Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமான நிலையத்தை நூதனசாலை எனவும் துறைமுகத்தை நீச்சல் தடாகவும் எனவும் விமர்சிக்கின்றனர்: ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் எந்த அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டாலும் அதனை குறை கூறும்; சிலர் இருக்கத் தான் செய்கின்றார். மத்தல விமான நிலையத்தை அமைத்ததும் அதனை நூதனசாலை என்றனர். அம்பாந்தோட்டை துறைமுகத்தை நீச்சல் தடாகம் என்று விமர்சித்தனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ தெரிவித்தார்.

கொழும்பு, கெம்பல் மைதானத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தினக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நாம் எதனை செய்தாலும் குறை கூறுகின்றனர் அல்லது விமர்சிக்கின்றர். அன்று பயங்கரவாதத்திற்கு எதிராக போராடிய போதும் எம்மை விமர்சித்தனர். இன்று நாட்டில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுகின்ற போதும் விமர்சனம் செய்கின்றனர். இதுவே இவர்களின் வழக்கம். எனவே அதனை நாம் கவனத்தில் கொள்வதில்லை.

நாங்கள் எதிர்கால சந்ததியினரை கருத்திற் கொண்டே அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுகின்றோம். சிலவேளை மக்களும் இதனை மறந்து விடுகின்றனர்.

இதேவேளை பல வருடங்களுக்கு முன்னர் படித்த பட்டதாரிகள், வேலைவாய்ப்பு வழங்கு என்று வீதிகளுக்கு இறங்கி கோஷமிட்டு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர். ஆனால் இன்று அந்த நிலைமை மாறிவிட்டது. படித்த சகல பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் படித்த பட்டதாரிகளில் யாருக்கும் தொழில் இல்லாமல் இல்லை. தாதியர் மருத்துவர் என அனைவருக்கும் தொழில்கள் வழங்கப்பட்டுள்ளன.

எனவே நாட்டில் பாரிய அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டதாலே இவ்வாறு தொழில் வாய்ப்புக்களை எம்மால் வழங்க முடிந்தது. இதனை யாரும் மறந்து விடக் கூடாது என்றார்

 

http://www.virakesari.lk/article/local.php?vid=4312

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மாண்புமிகு ஜனாதி பதி அவர்கள் தாயுள்ளத்தோடு வடக்கு கிழக்கு பகுதிகளின் அபிவிருத்திகளிலும் கூடுதல் கவனம்

செலுத்த வேண்டும்..... அபிவிருத்திகள் ஒரு பகுதியை மட்டும் நோக்கி செல்வதனால் என்னால் மக்கள் மத்தியில் இணக்க அரசியல் நடாத்த முடியாமல் இருக்கின்றது.....

சுண்டல்

புதிய இணக்க அரசியல் முன்னணி......

:D

  • கருத்துக்கள உறவுகள்
நாங்கள் எதிர்கால சந்ததியினரை கருத்திற் கொண்டே அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுகின்றோம். சிலவேளை மக்களும் இதனை மறந்து விடுகின்றனர்.
மக்களை நினைத்து கொஞ்சம் பயப்படுவது போல தெரிகின்றது......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.