Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம்களுக்கு துரோகம் செய்த அஸ்வரும் காதரும் மன்னிப்புக் கேட்க வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2086939859index.jpg

முஸ்லிம்களுக்கு துரோகம் செய்த அஸ்வரும் காதரும் மன்னிப்புக் கேட்க வேண்டும்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்காக ஆற்றப்பட்ட உரைக்கு எதிராக பாராளுமன்றத்தில் செயல்பட்ட இரண்டு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் தெரிவித்ததாவது, 

கடந்த பாராளுமன்ற தொடரின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் முஸ்லிம் மக்களுக்காக குரல் எழுப்பி பேசிய பொழுது அதற்கு இடையூறு விளைவித்த பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வரும் அப்துல் காதருமான இருவருமே முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். மாறாக கூட்டமைப்பின் தலைவரை முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கோர கூறியிருப்பது நகைப்பிற்குரியதாகும். அன்று இரா.சம்பந்தன் முஸ்லிம் மக்கள் சார்பாக உரையாற்றிய பொழுது பல அநாகரீக வார்த்தைகளை சம்பந்தனுக்கெதிராக இவர்கள் உபயோகித்தார்கள். அஸ்வர் எம்.பியின் ஊடக அறிக்கையில் முஸ்லிம் மக்களை விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றியதற்காக இரா.சம்பந்தன் மன்னிப்பு கோர வேண்டும் என்று மட்டும் தான் கூறியதாக தெரிவித்திருக்கின்றார். இது முற்றிலும் பொய்யான தகவலாகும். பல அநாகரீகமான வார்த்தை பிரயோகங்களை இவர் சபையில் இரா.சம்பந்தனுக்கெதிராக குறிக்கிட்டு தெரிவித்திருந்தார். 

விடுதலைப்புலிகள் முஸ்லிம் மக்களை யாழ்ப்பாணத்தை விட்டு விரட்டியதையும் கிழக்கு மாகாணத்தில் அவர்களுக்கெதிரான கொலை செயல்பாட்டுகளுக்கும் நான் மட்டுமல்ல அனைத்து தமிழ் அரசியல் தலைமைகளும் ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளோம். ஒரு போதும் இதனை நாங்கள் நியாயப்படுத்தியதில்லை. நியாயப்படுத்தப் போவதுமில்லை. அதே நேரம் விடுதலைப் புலிகளின் காலத்தில் அவர்களது பிழையான செயல்பாடுகளுக்கெதிராக குரல் கொடுப்பதற்கு வடகிழக்கிலும் சரி தென்னிலங்கையிலும் சரி இருந்த தமிழ் அரசியல்வாதிகளான எங்களுக்கு குரல் கொடுக்க தைரியம் இருக்கவில்லை என்பதனை வேதனையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். 

ஏற்கனவே அன்றைய புலிகளின் முஸ்லிம் மக்களுக்கெதிரான செய்ல்பாடுகளுக்காக கூட்டமைப்பிலிருந்து பல தரப்பினர் தமது வேதனையையும் கண்டனத்தையும் பலமுறை தெரிவித்துள்ளார்கள். அப்படியிருக்கும் நிலையில் முஸ்லிம் மக்களுக்கு சார்பாக இரா.சம்பந்ன் அவர்களின் உரையை குறிக்கீடு செய்த இவர்கள் வெறுமனே அரசாங்கத்திற்கு வால்பிடிக்கும் வேலையைத் தான் செய்கின்றார்கள். நாங்களும் அரசாங்கத்திற்கு எமது ஆதரவுகளை வழங்கியிருந்தாலும் கூட இவ்வாறான அநாகரீகமான செயல்பாடுகளில் ஈடுபடுவதில்லை. அரசாங்கத்திற்கு வெள்ளையடிக்க முயற்சிப்பதுமில்லை. 

சிறுபான்மையின தலைவர் ஒருவர் சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுக்கும் பொழுது அதனை அன்புடன் வரவேற்கக்கூடிய பக்குவம் அரசியல்வாதிகளுக்குத் தேவை. இன்று இந்நாட்டில் முஸ்லிம் மக்களுக்கெதிரான இனவாத செயல்பாடுகளை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. முஸ்லிம் மக்களுக்கெதிராக இன்று இடம்பெற்றுவரும் சம்பவங்கள் நாளை தமிழ் மக்களுக்கெதிராகவும் இடம்பெறலாம். ஆகவே சிறுபான்மையின மக்களின் ஒற்றுமையே இதனை முறியடிக்கக்கூடிய சக்தியாகும். அரசாங்கத்திற்கு வெறுமனே சாமரம் வீசும் செயல்பாடுகளின் ஈடுபடும் இப்படியான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். 

 

http://www.adaderana.lk/tamil/news.php?nid=37898

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நேரக்கொடுமை..

இரா.சம்பந்தனை விமர்சிக்க அஸ்வருக்கு அருகதை இல்லை - என்.கே. றம்ழான்

 

 

539783_523137594399116_209544598_n.jpg

 


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை விமர்சிப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வருக்கு எவ்வித அருகதையும் கிடையாது என மட்டக்களப்பு மாநகர சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் உறுப்பினர் என்.கே.றம்ழான் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று நாட்டில் நலாபுரங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து அடக்கு முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டு இன்று முஸ்லிம் சமூகம் அடிமைச் சமூகமாக அமைச்சர்கள் இருந்தும் அனாதைகளாக தங்களது மத அனுஸ்டானங்களைக் கூட சுதந்திரமாக நிறைவேற்ற முடியாது அச்சத்தோடு வாழ்ந்து வருகின்ற இக்கால கட்டத்தில் வாய் திறந்து பேச வேண்டிய இடத்தில் பேச முடியாத ஊமைகளாக முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் பயந்தான் கொள்ளிகளாக இருக்கின்ற போது முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளை பாராளுமன்றத்தில் பகிரங்கமாக பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை விமர்சிப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வருக்கு எந்த அருகதையும் கிடையாது.

தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பாதுகாத்துக் கொள்வதற்காக முஸ்லிம் சமூகத்திற்கு எதிராகவும் புனித இஸ்லாத்திற்கு எதிராகவும் மிகவும் சுதந்திரமாக நடந்தேறும் பல்வேறு அநீதிகளை எதிர்த்து குரல் கொடுக்க முடியாத முதுகெலும்பு இல்லாத கையாலாகாத பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் முஸ்லிம் மக்கள் மீது இழைக்கப்படும் மத அடக்கு முறையை எதிர்த்து குரல் கொடுத்த இரா.சம்பந்தனை விமர்சிப்பது வேடிக்கையானது.

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் உடுத்த உடையுடன் வெளியேற்றப்பட்ட போது அதனை தடுத்து நிறுத்த முடியாத தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று முஸ்லிம்களுக்காக முதலைக்கண்ணீர் வடிக்கின்றார் என தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர், இன்று என்ன செய்கின்றார்?

இதுவரையும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக எத்தனையோ அநீதிகள் அடக்கு முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டும் அதற்காக ஒரு முறையேனும் குரல் கொடுத்தாரா? அல்லது தடுத்து நிறுத்தினாரா? எதையும் செய்ய முடியாத பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் இரா.சம்பந்தனை விமர்சிப்பதில் என்ன நியாயம் இருக்கின்றது.

முஸ்லிம் சமூகம் பற்றி ஒரு துளியேனும் கவலைப்படாது முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுப்பவர்களை விமர்சிப்பதும் தனது சுயநலத்திற்காக முஸ்லிம் சமூகத்தை காட்டிக் கொடுப்பதும் ஏனையவர்கள் முஸ்லிம் சமூகம் சார்ந்து எடுக்கும் நல்ல பல தீர்மானங்களை அதிகாரத் தரப்பினரிடம் போட்டுக் கொடுத்து தனது விசுவாசத்தை காட்டி வயிறு வளர்க்கும் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் ஒரு முஸ்லிம் என்று கூறுவதில் வெட்கித்தலைகுனிய வேண்டும்.

அதே போன்று இன்று முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளையும் தேவைகளையும் பேச வேண்டிய இடமான பாராளுமன்றத்தில் பேசுவதை விட்டு விட்டு தில் இல்லாத ஒரு சில அரசியல் கோமாலிகள் சம்மாந்துரைக்கு வந்து சாமர்த்தியமாக கதை சொல்கின்றார்கள்.

தான் பேச வேண்டிய இடத்தில் பேசியும் சண்டை பிடிக்க வேண்டிய இடத்தில் சண்டை பிடித்ததாகவும் தான் தனது வாழ்நாளில் அரசியலுக்காக என்றும் பொய் கூறியது கிடையாது என்று கூறுகின்ற முஸ்லிம் தலைமைகளுக்கு மத்தியில் தனது சகோதர இனம் வஞ்சிக்கப்படுவதை எதிர்த்து பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு முஸ்லிம் சமூகம் நன்றி தெரிவிக்க வேண்டும் எனவும் மட்டக்களப்பு மாநகர சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் உறுப்பினர் என்.கே. றம்ழான் தெரிவித்தார்.

 

(முகநூல்)

 

மூலம்: http://www.zajilnews.lk/index.php/using-joomla/extensions/components/content-component/article-categories/84-demo/news/thesiyam/2477-2013-04-19-09-23-59

 

Edited by நியானி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.