Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பங்களாதேஷ் கட்டிட விபத்து: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 275 ஆக உயர்வு, 1000 பேரைக் காணவில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பங்களாதேஷில் 8 மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 100 க்கும் அதிகமானோர் கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

201342473429381580_20.jpg

சுமார் 35 பேர் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,  150 பேர் வரை முதலுதவி பெற்றுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இராணுவம் மீட்புப் பணியை கையேற்றுள்ளதாகவும் துரிதமாக அவர்கள் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

டாக்காவின் சாவார் மாவட்டத்தில் அமைந்துள்ள ரானா பிளாஸா என்ற கட்டிடமே இன்று அதிகாலை 8.30 மணியளவில் இடிந்து வீழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/world.php?vid=639

Edited by பிழம்பு

கட்டிட விபத்து; பலி 150 ஐ தாண்டியது, 2000 பேர் மீட்பு

 

img1130425016_1_1.jpg

 

 

வங்கதேச தலைநகர் டாக்காவின் புறநகர் பகுதியில் 8 மாடி கட்டிடம் நேற்று காலை இடிந்து விழுந்தது. இதில் பலியானோர் எண்ணிக்கை தற்போதுவரை 150ஐ தாண்டியுள்ளது. சுமார் 500 பேர் படுகாயம் அடைந்ததுள்ளனர்.

டாக்காவில் இருந்து 30 கி.மீட்டர் தூரத்தில் உள்ள சவார் பகுதியில் ராணா பிளாசா என்ற பெயரில் 8 மாடி வணிக வளாகம் உள்ளது. இந்த கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு கட்டிடம் இடிந்ததில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 150 ஐயும் தாண்டி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக மீட்புப் பணியாளர்கள் இரவோடிரவாக முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆடைத்தொழிற்சாலையில் சிக்கியுள்ளவர்களுக்கு தண்ணீர் பரிமாறப்பட்டதுடன், வெளிச்ச விளக்குகளும் போடப்பட்டன.

இதுவரை இடிபாடுகளில் இருந்து 2000 க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டதாக அரசாங்க அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் உள்ள சில்லறைத் துணிக்கடைகளில் ஆடைகளை தயாரிக்கும் பல தொழிலகங்கள் அந்த கட்டிடத்தில் செயற்பட்டு வந்துள்ளன.

 

http://tamil.webdunia.com/newsworld/news/international/1304/25/1130425016_1.htm

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான லஞ்சமும், ஊழலும் நிறைந்த நாடுகள், தங்களது முதுகுகளை, மாறி மாறிச் சொறிந்து கொள்ள  வேண்டியது தான்!

 

மக்கள் மந்தைகளாக இருக்கும் வரை,எதுவுமே மாறப்போவதில்லை!

 

இறந்தவர்களுக்கு, எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பங்களாதேஷ் கட்டிட விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 275 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை நேற்று  மாலை 41 பேர் இடிபாடுகளுக்குள் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

article-2314532-19771666000005DC-17_964x

கடந்த இரண்டு தினங்களில் 2000 பேர் வரை மீட்கப்பட்டுள்ளதுடன் இதில் பாதிக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்னும் 1000 பேர் தொடர்பில் தகவல்கள் எதுவும் இல்லையென தெரிவிக்கப்படுகின்றது.

article-2314532-197A68C9000005DC-751_964

கட்டிடம் பாதுகாப்பற்றது என்ற எச்சரிக்கையையும் மீறி 3,122 பேர் அங்கு பணியாற்றி வந்ததாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்யும் தொழில் நிறுவனங்களே மேற்படி கட்டிடத்தில் இருந்துள்ளன.

விபத்தில் உயிரிழந்தோரின் சடலங்கள்  உறவினர்களால் அடையாளங் காணப்படும் பொருட்டு அருகில் உள்ள பாடசாலையொன்றில் வைக்கப்பட்டுள்ளன.

மீட்புப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

article-2314532-197A66A7000005DC-55_964x

கட்டிடத்தில் வெடிப்பு ஏற்பட்டிருந்ததாகவும் ஆனால் அதன் உரிமையாளர் அவற்றைப் பொருட்படுத்தவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.

வெடிப்பை பொருட்படுத்தாமல் வேலையை தொடரும் படி வற்புறுத்தப்பட்டதாகவும் அதையும் மீறி வேலைக்கு வராத பட்சத்தில் பணி நீக்கம் செய்யப்படுவோம் என  தாம் அச்சுறுத்தப்பட்டதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

article-2314532-197A45F1000005DC-758_964

             

கட்டிடத்தின் உரிமையாளர் மீது தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

article-0-197956DE000005DC-513_964x738.j

 

 

http://www.virakesari.lk/article/world.php?vid=643

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வங்கதேச கட்டிட விபத்து: இன்னும் 1000 பேரைக் காணவில்லை

வங்கதேசத்தில் கடந்த புதன்கிழமை நடந்த கட்டிட விபத்தில் சிக்கியவர்களில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் இன்னும் தேடப்பட்டுவருகின்றனர்.

தலைநகர் டாக்கா அருகே உள்ள ராணா பிளாஸா என்ற ஆடைத் தொழிற்சாலைக் கட்டடம் இடிந்துவிழுந்ததில் குறைந்தது 273 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

 

மூன்றாவது நாளாக இன்னும் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் நடந்துவருகின்றன.

இடிந்த கட்டிடத்தின் நான்காவது மாடிக்குள் சிக்கியிருந்தவர்களில் 41 பேர் வியாழக் கிழமை காப்பாற்றப்பட்டுள்ளனர்.

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள மேற்குலக சந்தைகளுக்காக ஆடைத் தைக்கும் பெருந்தொழிற்சாலைகள் இந்தக் கட்டிடத்தில் இயங்கிவந்துள்ளன.

இந்த விபத்தையடுத்து வங்கதேசத்தில் தொழிலாளர்களின் தொழிற்தள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.

\

http://www.bbc.co.uk/tamil/global/2013/04/130426_bangladesh.shtml

 

  • கருத்துக்கள உறவுகள்

இது இலங்கைக்குத்தான் வாய்ப்பாக அமையப்போகிறது.. ஏற்கனவே கனேடிய ஊடகங்களில் வங்கதேச நிலைமையைப் பற்றியும், மேற்கு நாடுகளின் ஆடைத்தேவைகளையும் அலசத் தொடங்கிவிட்டார்கள்..

வங்கதேசம்: இடிந்த தொழிற்சாலையில் இருந்து மேலும் 24 பேர் உயிருடன் மீட்பு

 

வங்கதேசத் தலைநகர் தாக்காவில் கடந்த புதன்கிழமை இடிந்து விழுந்த எட்டு மாடி ஆடைத் தொழிற்சாலைக் கட்டிடத்தில் இருந்து மீட்புப் பணியாளர்கள் மேலும் 24 பேரை உயிரோடு மீட்டுள்ளனர்.

பெண்ணொருவர் உயிரோடு மீட்கப்பட்டதை தாக்காவில் உள்ள பிபிசி முகவர் நேரில் கண்டார். இடிபாடுகளில் இருந்து வெளியே வருகையில் அப்பெண் அழுதார்.

மேலும் பலர் இந்த கட்டிட இடிபாடுகளுக்கிடையில் சிக்கியுள்ளனர்.

 

மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அணியினருடன் தன்னார்வலர்கள் நூற்றுக்கணக்கில் பங்கேற்கின்றனர்.

தெரியவந்துள்ள உயிரிழப்புகளின் எண்ணிக்கை 300 ஐத் தாண்டிவிட்டுள்ளது. அது போல் இரண்டு மடங்கு பேரின் கதி என்ன ஆனது என்று தெரியவராமல் உள்ளது.

வங்கதேசத்தின் மிக மோசமான தொழிற்சாலை பெருவிபத்துச் சம்பவமாக இச்சம்பவம் அமைந்துள்ளது.

இந்தக் கட்டிடத்தில் இயங்கிவந்த ஆயத்த ஆடைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் இரண்டு பேர் சனிக்கிழமையன்று பொலிசில் சரணடைந்துள்ளனர்.

கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்பட்ட பின்னரும் தொழிலாளிகளைத் தொடர்ந்து வேலை பார்க்குமாறு இந்த உரிமையாளர்கள் பணித்திருந்ததாக செய்திகள் கூறுகின்றன.

 

 

இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நீடிக்கிறது

 

130427050247_bangladesh_building_collaps

 

 

 

பெற்றோர்கள் உயிரோடு இருக்கிறார்களா என்று பிள்ளைகள் இடிபாட்டுக்கு வெளியே ஏங்கி நிற்கின்றனர்.

 

130426175012_bangladesh_sobrevivientes_3

 

 

http://www.bbc.co.uk/tamil/global/2013/04/130427_bangladesh.shtml

 

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு கர்ப்பிணிப் பெண்கள் இடிபாடுகளிடையே பிள்ளை பெற்றுவிட்டார்களாம்..

பங்களாதேசில் இடிந்து விழுந்த கட்டட சிதைவுகளுக்குள் இரு கர்ப்பிணிகளுக்கு பிரசவம் - மேலும் 24 பேர் உயிருடன் மீட்பு

 

Survivor-2742013-150.jpg

 

பங்களாதேஸ் தலைநகர் தாக்காவில் கடந்த புதன்கிழமை இடிந்து விழுந்த எட்டு மாடி ஆடைத் தொழிற்சாலைக் கட்டிடத்தில் இருந்து மீட்புப் பணியாளர்கள் மேலும் 24 பேரை உயிரோடு மீட்டுள்ளனர். பெண்ணொருவர் உயிரோடு மீட்கப்பட்டு இடிபாடுகளில் இருந்து வெளியே வருகையில் அழுதார். மேலும் பலர் இந்த கட்டிட இடிபாடுகளுக்கிடையில் சிக்கியுள்ளனர். மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அணியினருடன் தன்னார்வலர்கள் நூற்றுக்கணக்கில் பங்கேற்கின்றனர். தெரியவந்துள்ள உயிரிழப்புகளின் எண்ணிக்கை 300 ஐத் தாண்டிவிட்டுள்ளது. அது போல் இரண்டு மடங்கு பேரின் கதி என்ன ஆனது என்று தெரியவராமல் உள்ளது.
 
2,348 பேர் இதுவரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுள், இடிபாடுகளுக்கு இடையே பிறந்த இரண்டு குழந்தைகளும் அவர்களின் தாய்மார்களுடன் மீட்கப்பட்டுள்ளனர் என்று மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆடை தயாரிப்புப் பிரிவில் அதிகளவில் பெண்களே வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தனர் எனவும், அதிலும் குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் வேலை செய்துவந்துள்ளனர் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

இவர்களில் இன்னும் பலர் இடிபாடுகளுக்கிடையே உயிருடன் சிக்கிக்கொண்டிருக்கலாம், அவ்வாறு சிக்கியுள்ளவர்களை உயிருடன் மீட்பதே தங்களது முக்கிய பணியாகும் என்று, பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ அதிகாரி ஒருவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். இந்தக் கட்டிடத்தில் இயங்கிவந்த ஆயத்த ஆடைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் இரண்டு பேர் சனிக்கிழமையன்று பொலிசில் சரணடைந்துள்ளனர். கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்பட்ட பின்னரும் தொழிலாளிகளைத் தொடர்ந்து வேலை பார்க்குமாறு இந்த உரிமையாளர்கள் பணித்திருந்ததாக செய்திகள் கூறுகின்றன.

 

http://seithy.com/breifNews.php?newsID=81412&category=WorldNews&language=tamil

 

Edited by துளசி

வங்கதேசம்: இடிந்துவிழுந்த கட்டிடத்தின் உரிமையாளர் பிடிபட்டார்

28 ஏப்ரல், 2013

 

வங்கதேசத்தில் கடந்த புதனன்று இடிந்துவிழுந்த தொழிற்சாலைக் கட்டிடத்தின் உரிமையாளர் மொஹமட் சொஹெல் ராணா கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அமைச்சர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

ராணா பிளாஸா இடிந்து விழுந்த சம்பவம் முதல் தலைமறைவாகியிருந்த அதன் உரிமையாளர் மொஹமட் சொஹெல் ராணா, இந்திய எல்லைக்கு அருகே கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களில் உயிருடன் உள்ளவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன.

உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 9 பேரை இடிபாடுகளுக்குள்ளிருந்து மீட்டெடுக்க பணியாளர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த புதன்கிழமை நடந்த இந்த விபத்தில் சிக்கி 360 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மேலும் நூற்றுக்கணக்கானவர்களில் எவரையாவது உயிருடன் மீட்கமுடியுமா என்று மீட்புப் பணியாளர்கள் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். இடிபாடுகளில் சடலங்களோடு புதைந்துகிடந்த நிலையில் சிலர் உயிருடன் மீட்டெடுக்கப்பட்டுள்ளார்கள்.

தலைநகர் டாக்காவின் புறநகர்ப் பகுதியொன்றில் இடிந்துவிழுந்த இந்த எட்டுமாடி தொழிற்சாலைக் கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து குறைந்தது இரண்டாயிரத்து நானூறு பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

 

 

 

130428090152_bangladesh_304x171_ap.jpg

 

நான்கு நாட்கள் கடந்துள்ள நிலையில் சடலங்களோடு உயிரோடு புதையுண்டுள்ளவர்களை கண்டுபிடிப்பதற்காக மீட்புப் பணியாளர்கள் போராடிவருகின்றனர்.

 

http://www.bbc.co.uk/tamil/global/2013/04/130428_bangladesh.shtml

 

Edited by துளசி

வங்கதேசம்: கட்டிட இடிபாடுகளைப் பார்வையிட்டார் பிரதமர்
29 ஏப்ரல், 2013

 

வங்கதேசத் தலைநகர் டாக்காவில் கடந்த புதன்கிழமை இடிந்து விழுந்த பின்னலாடைத் தொழிற்சாலைக் கட்டிட இடிபாடுகளை அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா பார்வையிட்டுள்ளார்.

கட்டிடம் இடிந்ததில் நூற்றுக்கணக்கானவர்கள் சிக்குண்டு காயம் அடைந்தும் உயிரிழந்தும் இருந்தனர்.

 

இறந்தவர்களின் உறவினர்கள் சிலரையும், உயிர்ப் பிழைத்தவர்கள் சிலரையும் பிரதமர் சந்தித்துள்ளார்.

சம்பவ இடத்தில் மீட்புப் பணி ஆறாவது நாளாக தொடர்ந்து நடக்கிறது. ஆனால் உயிரோடு எவரையும் மீட்பதற்கு இனிமேல் சாத்தியம் இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

 

மிகுந்த சிரமங்களுக்கு இடையில் மனிதர்களைக் கொண்டு செய்யப்பட்ட தேடுதல் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

பளு தூக்கும் இயந்திரங்கள் தற்போது கொங்கிரீட் இடிபாடுகளை அப்புறப்படுத்துவதில் பயன்படுத்தப்படுகின்றன.

கைதுசெய்யப்பட்டுள்ள கட்டிட உரிமையாளர் மீது கவனக் குறைவாக இருந்து உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

http://www.bbc.co.uk/tamil/global/2013/04/130429_bangladesh.shtml

 

Edited by துளசி

பங்களாதேஷ் கட்டட விபத்து : பலி எண்ணிக்கை 397 ஆக அதிகரிப்பு

ஏப்ரல் 29, 2013

 

 

பங்களாதேஷில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 400-ஐ நெருங்கியுள்ளது.

தலைநகர் டாக்காவில் கடந்த 24-ஆம் தேதி, 8 மாடி வணிக கட்டடம் இடிந்து விழுந்தது. கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 397-ஆக அதிகரித்துள்ளது. மீட்புப் பணியின்போது தீப்பிடித்ததில் பெண் ஒருவர் பலியானார். இருப்பினும் நேற்று மட்டும் 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

8 மாடி கட்டட விபத்தில், இதுவரை 2400 க்கும் அதிகமானோர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கட்டடத்தின் உரிமையாளரான சோஹெல் ராணா (Sohel Rana) வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல் முயன்றபோது பங்களாதேஷ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

 

http://puthiyathalaimurai.tv/death-toll-rises-to-about-400-in-the-building-collapse-accident-in-dhaka-near-bangladesh

 

பங்களாதேஸ் கட்டட இடிபாடுகளில் இருந்து நேற்று மேலும் 63 சடலங்கள் மீட்பு- பலி எண்ணிக்கை 509 ஆக அதிகரிப்பு!

 

பங்களாதேசில் 8 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் சாவு எண்ணிக்கை 509 ஆக உயர்ந்துள்ளது. டாக்கா அருகே ராணா பிளாசா என்ற 8 மாடி வணிக வளாகக் கட்டடம் கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி இடிந்து விழுந்தது. தொடர்ந்து பத்தாவது நாளாக நடைபெற்று வரும் மீட்புப் பணியில் இடிபாடுகளிலிருந்து வெள்ளிக்கிழமை 63 உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து சாவு எண்ணிக்கை 509 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

கட்டடம் இடிந்து விழுந்தது தொடர்பான வழக்கில் அப்துர் ரசாக் கான் என்ற என்ஜினீயரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர். கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது என அதன் உரிமையாளருக்கு இவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உரிமையாளரும் கட்டுமான அதிபர்களும் அதைப் பொருள்படுத்தாமல் மேலும் மூன்று மாடிகளைக் கட்டியுள்ளனர். அதையடுத்து என்ஜினீயர் அப்துர் ரசாக் கானும் எதிர்ப்பு தெரிவிக்காமல் தொடர்ந்து கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். கட்டடம் இடிந்து விழுந்தவுடன் தலைமறைவான அவரை வெள்ளிக்கிழமை கைது செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

 

முன்னதாக, இந்த வழக்கில் இரண்டு என்ஜினீயர்கள், கட்டுமான அதிபர்கள், சாவர் நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=81902&category=WorldNews&language=tamil

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.