Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சேட்டை மீதான விமர்சனங்கள் - கிழிபடும் போலித் திரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சேட்டை மீதான விமர்சனங்கள் - கிழிபடும் போலித் திரை
எஸ். கோபாலகிருஷ்ணன்

2011இல் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகவும், தலைசிறந்த நடிகர்களில் ஒருவராகவும், சிறந்த மனிதராகவும் கருதப்படும் பாலிவுட் நடிகர் அமீர் கான் மற்றும் அவரது மனைவி கிரண் ராவ் தயாரிப்பில் 'டெல்லி பெல்லி' என்ற படம் வெளியானது. அமீரின் உறவினரும் வளர்ந்துவரும் நாயகனுமான இம்ரான் கான் இந்தப் படத்தின் நாயகனாக நடித்திருந்தார். படம் பரவலான பாராட்டுகளையும் வணிக வெற்றியையும் பெற்றது.

 

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது என்ற தணிக்கை முத்திரையுடன் வெளியான இந்தப் படம் முழுவதும் மனிதக் கழிவுகள் மற்றும் பாலியல் சார்ந்த இரட்டை அர்த்தம் தொனிக்கும் வசனங்கள் இடம்பெற்றிருந்ததாக விமர்சனங்கள் தெரிவித்தன. ஆனால் டெல்லி பெல்லியின் எந்த விமர்சனத்திலும் இது ஒரு குறையாகவோ குற்றமாகவோ சுட்டிக்காட்டப்படவில்லை.

 

அண்மையில் டெல்லி பெல்லியின் தமிழ் மறு ஆக்கம் 'சேட்டை' என்ற பெயரில் வெளியானது. ஆர்யா, ஹன்ஸிகா, அஞ்சலி, சந்தானம். ப்ரேம்ஜி அமரன் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்தை இயக்குநர் கண்ணன் இயக்கியிருந்தார். படம் தொடங்கப்பட்டபோதே இந்தியில் இருந்த பாலியல் சார்ந்த வசனங்கள் முற்றிலும் நீக்கப்பட்டு தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் (!) மாற்றியமைக்கப்பட்டு படம் தயாராவதாக கண்ணன் அறிவித்தார்.

 

தமிழ் ரசிகர்கள் பாலியல் சார்ந்த வசனங்களை ரசிப்பதில்லையா என்ற கேள்வியை அவரிடம் யாரும் எழுப்பவில்லை போலும். சில வாரங்களுக்கு முன் படம் வெளியானது. அனைவரும் பார்க்கலாம் என்ற தனியான முத்திரையுடன் வெளியான சேட்டையில் கழிவுகள் குறித்த வசனங்களும் கழிவறைக் காட்சிகளும் அதிகமாக இருந்தன. ஒரு காட்சியில் மனித மலம் அப்படியே காண்பிக்கப்பட்டது (இந்திப் பதிப்பில் இதே காட்சியில் மலம் நேரடியாக காண்பிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது). பாலியல் சார்ந்த வசனங்களும் காட்சிப் படிமங்களும் மட்டுப்பட்டிருந்தனவே தவிர முற்றிலும் நீக்கப்படவில்லை.

 

சேட்டை படத்தில் டெல்லி பெல்லியில் இருந்த சுவாரஸ்யமான காட்சியமைப்புகளும் நையாண்டி வசனங்களும் இல்லை. படத்தின் முக்கிய பகுதியான வைரக் கடத்தல் அத்தியாயம் காட்சிப்பட்ட விதம் கேலிக்கூத்தாக இருந்தது. சந்தானத்தின் நகைச்சுவைக் காட்சிகள் சிரிக்க வைத்தாலும் அவை படத்தைக் காப்பாற்றவில்லை. படம் ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் புறக்கணிக்கப்பட்டது.

 

ஆனால் விமர்சனங்களில் இதுபோன்ற குறைகள் பிரதானப்படுத்தப்படவில்லை. மாறாக படத்தில் விரவிக் கிடந்த கழிவுகளைச் சுட்டும் வசனங்களும் கழிப்பிடக் காட்சிகளுமே நம் விமர்சகர்களுக்கு படத்தை சாடுவதற்கான முக்கியமான காரணங்களாக அமைந்தன. தமிழகத்தில் வெளியாகும் பிரபல வார இதழ் ஒன்று வெளியிட்ட விமர்சனத்தின் இறுதி வரியில் 'மூக்கைப் பொத்திக்கொண்டே சிரிக்கலாம்' என்று இருந்தது.

 

ஒரு தனியார் பண்பலை அலைவரிசையின் நிகழ்ச்சித் தொகுப்பாளர், சேட்டை படத்தின் விமர்சனத்தில் கழிவுகளைப் பற்றிய காட்சிகளை எள்ளலான தொனியில் சாடி, படம் மிக மோசமாக இருந்ததாக விமர்சித்தார். மலத்தை அப்பட்டமாகக் காண்பிக்கும் காட்சி இருக்கும் இந்தப் படத்துக்கு எப்படி அனைவரும் பார்க்கலாம் என்று தணிக்கைக் குழு அனுமதித்தது என்றும் கேட்டார். இதனால் கோபமடைந்த படத்தின் தயாரிப்பாளர் சம்பந்தப்பட்ட பண்பலை அலுவலகத்துக்கு இனி தங்கள் தயாரிப்பில் வெளியாகும் படங்களின் பாடல்களையும் விளம்பரங்களையும் வழங்க முடியாது என்று மிரட்டியதாகவும் கூறப்பட்டது. இதனால் பாலாஜி தன் விமர்சனம் குறித்த விளக்கத்தைத் தான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியிலேயே வழங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

 

ஆனால் சேட்டை படத்தில் ஒரு காட்சியில் நாயகனுடன் தனிமையில் இருக்கும் நாயகி அவனருகில் சென்று 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' என்று கேட்பார். அங்கு லட்டு என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது என்று அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் கேமரா கோணம் வைக்கப்பட்டிருக்கும். இதே காட்சி படத்தில் வெள்ளோட்டத்திலும் (டிரைலர்) இடம்பெற்றது. இந்தக் காட்சி நம் விமர்சகர்களை முகம்சுளிக்க வைக்கவில்லை. குழந்தைகளும் பார்க்கலாம் என்று அனுமதிக்கப்பட்ட படத்தில் நாயகியின் மார்பு வலிந்து காண்பிக்கப்படுவதும், உதட்டு முத்தக் காட்சிகளும் இருப்பது பற்றி நம் விமர்சகர்களுக்குக் கவலையில்லை.

 

திரைப்படங்களில் பாலியல் சார்ந்த காட்சிகள் மற்றும் வசனங்களை ஒட்டுமொத்தமாகத் தவிர்க்க வேண்டுமா அல்லது கதையின் தேவைக்கேற்ப வைத்துக்கொள்ளலாமா என்பது விவாதத்துக்கு உரியது. ஆனால் பெண் உடலைப் பாலியல் ரீதியான தூண்டிலாகப் பயன்படுத்துவதும் நடிகைகளைக் கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்துவதும் நிச்சயம் கண்டிக்கத்தகுந்தது.

 

தமிழ் சினிமா வரலாற்றில் இந்தப் படத்தில்தான் கழிவறைக் காட்சிகள் அதிகமாக இடம்பெற்றிருக்கின்றன. மனிதக் கழிவுகளைக் குறிக்கும் வசனங்கள் அதிகமாக பேசப்பட்டிருக்கின்றன, அதுவும் நகைச்சுவைக்காக. இதற்கு முன் நல்ல படங்கள் என்ற வகையைச் சேர்ந்த பிதாமகன், அங்காடித் தெரு உள்ளிட்ட படங்களில் உடலிலிருந்து பிரியும் வாயுவைப் பற்றிய வசனங்கள் நகைச்சுவைக்காக வைக்கப்பட்டிருந்தன. ஆனால் அவற்றை யாரும் விமர்சிக்கவில்லை. சேட்டையில் நடித்த சந்தானம் தன் முந்தைய படங்களில் மலம், குசு போன்ற விஷயங்களைச் சுட்டும் வசனங்களைப் பேசியுள்ளார். கவுண்டமணி, விவேக், வடிவேலு ஆகியோரும் தங்கள் நகைச்சுவைக் காட்சிகளில் மலத்தைக் குறிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளனர். அவை யாவும் விமர்சிக்கப்பட்டதில்லை.

 

மனிதக் கழிவு மற்றும் கழிவை வெளியேற்றும் உறுப்புகள் ஆகியவற்றைச் சுட்டும் வசனங்களும் பழமொழிகளும் நம் குடும்பங்களில் மிக சகஜமாகப் புழங்கி வருபவைதான். கிராமங்களில் அதிகமாகப் புழங்கும் இதுபோன்ற வசனங்கள் நாகரீக வேடம் தரித்துக்கொள்ளும் நகரங்களில் மட்டுப்பட்டாலும் முற்றிலும் இல்லாமல் இல்லை. குறிப்பாகக் குடும்பங்களுக்குள் எள்ளல், கோபம், வருத்தம் ஆகிய உணர்ச்சிகளை வெளிப்படுத்த இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்த யாரும் தடைவிதிப்பதில்லை. வெளி மனிதர்கள் முன் இவற்றைப் பேச மட்டுமே பலர் தயங்குகிறார்கள். சிலருக்கு அந்தத் தயக்கமும் இருப்பதில்லை.

 

பாலியல் சார்ந்த வசனங்கள்கூட கிராமங்களில் இன்றும் புழங்கிவருபவைதான். கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்களான வீட்டுப் பெரியவர்கள் பாலியலைச் சுட்டும் பழமொழிகளை சர்வசாதாரணமாக உதிர்ப்பதை இன்றும் காணலாம்.

 

அதிகப் பிரசங்கித்தனம். தேவையில்லாமல் ஒரு விஷயத்தைச் செய்து மாட்டிக்கொள்வது, உட்கார்ந்து இடத்திலிருந்து மற்றவர்களை வேலை வாங்குவது, போலி கௌரவம் பார்ப்பது, தற்பெருமை பேசுவது என பல்வேறு விஷயங்களைச் சாட ஆசன வாய், பிறப்புறுப்பு ஆகியவற்றைக் குறிக்கும் பழமொழிகள் அல்லது வசனங்களைக் குடும்ப உறுப்பினர்கள் சாதரணமாகப் பகிர்ந்துகொள்வார்கள்.

 

ஆனால் பொதுவெளியில் இதுபோன்ற வார்த்தைகளைக் கேட்டால் உடனடியாக அசூயை கொள்வது தமிழர்களின் பழக்கம். இந்த அசூயை ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக இருக்கிறது. ஆனால் இதற்குக் காரணம் பெண்கள் மட்டுமல்ல. ஆண் மையச் சமூகம் பண்பாடு/நாகரிகம் சார்ந்த கட்டுப்பாடுகளை ஆண்களை விடப் பெண்களுக்கு அதிகமாக விதித்திருப்பதன் வெளிப்பாடுதான் இது. கழிவு மற்றும் பாலியல் குறித்த சொற்களைப் பயன்படுத்துவதிலோ கேட்பதிலோ பெண்கள் அதிகக் கூச்சம் அடைவதன் காரணம், அப்படிக் கூச்சப்படுவதுதான் பெண்ணின் தன்மை என்று அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டிருப்பதுதான். இந்தக் கூச்சம் எந்த அளவுக்கு இருக்கிறது என்றால், பொது இடங்களில் கழிப்பிடத்தைப் பயன்படுத்தக்கூடப் பெண்கள் தயங்குகிறார்கள். கழிவறை எங்கே என்று கேட்கவும் பலர் தயங்குகிறார்கள். மருத்துவர்கள் மற்றும் பெண்ணியச் செயற்பாட்டாளர்களின் தொடர் பிரச்சாரங்களால் இந்தத் தேவையற்ற தயக்கம் பெண்களிடமிருந்து விலகிவருவது சற்று ஆறுதலான விஷயம். சேட்டை படத்துக்குப் பொதுவாக மக்களிடமிருந்தும் குறிப்பாகப் பெண்களிடமிருந்தும் வரும் எதிர்வினைகளை இந்தப் பின்னணியிலிருந்துதான் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

 

பண்பாட்டு ரீதியாகத் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் பொது வாழ்க்கைக்கும் இடைவெளி இருப்பது இயல்புதான். ஆனால் தமிழ்ச் சூழலில் நிலவும் அளவுக்கு இவ்வளவு பெரிய இடைவெளி இருப்பது ஏன்? தனிப்பட்ட முறையிலும் சிறிய குழுவிற்குள்ளும் பேசப்படும், ரசிக்கப்படும் சொற்கள், சற்றே பொதுவெளிக்கு வந்துவிட்டால் தவிர்க்கப்பட வேண்டியவையாகின்றன. மிகத் தீவிரமான சொற்கள் மட்டுமின்றிச் சாதாரணமான சொற்கள்கூட இப்படித் தவிர்க்கப்படுகின்றன. இத்தகைய போக்கு நிலவுவது ஏன்?

 

கெட்ட வார்த்தை பேசுவோம், பீக்கதைகள் ஆகிய நூல்களை எழுதியிருக்கும் பெருமாள்முருகன் இந்தப் பழக்கத்தை விமர்சனபூர்வமாகப் பார்க்கிறார். ஒரே படத்தில் உள்ள பாலியல் சார்ந்த வசனங்களும் காட்சிகளும் கண்டுகொள்ளப்படாமல் விடப்படுவதையும் மனிதக் கழிவுகள் / கழிவறைக் காட்சிகள் கடுமையாக விமர்சிக்கப்டுவதையும் பற்றி இவரிடம் கேட்டபோது, 'சினிமாவில் பாலியல் சார்ந்த விஷயங்கள் சகஜமாகிவிட்டன. ஆனால் உடல் கழிவுகள் குறித்த காட்சிகளும் வசனங்களும் இதுவரை இருந்ததில்லை. எனவேதான் அது விமர்சிக்கப்படுகிறது' என்று கூறினார். தான் இன்னும் சேட்டை படம் பார்க்கவில்லை என்று தெளிவுபடுத்தியவரிடம், மனித மலத்தை அப்பட்டமாகக் காட்டும் காட்சி படத்தில் இடம்பெற்றிருந்ததையும் அதற்கான கடுமையான விமர்சனங்களையும் சுட்டிக் காட்டியபோது 'அன்றாடம் தெருக்களிலும் சாலைகளிலும் நாம் மனித மலத்தைப் பார்த்துக்கொண்டுதான் செல்கிறோம். அதைப் பற்றி நமக்குத் துளிக்கூட உறுத்தல் இருப்பதில்லை. ஆனால் படத்தில் அவை காண்பிக்கப்பட்டால் மட்டும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை' என்றார்.

 

பொதுவாக உடல் கழிவுகளைப் பற்றிப் பேசுவதில் பெரும்பாலானோருக்கு இருக்கும் மனத்தடை நீங்க வேண்டும் என்று கூறுகிறார் பெருமாள்முருகன். 'உடல் கழிவுகள் குறித்த விவாதங்கள் அத்தியாவசியமானவை. தொலைதூரத்தில் இருந்து நம் வீட்டுக்கு வரும் விருந்தாளியை கழிப்பிடத்தைப் பயன்படுத்திக்கொள்கிறீர்களா என்று நாம் கேட்பதில்லை. வந்தவரும் கழிப்பிடம் எங்கிருக்கிறது என்று கேட்கத் தயங்குவார். இந்த நிலை மாற வேண்டும்' என்றார் அவர்.

 

பொழுதுபோக்குப் படமாக விளம்பரப்படுத்தப்பட்ட சேட்டை அந்த அளவில்கூட பெரும்பான்மை ரசிகர்களை ஈர்க்கவில்லை. ஆனால் படத்தின் மீதான விமர்சனங்கள் நம் விமர்சகர்களின் போலித்தனமையையும் சமூகத்தின் தேவையற்ற மனத்தடைகளையும் தோலுரித்துக் காட்டியிருக்கிறது. இவை, சில அறிவுஜீவிகளால் விவாதிக்கப்பட்டுவரும் விஷயங்கள்தான் என்றாலும் அந்த விவாதங்களை இன்னும் பலமாக ஒலிக்கச் செய்ய சேட்டை மறைமுகப் பங்காற்றியிருக்கிறது.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=5&contentid=d0abd31f-76e0-4f9e-b3e6-933c1aad27a7

இன்னும் பார்க்கவில்லை

 



http://tamilrockers.net/index.php/topic/16353-se

  

இதில் இந்த படமிருக்கனும்

 

  • கருத்துக்கள உறவுகள்

நான் 'சேட்டை' பார்த்தேன்.ஒரளவிற்கு பொழுது போவதற்கு பார்க்க கூடிய படமாக இருந்தது :)

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.