெரிக்க நிதிக் குறைப்பால் பாதிப்பில்லை'

index(643).jpg

ஐக்கிய அமெரிக்காவினால் இலங்கைக்கு வழங்கப்படுகின்ற உதவி குறைக்கப்படுவதன் மூலம் நாட்டுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிரேஷ்ட அரச அதிகாரியொருவரை மேற்கோள் காட்டி தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டப்பட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்காவின் உதவியில் 20 சதவீதம் குறைக்கப்பட வேண்டும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி முன்மொழிந்துள்ளார்.

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/64004-2013-04-16-07-01-15.html

ஜப்பானும் உதவியை குறைத்தால் பலத்த பாதிப்பு ஏற்படும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.