Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் பௌத்த மதத்தைப் பரப்புவதற்கு கையொப்பம் இட்டு அனுமதி வழங்கும் - யாழ். அரச அதிபர்

Featured Replies

யாழ்ப்பாணத்தில் பௌத்த மதத்தைப் பரப்புவதற்கு கையொப்பம் இட்டு அனுமதி வழங்கும் - யாழ். அரச அதிபர்

 

 

யாழ். அரச அதிபர் சுந்தரம் அருமைநாயம் மேர்வின் சில்வா போன்று செயற்படுகின்றமை தொடர்பில் யாழ்.குடாநாட்டிலுள்ள சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தொடக்கம் அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் கடும் கவலையும் அச்சமும் வெளியிட்டுள்ளனர்.

யாழ், குடாநாட்டிலுள்ள பொதுக் காணிகளை சிங்களம் ஆக்கிரமிப்பதற்கு வசதியாக அவை தனது காணிகள் போன்று தானே கையொப்பமிட்டு ஆக்கிரமிப்புக்குரிய காணிகளை சிபார்சு செய்கின்ற பணியிலும் இவர் ஈடுபட்டுள்ளார்.

சிங்கள ஏகாதிபத்தியத்தின் மூலம் அரச உத்தியோகத்தர்களை தாக்குவதற்கு முற்படுகின்ற இந்த மேர்வின் சில்வா சில சமயங்களில் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் குடாநாட்டிலுள்ள அரச உத்தியோகத்தர்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர். 

மேற்படி குற்றச்சாட்டுக்குள்ளான அரச அதிபர், கடந்த புதுவருடத்திற்கு முதல் நாளாகிய சனிக்கிழமை சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவருடன் நடந்துகொண்ட முறை தொடர்பில் குடாநாட்டிலுள்ள சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அனைவரும் கடும் கவலையும் விசனமும் வெளியிட்டுள்ளனர். விடுமுறை நாளில் கடமையுணர்வுடன் பணியாற்றிய குறித்த சமுர்த்தி உத்தியோகத்தரை அரச அதிபர் சு.அருமைநாயகம் தாக்க முற்பட்டதுடன்; மக்களுக்கு முன்பாக வைத்து அநாகரிகமாக நடந்துகொண்டமையும் அவரை வாய்;க்கு வந்தபடி ஏசியதுமே சமுர்த்தி உத்தியோகத்தர்;களை விசனமடையச் செய்துள்ளது.

புதுவருடத்தை முன்னிட்டு சமுர்த்திப் பயனாளிகளின் சமுர்த்திக் கொடுப்பனவுகளை இரண்டு நாட்களில் வழங்கி முடிக்குமாறு யாழ். அரச அதிபரும் யாழ்.மாவட்ட சமுர்த்தி ஆணையாளரும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கும் சமுர்த்தி முகாமையாளர்களுக்கும் கடும் அறிவுறுத்தல் விடுத்திருந்தனர். கடந்த 11 ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பிலிருந்து அனுப்பப்பட்ட சுற்று நிருபத்தினை உடனடியாக அமுல்படுத்துமாறு மேற்படி இருவரும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு அறிவித்திருந்தனர்.

கொழும்பில் ஒரு வார காலத்திற்கு முன்னரே தொடங்கப்பட்ட இந்த வேலைத்திட்டத்தை யாழ்.மாவட்டத்தில் இரண்டு நாட்களில் செய்து முடிக்குமாறு கொழும்புத் தலைமை அறிவுறுத்தியிருந்த போதிலும் இதனை இரு நாட்களில் செயற்படுத்த முடியாது என்பதை தெரிந்தும் யாழ். அரச அதிபரும் சமுர்த்தி ஆணையாளரும் எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் அதை அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளனர். தொடர்ச்சியாக சிங்களத் தரப்புகள் கூறுகின்ற அனைத்து விடயங்களுக்கும் எதுவித மறுப்பும் தெரிவிக்காமல் அப்படியே ஏற்றுக்கொள்கின்ற அரச அதிபர் இந்த விடயத்திலும் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் தலையாட்டியிருப்பதாகவே சமுர்த்தி உத்தியோகத்தர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக உடனடியாகவே செயற்பட்ட அரச அதிபரும் சமுர்த்தி ஆணையாளரும் யாழ்.மாவட்டத்திலுள்ள சமுர்த்தி முகாமையாளர்களை வியாழக்கிழமை அழைத்து வெள்ளி, சனி ஆகிய இரண்டு நாட்களிலும் சமுர்த்திப் பயனாளிகளுக்கு கொடுப்பனவுகளை வழங்குமாறு அதிகாரத் தொனியில் கூறியிருக்கின்றனர். மேலும் இரண்டு தினங்களிலும் கொடுப்பனவு வழங்கப்படாத பயனாளிகளின் கொடுப்பனவுகள் நிறுத்தப்படுவதற்கு உரிய சமுர்த்தி உத்தியோகத்தர்களே பொறுப்பாவர் என்றும் எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில், புதுவருடக் கொண்டாட்டங்களையும் விடுத்து சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பணியாற்றியிருக்கின்றனர். ஒரு சமுர்த்தி வங்கியில் ஐந்து லட்சம் ரூபாவை மட்டுமே வைத்திருக்கலாம் என்ற நியதியையும் மீறி 60 தொடக்கம் 80 லட்சம் ரூபா வரையான பணத்தை ஒவ்வொரு சமுர்த்தி வங்கிகளிலும் வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சமுர்த்தி உத்தியோகத்தர்களும் முகாமையாளர்களும் பணத்தைப் பாதுகாப்பதற்காக இரவு பகலாக வங்கிகளில் படுத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு கஸ்டத்தின் மத்தியிலும் கடமையாற்றிய சமுர்த்தி உத்தியோகத்தர்களை அரச அதிபரும் மாவட்ட சமுர்த்தி ஆணையாளரும் பின்தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். யாழ். அரச அதிபர் தன்னை ஒரு மேர்வின் சில்வாவாக கருதியே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு என்ற இடத்தில் சனிக்கிழமை புதுவருடக் கொண்டாட்ட ஏற்பாடுகளையும் புறந்தள்ளி சமுர்;த்தி உத்தியோகத்தர் ஒருவர் பணியாற்றிக்கொண்டிருந்தார். லட்சக்கணகான ரூபாய்கள் பணத்தை தன்வசம் வைத்திருந்து அவர் சமுர்த்திப் பயனாளிகளுக்கு வழங்கிக்கொண்டிருந்தார். ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஐநூறு ரூபா பணத்தை சமுர்த்தி சேமிப்புக்கு என்றும் அவர் பொதுமக்களிடம் பெற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், அரச அதிபர் அந்த இடத்திற்குச் சென்ற போது குறித்த சமுர்த்தி உத்தியோகத்தர் எழுந்திருக்கவில்லை. ஏனெனில், அவர் பொதுமக்களுக்கு பணத்தைக் கொடுப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்துள்ளார். இதனால் அரச அதிபருக்கு கடுப்பேறியது. குறித்த சமுர்த்தி உத்தியோகத்தருக்கு அண்மையில் சென்று அவரை அவதானித்துள்ளார். அவர் ஐநூறு ரூபா பணத்தை சேமிப்பாக பெற்றமை தொடர்பில் கருத்துக் கேட்ட அரச அதிபர், இந்த அதிகாரத்தை உனக்கு தந்தது யார் என்றும் கேள்வியெழுப்பியுள்ளார். அதற்கு அவர் உரிய விளக்கத்தை கூறியபோதிலும் அதை ஏற்றுக்கொள்ள மறுத்த அரச அதிபர் மேர்வின் சில்வா பாணியில் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு அடிப்பதற்கு முயன்றுள்ளார். பல் உடைப்பன், கன்னத்தைப் பொத்தி அறைவன், வேலையை விட்டு நிறுத்தி விடுவன் என்றெல்லாம் பொதுமக்களுக்கு முன்பாக அநாகரிக வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டு சமுர்த்தி உத்தியோகத்தரை தரக் குறைவாகப் பேசியுள்ளார்.

இதனால் மனமுடைந்த சமுர்த்தி உத்தியோகத்தர் கடும் கவலையுடன் தொடர்ந்தும் தனது பணியை மேற்கொண்டுள்ளார். புது வருடத்திற்காக விடுமுறை நாட்களிலும் பணியாற்றிய சமுர்த்தி உத்தியோகத்தருக்கு அரச அதிபர் கொடுத்த புத்தாண்டுப் பரிசு இதுதானா என்றும் சக சமுர்த்தி உத்தியோகத்தர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

யாழ். அரச அதிபர் சு.அருமைநாயகம் தொடர்பாக குடாநாட்டு மக்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயம் இல்லை. ஏனெனில் தமிழ் மக்களின் காணிகளை சிங்களக் குடியேற்றங்களுக்கும் இராணுவ முகாம்கள் அமைப்பதற்கும் இவர் தாரைவார்;த்துக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே இருந்த அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் காணி அபகரிப்புக்கு உடன்படாத காரணத்தால்தான் அவருக்கு பதிலாக அருமைநாயகம் யாழ்.அரச அதிபராக நியமிக்கப்பட்டார். இவர் குடாநாட்டிலுள்ள பல காணிகளை படையினர் ஆக்கிரமிப்பதற்கு கையொப்பமிட்டுக் கொடுத்துள்ளார்.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் பௌத்த மதத்தைப் பரப்புவதற்கும் இவர் உடந்தையாக உள்ளார். அண்மையில் பௌத்த நிலையம் ஒன்றை திறப்பதற்கும் இவர் கையொப்பம் இட்டு அனுமதி வழங்கியுள்ளார். இவரது இந்தச் செயற்பாடுகள் தொடரும் பட்சத்தில் இவர் தமிழின தேசத் துரோகிகளின் பட்டியலில் இணைக்கப்படக்கூடிய நிலை ஏற்படுமென்றும் யாழ். குடாநாட்டிலுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

தாயகத்திலிருந்து வீரமணி

http://www.tamilkathir.com/news/11936/58//d,full_art.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

புத்தம் மதம் தமிழ் மொழி மூலம் பரப்ப பட்டால் தப்பே இல்லை.....இந்தியாவில இருந்து இந்து மதம் வரலாம்,மத்தியகிழக்கிலிருந்து இஸ்லாமும் ,கிறிஸ்தவமும் வரலாம் என்றால் ஏன் பெளத்தம் யாழில் வரக்கூடாது....

இவர் தமிழின தேசத் துரோகிகளின் பட்டியலில் இணைக்கப்படக்கூடிய நிலை ஏற்படுமென்றும் யாழ். குடாநாட்டிலுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்
பட்டியலில் இணைத்துவிட்டு தண்டனையும் கொடுப்பினமோ...இவங்கள் மாறவே மாட்டாங்கள்

புத்தம் மதம் தமிழ் மொழி மூலம் பரப்ப பட்டால் தப்பே இல்லை.....இந்தியாவில இருந்து இந்து மதம் வரலாம்,மத்தியகிழக்கிலிருந்து இஸ்லாமும் ,கிறிஸ்தவமும் வரலாம் என்றால் ஏன் பெளத்தம் யாழில் வரக்கூடாது....

 

பட்டியலில் இணைத்துவிட்டு தண்டனையும் கொடுப்பினமோ...இவங்கள் மாறவே மாட்டாங்கள்

 

 

இந்து மதம் இந்தியாவில் இருந்து வரவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.