Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கின் இராணுவப் பிரசன்னம் குறித்த கூட்டமைப்பின் குற்றச்சாட்டு நியாயமானது! - அமைச்சர் வாசுதேவ கருத்து!!

Featured Replies

 

வடக்கின் இராணுவப் பிரசன்னம் குறித்த கூட்டமைப்பின் குற்றச்சாட்டு நியாயமானது! - அமைச்சர் வாசுதேவ கருத்து!!

d8b907f9-788a-481e-9d2b-f67a32705a671.jp

'வடபகுதியில் இராணுவப் பிரசன்னம் அதிகம் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குற்றச்சாட்டில் நியாயமுள்ளது. ஆனால் அங்கு சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படுவதாகக் கூறுவதில் உண்மையில்லை' என சிறிலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் அரசாங்கம் வடக்கில் மாகாணசபைத் தேர்தலை நடத்தவேண்டும் எனவும், இல்லாவிட்டால் இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து முன்வைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கின் இனக்குழுமத்தில் சிறிலங்கா அரசாங்கம் மாற்றத்தை ஏற்படுத்தி வருவதாக இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய நாடாளுமன்றக் குழுவினரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருந்தமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே, சிறிலங்காவின் சமூக மேம்பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'வடக்கில் இராணுவப் பிரசன்னம் அதிகம், அங்கு குடியியல் நிர்வாகம் கிடையாது என்பதில் உண்மையுள்ளது. எனவே, அங்கு இராணுவப் பிரசன்னத்தைக் குறைத்து, குடியியல் நிர்வாகச்  செயற்பாடுகளை இராணுவத்தினர் மேற்கொள்வதைத் தடுக்கவேண்டும். இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி வடக்கில் முழுமையான குடியியல் நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்.

வடக்கில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுவதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. அரசாங்கம் அவ்வாறானதோர் செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் படிப்படியாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இதற்கமையவே தற்போது வடக்கில் 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தேசிய நல்லிணக்கத்துக்கான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன. தமிழ் மக்களை அரசாங்கம் அடிமைப்படுத்தவில்லை. அம்மக்களின் அடிப்படைத் தேவைகளை அரசாங்கம் நிறைவேற்றி வருகிறது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வடக்கில் மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் நடத்தவேண்டும். இல்லாவிட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சர்வதேச சமூகத்தின் குற்றச்சாட்டுக்களுக்கு தொடர்ந்து முகம் கொடுக்க நேரிடும். இத்தேர்தலை நடத்துவதன் மூலமே அரசாங்கத்தின் நியாயத் தன்மையை வெளிப்படுத்த முடியும்' என்று சிறிலங்காவின் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, வடக்கில் சிங்கள குடியேற்றங்களும், சிறிலங்கா படைத்தரப்பினரின் காணி சுவிகரிப்பு நடவடிக்கைகளும் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமல்லாது, தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சியும் பொது அமைப்புகளும் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=d8b907f9-788a-481e-9d2b-f67a32705a67

 

மகிந்த அரசுக்குள் போய் தொப்பி பிரட்ட பழகி வந்திருக்கிறார் வாசுதேவ நாணயமற்றகாரா. இதுதேதான் N.M Perera வும் Colin. R.De Silva வும் அம்மாவுடம் பழகிய இடதுசாரித்துவம். <_<

 

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு சிங்களத் தொலைக்காட்சிகளில் நடைபெறும் அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் தோன்றி கரிஸ்சந்திர, சம்பிக ரணவக உள்ளிட்ட சிங்கள இனவாதிகளுக்கு எதிராகவும் தமிழர்களுக்கு ஆதரவாகவும் ஆக்ரோசமாகக் கருத்துக்களை முன்வைப்பதைப் பார்த்து வாசுதுவா தொடர்பில் ஒரு மரியாதை இருந்து வந்தது.

 

ஆனால் நவசமசமாஜக் கட்சியை உடைத்துக் கொண்டு வெளியேறியது மட்டுமன்றி மகிந்த அரசியல் அமைச்சராகவுமு;இருந்து கொண்டதன் மூலம் அந்த மதிப்பு பலமடங்கு கீழிறங்கி விட்டது,

 

ஆனாலும் வடக்கில் வசந்தம் வீசுகின்றது என்று சான்றிதழ் வழங்கும் டக்ளஸ் கிழக்கில் இனங்களுக்கிடையிலான புரிதலுடன் கூடிய அபிவிருத்தி கொடிகட்டிப் பறக்கிறது எனப் பறைசாற்றும் கருணா ஆகியோருடன் ஒப்பிடும் போது இவர்அவர்களை விட பலமடங்கு உயர்வாகவே உள்ளார்.

 

காரணம் மகிந்த கட்டி வைத்துள்ள அசைக்க முடியாத (தற்காலிகமாகவேனும்) அரசியல் கோட்டைக்குள் இருந்து கொண்டு இராணுவ ஆட்சி யாழ்ப்பாணத்தில் நிலவுகின்றது என்று சொல்வதற்கே ஒரு துணிச்சல் வேண்டும். அந்தத் துணிச்சல் இவரிடம் கொஞ்சமாவது இருக்கிறது.

 

இவர் ஒரு முறை  கிளிநொச்சிக்கு வரும் போது புலிகளின்  வாகனத்தில் அழைத்து வரப்பட்டார் அப்போது  வாகன சாரதி வேக்கத்தை குறைத்து ஓட்டியதுக்கான காரணத்தை கேட்டார் அதற்க்கு அந்த போராளி சொன்ன பதில்  தமிழீழ  போக்குவரத்துகாவல்துறை  வீதியில் நிக்கிறார்கள் அதனால்தான் வேககட்டுப்பாட்டை கடைபிடிக்கிறேன் என்று.

 

அதை கொழும்பில்  புலிகளைபற்றி பெருமையாக சொன்னார் அப்படிப்பட்டவரை எம்மிடம் இருந்து வெகுதூரம் போகவைத்து எது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் ம் ம் ம் ..... சிங்களவங்களில  நல்ல சிங்களவங்களும் இருக்கிறாங்கப்பா!!!!!!!!!!!!! :)

ம் ம் ம் ம் ..... சிங்களவங்களில  நல்ல சிங்களவங்களும் இருக்கிறாங்கப்பா!!!!!!!!!!!!! :)

 

உண்மைதான்  ஆனால் அவர்கள் காட்டிக் கொடுத்தும் கூட்டிக்  கொடுத்து சுடுபட்டு அழியவில்லை :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஒரு முறை  கிளிநொச்சிக்கு வரும் போது புலிகளின்  வாகனத்தில் அழைத்து வரப்பட்டார் அப்போது  வாகன சாரதி வேக்கத்தை குறைத்து ஓட்டியதுக்கான காரணத்தை கேட்டார் அதற்க்கு அந்த போராளி சொன்ன பதில்  தமிழீழ  போக்குவரத்துகாவல்துறை  வீதியில் நிக்கிறார்கள் அதனால்தான் வேககட்டுப்பாட்டை கடைபிடிக்கிறேன் என்று.

 

அதை கொழும்பில்  புலிகளைபற்றி பெருமையாக சொன்னார் அப்படிப்பட்டவரை எம்மிடம் இருந்து வெகுதூரம் போகவைத்து எது?

 

பதில் ரொம்ப சுலபம்

அவர் முதலில் சிங்களவர்

அதன் பின்பே அனைத்தும்

இதை அவர் மறக்க அனுமதிக்கப்படார் என்பதை அவர் உணர்ந்துவிட்டார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.