Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'சிறிலங்காத் தமிழர்களின் பிரச்சினையை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் இதயசுத்தியுடன் அணுகவில்லை'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Raw%20-%20Jyoti%20Sinha.jpg

இந்தியாவின் வெளியக உளவு அமைப்பான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுத் துறையின் [Research and Analysis Wing - RAW] முன்னாள் அதிகாரியான ஜோதி சிங்க [Jyoti Sinha] அயல்நாடுகளான மியான்மார், பூட்டான், நேபாளம், பங்களாதேஸ், சிறிலங்கா போன்றவற்றில் 1999-2004 வரை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் இந்தியா தனது செல்வாக்கை அதிகரிப்பதில் மிக முக்கிய பங்களிப்பு வழங்கியிருந்தார். 

அத்துடன் 2001-2004 வரையான காலப்பகுதியில், சிறிலங்காவில் இந்தியா தனது செல்வாக்கை அதிகரிப்பதற்கான கொள்கை வகுத்தலில் இவர் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருந்தார். 'சிறிலங்காவில் இடம்பெறும் தற்போதைய அபிவிருத்திகள் - இந்தியாவின் நலனும் அக்கறையும்' என்கின்ற தலைப்பில் பெங்களுரில் நடாத்தப்பட்ட கருத்தரங்கில் ஜோதி சிங்க தமிழர் விவகாரம் தொடர்பாக எவ்வாறான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார் என்பது தொடர்பாக THE TIMES OF INDIA ஊடகத்தால் நேர்காணல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதன் விபரம் வருமாறு: 

கேள்வி: புதுடில்லி மற்றும் கொழும்பு ஆகியவற்றுக்கிடையிலான உறவானது, ஐ.நாவில் சிறிலங்காவிற்கு எதிராக இந்தியா வாக்களித்ததன் பின்னர் எவ்வாறு மாற்றமுற்றுள்ளது? 

பதில்: இந்தியா தனக்கெதிராக வாக்களித்தது தொடர்பில் சிறிலங்கா மிகவும் குழம்பியுள்ளது என நான் உறுதியாகத் தெரிவிக்கிறேன். ஆனால், சிறிலங்காத் தீவில் வாழும் குறைந்த எண்ணிக்கையான சிங்களவர்களை விட ஏனையவர்கள் இந்தியாவுடன் மிக ஆழமான, நிலையான உறவைப் பேணவிரும்புகிறார்கள் என்பதை இத்தீவுடன் அதிக நெருக்கத்தைப் பேணும் எவரும் மறுக்கமாட்டார்கள். இந்தியாவுடன் உறவைப் பேண விரும்பும் சிங்களவர்கள் தமது செழுமையான வாழ்வுக்கு இந்தியாவின் ஆதரவும் முயற்சிகளும் தேவை என உணர்கிறார்கள். இந்தியாவின் தமிழ்நாட்டில் எழுந்துள்ள அரசியல் அழுத்தத்தின் காரணமாகவே இந்தியா தனக்கெதிராக வாக்களிக்க வேண்டியேற்பட்டது என்கின்ற நிலைப்பாட்டை சிறிலங்கா உணர்ந்து கொண்டுள்ளது. குறிப்பாக, 2014ல் இந்தியாவில் நடக்கவுள்ள தேர்தல்களில் தமிழ்நாட்டின் ஆதரவும் தேவை என்ற நிலையிலேயே புதுடில்லி ஐ.நாவில் தனக்கெதிராக வாக்களித்தது என்பதை சிறிலங்கா உணர்ந்துள்ளது. 

கேள்வி: இந்த விவகாரம் தொடர்பில் தமிழ்நாட்டு அரசியற் கட்சிகள் எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன? 

பதில்: சிறிலங்காத் தமிழர் விவகாரத்தை முதன்மைப்படுத்தி தமிழ்நாட்டு அரசியற் கட்சிகள் தமக்கிடையே போட்டி போடுகின்றன. ஆனால், இவர்கள் சிறிலங்காத் தமிழர்களின் பிரச்சினையை இதயசுத்தியுடன் கருத்திற் கொண்டிருந்தால் 2008ல் அதாவது சிறிலங்காவில் யுத்தம் நடந்து கொண்டிருந்த போது இது தொடர்பில் தமது அழுத்தத்தை வழங்கியிருக்க முடியும். அந்த நேரத்தில் சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தத்தை கண்காணிப்பதற்கான படையை ஒன்றை அனுப்ப வேண்டும் என்றோ அல்லது இதற்கான சுயாதீன அவதானிப்பாளர்கள் மற்றும் ஐ.நா தலைமையின் கீழ் கண்காணிப்பு பிரிவொன்றை அனுப்ப வேண்டும் என்றோ இந்திய மத்திய அரசாங்கத்தை தமிழ்நாட்டு அரசியற் கட்சிகள் வலியுறுத்தவில்லை. அப்போது தமிழர் மீதான இனப்படுகொலை தொடர்பாக எவரும் தட்டிக்கேட்கவில்லை. தற்போது 2014ல் இடம்பெறவுள்ள தேர்தல்களைக் கருத்திற் கொண்டே தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், சிறிலங்காத் தமிழர்கள் விவகாரத்தை முதன்மைப்படுத்தியுள்ளன. 

கேள்வி: சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை இதயசுத்தியுடன் நோக்குகின்ற அரசாங்கம் அல்லது அரசியற் பிரிவுகள் ஏதாவது உள்ளனவா? 

பதில்: சிறிலங்காத் தமிழர்கள் இந்தியாவை தமது தாய்நாடாக பார்ப்பதை இந்திய அரசாங்கம் நன்கறியும். இதுதொடர்பில் இந்தியா முழுவதிலும் அனுதாப அலை ஒன்றை காணப்படுகிறது. ஆனால், இது தொடர்பில் குரல் கொடுப்பதால் மட்டும் தீர்வுகாண முடியாது. சிங்களவர்களுக்கும் தமக்கும் நலனைப் பயக்கும் நீதியான ஆட்சி முறைமை ஒன்றை உருவாக்குவதற்கு சிறிலங்காத் தமிழர்களுக்கு இந்தியாவின் உதவி தேவை என்பது அனைத்துக் கட்சிகளினதும் கருத்தாகும். 

கேள்வி: சிறிலங்காத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான அரசியற் பொறிமுறை ஒன்றை எவ்வாறு உருவாக்க முடியும்? 

பதில்: சிறிலங்காவில் நிலவும் யதார்த்த நிலை ஆராயவேண்டும். இதன் மூலம் சிறிலங்காவில் வாழும் இரு இனங்களுக்கும் இடையில் தீர்வொன்றை முன்வைப்பதற்கு எது சிறந்த வழி என்பதை தீர்மானிக்க முடியும். தமிழர் மற்றும் சிங்களவர்களின் உரிமைகளை மதித்து ஒருவரையொருவர் புறக்கணிக்காது வாழக்கூடிய தீர்வொன்று இதற்கு உகந்ததாக இருக்க முடியும். 

கேள்வி: சிறிலங்கா அரசாங்கம் தொடர்பில் இந்தியா மத்திய அரசாங்கத்தின் அணுகுமுறை என்ன? 

பதில்: சிறிலங்கா விடயத்தில் 'பெரிய சகோதரன்' [big brother] ரீதியான அரிகார உறவுநிலையை இந்தியா காண்பிப்பதானது இதன் எதிர்கால நலன்களுக்கு நன்மை பயக்காது. இந்தியாவானது தனது சிறிய அயல்நாடுகள் தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் தனது சுய நலனை அதிகரிப்பதை அடிப்படையாகக் கொள்ளாது, அந்தந்த நாடுகளின் சுயநலன்களை மதிக்கக் கூடியவிதமான கொள்கையை வகுக்க வேண்டும். இதன் மூலம் இந்தியாவானது தனது சிறிய அயல்நாடுகளுடன் நல்லதொரு நட்பைப் பேணுவதுடன், தனது நாட்டிலும் அமைதியை ஏற்படுத்த முடியும். இதன் மூலம், எமது அயல்நாடுகளை எமது எதிரிகள் தமக்கான மூலோபாய மற்றும் கேந்திர முக்கியத்துவம் மிக்க இடங்களாக மாற்றி அவற்றில் செல்வாக்குச் செலுத்துவதை நாம் அதாவது இந்தியா தடை செய்ய முடியும். 

மொழியாக்கம் : நித்தியபாரதி

 

http://www.puthinappalakai.com/view.php?20130421108140

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1000 கோடி ....
700 கோடி ...
10 கோடி ...
2000 ....

வர வர ரேட்டு குறைஞ்சு கொண்டே போகுது .....

 

....தி கடலோரம் முடிஞ்ச மாதிரி 

 

இலவசத்திலதான் முடியும் போல கிடக்கு .... :lol: :lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டு அரசியல்த் தலைவர்கள் பலர் ஈழம் தொடர்பான தெளிவான நிலையில்

இருக்கின்றனர். ஒருசில பதவி மோகம் பிடித்த தமிழ் நாட்டு அரசியல்வாதிகளினால் 

 இந்திய மத்திய அரசு ஈழ ஆதரவாளர்களையும்  அவர்களின் ஈழ ஆதரவையும் ஒடுக்க முனைவது எதிர்காலத்தில் இந்திய ஒற்றுமைக்கு ஆபத்தானதாக இருக்கும்  

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.