Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டக்ளஸ், ஹத்துருசிங்க ஆகியோரால் முகாம்களில் வாழ முடியுமா?: வலி. மக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

V1.JPG

-எஸ்.கே.பிரசாத்

'வலி வடக்கில் இருந்து நாங்கள் இடம்பெயர்ந்து  23 வருடங்காக பல்வேறு நெருக்கடிகளில் முகாம்களில் வாழ்ந்து வருகின்றறோம் இந்த முகாம்களில் கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா மற்றும் யாழ். கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோரால் வாழ முடியுமா' என்று வலிகாமம் வடக்கு மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இன்று செவ்வாய்கிழமை வலிகாமம் வடக்கு பிரதேச சபை அலுவலகத்தில் நடைபெற்ற வலிகாமம் வடக்கு காணி அபகரிப்பு தொடர்பான கலந்துரையாடலின் போதே அப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினர். 

வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை ஒட்டுப்பட்டுள்ள காணி சுவீகரிப்பு நோட்டிஸ் உடனடியாக அகற்றப்பட்டு அப்பகுதியில் தங்களை இடனடியாக மீள்குடியேற்ற வேண்டும். இதனை உடனடியாக செய்யத்தவறினால் எதிர்வரும் 29ஆம் திகதி தொடக்கம் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தின் செயற்பாடுகளை முடக்கும் போராட்டம் முன்னெடுக்கப்படும்' என்றும் அம்மக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

'1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த நாம் இன்று வரை பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றோம். அரசாங்கம் எங்களை மீள்குடியேற்றம் செய்யும் என்ற நம்பிக்கையில் இருந்த எமக்கு தற்போது எமது காணி படையினரின் தேவைக்கு எடுக்கப்பட்டுள்ளது என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

கடந்த முறை நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் 3 மாத்திற்குள் வலி வடக்கில் மீள்குடியேற்றம் இடம்பெறும் என்று அமைச்சர் டக்களஸ் தேவானந்தா தெரிவித்தார். 8 மாதங்கள் கடந்த நிலையில் இன்னமும் மீள்குடியேற்றம் நடைபெறவில்லை அதற்கு மாறாக எமது வளமான பூமிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன' என்றும் அம்மக்கள் சுட்டிக்காட்டினர். 

23 மூன்று வருடங்களாக நாங்கள் அகதிகளாக முகாம்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழந்து வருகின்றோம். நாங்கள் 23 வருடங்காக வாழும் வாழ்கையை ஒரு நாள் அமைச்சர் டக்களஸ் தேவாந்தாவும் யாழ் கட்டளைத் தளபதி ஹத்துருசிங்கவினாலும் வாழ்ந்து பார்க்க முடியுமா?.

இவ்வாறு நாங்கள் கதைத்தால் நாளை நாங்கள் காணாமல் போனவர்களின் பட்டியலில் இடம்பிடித்து விடுவோம் என்று தெரியும். இருந்தாலும் தலைக்கு மேல் போய்விட்டாதால் எங்கள் பிரச்சனைகளுக்கு உடனடித்தீர்வு கிடைக்க வேண்டும்' என்றனர். 

எதிர்வரும் 29ஆம் திகதி தொடக்கம் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தின் செயற்பாடுகளை முடக்கும் போராட்டம் தொடரும் என்றும் இது படிப்படியாக மாவட்டச் செயலகத்தினை முற்றுகையிடும் பேராட்டமாக மாற்றமடையும்' என்று அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

V2.JPG

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/64828-2013-04-23-08-25-30.html

ஒருவர்  இராணுவ அதிகாரி, அடக்குமுறை இராணுவ அதிகாரி. அவரின் தேவையே எம்மை அழிப்பது.

 

 

அடுத்தவர், ஒரு தமிழர்? இவர் ஏன் ?? எதற்காக??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர்  இராணுவ அதிகாரி, அடக்குமுறை இராணுவ அதிகாரி. அவரின் தேவையே எம்மை அழிப்பது.

 

 

அடுத்தவர், ஒரு தமிழர்? இவர் ஏன் ?? எதற்காக??

 

இரண்டுமே விஷம்தான். 
 
ஒன்று உடனடியாக கொன்றுவிடும் மற்றையது மெல்ல மெல்ல கொல்லும்  இதில் இரண்டாவது குறிப்பிடப்பட்டவர் மெல்ல மெல்ல கொல்லும் தன்மை கொண்ட ஆபத்தானவர்  
  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன கேள்வி.. இருவரும் முகாம்களில் தானே இருக்கினம்.

 

ஒருவர் சிறீதர் தியேட்டரில் வதை முகாம் அமைச்சு வாழ்கிறார். இன்னொருவர் ஆக்கிரமித்து நின்று சிங்களப் படைமுகாம் அமைத்து வாழ்கிறார்.

 

ஆனால் மக்கள் கேட்பதோ.. அகதி முகாமில் வாழத் தயாரோ என்று தான்...!!! :icon_idea:

உதுகளை முகாமுக்குள்ள வாழச்சொன்னால் வாழுங்கள் ஏன் என்றால் கூட்டுக்குள்ள வாழ் கிறதுகளுக்கு முகாம் கஸ்ரமாக இருக்காது ஆனால் மக்கள் வீடு வளவுகளுக்குள் வாழ்ந்ததுகளுக்கு கஸ்ரமாக இருக்கும் அதுகளின் இடங்களை விட்டு அகலுங்க்களேன்   

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.