Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொதிநிலையில் கோத்தபாய - இந்தியா, அமெரிக்காவுடன் முறுகல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கொதிநிலையில் கோத்தபாய - இந்தியா, அமெரிக்காவுடன் முறுகல்
ஏப் 19, 2013
  GotabayaRajapaksa_CI.jpg

 

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மாணவர் எழுச்சியும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்றுவரும் போராட்டங்களும் தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறீலங்காவிற்கு எதிராக எடுத்துவரும் அதிர்ச்சிகரத் தீர்மானங்கள் குறித்தும் சிறீலங்கா அதிர்ச்சியடைந்துள்ளது. இதனால் கடும் சீற்றத்திற்கு உள்ளாகியுள்ள ராஜபக்ச குடும்ப ஆட்சியாளர்களில் ஒருவரான சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, இந்தியாவின் கடந்தகாலச் செயற்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சித்துவரும் அதேவேளை, சிறீலங்காவிற்கு எதிரான அமெரிக்காவின் கருத்துக்கள் குறித்தும் தனது கடும் கோபத்தை வெளியிட்டு வருகின்றார்.
 
இலங்கையில் தமிழர்கள் படுகொலை தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத் தொடர்ச்சியான, தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ‘மத்திய அரசு இலங்கையை நட்பு நாடாக கருதக் கூடாது, பொருளாதாரத் தடைகள் விதிக்க வேண்டும், தமிழீழம் தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என கடந்த மார்ச் 27ம் திகதி தமிழகச் சட்டப் பேரவையில் தமிழக முதல்வரினால் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு சிறீலங்கா தற்போது தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாகச் சிறீலங்கா வெளியுறவு அமைச்சகம் கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. ‘தமிழகச் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இரு நாட்டு உறவுகளையும் பாதிக்கக் கூடியதாக உள்ளது என்று குற்றம்சாட்டியுள்ள அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருந்தாவது, சிறீலங்கா மீது தேவையற்ற, மிகைப்படுத்தப்பட்ட புகார்களை கூறுவோர் எங்கள் நாட்டுக்கு நேரில் வந்து பார்வையிடலாம்.
 
சிறீலங்காவின் எதிர்காலத்துக்கு நடைமுறையில் சாத்தியப்படாத தீர்வுகளை முன் வைக்கின்றனர். தற்போது வடகிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை நேரில் வந்து அறிந்து கொள்ளலாம். இலங்கை பிரச்சினை தொடர்பாகத் தமிழகத்தில் தொடரும் போராட்டங்கள் வேதனை தருகிறது. வெளிநாட்டு வாழ் தமிழர்களிலும் ஒரு பிரிவினர் இப்போராட்டங்கள் நீடிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகின்றனர்.
 
சிறீலங்காவை நட்பு நாடாக கருதக் கூடாது என்ற கோரிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. இது இரு நாடுகள் இடையே நீடித்துள்ள நட்புறவை குலைக்கும் வகையில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பௌத்த பிக்குகள் மீது தமிழகத்தில் நடைபெற்ற தாக்குதலால் சிறீலங்காவில் கொதி நிலை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  
 
இதேவேளை, இலங்கையில் நடந்த போருக்கு இந்தியாவின் முன்னாள் ஆட்சியாளர்களே காரணமாக இருந்துள்ளார்கள் என்றும், இலங்கைப் பிரச்சினையில் இந்திய ஆட்சியாளர்கள் பொறுப்புடன் செயல்பட்டிருந்தால், விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டுப் போர் 30 ஆண்டுகள் நீடித்திருக்காது என்றும் கோத்தபய ராஜபக்ச குற்றம்சாட்டியிருந்தார்.
 
ஐ.நா.சபையின் இந்தியாவுக்கான முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி ஹர்தீப் எஸ்.பூரி, ‘இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் செயல்பாடு ஏன் சரியானது’ என்ற தலைப்பில் முன்னணி ஆங்கில நாளிதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் கோத்தபாய ராஜபக்ச சிறீலங்கா ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இந்தக் குற்றச்சாட்டை வைத்திருந்தார்.
 
இலங்கையில் பயங்கரவாதம் வளர்ந்ததற்கு இந்திய அரசு முக்கிய காரணமாக இருந்தது. இந்தக் குற்றச்சாட்டிலிருந்து இந்தியா ஒருபோதும் தன்னை விடுவித்துக்க கொள்ள முடியாது என்று குற்றம்சாட்டிய கோத்தபாய, 1987ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இந்திய - சிறீலங்கா ஒப்பந்தத்தின்படி, ஜெயவர்த்தனே தலைமையிலான சிறீலங்கா அரசின் பயங்கரவாதத்துக்கு எதிரான செயல்பாட்டில் இந்தியா தலையிட்டது.
 
இதில் ஐ.நா.சபையின் இந்தியாவுக்கான முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி ஹர்தீப் எஸ்.பூரி முக்கிய பங்கு வகித்தார். அப்போதைய இந்தியாவின் செயல்பாட்டை அறிந்தவர்களுள் அவரும் ஒருவர். இறுதிக்கட்ட போரின்போது, கடைசி 100 நாள்கள் நடைபெற்ற இராணுவத்தின் போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பூரி கூறியுள்ளார். ஆனால், பயங்கரவாதம் குறித்து இவர்கள் மொனமாக இருப்பது ஏன்? என்றும் கோத்தபாய கேள்வி எழுப்பியுள்ளார்.
 
பயங்கரவாதத்தை எதிர்த்துக் குரல் கொடுக்காதவர்கள், போர்க்கால அத்துமீறல் குறித்து குரல் கொடுப்பது வேடிக்கையாக உள்ளது. இலங்கையில் தனி ஈழம் கோரி கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்ற யுத்தத்துக்கு இந்தியாதான் காரணம். இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட்ட 1988ம் ஆண்டில் இந்தியாவில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள், மாலைதீவு மீது தாக்குதல் நடத்தினர். இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியா பொறுப்புடன் செயற்படவில்லை. எனவே, சிறீலங்கா உள் நாட்டுப் போர் குறித்து விசாரிப்பதாக இருந்தால், இந்தியாவின் தலையீடு உள்பட ஒருங்கிணைந்த விசாரணை மேற்கொள்வது குறித்து சர்வதேச சமுதாயம் ஆலோசிக்க வேண்டும் என்றும் கோத்தபாய கூறியிருந்தார்.
 
இந்தியாவுக்கு எதிராக கோத்தபாய ராஜபக்ச தெரிவித்த கருத்துக்கு தமிழினப் படுகொலையில் கோத்தபாயவுடன் கரம்கோத்திருந்த இந்தியாவின் ஆளும் கொங்கிரஸ் அரசும் கண்டனம் வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் அமைச்சர் ஒருவர் இந்தக் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். ‘இலங்கையில் தீவிரவாதத்தை இந்தியா தான் தூண்டிவிட்டது என்று கோத்தபாய ராஜபக்ச கூறியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது ஒன்று. இலங்கையில் நடந்த வன்முறைகளுக்கு இந்தியாவே காரணம் என ராஜபக்சவின் தம்பி கோத்தபாய ராஜபக்ச கூறியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
 
இலங்கையில் வன்முறை ஏற்பட சிறீலங்கா அரசே காரணம். இலங்கைத் தமிழர்களை அடக்குமுறை மூலம் அழிக்க நினைத்ததால்தான் அங்கே வன்முறை ஏற்பட்டது. இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்திரா காந்தி காலத்தில் இருந்தே நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இந்தியா ஒருபோதும் வன்முறைக்கோ தீவிரவாதத்துக்கோ துணை போனதில்லை’ என்று கொங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இந்திய அமைச்சர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
சென்னை விமான நிலையத்தில் கோத்தபாயவின் கருத்துக் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். இதேவேளை, இடதுசாரிக் கட்சிகளும் கோத்தபாயவின் கருத்துக்கு கண்டனங்களை வெளியிட்டுள்ளன. ‘வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் இந்தியாவின் செயல்பாடு குறித்து வெளிப்படையாகப் பேசிய பிறகும் அதைத் தட்டிக் கேட்காமல் இருக்கும் இந்தியாவின் நிலை, அதன் வெளியுறவுக் கொள்கை படுதோல்வி அடைந்துவிட்டதையே காட்டுகிறது’ என்று இந்திய கொம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலர் டி.ராஜா கூறியுள்ளார்.
 
இதேவேளை, விடுதலைப் புலிகளுக்கு இந்தியா ஆயுத பயிற்சியளித்தது குறித்து சர்வதேச நாடுகள் விசாரிக்கவேண்டும் என்று கோருவதற்கு பதிலாக, அப்படியான விசாரணையை சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவே நடத்தலாம் என்று இந்திய அமைதிப்படையில் இலங்கையில் பணிபுரிந்த  இராணுவ அதிகாரி கேணல் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
 
கோத்தபாயவின் கோரிக்கையானது, இலங்கைக்குள்ளும் சர்வதேச ரீதியிலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசு மீது அதிகரித்துவரும் அழுத்தங்களை திசைதிருப்பும் ஒரு முயற்சியாகவே பார்க்கப்படும் என்று ஹரிஹரன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்புக்கு மட்டுமல்லாமல், இலங்கையின் வேறுபல தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கும்கூட 1980களில் இந்திய அரசு பயிற்சியளித்ததாக தெரிவித்த ஹரிஹரன், அந்த பிரச்சினையெல்லாம் 1987ம் ஆண்டு இந்திய - சிறீலங்கா உடன்படிக்கையுடன் முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிவித்தார்.
 
ஆனால் இப்போது சர்வதேச சமூகமும், ஐக்கிய நாடுகள் சபை கோருவது 2009ம் ஆண்டில் இறுதிகட்டப் போரில் நடந்ததாக கூறப்படும் மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கவேண்டும் என்றுதானே தவிர, 25 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்துபோன விவகாரங்களை அல்ல என்றும் ஹரிஹரன் தெரிவித்தார். அவற்றையெல்லாம் விசாரிக்க வேண்டும் என்று உண்மையிலேயே கோத்தபாய ராஜபக்ச விரும்பினால் ஐ.நாவிடம் அதற்கான கோரிக்கையை முறையாக வைக்கலாம் என்றும், ஒருவேளை ஐ.நாவோ, சர்வதேச நாடுகளோ இதை விசாரிப்பதற்கு மறுத்தால், சிறீலங்கா அரசாங்கமே அப்படியானதொரு விசாரணையை நடத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
 
இதேவேளை, சிறீலங்கா மீது குற்றம் சுமத்துவதற்கு முன்னர் காஷ்மீரில் 93 ஆயிரம் பேர் காணாமல் போனமை அடங்கலாக இந்திய மக்களின் மனித உரிமை மீறப்பட்ட பிரச்சினையை இந்தியா கவனிக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க இந்தியாவை எச்சரித்துள்ளார். இது இலங்கையோடு நிற்கபோவதில்லை. தனது சொந்த மனித உரிமை மீறல்கள் விடயத்தில் கவனத்தில் எடுக்காத இந்தியாவுக்கு எதிராகவும் இது திரும்பும்.
 
ஆகவே, முதலில் உங்களுடைய பிரச்சினையை தீர்த்துக்கொள்ளுங்கள் என்று இந்தியாவுக்கு நாம் கூறுகின்றோம் என அவர் குறிப்பிட்டார். இந்நிலையில் இந்தியாவுடன் முரண்பட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என சிறீலங்கா அமைச்சர் டியூ.குணசேகர சிங்கள கடும்போக்குவாதிகளை எச்சரித்துள்ளார். சிறீலங்காவின் வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கள் புத்தியுடன் செயற்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர், குறிப்பாக எதிர்காலத்தை கவனத்திற் கொண்டு கருத்து வெளியிட வேண்டும் எனவும் பொருத்தமற்ற சொற்களைப் பயன்படுத்தக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
உலகப் பொருளாதார முறைமை காணப்படும் நிலையில் சர்வதேச நாடுகளுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக இந்தியாவுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளக் கூடாதெனவும் ஆர்.பிரேமதாச, ஜே.ஆர்.ஜயவர்தன போன்ற ஜனாதிபதிகள் இந்தியாவைப் பகைத்துக் கொண்டதனால் ஏற்பட்ட விளைவுகளை கவனத்திற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  
 
இந்தியா - சிறீலங்கா இடையே இவ்வாறான கருத்து முரண் போர்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையிலும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சிறீலங்காவிற்கான பயணத்தை முடித்துக்கொண்டு டில்லி திரும்பிவிட்டனர். முன்னதாக ஆளும் கொங்கிரஸ் கட்சிக்குள் எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து பெரும் சர்ச்சைக்கு மத்தியில் 9 பேர் அடங்கிய குறித்த குழு கடந்த 8ம் திகதி திங்கட்கிழமை புறப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பின்னர் அது இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இறுதியில் இரவு அவசர அவசரமாக வெளிக்கிட்டு அன்றைய தினம் நள்ளிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தைச் சென்றடைந்தனர்.
 
இக் குழு நான்கு நாட்கள் இலங்கையில் தங்கியிருந்து யாழ் குடா உட்பட சில பகுதிகளுக்குச் சென்றபோதும் ஏனோதானோ என்று அங்கு நடந்துகொண்டதாக அங்கிருந்து வெளியான செய்திகள் தெரிவித்தன. இந்தியா குறித்து சிறீலங்காவின் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச கடுமையான கருத்துக்களை வெளியிட்டிருந்த நிலையிலும், இறுதியில் கொழும்பு சென்று கோத்தபாயவைச் சந்தித்து மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டு இந்தியக் குழுவினர் நாடு திரும்பியதை வெளியான நிழற்படங்கள் உறுதி செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை அமெரிக்கா மீதும் கோத்தபாய தனது சீற்றத்தை வெளியிட்டுள்ளார். சிறீலங்காவிற்கான அமெரிக்கத் தூதர் மிச்சல் சீசன் வெளியிட்டுவரும் கருத்துக்களால் சீற்றம் அடைந்தே, பிரிவினைவாதிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் சிறீலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் கருத்து வெளியிடுவதாக கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 
‘தமிழ் மக்களுடைய பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்’ என அமெரிக்கை எச்சரிக்கை விடுத்திருந்தது. ‘பொருத்தமான நல்லிணக்கம் ஏற்படுத்தப்படாத, பொறுப்புக் கூறப்படாத சூழ்நிலைகளில், மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளதை வரலாற்றில் இருந்து தெரிந்து கொள்ளமுடியும். இந்த நடைமுறை கடினமானதே என்றாலும், சிறீலங்காவின் உறுதித்தன்மைக்கு மிகவும் முக்கியமானது.
 
மனித உரிமைகள் நிலையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என சிறீலங்காவிற்கு தொடர்ச்சியான அனைத்துலக அழைப்புகள் விடுத்து வந்த நிலையில் அது கவனிக்கப்படவில்லை’ என சுட்டிக்காட்டிய சிறீலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன், போர் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகளான பின்னரும் தொடரும் உள்ளூர் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் குறித்தும், ஊடகவியலாளர்களுக்கு எதிரான எண்ணற்ற கொலைகள், ஆட்கடத்தல்கள், தாக்குதல்களை அதிகாரிகள் தடுக்க இயலாதுள்ளமை குறித்தும் கவலை வெளியிட்டிருந்த அவர், இலங்கையில்  அதிகரித்து வரும் முஸ்லிம்களுக்கு எதிரான பரப்புரைகள் குறித்து எச்சரித்திருந்தார்.
 
தமிழ் மக்களின் குறைகள் தீர்க்கப்படா விட்டாலோ, சிறீலங்கா படைகளால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படாது போனாலோ, மீண்டும் போர் ஏற்படக் கூடும் என அவர் எச்சரித்திருந்தார். இந்நிலையிலேயே கோத்தபாய தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். அத்துடன், போர்க் குற்றச் செயல் தொடர்பில் சிறீலங்கா இராணுவத்தினர் நடத்திய விசாரணை அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு தூதுவர் சிசேன் கோரியிருந்தார். ஆனால் அதனையும் சிறீலங்கா நிராகரித்துள்ளது.
 
1957ஆம் ஆண்டு இராணுவ சட்டத்தின் அடிப்படையில் எந்தவொரு விசாரணை அறிக்கையையும் பகிரங்கப்படுத்துவது சட்ட ரீதியில் குற்றமாகும். இவ்வாறு அறிக்கைகளை வெளியிடத் தொடங்கினால் ஆயிரக் கணக்கான விசாரணை அறிக்கைகளை வெளியிட நேரிடும் எனவும் சிறீலங்கா உயர் இராணுவ அதிகாரியருவர் தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது.
 
இதேவேளை, சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்களை இலங்கையருக்கு தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறுதலுக்கும் சிறீலங்காவுடன் இணைந்து ஒத்துழைப்பதற்கு அமெரிக்கா தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
 
எனினும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் மார்ச் மாதம் 22ம் திகதி அமெரிக்காவினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக நடக்கப்போவதில்லை எனச் சிறீலங்கா அரசாங்கம் நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக அறிவித்துள்ளது. சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நாடாளுமன்றத்தில் இதனை உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார்.
 
அங்கு அவர் மேலும் கூறுகையில், ‘இலங்கையால் இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வருடம் செப்டம்பரில் நடைபெறும் 24வது அமர்வில் இலங்கைப்பற்றி வாய் மொழியாகவும், 2014ல் 25வது அமர்வில் முழுமையாகவும் அறிக்கை வழங்கப்பட வேண்டுமென இந்தத் தீர்மானம் கூறுகின்றது. இதற்கமைய ஐ.நாவின் நிகழ்ச்சி நிரலில் இலங்கைபற்றி ஆறு மாதத்திற்கு ஒருதடவை பேசப்படும்.
 
உலக நிலையையைக் கவனிக்கும்போது இலங்கை பிரச்சினையுள்ள நாடல்ல. இந்தத் தீர்மானத்தின் இலங்கை பற்றிய தேவையில்லாத அக்கறை ஏற்புடையதல்ல. எனவே, இந்தத் தீர்மானத்தை ஏற்கமுடியாது என்றும் கூறிய அமைச்சர் பீரிஸ், இந்தத் தீர்மானம் கருத்து மோதலுக்கும் வன்முறைக்கும் தூண்டுதலாக அமைந்துள்ளது என்றும் அது இப்போது கிரிக்கெட்டுக்கும் சினிமாவுக்கும் பரவியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
 
இந்நிலையில், சிறீலங்காவிற்கு வழங்கும் உதவிகளை 20 சதவீதத்தால் குறைக்க வேண்டுமென அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி அமெரிக்க அரசிடம் யோசனையன்றை முன்வைத்துள்ளார். மனித உரிமைகள் மற்றும் மீள்கட்டுமான நிலைமைகளை முன் வைத்தே சிறீலங்காவிற்கு அமெரிக்கா வழங்கும் உதவியில் குறைப்பினை மேற்கொள்ள வேண்டுமென யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இதேவேளை, வடகிழக்கு பகுதியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த அமெரிக்கா முயற்சி மேற்கொண்டபோதிலும், அதற்குப் பலன் கிடைக்கவில்லை. அங்கு செயல்படுத்தப்படும் திட்டங்களில் இராணுவத்தின் தலையீடு அதிகமாக இருக்கின்றது. இந்த ஆலோசனையில் தென்னாசிய நாடொன்றுக்கான ஆகக் கூடிய உதவிக் குறைப்பாக இது அமைவதாகவும் சிறீலங்காவிற்கு 11 மில்லியன் டொலர் உதவி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
இலங்கைக்கு அமெரிக்கா அளித்து வரும் நிதியுதவியில் பெருமளவு, நிதித்துறை சீர்திருத்தங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பங்களாதேஷிற்கான நிதி உதவியையும் குறைத்துள்ள அமெரிக்கா, மாலைதீவிற்கான நிதியுதவியை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  
நன்றி: ஈழமுரசு 

 

இதேவேளை, இலங்கையில் நடந்த போருக்கு இந்தியாவின் முன்னாள் ஆட்சியாளர்களே காரணமாக இருந்துள்ளார்கள் என்றும், இலங்கைப் பிரச்சினையில் இந்திய ஆட்சியாளர்கள் பொறுப்புடன் செயல்பட்டிருந்தால், விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டுப் போர் 30 ஆண்டுகள் நீடித்திருக்காது என்றும் கோத்தபய ராஜபக்ச குற்றம்சாட்டியிருந்தார்.
 
இலங்கையில் பயங்கரவாதம் வளர்ந்ததற்கு இந்திய அரசு முக்கிய காரணமாக இருந்தது. இந்தக் குற்றச்சாட்டிலிருந்து இந்தியா ஒருபோதும் தன்னை விடுவித்துக்க கொள்ள முடியாது என்று குற்றம்சாட்டிய கோத்தபாய, 1987ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இந்திய - சிறீலங்கா ஒப்பந்தத்தின்படி, ஜெயவர்த்தனே தலைமையிலான சிறீலங்கா அரசின் பயங்கரவாதத்துக்கு எதிரான செயல்பாட்டில் இந்தியா தலையிட்டது.

 

 

இலங்கையில் சிங்கள பௌத்த அரச பயங்கரவாதம் வளர 1985 இன் பின்னர் ஹிந்தி வெறியர்களின் தலைமையில் வந்த இந்திய அரசுகளே காரணம் என்பது உண்மைதான்.

ஆனால் இலங்கையில் தமிழர் போராட்டம் அகிம்சைப் போராட்டமாக ஆரம்பித்து பின்னர் ஆயுதப் போராட்டமாக விருத்தியடைந்ததற்கு தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த சிங்கள இனவெறியர்களும், மதவெறி பிடித்த பௌத்த பிக்குகளுமே மூலகாரணம்.

தமிழர் தரப்பில் அவர்களுக்கு நியாயமான அரசியல் சூழ்நிலையை, சிங்கள அரச பௌத்த அராஜகங்களை  தடுக்கத் தேவையான அரசியல் சூழ்நிலையை உருவாக்கத் தவறிய பொறுப்பு தமிழின விரோதிகளான இந்திய அரசுகளை நம்பி ஜனநாயகம் என்ற போர்வையில் சோம்பேறித்தனமான கனவான் அரசியல் நடத்த முற்பட்ட சட்டத்தரணி அரசியல்வாதிகள்  அனைவரையுமே சேரும். 

 

 

வடகொரியாவுடன் மற்றும் ஈரானுடன் உறவுகளை மேலும் பலப்படுத்தி சிங்களமும் ஒரு அணு வல்லராசாக மாற வேண்டும் :)

  • கருத்துக்கள உறவுகள்

கொரிய தீவகற்ப நெருக்கடி வாலும் தலையும் காட்டி அரசியல் செய்பவர்களை ஒரு பக்கமாக வா இல்லை அரசியல் மாற்றத்திற்க்கு தயாராகுங்கள் என்றால் பரம்பரை ஆட்சி கனவில் இருந்தவர் கொத்தி குத்தி முறியுது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.