Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக இன்று  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

சித்தம் - (மருத்துவம் ....இன்னும் பல) தமிழர்களின் வாழ்வியல் உணவும் மருந்தும்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நரைமுடி இப்போதைய இளைஞர்களிடம் ஒரு கவலையாகவே உள்ளது, அதை எந்த இயற்கை வழிகளில் தடுக்கலாம்??? 1. சோற்றுக் கற்றாழையய் இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.வாரத்திற்க்கு இரண்டு முறை இவ்வாறு செய்யவும் .அப்புறம் என்ன நரைமுடி போயே போச்சு 2.சீயக்காய், நெல்லிக்காய், கடுக்காய், பயற்ற மாவு போன்ற பொருள்களை அரைத்து தலைக்கு குளிக்க பயன்படுத்தலாம் இதனால் முடி உதிர்வும் படி படியாக குறையும் 3.வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாதகாலம் செய்து வந்தால், எந்த காரணத்தால் முடி கொட்டினாலும் நின்றுவிடும். அதோடு, இக்கீரை நரை விழுவ தையும் தடுக்கும். முடியும் கருகருவென வளரும். 4. மருதாணி இலையை நன்கு மைபோல் அரைத்து, அதில் எலு மிச்சம் பழச்சாறையும், வெந்தயம் பவுடர் இரண்டு ஸ்பூன் கலந்து கொள்ள வேண்டும். இக்கலவையை முதல் நாள் இரவே செய்து கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும், இக்கலவையை அனை த்து முடிகளிலும் படும்படி நன்றாக தேய்த்து இரண்டு அல்லது மூன்று மணிநேரம் ஊறவைத்து பிறகு சிகைகாய்த்தூள் தேய்த்து நல்ல தண்ணீ ரில் கழுவ வேண்டும். குறிப்பாக ம ருதாணியை போடு வதற்கு முன், தலையில் எண்ணெய் பசை இல் லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். அஷ்வின்

  • Replies 364
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted
முருங்கைக்காய் என்ன இருக்கு:
கொழுப்பு மற்றும்
இரும்புச்சத்து மற்றும்
விட்டமின் `ஏ', `சி'.

யாருக்கு நல்லது: குழந்தைகள்
முருங்கைக்காய்
விதைகளை சாப்பிட்டால்
மலக்குடல்களில் சேரும்
கிருமி பூச்சிகள்
வெளியேறும்.

யாருக்கு வேண்டாம்:
முதியவர்கள், இதய நோயாளிகள்,
மூட்டு நோய் உள்ளவர்கள்
சாப்பிடக்கூடாது.
வாயுப்பிடிப்பை ஏற்படுத்தும்.

பலன்கள்:
நரம்பு மண்டலங்களுக்கு ஊக்கம்
தரும்.
1474630_419387348188324_1912487741_n.jpg

 


மலச்சிக்கல் பிரச்சனையா? பேரீச்சம் பழம் சாப்பிடுங்க

தினமும் சாப்பிடக்கூடிய பேரீச்சம்பழத்தில் என்ன பயன் இருக்குதுன்னு உங்களுக்கு தெரியும்?. சாதாரணமா நினைச்சிடாதீங்க பேரீச்சம்பழத்தை. பேரீச்சம்பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தி ரத்த விருத்தி செய்யும், எலும்புகளை பலப்படுத்தும், இளைப்பு நோயைக் குணப்படுத்தும் மேலும் இதயநோய் வராமல் தடுக்கும்.

மலச்சிக்கல்:

பேரீச்சம் பழம் மலச்சிக்களை போக்கக்கூடிய சிறந்த உணவாகும். மலச்சிக்களால் அவதிபடுபவர்கள் பேரீட்சைபழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர மலச்சிக்கள் பிரச்சனைகள் தீரும். மலச்சிக்களை போக்ககூடிய பேரீட்சைபழத்தை சாப்பிட விரும்பினால் தண்ணீரீல் ஒரு நாள் இரவு முழுவதும் ஊறவைத்து விட்டு பின்னர் பேரீச்சம் பழத்தை சாப்பிடவேண்டும். ஒரு நாள் ஊற வைத்துவிட்டு சாப்பிடும் போதுதான் பேரீச்சம் பழத்தின் முழுபலனையும் பெறமுடியும். அதிக நார்ச்சத்து கொண்டதால் மலத்தை இளக்கி மலச்சிக்கலை போக்கிடும்.

குடல் நோய்கள்:

எண்ணற்ற வைட்டமின் சத்துக்கள் நிறைந்த பேரீச்சம்பழம், உடலை சக்தியுடன் வைத்துக்கொள்ள உதவும் சிறந்த உணவாகும். தினமும் பேரீச்சம் பழம் சாப்பிட்டு வருபவர்கள் புத்துணர்வுடன் இருப்பதை காணலாம். தொடர்ந்து பேரீச்சம் பழம் உண்பவர்களுக்கு குடல் நோய்கள் மற்றும் இதயம் சம்பந்தமான அனைத்து நோய்களும் குணமடையும். வயிறு மற்றும் குடல் சம்பந்தமான அனைத்து நுண் கிருமிகளும் வெளியேறும்.

பெண்களுக்கு:

பெண்களுக்கு தேவையான இரத்தத்தை உற்பத்தி செய்திட உதவும். இரத்த சோகையை தவிர்த்திடும். நன்கு பழுத்த உலர்ந்த பழங்களை சுத்தம் செய்து விதை நீக்கி உண்பது நல்லது. பழங்களை பாலில் கொதிக்க வைத்து மசித்து உண்ணலாம். பழங்களை இரண்டாக நறுக்கி தேனில் ஊறப்போட்டு வைத்துக் கொண்டு தினசரி இரவு உண்ணலாம். பிற உணவுகளில் இனிப்பு சுவைக்காக பேரீச்சம் பழங்களை அரைத்து கலந்து உபயோகிக்கலாம். பேரீச்சம்பழத்தை தொடர்ந்து உட்கொண்டு வர எடை மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும்.

சளி மற்றும் இருமல்:

பேரீச்சம் பழம் சளி மற்றும் இருமலுக்கான சிறந்த மருந்தாக குழந்தைகளுக்கு பயன்படுகிறது. பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் அதிக பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதோடு எலும்பும் பலப்படும்.
1463036_534919606601363_1207743595_n.jpg

 


சுடுநீரில் தேன்

மருந்துகளில் வீரியம் அதிகமாக இருந்தால், தேனை கலந்து சாப்பிடும் போது குடல்களுக்கு ஏற்படும் பின்விளைவுகளை தடுத்து நிறுத்திவிடும். தேன் சேர்த்து தயாரிக்கும் உணவுகள் மருந்து, நீண்ட நாள் கெடுவதில்லை. தேனில் சர்க்கரை சத்து அதிகமாக இருப்பதால் கடும் உழைப்பாளிகள், விளையாட்டு போட்டிகளில் ஈடுபடுவோர் அவ்வப்போது தேன் கலந்த பானம் பருகலாம்.

இதனால், உடலில் ஏற்படும் களைப்பு நீங்கும். தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய ரத்த நாளங்களை சீராக விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால், இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும். கண் நோய், தோல் நோய்களுக்கும் தேனை பயன்படுத்தலாம்.

* காலை எழுந்தவுடன் மிதமான சுடுநீரில் தேன் கலந்து குடிங்க; பாருங்க, இரண்டு மாதங்களில் தொப்பை எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

* இஞ்சியை சாறு பிழிந்து தேன் விட்டு சூடுபடுத்தி ஆற வைக்க வேண்டும். உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு, வெந்நீர் சேர்த்து அருந்தி வந்தால் 40 நாட்களில் தொப்பை குறையும்.

* அன்னாசிக்கும் இந்த குணம் உண்டு. முதல் நாள் இரவு ஓர் அன்னாசிப் பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து நன்றாக கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். மறுநாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டாலும் சிக் உடலுக்கு கைகொடுக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இயற்கை அழகு

மணம் தரும் கோரைக் கிழங்கு!

பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா? இல்லையா? என்று இறைவனுக்கே சந்தேகம் வந்ததற்கு காரணம் அந்தக் காலப் பெண்கள் கோரைக்கிழங்கு மாவை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்ததுதானோ என்னவோ... கோரைக் கிழங்கு மாவை தலையிலும், உடலிலும் தேய்த்துக் குளித்து வந்தால் நீங்கள் இருக்கும் இடம் மணமணக்கும் போங்கள். தவிர இந்தக் கிழங்கில் உள்ள `டெர்பீன்கள்' சேர்த்து தயாரிக்கப்பட்ட வாசனை எண்ணெய் காய்ச்சலையும் போக்கக்கூடியது.

தினம் ஒரு நெல்லி!

தோல் சுருக்கம் இல்லாமல் என்றும் இளமையுடன் வாழ, நெல்லிக்கனியை தினமும் சாப்பிட்டு வாருங்கள் போதும்.

``அழகாக இருக்க விரும்பாத பெண்களே கிடையாது. அப்படிப்பட்ட அழகை எந்த சைடு எஃபெக்ட்டும் இல்லாமல், செலவும் அதிகம் ஆகாமல் பெற முடியும்'' என்கிறார் அழகுக் கலை பயின்ற முதல் பெண் சித்த மருத்துவரான டாக்டர் கே. ராமலட்சுமி.

சருமத்தின் தோழி!

சருமத்தில் ஏற்படும் அலர்ஜி, சொறி, சிரங்கு போன்ற எல்லா வகை சரும பிரச்னைகளுக்கும் பெஸ்ட் தோழி பறங்கிப்பட்டைதான்!

சித்த மருத்துவர்களின் ஆலோசனைப்படி பறங்கிப்பட்டை சூரணத்தை 40 நாட்கள் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மேலே சொன்ன சரும பிரச்னைகள் எல்லாம் தலை தெறிக்க ஓடி விடும். சருமத்திலும் நல்ல நிறம் கொடுக்க ஆரம்பிக்கும்.

முடி செழித்து வளர...

பெயரிலேயே தன் குணத்தை சொல்லும் `பொடுதலை' தான் நல்ல முடி வளர்ச்சிக்கு ஏற்ற மூலிகை. பொடுதலையின் இலைச்சாறுடன் தேங்காயெண்ணெய் கலந்து காய்ச்சவும். இதை பொடுகு உள்ளவர்கள் தலைக்குத் தேய்த்து வர பொடுகு நீங்கி தலைமுடி செழித்து வளரும். தவிர பெரும்பாலும் முக அழகும், முதுகு அழகும் கெட்டுப் போவதே பொடுகினால்தானே... ஸோ, பொடுதலையை பயன்படுத்தி கூந்தலை வாருங்கள். கூடவே முகத்தையும், முதுகையும் பொடுகு பாதிப்பில்லாமல் அழகாக வைத்துக் கொள்ளுங்கள்.

அழகுராணி சோற்றுக் கற்றாழை!

சித்தர்களால் `குமரி' என்று செல்லமாக அழைக்கப்படும் சோற்றுக்கற்றாழை உண்மையிலேயே கடவுள் பெண்களுக்குக் கொடுத்த ஒரு அழகு வரம் என்றே சொல்லலாம்... ஃபிரெஷ்ஷான கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறை கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உங்கள் இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும். உடலில் கஸ்தூரி மணம் வீசும். சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும். கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும். இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும்.

கற்றாழை மடலைக் கீறி சாறெடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்கு செழித்து வளரும்.

ஆஹோ ஓஹோ பச்சிலை!

ஒரு இலையை கசக்கினாலே வீடு முழுவதும் மணம் வீசும் திருநீற்றுப் பச்சிலையிலிருந்து தயாரிக்கப்படும் வாசனை எண்ணெயை (Bascillicum oil) தொடர்ந்து முகத்தில் தடவி வர முகப்பரு மற்றும் அதைக் கிள்ளினால் வரும் கரும்புள்ளிகள் எல்லாமே மறைந்துவிடும்.

செலவேயில்லாமல் ஸ்லிம்மாக்கும் அருகம்புல்!

சுத்தம் செய்யப்பட்ட அறுகம்புல்லை இடித்து சாறு பிழிந்து அதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர உடலிலுள்ள நச்சு மற்றும் கெட்ட நீர் வெளியேறி விடும். ரத்தம் சுத்தமாகும். உடம்பிலுள்ள தேவையற்ற ஊளைச்சதையெல்லாம் குறைய ஆரம்பிக்கும்.

தேங்காய் எண்ணெயையும், அறுகம்புல் சாற்றையும் சமஅளவு எடுத்து தைலமாக காய்ச்சி அதை உடலெங்கும் பூசி அரைமணி நேரம் கழித்து பயற்றம் பருப்பு மாவால் தேய்த்துக் குளியுங்கள். இப்படியே தொடர்ந்து செய்து வர உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும். அறுகம்புல் சாற்றில்சிறிதளவு மஞ்சள் மற்றும் விளக்கெண்ணெய் கலந்து பித்த வெடிப்புகளில் தடவி வர பாதங்கள் பஞ்சு போல் `மெத்'தாகி விடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted
அவரைக்காய் :

அவரைக்காய் என்ன இருக்கு:
உயர்நிலை புரதம், இரும்பு,
சுண்ணாம்புச் சத்து.

யாருக்கு நல்லது: நீரிழிவு,
செரிமாணத் தொல்லை, மலச்
சிக்கல் உள்ளவர்களுக்கு.

யாருக்கு வேண்டாம்: யாரும்
இரவில் சேர்க்க வேண்டாம்.
நார்ச்சத்து அதிகம் என்பதால்
ஜீரணம் ஆகாது.

பலன்கள்: உடலுக்கு தேவையான
புரதச் சத்தினை அளிக்கவல்லது.
1454794_596410767074796_918958576_n.jpg

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted
அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்...!

உடலில் சிறு அடிப்பட்டால் வரும் இரத்தத்தை பார்த்தால் சிலருக்கு மயக்கம் வரும். ஏன் சிலர் உயிரே போனது போல் பயப்படுவார்கள். ஆனால் அது எவ்வளவு பெரிய பயப்படக்கூடிய அளவில் பெரிய ஒரு விஷயம் அல்ல. அதிலும் குழந்தைகள் தான் இத்தகைய சிறு காயங்களால் இரத்தம் வரும் அளவிற்கு அதிகம் பாதிக்கப்படுவார்கள். அப்போது பெற்றோர்கள் எதற்கும் பதட்டத்தோடு மருத்துவரிடம் அழைத்து செல்வதற்கு பதிலாக, நம் முன்னோர்களின் வைத்தியமான சில வீட்டு மருந்துகள்இருக்கின்றன.

மேலும் சமையல் செய்யும் போது காய்கறிகளை வெட்டும் போது, கவனக்குறைவால் விரல்களை தெரியாமல் வெட்டிக் கொள்வோம். இத்தகைய நேரங்களில் எல்லாம், என்ன செய்வது என்று பதட்டப்படாமல், பாட்டி வைத்தியமான வீட்டு கிச்சனில் இருக்கும் பொருட்களை வைத்து சரிசெய்யலாம்.

* அடிப்பட்டு இரத்தம் வரும் போது, உடனே அந்த இடத்தை கழுவி விட்டு, வீட்டில் இருக்கும் காப்பி பொடியை, அந்த காயத்தின் மேல் வைக்க வேண்டும். இதனால் காப்பி பொடி இரத்தத்தை உறைய செய்யும்.

* இரத்த வடிதலை சரிசெய்ய மைதா அல்லது கோதுமை மாவை வைத்தால், அடிப்பட்ட இடத்தில் இருந்து இரத்தம் வடிதல் நின்றுவிடும். இது ஒரு சிறந்த ஹோம் ட்ரீட்மெண்ட்.

* இந்த முறை சற்று வித்தியாசமானது. ஆனால் உண்மையானது. எலக்ட்ரிக்கல் டேப் வைத்து இரத்த வடிதலை தடுக்கலாம். எப்படியெனில், எலக்ட்ரிக்கல் டேப்பை காயம் ஏற்பட்ட இடத்திற்கு அருகில் இறுக்கமாக சிறிது நேரம் கட்ட வேண்டும். இதனால் அந்த இடத்தில் இரத்த ஓட்டம் தடைபடும்.

* சிறுவயதாக இருக்கும் போது, ஏதேனும் அடிப்பட்டால், வீட்டில் இருக்கும் அம்மா உப்பை அந்த இடத்தில் வைப்பார்கள். ஏனெனில் உப்பு மற்றும் உப்பு நீர், காயங்களை மட்டும் சரிசெய்யாமல், இரத்த வடிதலையும் தடுக்கும்.

* காயத்தால் இரத்தம் வரும் போது, சிலந்தி வலைகளை, அதன் மேல் வைத்தால், சிறிது நேரத்தில் இரத்தக் கசிவு நின்றுவிடும். பின் அதனை சுத்தமாக கழுவிட வேண்டும். இந்த சிகிச்சையை நம்ப முடியாது தான். ஆனால் உண்மையில் சரியாகிவிடும்.

ஆகவே மேற்கூறியவாறு செய்து வந்தால், இரத்தக் கசிவு நீங்கிவிடும். மேலும், வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்று உங்களுக்கு தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...
1424512_710778945606822_1518786727_n.jpg

 


எளிய இயற்கை வைத்தியம்:-

மஞ்சள்:

மஞ்சள் நீரை அருந்த காமாலை கட்டுப்படும். மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெள்ளைத் துணியை நனைத்து நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு கண் நோய் உள்ளவர்கள் கண்களை துடைத்துக் கொண்டால் கண் சிவப்பு, கண் அருகல், கண்வலி, கண்ணில் நீர் கோர்த்தல் ஆகியவை தணியும். சிறந்த கிருமிக் கொல்லி, மணத்திற்காகவும் நிறத்திற்காகவும் உணவில் சேர்க்கப்படுகிறது.

ஏலக்காய்:

ஏல விதையை பனை வெல்லத்துடன் சேர்த்து இடித்துச் சாப்பிட்டால் வாயில் நீர் ஊறுதல், தாகம், வியர்வையுடன் கூடிய தலைவலி, மிகுந்த வறட்சி, கபம் முதலியன கட்டுப்படும். ஏலக்காய் எண்ணெய்யை தலைவலி மருந்துடன் சேர்த்து சுளுக்கு, அடிபட்டவீக்கம் முதலானவற்றின் மீது தேய்க்க வலி நீங்கும்.

இலவங்கம்:

இலவங்கத்தை நீர் விட்டு அரைத்து நெற்றியிலும், மூக்கின் மீதும் இட்டால் தலை பாரம் குணமாகும். இதை அனலில் வதக்கி வாயில் இட்டு சுவைத்தால் தொண்டைப் புண் ஆறும். பற்களின் ஈறு கெட்டிப்படும். தேனில் இழைத்துச் சாப்பிட்டால் உடல் வெப்பத்தைத் தடுக்கும். புண்ணில் சீழ் பிடிப்பதையும் கை, கால் நடுக்கத்தையும் இலவங்க எண்ணெய் தீர்க்கும்.

சோம்பு (பெருஞ்சீரகம்):

சோம்பை லேசாக வறுத்து பொடித்து இரண்டு கிராம் அளவில் எடுத்து சர்க்கரை சேர்த்து தினம் இரண்டு வேளை சாப்பிட வயிற்று வலி, வயிற்று உப்புசம், செரியாமை, இரைப்பு முதலியன நீங்கும். இதன் சூரணம் வியர்வையை உண்டாக்கி சிறு நீரை அதிகப்படுத்தும்.

வெந்தயம்:

அரிசி அல்லது ஜவ்வரிசிக் கஞ்சியுடன் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும். வெந்தயத்தை ஊர வைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் தலை முடி நன்றாக வளரும். வெந்தயக் கீரை அஜீரணக் கோளாறை நீக்கும். தினமும் இரவில் ஒரு கைப்பிடி வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் வரும்.
1461077_642742709081381_908485358_n.jpg

 


சமையலின் போது செய்யும் 5 மோசமான தவறுகள்:

சமையலில் உப்பை அதிகமாக சேர்த்து விடுவதோ,
காரத்தை அளவு தெரியாமல் போட்டு விடுவதோ தவறு அல்ல.
அது அப்போதைய சமையல் ருசியை மட்டுமே கெடுக்கும்.

ஆனால்..
அதையும் விட நமக்கு தவறு என்று தெரியாமல்
வெறும் ருசிக்காகவும்,அழகுக்காகவும் சில
தவறுகளை செய்து விடுகிறோம்.அதனால் நமது உடல்
ஆரோக்கியமும் பாதிக்கிறது.

1. எந்த உணவு பொருளையும் கழுவாமல் பயன்படுத்தவே கூடாது.
உதாரணத்துக்கு சிலர் புளியை தண்ணீர் ஊற்றி கரைப்பார்கள்.
ஆனால்,அதையும் ஒரு முறை தண்ணீர் சேர்த்து அலசி கீழே ஊற்றிவிட்டு,
அடுத்து நீர் ஊற்றி கரைத்துக் கொள்ளலாம். இதே போல,
முட்டைகளை நன்கு கழுவிவிட்டு வேக வைக்க வேண்டும். கீரையை 2
முறையாவது கழுவ வேண்டும்.

2. கோழி இறைச்சியை சமைக்கும் முன்பு அலசும் போது எச்சரிக்கையாக இருக்க
வேண்டும். அதாவது,கோழி இறைச்சியில் தண்ணீரை ஊற்றும் போது அதில்
இருந்து தெளிக்கும் தண்ணீர் படும் இடங்களில் எல்லாம்
பாக்டீரியாக்கள் பரவும் என்பதை மறக்கக் கூடாது.
மேலும்,
கோழி இறைச்சியை அலசி கீழே விடும் தண்ணீர் நேராக வெளியேற்றப்பட
வேண்டும். அதில் ஏராளமான பாக்டீரியாக்கள் இருக்கும்
என்பதால் கவனமாக அந்த நீரை வெளியேற்ற வேண்டும்.

3. எந்த உணவு பொருளையும் அதிக நேரம் வதக்கவோ, கருக
வைக்கவோ கூடாது.எல்லோருக்குமே உணவு பொருள்
என்பது நன்கு சிவந்து இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.
ஆனால், அது உடல் நலனுக்கு தீமையை ஏற்படுத்தும்.
எனவே, எந்த உணவையும் அதிகமாக வதக்கி கருக வைக்க
வேண்டாம். கருகிய அல்லது தீய்ந்த உணவு பொருள்
புற்றுநோயை ஏற்படுத்தும்.

4. காலையில் வேகமாக சமைக்க வேண்டும் என்பதால் பலரும்
வெங்காயத்தை இரவே நறுக்கி வைத்துக்கொள்வார்கள். அது மிகப்பெரிய
தவறாகும்.வெங்காயத்துக்கு கிருமிகளை கவர்ந்திழுக்கும்
குணம் உள்ளது. அதனால்,வெங்காயத்தை நறுக்கியதும்,அது
காற்றில் இருக்கும்அனைத்து கிருமிகளையும்கவர்ந்திழுத்து வைத்துக்
கொள்ளும். கிருமிகள் நிறைந்த வெங்காயத்தைத் தான் நாம்
மறுநாள் உணவுக்குப் பயன்படுத்துகிறோம் என்பதை மறவாதீர்.

5. மேலும்,இஞ்சியை தோலோடு சமைக்கக் கூடாது.
கீரையோடு புளி சேர்க்கக் கூடாது.
கோழிக்கறியை எடுத்து வைத்து மறு நாள் சாப்பிடக் கூடாது.
நான்ஸ்டிக் தவாவை இரும்பு தேய்ப்பானைப் பயன்படுத்தி தேய்த்துக்
கழுவக் கூடாது. விரத நாட்களை தவிர்த்து, சமைத்து ருசி பார்த்து
விட்டுத்தான் சமையலை முடிக்க வேண்டும்.

"நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம் "

-menaka
1000279_670759846287855_1259561294_n.jpg

 


‘‘காது குத்துவதால் கண்களுக்குப் பாதுகாப்பா?

என்ன... எங்களுக்கே காது குத்துகிறீர்களா?’’ என்று கேட்காதீர்கள். எந்நேரமும் புகை மண்டிக் கிடைக்கும் சமையல் அறையிலேயே இருந்தாலும் நம் நாட்டுப் பெண்களுக்கு பார்வைக் கோளாறு வராமல் இருப்பதற்கு, காது குத்துவதே காரணம் என்று சீன மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

போதிய வெளிச்சம் இல்லாத சமையல் அறைகளில் கண் எரிச்சலுடன் வேலை செய்வதால் கண்கள் விரைவில் பாதிப்படையும். ஆனால், அப்படி வேலை செய்யும் பெண்கள் ஆண்களை விட குறைவாகவே கண்ணாடி அணிகின்றனர். இதைப் பற்றி ஆய்வு செய்த சீன அக்குபங்சர் மருத்துவர் சூலின், ‘‘காது குத்துதல் அக்குபங்சர் முறையில் கண்களைப் பாதுகாக்கும் முறை. அதுதான் பெண்களின் கண்களைக் காக்கிறது. மேலும் காதுகளுக்கும் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் கூட சம்பந்தம் உண்டு. அதனால்தான் கருப்பையில் முழு வளர்ச்சியடைந்த ஒரு குழந்தையின் வடிவம் எப்படி இருக்குமோ, அதே வடிவத்தில் காதுகள் அமைந்திருக்கின்றன’’ என்கிறார்.

தைவான் மருத்துவக் குழுவும் இந்த முடிவை உறுதி செய்துள்ளது. காது குத்திய பெண்களில் 72 சதவீதத்தினருக்கு நிறக்குருடு, கிட்டப்பார்வை ஆகிய கண் நோய்கள் இல்லையாம். மேலும், அவர்கள் மங்கலான வெளிச்சத்தில் கூட பல்வேறு வண்ணங்களை எளிதில் அடையாளம் காண்கிறார்களாம். ஆகவே, காது குத்துங்க!
1452414_535274239899233_767038210_n.jpg

 


 
சூயிங்கம் சாப்பிடாமல் ஏலக்காய் சாப்பிடுங்கள்...!

பல‌ர் சூ‌யி‌ங்க‌ம் சா‌ப்‌பிடுவா‌ர்க‌ள். இதனா‌ல் எ‌ந்த பலனு‌ம் இ‌ல்லை. ஆனா‌ல் அத‌ற்கு ப‌திலாக ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று சா‌ப்‌பிடலா‌ம்.
ப‌சியே ஏ‌ற்படுவ‌தி‌ல்லை, சா‌ப்‌பிட ‌‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று கூறுபவ‌ர்க‌ள், ‌தினமு‌ம் ஒரு ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்றா‌ல், ப‌சி எடு‌க்கு‌ம். ‌ஜீரண உறு‌ப்பு‌க‌ள் ‌சீராக இய‌ங்கு‌ம்.
நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌விட ‌சிரம‌ப்படுபவ‌ர்களு‌ம், ச‌ளியா‌ல் இரும‌ல் வ‌ந்து, அடி‌க்கடி இரு‌மி வ‌யி‌ற்றுவ‌லி வ‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம் கூட ஏல‌க்கா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமையு‌ம். ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌‌ட்டாலே, கு‌த்‌திரு‌ம்ப‌ல், தொட‌ர் இரு‌ம‌ல் குறையு‌ம்.
வா‌‌ய் து‌ர்நா‌ற்ற‌ம் ஏ‌‌ற்படுவத‌ற்கு‌ம் ‌ஜீரண உ‌று‌ப்புக‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பி‌ர‌ச்‌சினை தா‌ன் காரண‌ம். எனவே வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தை‌ப் போ‌க்க ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌ட்டு வரலா‌ம்.
சா‌ப்‌பிடு‌ம் உணவு வகைக‌ளி‌ல் ‌சி‌றிது ஏல‌க்காயை சே‌ர்‌த்து‌க் கொ‌ள்வது ந‌ல்லது. அ‌திகமாக சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள‌க் கூடாது.

ஏலக்காயை பொடியாக்கி தேனில் கலந்து சாபபிட்டால் நரம்பின் பலம் கூடும், கண் பார்வை அதிகரிக்கும். ஏலக்காயை பொடியாக்கி துளசிச் சாற்றுடன் கலந்து உட்கொண்டால் வாந்தி நிற்கும். ஏலக்காய் 4, ஒரு துண்டு சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து நீர் விட்டு கொதிக்க வைத்து பருகினால் வறட்டு இருமல் தொண்டை வலி தீரும். 4 ஏலக்காய், ஒரு கைப்பிடி நாவல் இலை சேர்த்து அரைத்து ஆட்டுப்பாலில் கலந்து சாப்பிட்டால் செரியாமை, சீதக்காதி தீரும். ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு ஆகியவை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்து போல் போட்டால் தலைவலி, சளி விளகும்.

வாசனைப் பொருட்களின் அரசி என்று வர்ணிக்கப்படுவது ஏலக்காய். சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் ஏலக்காய் அசைவ உணவுகளுக்கு கூடுதல் சுவை சேர்க்கக்கூடியது.

ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன. அவை…

* குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும்.
* ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்.

* மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், `ஏலக்காய் டீ’ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது.

* நா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும். அதேநேரம், ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல.

* வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்.

* விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும்.

* வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்.

நன்றி :- இன்று ஒரு தகவல்
1450820_711339432217440_617256800_n.jpg

 


மருத்துவங்கள் - 1
மருத்துவத்தில் பல வகைகளை பற்றி அறியும் போது சேகரித்த தகவல்கள். மருத்துவத்தில் உடலுக்கு மட்டும் மருந்து கொடுப்பது, மனதிற்கு மட்டும் மருந்து கொடுப்பது, ஆன்மாவிற்கு மட்டும் மருந்து கொடுப்பது, இந்த மூன்றிற்கும் சேர்த்தும் கொடுக்கலாம். இதில் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

1. சித்த மருத்துவம்
2. ஆயுர் வேத மருத்துவம்
3. யூனானி மருத்துவம்
4. காந்த மருத்துவம்
5. ரெய்கி மருத்துவம்
6. வர்ம மருத்துவம்
7. அக்கு பஞ்சர் மருத்துவம்
8. அக்கு பிரஷர் மருத்துவம்
9. மலர் மருத்துவம்
10. மெஸ்மரிசம் மருத்துவம்
11. ஹிப்னாடிசம் மருத்துவம்
12. நம்பிக்கை மருத்துவம்
13. மசாஜ் மருத்துவம்
14. ஜோதிட மருத்துவம்
15. ரிப்லஸ் மருத்துவம்
16. உடற்பயிற்சி மருத்துவம்
17. பெட் மருத்துவம்
18. தியான மருத்துவம்
19. யோக மருத்துவம்
20 வண்ண மருத்துவம்
21. சிறுநீர் மருத்துவம்
22. கலை மருத்துவம்
23. முத்திரை மருத்துவம்
24. பெண்டுலம் மருத்துவம்
25. நவமணி மருத்துவம்
26. அரோமா மருத்துவம்
27. கை மருத்துவம் மற்றும் விரல் மருத்துவம்
28. இசை மருத்துவம்
29. எண்ணை மருத்துவம்
30. விழி மருத்துவம்
31. சிரிப்பு மருத்துவம்
32. Pranic Healing ( தமிழ்ல இந்த முறைக்கு பெயர் தெரியவில்லை )
33. Distance Healing ( தமிழ்ல இந்த முறைக்கு பெயர் தெரியவில்லை )
33. counseling...

இதில் இசை மருத்துவம் பற்றி ஒரு சிறு உதாரணம் பார்ப்போம். ஆல்பா நிலைக்கு இந்த இசை போக வைக்கும். ஆக்கினை ( Pituitary Gland) - ஐ தூண்டி விடுகிறது. Head phone - ல் இந்த இசையை கேட்டால் இந்த இசை முடிவதற்குள் தூங்கிடலாம். நீங்களும் கேட்டு உங்கள் கருத்துகளை பகிறவும்.

https://www.dropbox.com/s/9n1bjc4sm0glzec/third%20eye.mp3
1475777_607459869312431_1729222792_n.jpg

 


நெல்லிக்காய் சாப்பிடுங்க இளமையா இருங்க

நீண்டகாலம் வாழ்ந்து, அவ்வையார் தமிழுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற நோக்கில், தனக்கு கிடைத்த அரிய வகை நெல்லிக்கனியை, அவ்வையாருக்கு மன்னர் அதியமான் கொடுத்ததாக வரலாறு உண்டு. இவ்வளவு சிறப்பும், பயனும் உள்ள நெல்லிக்காயில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. வைட்டமின் - சி அதிகம் உள்ள இந்த நெல்லிகாய் உடலுக்கு எனர்ஜியை தரக்கூடியது.

நோய் எதிர்ப்பு சக்தி உடையது. சர்க்கரை நோயாளிகள் நெல்லிக்கனியை தொடர்ந்து சாப்பிடலாம். கால்சியம், இரும்பு சத்துள்ள இந்த நெல்லிகாய் தலைமுடியை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தலைமுடி வேர்கள் வலுவாக இருக்க உதவுகிறது. முடி உதிர்வதை தடுக்கிறது. இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி உடைய இந்த நெல்லிக்காய் பார்வை குறைபாடு ஏற்படாமல் கண்களை பாதுகாக்கிறது. வயிற்றுபோக்கு ஏற்படாமல் தடுக்கிறது.

கர்ப்பிணிப் பெண்களும், காய்ச்சல் உள்ளவர்களும் நெல்லிக்காயை உண்ணக் கூடாது என்பார்கள். இது திரிதோஷ சமணி, வாத, பித்த, சிலேத்துமங்களை சமநிலையில் வைக்கக் கூடியது. இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என்ற மூன்று சுவைகளும் முத்தோஷங்களை சமனப்படுத்தி, உடலைத் தேற்றுகிறது.

உடல் அசதி மற்றும் அஜிரணக் கோளாறுகளுக்கு இது கைகண்ட மருந்தாகும். அத்துடன் வாயுத் தொல்லைகளைப் போக்கக்கூடிய குணம் இதற்கு உண்டு. இரத்த உறைவினால் உண்டாகும் பல நோய்களைப் போக்கும் ஆற்றலும் முக்கியமாக பித்தத் தொடர்பான வியாதிகளுக்கு நெல்லிக்காய் லேகியம் தினசரி வெறும் வயிற்றில் உட்கொள்வதால் நல்ல பலன் பெறலாம்.

அடங்கியுள்ள சத்துக்கள்

புரதம் - 0.4 கி
கொழுப்பு - 0.5 கி
மாச்சத்து - 14 கி
கல்சியம் - 15 மி.கி
ஸ்பரஸ் - 21 மி.கி
இரும்பு - 1 மி.கி
நியாசின் - 0,4 மி.கி
வைட்டமின் ´பி1` - 28 மி.கி
வைட்டமின் ´சி` - 720 மி.கி
கலோரிகள் - 60

இதுபோன்ற பல்வேறு நன்மைகளை உடைய இந்த நெல்லிக்காய், முதுமையை தடுத்து நம்மை இளைமையாக வைத்திருக்க உதவுகிறது. ஏராளமான பயன்களை கொண்ட நெல்லிக்காய், தாராளமாக கிடைக்க கூடியது. எனவே, நீங்களும் நெல்லிக்காயை விரும்பி சாப்பிடலாமே.
1465262_419643454829380_931319372_n.jpg

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

பிரிட்ஜில் வைக்கக் கூடாத 10 பொருட்கள்
************************************

பொதுவாக நாம் சமைக்க பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம். ஆனால், சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. வைக்கக் கூடாது மட்டும் அல்ல, வைக்கவேக் கூடாது என்றும் சொல்லலாம்.

அது போன்ற போருட்களின் பட்டியலை பார்க்கலாம்.

வெங்காயம்

வெங்காயம் பொதுவாக காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும். பாலீதீன் பையில் அடைத்து விற்கப்படும் வெங்காயத்தையும் நான் வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்த பிறகு அதனை காற்றோட்டமாக வைக்க வேண்டும்.

பூண்டு

பூண்டை எப்போதுமே பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அது பூரணம் பிடிக்க ஆரம்பித்துவிடும். அதனை காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பூண்டுகளை வாங்கி வந்ததும், அதனை தனித்தனி பல்லாக பிரித்து எடுத்து வைக்கலாம்.

உருளைக் கிழங்கு

உருளைக் கிழங்குகளை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அதுபோலவே அதனை கழுவியும் எடுத்து வைக்கக் கூடாது. உருளைக் கிழங்குகளில் பச்சை வேர்கள் மற்றும் பச்சை நிறம் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும். காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பாலீதீன் பையில் வைக்கக் கூடாது.

தேன்

உலகத்திலேயே கெட்டுப் போகாத உணவு பொருள் என்று ஒன்று உண்டு என்றால் அது தேன்தான். ஆனால், நாம் இப்போது கடைகளில் வாங்கப்படும் தேன், சுமை மற்றும் பலவற்றுக்காக பல வித பொருட்கள் கலக்கப்பட்டு வருகிறது. எனினும், தேனை பிரிட்ஜில் வைத்து பராமரிக்கக் கூடாது.

வாழைப்பழம்

வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைத்தால் அது விரைவில் கெட்டுப் போய் தோல் கருத்து விடும். எனவே வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

பூசணிக்காய்

பூசணிக்காயை நன்கு காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும்.

மெலாம்பழம்

கடையில் இருந்து முழுதாக வாங்கி வந்த மெலாம்பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால், மெலாம் பழத்தில் இருக்கும் சில சத்துக்களை பழம் இழந்து விடுகிறது. ஆனால், நறுக்கிய மெலாம்பழத்தை டப்பாவிலோ பாலிதீன் பையிலோ போட்டு பிரிட்ஜில் வைக்கலாம்.

இதேப்போல, அன்னாசி, கிவி பழம், பிலம் பழம், மாங்காய் போன்றவற்றையும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

579183_530850047010386_1495646147_n.jpg
 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted
கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய்

வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை. இதில் உள்ள நார்ப்பொருள்களால் கொலாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம் அகலும். வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும்.

வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது. இது தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்ட உதவுகிறது. இச்செடியின் வேரைக் காயவைத்துப் பொடியாக்கிப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் தம்பதியருக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் ஏற்படும். ஆண்களின் ஆண்மையும் பெருகும். சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவும், தோல் வறட்சியை நீக்கவும் உடம்மைப் பளபளப்பாக மாற்றவும் அரிய மருந் தாகவும் வெண்டைக்காய் திகழ்கிறது.

வெண்டையின் விசேஷ குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றது. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன. சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழகொழ திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும்.

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது; இதயத்துடிப்பைச் சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது. 100 கிராம் வெண்டைக் காயில் கிடைக்கும் கலோரி 66 ஆகும். இத்தகைய காரணங்களால் வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாகத் திகழ்கிறது.
1469921_535067249919932_109890330_n.jpg

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted
உடலுக்கு தேவை நடை பயிற்சி:-

நம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு நடைபயிற்சி தான் நல்ல தீர்வைத் தருகிறது. சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதய நோய் போன்ற முக்கிய பிரச்னைகளுக்கு மருத்துவர்கள் முதலில் பரிந்துரை செய்வது வாக்கிங் போங்க என்பதாக தான் இருக்கும்.

ஒரு மணி நேரம் தொடர்ந்து நடந்தால் தான் முழுமையான பலன் கிடைக்கும். படிப்படியாக தூரத்தை அதிகரிக்க வேண்டும். முதலில், தினசரி இரண்டு கி.மீ நடக்க ஆரம்பித்து நிமிடத்துக்கு சுமார் 100 அடி எடுத்து வைத்து நடக்கலாம். இது ஆண்களுக்கு 92 முதல் 102 பாத அடியாகவும் பெண்களுக்கு 91 முதல் 115 பாத அடியாகவும் இருக்க வேண்டும். பெண்களின் பாத அளவு, கால்களின் உயரம் குறைவாக இருப்பதால், அவர்கள் அதிக அடி எடுத்து வைத்து நடந்தால் தான் ஆண்களுக்கு இணையாக நடக்க முடியும். நடைப்பயிற்சியின் போது வியர்வையை உறிஞ்சக்கூடிய தளர்வான பருத்தி ஆடையை அணிந்து கொள்வது நல்லது.

மூச்சு வாங்கும் அளவுக்கு வேக நடை கூடாது. அருகில் நடப்பவர் வேகமாக நடக்கிறார் என்று நம் வேகத்தைக் கூட்டுவது ஆபத்தில் கொண்டு போய்விடும். நேராக நிமிர்ந்து நடக்க வேண்டும். தோள் பட்டையை தளர்த்தி கைகளை நன்றாக வீசி நடக்க வேண்டும். அடிவயிறு சற்று எக்கியபடி நடப்பது நல்லது.

சாலைகளில் நடப்பதைவிட பூங்காக்கள், கடற்கரை, விளையாட்டு மைதானத்தில் நடப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. நாற்பது வயதுக்கு மேலுள்ளவர்கள் இருதய நிபுணரின் ஆலோசனைப்படி நடப்பது நல்லது. தசை, மூட்டு தொந்தரவு இருந்தால் அதற்கு சிகிச்சை பெற்று பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். காலுக்கு பொருத்தமான வியர்வையை உறிஞ்சக்கூடிய பருத்தி ஷாக்ஸ், செருப்பு அணிந்து நடப்பது அவசியம். காலணியின் அடிப்பாகம் பாதத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மேடு பள்ளம் இல்லாமல் மென்மையாக இருக்க வேண்டும்.
1471925_643060232382962_1104924080_n.jpg

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

 

1470210_535285396564784_993010953_n.jpg
வெண்புள்ளி நோய்க்கு வெற்றிகரமான வீட்டுவைத்தியம். "அழகானவள்" என்று பேரெடுக்க ஆசைப்படாத பெண்ணே உலகில் இல்லை. அழகிற்கு ஒரு ஆபத்து என்றால் அவளைப் பொருத்தவரை வாழ்கையே அஸ்தமனமாகிவிடும். ஆனாலும் சிலரிடம் சித்து விளையாட்டுக்களைக் காட்டி இயற்கை கொட்டமடிக்கும். வெண்புள்ளி நோயால் எந்த ஊனமும் இல்லை என்றாலும் எல்லாம் ஊனமடைந்து விட்டதாக மனம் குறுகிவிடும். மேலும் மனதிற்குள் அழுவது மங்கையர்க்கு கைவந்த கலை. உடல் நோய் உடலை மட்டும் வதைக்கும். உள்ளத்து நோய் உள்ளத்தோடு உடலையும் சிதைக்கும். அழகு தேவதையாய் அடியெடுத்து வைத்தவள்தான் எங்கள் மருமகள் ஹேமா. எந்தக் குறையுமில்லை – மருமகளின் காலில் தோன்றிய கடுகளவு வெண்புள்ளி தவிர. சிரிப்பால் மறைத்துக் கொண்டிருந்தாள் சில காலம், பின்னர் சிரிப்பை மறந்தாள் சில காலம். அவளுக்கு ஓர் குற்ற உணர்வு காரணமே இல்லாமல். பூவைத்தொடுவது போல் நாங்கள் அவளைத் தொட்டாலும், தீயைத் தொடுவதுபோல் அவள் எங்களைத் தீண்டினாள். அதிக அன்பு செலுத்திப் பார்த்தும், தோல்வியே மிஞ்சியது எங்களுக்கு. எங்களைவிட ஆங்கில மருத்துவத்தின் மீது அபார நம்பிக்கை அவளுக்கு. மருந்துகளின் எண்ணிக்கையும், டாக்டர்களின் எண்ணிக்கையும் கூடக்கூட வெண்தேமல் பரவும் வேகம் அதிகமாயிற்று. முடிவு???? வழக்கம்போல்தான் --- கிட்னி பிராப்ளம், ஹார்ட் பிராப்ளம், மூச்சுத் திணறல்....... பிறகு ஒரு நாள் ஹேமாவுக்கு வந்தது கோமா. அவளாக பயந்து, ஆங்கில வைத்தியத்தை அடியோடு விட்டு விட்டாள். அவள் முகத்தில் சிரிப்பு இல்லாததால் நாங்களும் சிரிக்க முடியவில்லை. ஒரு நாள் சித்த வைத்தியர் வடிவில் தெய்வம் அவளுக்குக் காட்சி அளித்தது. “சின்ன வைத்தியம் ஒன்று சொல்கிறேன் சீரியஸாக எடுத்துக் கொள்வாயா?” என்று கேட்டார் சித்த வைத்தியர் . “சீரியஸான வைத்தியங்களே என்னை சின்னப்படுத்திவிட்டபின், சின்ன வைத்தியம் என்னை என்ன செய்துவிடும்? சொல்லுங்கள் செய்கிறேன் ” என்றாள். “காலை வெறும் வயிற்றில், கருவேப்பிலை கொழுந்து ஒரு கைபிடி அளவு எடுத்து அத்துடன் கீழாநெல்லி கொழுந்துஇலை ஒரு கைபிடி சேர்த்து, மிக மெதுவாக மென்று விழுங்கிவா” என்றார். “ப் பூ .... இவ்வளவுதானா? ” என்றாள். “நிறைய நீர் குடி. உணவைக் குறைத்து பழங்கள் பல சாப்பிடு” என்றார். “பத்தியம் ஏதேனும் உண்டா?” என்றாள் “சொல்ல மறந்துவிட்டேன். வெள்ளை சக்கரையை ( White Sugar) வாயால் உச்சரிக்கவோ, கண்ணால் பார்க்கவோ கூடாது ” என்றார். சனியனை விட்டு ஒழித்ததால் பிணியிலிருந்து விடுதலை பெற்றாள் எங்கள் குலமகள். “உலகத்திற்கு இதைச் சொல்லவேண்டும் மாமா ” என்றாள். “இணைய தளத்தில் பரிமாரக் காத்திருக்கிறார்கள் இனிய நண்பர்கள், உன்னுடைய போன் நம்பர் கொடுக்கத் தயாரா? ” என்றேன். அதற்கு “போட்டோக்களும் தருகிறேன் மாமா” என்றாள். ”எத்தனை வேதனைப்பட்டிருந்தால் அடுத்தவர்க்கு இது பயன்படட்டும் என்ற துணிவோடு போட்டோக்களைக் கொடுக்க முன் வருவாள்” என்று எண்ணி நாங்கள் பாராட்டினோம் அவளை. நீங்களும் வாழ்த்துங்கள். வாழட்டும் அவள் இன்னுமொரு நூறாண்டு சுமங்கலியாக. திருமதி. ஹேமா உமாசங்கர் கைபேசி எண்.85262 32442 ( தயவு செய்து மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை)

 

வலிப்பு நோயை தடுக்கும் வாழைப்பழம்

வாழைப்பழம் மிக மலிவான விலையில் கிடைக்ககூடியது மட்டும் இல்லாமல் அனைவராலும் வாங்கி உண்ணக்கூடியது.தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் இளமையும் அழகும் அதிகரிக்கும்.அதுமட்டும் இல்லாமல் வலிப்பு நோயிலிருந்து விடுபடலாம் என இத்தாலி மற்றும் இங்கிலாந்து ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தை மற்றும் சேர்ந்த இத்தாலி ஆராய்சியாளர்கள் வலிப்பு நோய்கான காரணங்களும் தீர்வுகளும் என்ற தலைப்பில் ஆராய்ச்சி மேற்கொண்டனர்

இதில் பொட்டாஷியம் ரத்தத்தை ஆரோக்கியமாக்கும் என்பதுடன் ரத்தம் உறைதலை தடுக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதனால் அன்றாடம் காலை,மதியம்,இரவு என மூன்று வேளையும் 3 வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் வலிப்பு நோயை தடுக்கலாம் என்று ஆராய்ச்சிகள் கூறியுள்ளனர்.

ஏனெனில் ரத்தம் உறைவதால் வலிப்பு நோய் ஏற்படும் சாத்தியங்கள் அதிகம். வாழைப் பழத்தில் உள்ள பொட்டாஷியம் சத்து ரத்தம் உறைவதை தடுக்கும். இது சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவி மூளைக்கு செல்லும் ரத்தம் பாதிப்படைவதை தடுக்கும்.

மூளை மற்றும் ரத்த ஓட்டம் ஆரோக்கியமாக இருந்தால் நோய் தாக்குதல் இருக்காது. வலிப்பு நோய் தாக்குதலில் இருந்து வாழைப் பழம் உள்ளிட்ட பொட்டாஷியம் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் 21 சதவீதம் கூடுதல் பாதுகாப்பு அளிக்கிறது என்று தங்கள் ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக ரத்தத்தில் உள்ள குறைபாட்டை நீக்குவதில் பொட்டாஷியத்துக்கு அதிக பங்கு உள்ளது. இந்த சத்து அதிகம் உள்ள கீரை வகைகள், பால், முந்திரி, பாதாம் உள்ளிட்ட பருப்பு வகைகள், மீன், மொச்சை, பயிறு போன்ற தானிய வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ளலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

1459815_535555459871111_1010619558_n.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted
பாட்டி வைத்தியம்:-

* குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.

* கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.

* எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.

* நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

* எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

* பித்த நீர்ச் சுரப்பு இல்லாதவர்கள் தொடர்ந்து தேன் அருந்தி வந்தால், பித்த நீர் சுரந்து தொண்டை இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களை சுலபமாக நீங்கி விடுகின்றன.

* குழந்தைகளுக்கு உண்டாகும் பல்நோய், இருதய நோய் ஆகியவற்றுக்குத் தேன் ஒரு சிறந்த சஞ்சீவியாகும்.

* தேன் மூலம் சுவாசக் கோளாறு, வயிற்றுக் கடுப்பு, கிருமி நோய், தாகம் வாந்திபேதி, தீப்புண் விக்கல், மலச்சிக்கல் ஆகிய நோய்கள் குணமாகும், பசியை அது வளர்க்கும். ஜீரணத்துக்கும் உதவும்.

* தேன் கொழுப்பைக் கரைக்கக் கூடியது. ஆகவே உடல் மிகவும் பருமனாக உள்ளவர்கள் தொடர்ந்து தேன் சாப்பிட்டு வந்தால் பருமனும் எடையும் குறையும்.

* நமது உடலின் மேல் ஏற்படும் புண் காயங்களுக்கு மாத்திரமின்றி, உள்ளே ஏற்படும் இரைப்பைப் புண் போன்றவற்றையும் தேன் சாப்பிட்டு குணமாக்கலாம்.

* வயதான சிலருக்கு அவ்வப்பொழுது தசைகளில் வலி ஏற்படுவதுண்டு. கால்களில் குற்றமடைதல், அல்லது குரல் தொணியே இல்லாது தொண்டையை அடைத்து விடுதல் போன்ற கப நோய்கள் கண்டபோது, ஒரு நாளைக்கு நாலைந்து முறை தேனை துளசிச் சாறு, வெற்றிலை கலந்து கொடுத்து வந்தால் நல்ல குணம் ஏற்படும்
1425745_643580318997620_125997981_n.jpg

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

1422536_640193472705771_701716772_n.jpg

 

1. மூலிகையின் பெயர் -: அந்தரத்தாமரை.

2. தாவரப் பெயர் -: PISTIA STRATEUTES.

3. தாவரக்குடும்பம் -: ARACEAE.

4. வேறு பெயர்கள் -: ஆகாயத்தாமரை.

5. பயன் தரும் பாகங்கள் -: இலைகள் மட்டும்.

6.வளரியல்பு -: அந்தரத்தாரமரை நீரில் மிதக்கக் கூடிய கூட்டம் கூட்டமாக வளரும் சிறு செடிகள். சுத்தமான தண்ணீரில் வளரக்கூடியது. இலைகள் நீளம் சுமார் 13 செ.மீ. இருக்கும். இலைகள் எதிர் அடுக்கில் ஜோடியாக இருக்கும். இதற்கு காம்புகள் (ஸ்டெம்) கிடையாது. கூடை வடிவ இலை இழம்பச்சை நிறமாக இருக்கும். அதில் மொசுப்பான முடிகள் இருக்கும். இது முதன் முதலில் ஆப்பிரிக்காவில் ‘Lake Victoria’ என்ற ஏரியில் தோன்றியதாகச் சொல்வர். இது அமரிக்காவில் 1765 ம் ஆண்டில் ‘புளோரிடா’ என்ற இடத்தில் ஏரிகளில் கண்டு பிடிக்கப்பட்டதாகச் சொல்வர். இதை ஆங்கிலத்தில் ‘Water Cabbage’ மற்றும் ‘Water Lettuce’ என்றும் கூறுவார்கள். இதன் வேர்கள் குஞ்சம் போல் இருக்கும். தமிழகமெங்கும் குளம் குட்டைகளில் வளர்வது. பூக்கள் செடி நடுவில் மிகச் சிறிதாகத் தென்படும். இது இன விருத்திக்கு தாய் செடியுடன் சிறு குட்டிச் செடிகள் நூல் இழை போன்று தொடர்ந்து பெருகிக் கொண்டே போகும்.
+
7.மருத்துவப் பயன்கள் -: இது வெப்பு தணித்து தாகங் குறைக்கும் மருந்தகவும் தாதுக்களின் எரிச்சலைத் தணித்து அவற்றை துவளச் செய்யும் மருந்தாகவும் பயன் படுத்தலாம்.

இலையை அரைத்துக் கரப்பான், தொழு நோய்ப்புண் ஆகியவற்றின் மீது வைத்துக் கட்டி வர விரைவில் ஆறும். ஆசனவாயில் வைத்துக் கட்டி வர வெளி மூலம், ஆசனக் குத்தல் ஆகியவை தீரும்.

25 மி.லி. இலைச்சாற்றை சிறிது தேனுடன் காலை, மாலை 5 நாட்கள் கொடுக்க மார்பிலும் உண்டாகும் கிருமிக் கூடுகள் போகும். மேலும் நீர்சுருக்கு, மூலம், சீதபேதி, இருமல் ஆகியவை தீரும்.

அந்தரத்தாமரையிலையை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து அந்த ஆவியை 10 நிமிடம் ஆசன வாயில் பிடித்து வர மூல மூளை அகலும்.

இதன் இலைச்சாறு அரை லிட்டர், நல்லெண்ணைய் 1 லிட்டர் ஆகியவற்றைக் கலந்து சிறு தீயில் காய்ச்சி வண்டல் மெழுகுப் பதமான நிலையில் கிச்சிலிக் கிழங்கு, சந்தனத்தூள், வெட்டி வேர், கஸ்தூரி மஞ்சள் சாம்பிராணி வகைக்கு 10 கிராம் போடித்துப் போட்டு இறக்கி வடித்து (ஆகாயத்தாமரைத் தைலம்) வாரம் 1 முறை தலைக்கிட்டுக் குளித்து வர உட்சூடு, கண்ணெரிச்சல், மூல நோய் ஆகியவை தீரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

தூக்கம் ஒரு மாமருந்து

நித்திய நியமங்களில் நித்திரைக்கு நிரந்தர இடம் உண்டு. பிறந்த குழந்தைகள் 18 மணி நேரமும் 6 வயது வரை 15 மணி நேரமும் சிறுவர்கள் 12 மணி நேரமும் பெரியவர்கள் 8 மணி நேரமும் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் 10 மணி நேரமும் உறங்கினால் நமது உயிர் பேட்டரி சார்ஜ் ஆகி ஆரோக்கியம் அழிவு படாமல் உயர்த்திடப்படும்.

மன சஞ்சலம் தீர்க்கும் மருந்து உறக்கம்,கவலைகளைக் கரைக்கும் மருந்து உறக்கம்,உடல் பிணிகளைப் போக்கும் மருந்து உறக்கம்,தினம் புத்துணர்ச்சியைத் தரும் மருந்து உறக்கம்,ஆழ்மனதை சுத்தரிக்கும் மருந்து உறக்கம்,உறக்கம் இல்லையேல் நரம்பு தளர்வு ஏற்படும்

இன் சோம்னியா நோய் ஏற்படும்.அழிந்த திசுக்கள் புதுப்பிக்கப்படாது.கழிவு மண்டல நச்சுக்கள் உடலில் தேங்கும்.மனம் தறி கெட்டு பாயும்.

சுவாசக் காற்று, நீர், வெப்பத் தேவை போல் உறக்கம் அத்தியாவசியக் கலை. அதை அருமையாக அனுபவிப்பவர்கள் மிகக் குறைவு.பகலில் தூங்கியே இரவுத் தூக்கத்தைத் தொலைத்து தொல்லைகளுக்கு ஆளாகுபவர்கள் நம்மில் பலர் உள்ளனர். தூக்க மாத்திரையின் துணையுடன் ஒப்புக்குத் தூங்குபவர் நம்மில் பலர் உள்ளனர்.பகல் தூக்கம் பட்டுத் தூக்கம்
இரவு தூக்கம் இன்பத் தூக்கம்.நாம் படுக்கைக்கு சென்றவுடன் தூங்கும் தன்மையைப் பெற்றால் அதுவே வாழ்வின் மிகப் பெரிய அரிய பொக்கிஷமாகும். அதுவே மன நிம்மதிக்கு அத்தாட்சி, சான்றாகும்.

இரவுத் தூக்கத்தில் ஜீரண மண்டலம் தவிர மற்ற தசைநார்கள் இயக்கங்கள் முழு ஓய்வு எடுத்து அழிந்த திசுக்கள் புத்துப்பித்தல் பராமரித்தல் நடைபெறுகிறது. உடலில் தேங்கும் கழிவுகள் அனைத்தும் வெளியேற்றப்படுகின்றன. குறிப்பாக நரம்பு சோர்வு நரம்பு தளர்ச்சி சரி செய்யப்படுகிறது.
'நினைந்து நினைந்து உணர்ந்த உணர்ந்து
நெகிழ்ந்து நெகிழ்ந்த அன்பே&
தவம் புரியேன் தவம் புரிந்தார் தமைப் போல நடித்தேன்
தருக்குகின்றே னுணர்ச்சியிலாச் சடம் போல விருந்தேன்.

சுகமன நித்திரை கிடைக்க சில,
1. இரவல் தூக்கமாத்திரை, போதை வஸ்துகள் சாப்பிடக்கூடாது
2. இரவு உணவை 7 மணி முதல் 8 மணிக்கு முடித்தல்.
3. கனி உணவாக சாப்பிடுதல் நல்லது.
4. உணவு முடித்து ஒரு மணி நேரம் கழித்து உறங்கச் செல்லுதல். (அரை மணி நேரம் குறுநடை செல்லலாம்.)
5. சளி, இருமல், சுவாசப்பிணிகள் இருப்பவர்கள் பால், தயிர் முட்டை உணவை இரவில் நிறுத்த வேண்டும். தூங்கும் குழந்தைகளை எழுப்பி பால் கொடுப்பதைத் தவிர்க்கவும்.
6. இரவில் படுக்கும் முன் சூடான காபி, டீ, பிற இதர குளிர்பானங்கள் தவிர்க்கப்படவேண்டும்-.
7. படுக்கும் முன் தியானம் செய்யலாம்.
8. அலுவலக வேலை, தீர்வு கிட்டாத வேலைகளை இரவில் செய்யக்கூடாது.
9. படுக்கும் முன் அரை டம்ளர் அளவு நீர் பருகலாம்.
10. கடவுள் சிந்தனை, மந்திரம் உச்சரிக்கலாம்.
11. மனதுக்கு பிடித்த இசை நல்லது.
12. பல நேரம் தேவையற்ற இரைச்சல், ஓசை, எரிச்சல் தரும் சினிமாப் பாடல்கள் நல்ல தூக்கத்தில் முதல் தர எரிரியாக உள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
13. தினசரிக் கவலைகளை இரவு 8 மணிக்குள் வெளியேற்றிவிட வேண்டும். கரைத்து விட வேண்டும். தொலைத்து விட வேண்டும். வெளியே அனுப்பிவிட வேண்டும். அதை படுக்கைக்கு அழைத்துச் செல்லக்கூடாது.


நீர் சிகிச்சை

நம் உடலில் முக்கால் பங்கு நீரே உள்ளது. உலகின் அளவும் அதுவே. நீர் நமது தினசரி தேவைகளில் ஒன்று. குறைந்தது 3 முதல் 3,5000 லிட்டர் குடிநீர் நமது நாட்டில் ஒரு நபருக்கு தேவை.

1. காலையில் எழுந்தவுடன் காலை டீ, காபியை தவிர்த்து, மறுத்து மாற்றாக சுத்தமான குடிநீ¢ர் ஒன்று முதல் மூன்று டம்ளர் நீர் அருந்திட இரவு மிச்சமீதி மன அழுத்தம், மன உளைச்சல் அந்நீரில கரைந்திடும். சரியாகிவிடும். மலச்சிக்கல் நீங்கும்.
2. அடிக்கடி நீரில் முகம் கழுவ மன அழுத்தம் விலகும். புதிய சுறுசுறுப்பு வரும். முகம் கழுவிய பின் துணயால் துடைக்கக்கூடாது. அப்படியே விட வேண்டும்.
3. ஈரத்துணி பட்டி நெற்றியில் அடிக்கடி போடலாம். அதனால் தலை பாரம், மூளைச்சுடு, மனஉளைச்சல், மனசோர்வு கணிசமாகக் குறையும். புத்துணர்ச்சி தோன்றும். இது உறுதி. வயிற்றிலும் போடலாம்.
4. காலை மாலை இருநேரம் குளியல் எடுக்கலாம். சாதாக்குளியலை விட ஷவர்பாத், அருவி, மழைக்குளியல் மிக நல்லது. மன அழுத்தம் உடன் சீர்படும்.
5. இடுப்புக் குளியல் தொட்டியிலும், முதுகுத் தண்டு தொட்டியிலும், ஜெட் குளியலிலும் தினமும் அல்லது வாரம் இருமுறை குளித்திடலாம்.
இத்தொட்டிகளை வாங்கி வீடுகளில் அல்லது இயற்கை மருத்துவ முகாம்களில், இயற்கை மருத்துவ மனைகளில் இத்தொட்டிகள் கிடைக்கும். 20 முதல் 30 நிமிடம் குளித்திட வேண்டும்.
6. கடல் குளியல், குளக் குளியல், நீச்சல் குளியல்கள் அனைத்தும் மன அழுத்தம் சீர்பட எளிய குளியல் முறைகள்.
7. மன அழுத்தம், மன உளைச்சல், மன குழப்பம், கோபம், சினம், எரிச்சல், மன பொருமல், நிலையற்ற மனம் உள்ளவர்கள் தம்மிடம் எப்போதும் எங்கும் குடிநீர் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
சினம், கோபம் தொடங்கும் சமயமே குடிநீர் குடித்து மட்டுப்படுத்தலாம்.
குடிதண்ணீர் நமது சினத்தை சில நிமிடத்தில் கரைத்தும மாயமாக்கும். இது உண்மை.
நமது உடலில் அச்சமயம் அளவுக்கு மீறி ஏற்படும் வேதியியல் மாற்றத்தால் ஏற்படும். உருவாகும் அமிலங்களையும் உடம்பில், இரத்தத்தில் கலக்காமல் நீர்த்திடச் செய்யும். எனவே நீரை நாம் சிறப்பாக, சரியாக, நன்றாக பயன்படுத்தி மன அழுத்தத்திலிருந்து எளிதில் இலகுவாக விடுபடலாம்.
8. மலச்சிக்கல்: பல மணி நேரம் பஸ், ரயில் பயணம், வேலைப் பளு, தொடர்ந்து அமர்ந்த நிலைப் பணி, அதிக சூடு உள்ள சூழல், பணி, தவறான அமில உணவுகள் மிகுதல் மூலம் மலச்சிக்கல், மலக்கட்டு, மலம் கெட்டிப்படுதல் இறுகுதல் உண்டாகும் சமயம் உடல் இரத்தம் அமிலமாகி, அசுத்தமாகி உடலில் வேதியியல் மாற்றம் ஏற்பட்டு திசுக்கள், காந்தசக்தி தறி கெடும் சமயம் மன அழுத்தம் மாறுபாடு அடைகிறது. வேறுபாடு அடைகிறது. எரிச்சல், கோபம், சினம் உச்சநிலையை எட்டுகிறது. அச்சமயம்.

1. காலையில் குடிநீர் ஒன்று முதல் மூன்று டம்ளர் நீர் குடிக்கலாம்.
2. இரவில் கனி உணவுகள் மட்டும் சாப்பிடலாம். தோலுடன் சாப்பிட்டுப் பழக வேண்டும்.
3. சில உடற்பயிற்சிகள், யோகா செய்யலாம்.
4. இடுப்புக் குளியல், வயிற்றில் மண்பட்டி, வயிற்று ஈரத்துணி பட்டி எடுக்கலாம்.
5. இரவில் 5 கிராம் ( 1 டீஸ்பூன்) அளவில் திரிபலா பொடி, அல்லது கடுக்காய் பொடி, அல்லது நிலவாரைப் பாடி,அல்லது முருங்கைக்கீரைப் பொடியை நீரில் அல்லது தேனில் கலந்து சாப்பிட இருவேளையில் மலக்கட்டு விலகும்.
6. இவை ஐந்தும் செய்ய இயலாமல் செய்தும் பலன் இல்லாதவர்கள் மட்டும் அஹிம்சை எனிமா எனப்படும் கருவி மூலம் 200 முதல் 300 மி.லிவரை நல்ல சுத்த நீரை மலவாய், குடல் மூலம் ஏற்றினால் இரு நிமிடங்களில் திரும்ப நீருடன் கெட்டி மலம் இளகி வெளியேறும். தேவைப்படும் சமயம் மட்டும் எனிமாக் கருவியை பயன்படுத்தலாம். தினமும் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

எனவே நீரை சரியாகப் பயன்படுத்தும் கலையை அறிந்தாலே நமது மன அழுத்தம் பாதி குறைந்துவிடும். விலகி விடும்.

அதுபோல் உண்மைப் பசியை அறிவதற்கும் நீர் நல்ல நண்பனாக வழிகாட்டியாக, டெஸ்டராக உள்ளது.
உடலில் பசி ஏற்படும் சமயம், பசி நரம்புகள் சுண்டப்படும் சமயம் 50 முதல் 60 மி.லிட்டர். அரை டம்ளர் நீர் அருந்திடும் சமயம் குறைந்தது 15 நிமிடமாவது உச்சப் பசி ஏற்படவில்லை எனில் அது பொய் பசியே. நீர் அருந்திய ஐந்து நிமிடத்திற்குள் உச்சப் பசி தோன்றிய அது உண்மைப் பசி எனலாம்.

அதேபோல் உணவிற்கு முன் பிரார்த்தனை அவசியம் அரக்கப் பரக்க ஐந்து நிமிடத்தில் சாப்பிடக்கூடாது. உணவிற்கு முன் ஆசமனம் எனப்படும் ஒரு மடக்கு நீரை கையில் ஊற்றி உறிஞ்சிட பசியின் தன்மை, உடலின் காந்தை சமப்பட்டு ஜீரணம் மேம்படும் தன் மயமாதல் சிறப்படையும். உணவுடன், உணவு முடித்தவுடன் நீர் குடிப்பதைத் தவிர்க்கவும். உணவு முடித்து 30 நிமிடம் கழித்தக் குடிக்கும் நீர் நல்ல பலனைத் தரும்.
580618_535698076523516_904661126_n.jpg

வெள்ளைபடுதலைக் குணமாக்கும் எள்ளு உருண்டை!

பூப்படைந்த பெண்களில் அதிகமானோருக்கு உள்ள பிரச்சினை தான் வெள்ளைபடுதல் எனப்படும் (Vaginal Discharge) பிறப்புறுப்பின் கருப்பைக் கழுத்து வழியே எச்சில் போன்ற திரவம் சுரப்பதாகும். பெரும்பாலான பெண்களுக்கு இப் பிரச்சினை இருக்கின்ற போதும்; பிறப்புறுப்பினைத் தொற்று நோய்களிலிருந்து கழுவிச் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் தான் வெள்ளைபடுதலினைக் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள். ஆனாலும் ஒரு சில சத்தான உணவுகளை உட்கொள்வதன் மூலமாகவும் இந்த வெள்ளைபடுதலைக் குணப்படுத்த முடியும்.

அந்த வகையில் வெள்ளைபடுதல், மலச்சிக்கல், மாதவிடயாயின் போது ஏற்படும் வலி, குழந்தை பெற்ற பெண்களின் தசைகள் இறுக்கமாக எனப் பல பிரச்சினைகளுக்குத் தீர்வினைக் கொடுக்கவல்ல

எள்ளு உருண்டை;

செய்முறை!

*எள்ளைப் பொன் பருவமாகும் வரை- அல்லது எள்ளிலிருந்து எண்ணெய் சொட்டும் வரை வறுத்தெடுக்கவும்.
*தேங்காய்ப் பூவை தனியாக கொட்டி, பதமாகும் வரை வறுத்தெடுக்கவும்.
*வெல்லக் கட்டியினைச் சிறிது சிறிதாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
*இனி வறுத்தெடுத்த எள்ளு, தேங்காய்ப்பூ, வெட்டி வைத்த சர்க்கரை, சிறிதளவு சீனி முதலியவற்றை ஒன்றாக கொட்டி மிக்ஸியில் மிக்ஸ் பண்ணி அரைக்கவும். (அரைக்கும் மிக்ஸிக் குவளையில் தண்ணீர்த் தன்மையோ, எண்ணெய்த் தன்மையோ இல்லாது பார்த்துக் கொள்ளவும்).
*அரைத்தெடுத்த எள்ளுக் கலவையினை, உருண்டையாக்கி (Sesame Balls) காற்றோட்டமான பகுதியில் ஒரு தட்டில் வைக்கவும்.
*இரண்டு மணி பின்னர் உங்களின் நாவிற்குச் சுவையூட்டும் எள்ளுருண்டை தயார்.
*நீங்கள் விரும்பினால் சிறிதளவு கோதுமை மாவில் தண்ணீர் சேர்த்துக் கலவையாக்கி, அந்தக் கலவையினுள் எள்ளுருண்டையினை உருட்டி எண்ணெயிலும் பொரித்தெடுக்கலாம்.

கோபத்தை கையாள எளிய வழிகள்

1. கோப உணர்ச்சிகள் அதிக இரத்த அழுத்தம், கண் சிவப்பு அமில சுரப்பு, அல்சரை உண்டு பண்ணும் & மிருக குணத்தை உச்ச நிலைக்கு உயர்த்திடும்.
2. தண்ணீர் குடித்திட கோபம் தணியும்.
3. ஒன்று முதல் பத்து வரை எண்ணிடலாம்
4. கோபத்தை இறைவனிடம் சமர்ப்பிக்கலாம்.
5. கோபப்படும் இடம், நபரிடம் இருந்து விலகிச் செல்லலாம்.
6. கோபத்திற்கு காரணமாக சொல், செயல், எண்ணத்தில் இருந்து வேறு செயல் செய்தல்.
7. கோபத்தின் போது முகம் விகாரமாகி, அன்பு, சாந்தம் குறைவதை கண்ணாடி மூலம் உணர்ந்து குறைத்தல்.
8. கோபத்திற்கான காரணத்தை ஒரு பேப்பரில் வரிசையாகப் பட்டியல் இட்டு எழுத கோபம் குறையும்.
9. தியானம், சாந்தி ஆசனம் செய்ய கோபம் குறையும்.
10. வயிறு ஈரத்துணிப் பட்டி, கண் பட்டி, நெற்றிப்பட்டி போடலாம்.
11. நீர்வீழ்ச்சி, ஷவர் பாத், தொட்டிக் குளியல் செய்ய கோபம் குறையும்.
12. தொடர்ந்து இயற்கை உணவுகளை, இயன்ற வரை சாப்பிட்டுப் பழக கோபம் படிப்படியாகக் குறையும்.
13. பழச்சாறுகள், இயற்கை உணவுச் சாறுகள் குடித்து கோபத்தை குறைக்கலாம்.

1471775_535698376523486_586096165_n.jpg


 
குடியை விட முடியவில்லையா?

குடியை விட முடியவில்லையா? இதோ குடியை குறைக்க சில குறிப்புகள்!!! அதிகமாக மது அருந்துகிறீர்களா? குடியை விட ஆசை, ஆனால் முடியாமல் போகிறதா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். தற்போது குடி என்பது ஒரு ஃபேஷனாகிவிட்டது. மாணவர்கள், அலுவலக வேலையில் உள்ளவர்கள், தொழிலாளிகள் என்று பலரும் இதை அருந்துகிறார்கள். அதனுடைய பின்விளைவுகளை அறியாது, தானும் கெட்டு, தன் குடும்பத்தையும் நடுத்தெருவுக்கே கொண்டு வந்து விடுகிறார்கள்.

குடியால் அழிந்த குடும்பங்கள் எத்தனையோ உள்ளன. இதற்கு வீதிக்கு வீதி அமைந்திருக்கும் பார்களும் காரணமாகும். குடியை விட்டு விடலாம் என்று மனவுறுதியோடு இருப்பவர்கள் கூட, சரியில்லாத நட்பினால் மீண்டும் மீண்டும் குடியில் தள்ளப்படுகின்றனர்.

தற்போது இந்த குடியால் ஒட்டுமொத்த சமுதாயமே சீரழிந்து கொண்டிருக்கிறது. குடி போதையால் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு போன்றவை சர்வ சாதாரணமாகிவிட்டது.

நாடு ஒரு பேரழிவான பாதைக்கு சென்று கொண்டிருக்கிறது. ஆண்கள் மட்டுமே குடிக்கு அடிமைப்பட்டு கிடந்த நிலை மாறி, பெண்களும் தற்போது இதற்கு அடிமையாகிவிட்டனர்.

குடியால் பல ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருப்பதாகவும், இதனால் காலப்போக்கில், உயிர்களின் உற்பத்தி குறைந்து கொண்டே சென்று, ஒரு கட்டத்தில் உயிர்கள் பிறப்பதே நின்றுவிடும் என்று ஆய்வு ஒன்று அதிர்ச்சித் தகவலை அளித்துள்ளது.

இவ்வளவு பேரழிவை தரும் குடியிலிருந்து விடுபட விரும்பினால், உங்களுக்காக இதோ சில குறிப்புகள்..

மனநல ஆலோசகரை அணுகுதல்

குடியால் ஏற்பட்ட உளவியல் மாற்றம் மற்றும் உணர்ச்சிவசப்படும் நிலைகளைப் போக்க ஒரு நல்ல மனநல ஆலோசகரை அணுகுங்கள். அவர்களது ஆலோசனைகளை பின்பற்றவும்.

தேதியை குறித்துக் கொள்ளுதல்

குடியை விட சில முக்கிய தேதியை தேர்ந்தெடுக்கவும். இன்றிலிருந்து குடிக்கமாட்டேன் என்று சபதமிடுங்கள். பெரும் குடிகாரராக இருந்தால் படிப்படியாக குறைக்கும் முயற்சிகளில் ஈடுபடவும்.

மது பாட்டில்களை தூக்கி எறிதல்

குடி தொடர்புடைய அனைத்து விதமான கேன்கள், பாட்டில்கள் போன்றவற்றை தூக்கி எறியவும். விருந்தினர்கள் வந்தால் தேவைப்படுமே என்று நினைக்க வேண்டாம். அதற்கு பதில் அவர்களுக்கு தேநீர், காபி அல்லது பழச்சாறுகள் போன்றவற்றைத் தரலாம்.

கொஞ்சம் கொஞ்சமாக விடுதல்

டியை ஒரே நாளில் விட்டு விட முடியாது. முதலில் சிறிது சிறிதாக விட முயற்சி செய்யுங்கள். அதிகமான குடி காரணமாக பராலிசிஸ், தலைவலி, வாந்தி வருவதாக கற்பனை செய்யுங்கள். பின் இந்த பயமே குடிக்கும் எண்ணத்தை தடுக்கும்.

உணவு மூலம் தவிர்த்தல்

குடிக்கும் முன் ஏதாவது உணவு அருந்துங்கள். அதனால் குடிப்பதில் உள்ள நாட்டம் குறையும். அப்படியே மீறிக் குடித்தாலும் கொஞ்சமாகத் தான் குடிக்க முடியும்.

வைட்டமின் பி மாத்திரைகள்

குடிக்கும் போது வைட்டமின் பி மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள். உடல் திறனை பாதிக்கும் மதுவின் தொடர் விளைவுகளை இந்த தையாமின் மாத்திரைகள் தடுக்கும். வைட்டமின் பி எனப்படும் தையாமின் குறைபாடு, கடுமையான மனநல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

மனநிலையை உணர்தல்

உண்மையிலேயே குடிப்பதை நிறுத்த விரும்பினால், உங்கள் தவறுகளை ஒப்புக் கொள்ளவும். கடந்த கால மோசமான நிலைமைகளை அறிந்து கொள்ளவும். தங்கள் பிரச்சனைகளை பரந்த மனதுடன் ஒப்புக் கொள்ளும் நடைமுறையை தொடங்கும் போது, குடியிலிருந்து மீண்டு, வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.

குடியை தூண்டும் நண்பர்களை தவிர்த்தல்

குடிக்கத் தூண்டும் மனிதர்களுடன் தொடர்பை உடனடியாக நிறுத்தவும். பாருக்கு போவதை நிறுத்த வேண்டும். மேலும் குடும்பத்தினரிடம் மற்றும் நண்பர்களிடம், குடிப்பதை நிறுத்த விரும்புவதாகக் கூறி, அவர்களது தார்மீக உதவியைப் பெறவும்.

தண்ணீர் குடித்தல்

சுத்தமான தூய தண்ணீரின் அற்புதத்தை உணருங்கள். குறைந்தது 5 குவளை தண்ணீர் குடிக்க பழக்கப்படுத்திக் கொள்ளவும்.

உணவில்லாமல் பல வாரங்கள் இருக்கலாம். ஆனால் தண்ணீர் இல்லாமல் இரண்டு நாட்கள் கூட இருக்க முடியாது. நிறைய தண்ணீர் குடித்தால், மது அருந்தும் ஆசை குறையும்.
 

 


கர்ப்பத்தின் போது முதல் மூன்று மாதங்களில் சாப்பிட வேண்டியவை!!

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளது. எனவே கர்ப்பிணிகள், முதல் மூன்று மாதங்களில் உண்ணும் உணவுகளிலும், செயல்களிலும் கவனத்துடன் நடக்க வேண்டியது அவசியமாகிறது. மேலும் மருத்துவர்களே, இந்த காலங்களில் பெண்களை நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டுமென்றும் பரிந்துரைப்பார்கள். கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். ஏனெனில் இந்த சத்துக்கள் தான் கருவில் உள்ள சிசுவின் வளர்ச்சியை அதிகரிக்கக்கூடியது. அதிலும் புரோட்டீன் கருவின் வளர்ச்சியை சீராக வைக்கவும், கால்சியம் குழந்தையின் எலும்புகள் வலுவோடு இருப்பதற்கும் உதவும். எனவே கர்ப்பிணிகள், இந்த காலங்களில் இந்த சத்துக்கள் நிறைந்த உணவை தவறாமல் சாப்பிட வேண்டும். சரி, இப்போது கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் எந்த உணவுகளையெல்லாம் தவறாமல் சாப்பிட வேண்டும் என்று பார்ப்போமா!!!

பசலைக் கீரை

பசலைக் கீரையில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், தாயின் உடலில் இரத்தமானது அதிக அளவில் உற்பத்தியாவதோடு, கருவில் உள்ள சிசுவிற்கும் அதிக அளவில் இரத்த ஓட்டமானது அதிகரிக்கும்.

பாதாம்

பாதாமில் வைட்டமின் ஈ, ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் புரோட்டீன் அதிகமாக நிறைந்துள்ளது. ஆகவே அதிக அளவில் கர்ப்பிணிகள் சாப்பிட, கருவிற்கு தேவையான புரோட்டீன் சத்தானது கிடைக்கும்.

சிக்கன்

கர்ப்பிணிகளுக்கு சிக்கன் ஒரு பாதுகாப்பான உணவு. ஏனெனில் இதனை முதல் மூன்று மாதங்களில் அதிகம் உணவில் சேர்த்தால், இந்த காலத்தில் ஏற்படும் காலை மயக்கம் மற்றும் சோர்வானது நீங்கும். மேலும் சிக்கனில் இரும்புச்சத்தானது இருப்பதால், உடலில் இரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.

அஸ்பாரகஸ்

கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் மட்டும் உடல் இயங்காது. அந்த சத்து உடலில் உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி நிறைந்து உணவுகளையும் சாப்பிட வேண்டும். இத்தகைய வைட்டமின் டி சத்து, அஸ்பாரகஸில் அதிகம் உள்ளது. மேலும் இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், காலை மயக்கமானது நீங்கும்.

வெண்டைக்காய் .

பலர் இந்த காலத்தில் வெண்டைக்காயை அதிகம் தேர்ந்தெடுத்து சாப்பிடமாட்டார்கள். ஆனால் இதில் நிறைய சத்துக்கள் உள்ளன. அதிலும் பிரச்சனையில்லாமல் நடப்பதற்கான ஃபோலிக் ஆசிட் அதிகம் உள்ளது. அதுமட்டுமல்லாமல், கர்ப்பிணிகள் இதனை சாப்பிட்டால், நீரிழிவு பிரச்சனை வராமல் தடுக்கலாம்.

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், அவை தாயின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுநோய்கள் எதுவும் தாக்காமல் தடுப்பதோடு, அதில் உள்ள ஃபோலிக் ஆசிட் குழந்தை பிறப்பதில் உண்டாகும் பிரச்சனையை தடுக்கும்.

ப்ராக்கோலி

சாதாரணமாகவே ப்ராக்கோலியில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளது. அதிலும் இதனை கர்ப்பிணிகள் அதிகம் உணவில் சேர்த்தால், அதில் உள்ள இரும்புச்சத்து, தாயின் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

முட்டை

முட்டையில் அதிக அளவில் புரோட்டீன் நிறைந்திருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஆகவே கர்ப்பிணிகள் தினமும் 2 முட்டைகளை சாப்பிட்டு வருவது, தாய்க்கு மட்டுமின்றி, குழந்தைக்கும் நல்லது.

சால்மன்

பொதுவாகவே மீனில் ஒமோக-3 ஃபேட்டி ஆசிட், கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் இருப்பதால், கர்ப்பிணிகள் மீன் சாப்பிடுவது நல்லது. ஆனால் அவற்றில் சால்மன் என்ற மீனில் மற்ற மீன்களை விட, அதிகமான அளவில் இத்தகைய சத்துக்கள் நிறைந்துள்ளன.

தயிர்

பால் பொருட்களில் ஒன்றான தயிரில் கால்சியம் அதிகம் இருக்கிறது. மேலும் கர்ப்பமாக இருக்கும் போது சில பெண்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்படும். இத்தகைய எரிச்சலை தணிக்கும் வகையிலும், உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளவும், தயிரை அதிகம் சாப்பிடுவது நல்லது.

 

1476488_535698599856797_862576770_n.jpg


உலர்திராட்சையின்நன்மைகள்...!

*.உலர் திராட்சையில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

*.ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமாகும்.

*.
இதில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

*.மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை உலர் திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.
1455920_712155505469166_1786529212_n.jpg

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இள நரையைப் போக்க வேண்டுமா? இன்றைய காலத்தில் சுத்தமான நீர் இல்லாததாலும், இயற்கை முறையில் தலைக்குக் குளிக்காமல், இரசாயனக் கலப்பு நிறைந்த ஷாம்பு, சோப்பு போன்றவற்றால் குளிப்பதாலும் இளம் வயதிலேயே தலை முடி கொட்டி விடுகிறது. முடி என்னமோ எளிதாகக் கொட்டிவிடுகிறது. ஆனால், அதனை மீண்டும் முளைக்க வைக்கவோ, மேலும் முடி கொட்டாமல் காப்பாற்றுவதோ இன்றைய மருத்துவத்தில் பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில், முடி உதிர்வதைத் தடுக்கவும், இள நரையைத் தவிர்ப்பதும் எப்படி என்பது குறித்து இயற்கை மருத்துவம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம். வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம். சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மாயமாகிவிடும். சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும். சரி, முடி உதிர்வதைப் பார்த்தோம், நரை போக்க வழி பார்த்தோம். முடி வளர வழி இருக்கிறதா? ஆம் அதுவும் இருக்கிறது நம் இயற்கை மருத்துவத்தில். கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும். இவையனைத்திற்கும் மேலாக, சுத்தமாக முடி இல்லாமல் வழுக்கையாக இருப்பவர்களுக்கு ஒரு குறிப்பு. கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனைத் துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி அதனைத் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும். — with V Vijaya Baskaran.

1455110_535462066547117_309801591_n.jpg

 


1012774_535462639880393_1125058515_n.jpg

இஞ்சி தரும் இனிமையான வாழ்வு இஞ்சியை நாம் சமையலுக்கு மட்டுமே பயன்படுத்துகிறோம், கிராமப்புரங்களில் ஒரு சில வியாதிகளுக்கும் இதை பயன்படுத்துகிறார்கள். ஆனால் நகரத்தில் வாழும் மககள் இதன் அருமை புரியாமல் கண்ட சிகிச்சையை எடுத்துக்கொண்டு உடலை கெடுத்துக் கொள்கின்றனர். எனவே. இஞ்சியின் பயன்களை புரிந்துக்கொண்டு ஒரு சில நோய்களுக்கு பயன்படுத்துவதன் மூலம் அவற்றை குணப்படுத்தலாம். * பிரசவத்தின் போது உண்டாகும் பொதுவான பிரச்சனைகளான குமட்டல், வாந்தி போன்றவைகளுக்கு இஞ்சி சாறினை குடித்து வந்தால், அவை எளிதில் குணமாகும். * கர்ப்பக்காலத்தில் பெண்களுக்கு உணவு என்பது மருந்தாக தோன்றும். இது போன்ற நேரங்களில் இஞ்சியால் தயாரிக்கப்பட்ட ஊறுகாய், துவையல் போன்ற பொருட்கள் பசியினை தூண்டி, பசியின்மையைப் போக்குகிறது. * கீமோதெரபி போன்ற சர்ஜரியின்போது உண்டாகும் குமட்டலை சரிசெய்கிறது. * மூட்டுவலி, சதைப்பிடிப்புப் போன்ற வலிகளைக் குறைக்கும் மருந்தாகவும் இது பயன்படுகிறது. * கடுமையான போதையையும் முறிக்கும் சக்தி இஞ்சிக்கு இருப்பதாக அறிஞர்கள் பலரும் கண்டறிந்துள்ளனர். எனவே, இஞ்சியை நம் அன்றாட உணவில் எடுத்துக்கொள்வதன் மூலம் பல நோய்களை நாம் எதிர்க்கலாம்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted
கட்டுக்கொடி-Kattukodi [Cocculus hirsutus(Linn)Diels]

தண்ணீரை அல்வா போல் மாற்றும் தன்மை கொண்டது .

கட்டுக்கொடியின் மருத்துவ குணங்கள் :-

கட்டுக்கொடி ஓர் ஏறு கொடியினம். முனை மழுங்கிய இலைகளுடன் வேலிகளிலும், புதர்களிலும், மானாவாரி, விவசாய நிலங்களிலும் படர்ந்து வளரக்கூடியது. இதில் சிறு கட்டுக்கொடி பெருகட்டுக் கொடி என இரு வகையுண்டு. இரண்டிற்கும் மருத்துவ குணம் ஒன்றே. ஒரே கட்டிலிருந்து பல கொடிகள் உண்டாகும். மண்ணில் பதிந்தால் வேர் விட்டு இன விருத்தியாகும். விதை மூலமும் இன விருத்தி செய்யப்படும்.

மருத்துவப் பயன்கள் :-

இது குளிர்ச்சியுட்டாக்கியாகவும் உமிழ்நீர்ப் பெருக்கியாகவும் செயற்படும்.

பாக்களவு இலையை மென்று தின்ன இரத்த பேதி, சீதபேதி, மூலக்கடுப்பு எரிச்சல் தீரும்.

இலை, வேப்பங்கொழுந்து சம அளவு அரைத்துக் காலை மட்டும் கொடுத்து வர நீரிழிவு, களைப்பு, ஆயாசம், தேக எரிவு, அதிதாகம், பகு மூத்திரம் தீரும். சிறுநீர்ச் சர்கரையும் தீரும். சூரணமாக்கியும் சாப்பிடலாம்.

பெருங்கட்டுக் கொடி இலை அரை எலுமிச்சை அளவு அரைத்து எருமைத் தயிருடன் கொடுக்க பெரும்பாடு தீரும்.

இலையுடன் மாம்பருப்பும் சமன் அரைத்து பால், சர்கரை சேர்த்து காலை, மாலை கொடுக்க பேதி தீரும். கஞ்சி ஆகாரம் மட்டும் கொடுக்கவும்.

சிறுதளவு வேரும், ஒரு துண்டு சுக்கு, 4 மிளகுடன் காய்ச்சிக் கொடுக்க வாதவலி, வாத நோய், கீல் நோய் தீரும்.

இலைச்சாற்றை சர்கரை கலந்து நீரில் வைத்து வைக்க சிறிது நேரத்தில் கட்டியாகும். இதை அதிகாலையில் சாப்பிட்டுவர வெள்ளை, வெட்டை, சீதக் கழிச்சல் ஆகியவை தீரும்.

கட்டுக்கொடி வேரையும், கழற்சிப் பருப்பையும் இழைத்து விழுதாக்கிக் கலந்து அரை தேக்கரண்டி நீரில் கலந்து கொடுக்கக் குழந்தைகளுக்குக் காணும் வயிற்றுவலி தீரும்.

கென்யாவில் இதன் இலையை வயிற்று வலிக்குப் பயன் படுத்துகிறார்கள். பாக்கிஸ்தானிலும் இந்தியாவிலும் நரம்புத் தளர்ச்சிக்காகப் பயன் படுத்துகிறார்கள் சைனாவில் வேரை உடல் பருமனைக் குறைக்கப் பயன் படுத்துகிறார்கள். ராஜஸ்த்தானில் இலையை சமைத்து மாலைக்கண் உண்டாவதைக் குணப்படுத்துகிறார்கள். இதன் இரு கொடிகளையும் பிலிப்பையின்ஸ் மற்றும் ஆப்பிரிக்காவில் கூடைகள் செய்யவும் பயன் படுத்திகிறார்கள். தமிழ் நாட்டில் இந்தக் கொடியை பிரமணை செய்வதற்கும், சிம்மாடு செயவதற்கும் பயன் படுத்துகிறார்கள்.
1479484_640193592705759_1335785246_n.jpg

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted
இளநரையா? டை அடிக்க வெக்கமா? இதோ மூலிகை தைலம்

இன்றைய காலகட்டத்தில் சிறு வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களின் உணவுமுறையும், பழக்க வழக்கங்களுமே. இன்றைய உணவு முறையில் நாவின் சுவைக்காக சத்தற்ற உணவுகளே அதிகம் சாப்பிடுகின்றனர். போதாக்குறைக்கு எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அபான வாயு சீற்றமாகி பித்தத்தை அதிகரித்து பித்த நீரானது ஆவியாக மாறி தலைக்கு சென்று தலையில் உள்ள முடிகளின் வேர்க்கால்களைப் பாதித்து இள வயதிலேயே நரையை உண்டுபண்ணுகிறது. இத்தகைய பிரச்சனையைப் போக்க உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும். மேலும், அதிக இரும்புச்சத்து நிறைந்த கீரைகள், பழங்கள், மீன் போன்றவற்றை சாப்பிடவேண்டும். பித்தத்தைத் தணிக்கும் உணவுகளான இயற்கை உணவுகளே சிறந்தது. மேலே கண்ட எண்ணெயில் பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். தினமும் தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும். ஈரத்தலையோடு எண்ணெய் தேய்க்கக் கூடாது. சுத்தமான தேங்காய் எண்ணெயை தினமும் தேய்ப்பது நல்லது. உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும். முசுமுசுக்கை இலையின் சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அந்த எண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநறை மாறும்.

இளநரை போக்க மூலிகை எண்ணெய்

தேங்காய் எண்ணெய் – 100 மி.லி.
சீரகம் – 1 ஸ்பூன்
சோம்பு – 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 3
கறிவேப்பிலை – 2 இணுக்கு
கொத்தமல்லலி – சிறிதளவு
நெல்லி வற்றல் – 10 கிராம்
வெட்டிவேர் – 5 கிராம்

இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி தினமும் தேய்த்து வந்தால் இளநரை நீங்கும்.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
1471776_421849897942069_943925426_n.jpg

 


எலுமிச்சம்பழம்

அளவிற்கு மீறி பேதியானால் ஒரு எலுமிச்சை பழச்சாற்றை அரை டம்ளர் நீரில் கலந்து கொடுத்தால் உடனடியாக பேதி நின்றுவிடும். கடுமையான வேலை பளுவினால் ஏற்படும் களைப்பை போக்க எலுமிச்சை பழத்தினை கடித்து சாற்றை உறிஞ்சி குடித்தால் உடனே களைப்பை போக்கும்

நெஞ்சினில் கபம் கட்டி இருமலால் கஷ்டப்படுகிறவர்கள் ஒரு எலுமிச்சை பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலையாக தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கபம் வெளியாகி உடல் நன்கு தேறும்.
1458634_537390103020980_2023993022_n.jpg

 


திருச்சியில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடும் மூலிகை சந்தை
===============================================
1466291_676026712429090_1771842239_n.jpg

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடும் மூலிகை சந்தை திருச்சி பெரிய கடைவீதியின் பூட்டிய கடைகளின் முன் ஞாயிற்றுக்கிழமையானால் இலை, தழை, காய், பூக்களுடன் பலர் கடை விரித்திருப்பதைக் காணலாம். இவர்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருக்கும் அனைத்தும் மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை பொருள்கள். திருச்சியின் மூலை முடுக்குகளிலிருந்து நாட்டு வைத்தியர்கள், இயற்கை மருத்துவத்தை பின்பற்றும் பொதுமக்கள் ஆகியோர் படையெடுத்து வந்து தங்களுக்குத் தேவையானவற்றை வாங்கிச் செல்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்து மதியம் வரை மூலிகை விற்பனை இங்கு களைக்கட்டுகிறது. இருபது ஆண்டுகளாக இந்த தொழிலைச் செய்துவரும் சித்ரா(55) ஓர் கைதேர்ந்த மருத்துவர்போல் தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் பிரச்சினைக்குத் தகுந்தவாறு மூலிகையின் மருத்துவ பயன்பாடு பற்றி விளக்கிக் கூறி அதை என்ன மாதிரி சாப்பிடவேண்டும் என்றும் பரிந்துரைக்கிறார். “எனக்கு என்னோட மாமனாரின் அக்கா இந்த தொழிலையும் வைத்திய முறைகளையும் கத்துக் கொடுத்தாங்க. அவங்களுக்குப் பிறகு நான் இதை செய்து வருகிறேன். எனக்குப் பின்னாடி இதை எடுத்துச் செய்ய ஆள் இல்லை. குறைஞ்சது நூறு மூலிகைகளோட மருத்துவ குணம் எனக்கு அத்துப்படி. சில பேர் அவங்களுக்கு தெரிஞ்ச மூலிகை பேரைச் சொல்லி வாங்கிட்டுப் போவாங்க. அதுல சிலருக்கு அதை எப்படி மருந்தா பயன்படுத்தணும்னு தெரியாது. அவங்ககிட்டே என்ன பிரச்சினைக்காக இந்த மூலிகையை வாங்கிட்டுப் போறீங்கங்கிறதைக் கேட்டு தெரிஞ்சுக்கிட்டு அதுக்கேத்த மருந்து செய்யுற வழிமுறைய சொல்லிக் கொடுப்பேன். சிலபேர் வியாதி உடல் பிரச்சினையை மட்டும் சொல்வாங்க அவங்களுக்கு நானே மூலிகையைக் கொடுத்து சாப்பிடுற வழிமுறையையும் சொல்லித் தருவேன்” என்கிறார் சித்ரா. இதுமாதிரியான மருத்துவ ஆலோசனைகளுக்காக கட்டணம் வாங்குவதில்லை. மேலும் தேவையற்ற மூலிகையை வந்தவரின் தலையில் கட்டுகிற மோசடி எண்ணமும் இவர்களிடம் கிடையாது. அதனால் நாளுக்கு நாள் இவர்களைத் தேடிவரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. நொச்சியம் அருகேயுள்ள கூடப்பள்ளியைச் சேர்ந்த சித்ரா இந்த மூலிகைகளைச் சேகரிப்பதற்காக 2 நாள் காடு, கழனி என்று அலைந்து, திரிந்து எடுத்துக்கொண்டு வருகிறார். இவரைப்போல் 10-க்கும் மேற்பட்டோர் மூலிகைகளைச் சேகரித்து எடுத்துக்கொண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் திருச்சிக்கு விற்பனை செய்ய வந்துவிடுகின்றனர். உடையான்பட்டியைச் சேர்ந்த சண்முகம், சாத்தனூரைச் சேர்ந்த தனம், வயலூரைச் சேர்ந்த ருக்மணி என பல கைதேர்ந்த மூலிகை வியாபாரிகளை மொய்க்கிறது வாடிக்கையாளர்கள் கூட்டம். ரூ.5க்கு மருந்துடன் பக்கவிளைவுகளில்லாத இயற்கை மருத்துவ ஆலோசனையும் கிடைக்கிறதென்றால் சும்மாவா? சிறுகுறிஞ்சான், ஓரிதழ் தாமரை, பிரண்டை, கீழாநெல்லி, வல்லாரை, கண்டங்கத்தரி, ஆமணக்கு, ஆடாதொடை, திப்பிலி, அதிமதுரம், தூதுவளை, கரிசலாங்கண்ணி, நித்தியக் கல்யாணி, கற்பூரவள்ளி என ஏராளமான மூலிகை வகைகளை அடுக்கி வைத்துள்ளனர். “கடவுள் படைத்த ஒவ்வொன்னும் ஒரு அற்புதம். பயனில்லாததுன்னு உலகத்துல ஒரு விஷயம் கூட இல்லை. எல்லாப் பொருளுலயும் ஒரு பயன் நிச்சயம் இருக்கு” என தத்துவமும் சொல்கிறார் சித்ரா. “முன்னாடி ரெண்டு ரூபாய்க்கி ஒரு கட்டு மூலிகை வித்தோம், இப்போ கட்டு ஐஞ்சு ரூபா ஆயிடுச்சு. பஸ்ஸுல இந்த மூட்டய ஏத்த முடியாதுன்னு சொல்றாங்க. அதனால இதுங்கள கொண்டு வற்றதுக்கு ஆட்டோ பிடிக்க வேண்டியிருக்கு. அவங்க சார்ஜ் அதிகம் கேக்குறாங்க வேற வழியில்லாம விலையை ஏத்தவேண்டியதாயிடுச்சு” என வருத்ததோடு விலையேற்றத்திற்கான காரணத்தைச் சொல்கிறார் சண்முகம். “வியாழக்கிழமையும் கொஞ்ச மூலிகைகளைக் கொண்டுவந்து கடை போடுவோம். வியாழக்கிழமை 700 ரூபாய்க்கு விற்பனையாகும். ஞாயிற்றுக்கிழமை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை நடக்கும். முன்னைக்காட்டிலும் இப்போ மூலிகை வாங்குற சனங்க கூட்டம் அதிகரிச்சிருக்கு. நாட்டு வைத்தியருங்க ஆர்டர் கொடுத்து வாங்கிட்டுபோறாங்க. ஆனாலும் அடுத்த தலைமுறைக்கு இப்படி மூலிகைகள வந்து வாங்குற வாய்ப்பு கிடைப்பது கஷ்டந்தான்” என கவலைப்படுகிறார் மற்றொரு மூலிகை வியாபாரியான தனம். Thanks: Via Tamil. Hindu dot com


வாழைத்தண்டு

சிறுநீரகக்கல் (Kidney stone) ஆபரேசன் செய்யாமலேயே குணமடைய பச்சை வாழைத்தண்டு சாறு உதவுகிறது. 100gm தண்டுடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு மிக்ஸியில் சட்னிபோல் அரைத்து சாறு பிழிந்தால் ஒரு நபருக்கு ஒரு நேரத்திற்குப் போதுமானது. பாம்புக்கடி போன்ற விஷத்தை வெளியேற்ற உதவுகிறது. (Very effecitve in kidney disorders).சிறுநீர் தொல்லைகள் வராமல், சிறுநீரகத்தைக் கழுவி சுத்தம் செய்வதற்காக ஆரோக்கியமாக வாழ்பவர்கள் கூட வாரம் இரண்டுநாள் வாழைத்தண்டு சாறு குடிக்க வேண்டும்.
1457618_421849671275425_878591804_n.jpg

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted
சீரக‌ம் , ஏல‌க்கா‌ய், மருத்துவ குணங்கள்:-

சீரக‌ம்

பொதுவாக உடலு‌க்கு ந‌ல்லது எ‌ன்று பலரு‌க்கு‌ம் தெ‌ரி‌யு‌ம். அதனை எ‌ந்த ‌விஷய‌த்‌தி‌ற்கு எ‌வ்வாறு பய‌ன்படு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்றுதா‌ன் தெ‌ரிவ‌தி‌ல்லை.

வா‌ந்‌தி எடு‌த்தவ‌ர்களு‌க்கு, வெறு‌ம் கடா‌யி‌ல் ‌சீரக‌த்தை‌ப் போ‌ட்டு வறு‌த்து அ‌தி‌ல் த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி கொ‌தி‌க்க வை‌த்த கஷாய‌த்தை‌க் கொடு‌க்க வா‌ந்‌தி ‌நி‌ற்கு‌ம்.

சீரகம் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை ஆறவைத்து அடிக்கடி குடித்து வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.

திராட்சை பழ‌ச்சாறுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.

அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.

வறுத்த சீரகத்துடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

சீரகத்துடன் பூண்டை அரைத்து எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் குடல் நோய்கள் குணமாகும்.

ஏல‌க்கா‌ய்

ஏல‌க்கா‌ய் எ‌ன்பது இ‌ஞ்‌சி செடி வகை‌யை‌ச் சே‌ர்‌ந்தது. ப‌ச்சை ‌நிற‌க் கா‌ய்களை‌க் கொ‌ண்டது. ஏல‌க்கா‌ய் ப‌ச்சை ‌நிற‌த்‌திலு‌ம், அட‌‌ர் பழு‌ப்பு ‌நிற‌த்‌திலு‌ம் இரு‌க்கு‌ம்.

ஏல‌க்கா‌ய் நறுமண‌ப் பொருளாக ம‌ட்டு‌ம் இ‌ல்லாம‌ல், பல மரு‌த்துவ‌க் குண‌ங்களை‌க் கொ‌ண்டதாகு‌ம்.

மன இறு‌க்க‌த்தை‌க் குறை‌த்து உட‌ல் பு‌த்துண‌ர்‌ச்‌சி பெற ஏல‌க்கா‌ய் பய‌ன்படு‌கிறது.

ப‌ல் ம‌ற்று‌ம் வா‌ய் தொட‌ர்பான பல ‌பிர‌ச்‌சினைகளு‌க்கு ஏல‌க்கா‌ய் ந‌ல்ல ‌தீ‌ர்வாக அமையு‌ம்.

செ‌ரிமான‌த்‌தி‌ற்கு உதவு‌ம். இதனா‌ல்தா‌ன் நெ‌ய் சே‌ர்‌த்து செ‌ய்ய‌ப்படு‌ம் இ‌னி‌ப்பு‌க‌ளி‌ல் அவ‌சியமாக ஏல‌க்காயை சே‌ர்‌ப்பா‌ர்க‌ள்.

குர‌ல் வளை ம‌ற்று‌ம் தோ‌ல் தொட‌ர்பான நோ‌ய்களை‌த் ‌தீ‌ர்‌க்கு‌ம் ‌ஆ‌ற்ற‌ல் ஏல‌க்கா‌ய்‌க்கு உ‌ண்டு.

மல‌ட்டு‌த் த‌ன்மையை‌ப் போ‌க்குவத‌ற்கு‌ம் ஏல‌க்கா‌‌ய் பய‌ன்படு‌த்த‌ப்படு‌கிறது.
1459938_645842378771414_780314845_n.jpg

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted
கொத்தமல்லி

இதுவும் நல்ல டானிக் பசியைத் தூண்டும், பித்தம் குறையும். காய்ச்சல், சளி, இருமல், மூலம், வாதம், நரம்புத்தளர்ச்சி குணமாகும்.
1483430_421849134608812_163714196_n.jpg

 


முகத்தில் ஏற்படும் தழும்புகளை போக்க இயற்கை வழிமுறைகள்:-

அழகான முகத்தின் அழகையும்,கவர்ச்சியையும் கெடுப்பது பருக்களும், வடுக்களும் தான். கருந்திட்டுக்கள் இருந்தாலே கவலை சூழ்ந்து கொள்ளும். இதனுடன் பரு வடுக்கள் வேறு இருந்தால் பெண்கள் மன சோர்வுக்கு ஆளாகிவிடுவார்கள். பருக்களையும், வடுக்களையும் போக்குவதற்காக கடைகளில் விற்பனை செய்யப்படும் ரசாயனம் கலந்த கிரீம்களை வாங்கி உபயோகிக்கும் பெண்கள் பலர் உள்ளனர். இது சில மாதங்களுக்கு மட்டுமே பயன் தருகின்றன. ஆனால் நம் வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டு பருக்களையும், பரு வடுக்களையும் நிரந்தரமாக நீக்கலாம்

வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்கள் முகத்தில் உள்ள பருவின் வடுக்களை போக்கும். எலுமிச்சை மிகச்சிறந்த நிவாரணி. பாலை கெட்டியாக காய்ச்சி அதில் எழுமிச்சை சாறு விட்டு பின்பு அதை குளிரவைக்கவும். பின்னர் தனியாக ஒரு துணியில் வடிகட்டி கிண்ணத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும். இந்த கலவையை இரவு தூங்க செல்வதற்கு முன்பு முகத்தில் தடவி அடுத்த நாள் காலையில் முகம் கழுவினால் பருக்கள் மாறி முகம் மென்மையாக மாறி பொலிவு பெறும்.

எலுமிச்சையை துண்டுகளாக வெட்டி அதனை பருக்களின் தழும்புகளின் மேல் பூசலாம். வாரத்திற்கு இரண்டு மூன்று நாட்கள் செய்து வர தழும்புகள் மறையும்.

தக்காளி மற்றும் வெள்ளரிக்காயை துண்டுகளாக வெட்டி வைத்துக்கொண்டு பருக்களின் தழும்புகளின் மேல் தடவுங்கள். மல்லி,மற்றும் லோத்ரா பட்டை ஆகிய இரண்டையும் இரவில் ஊற வைத்து அரைத்து முகத்தில் தடவிவைக்கவும். மறுநாள் காலையில் முகம் கழுவினால் முகம் பொலிவு பெறும். வாரத்திற்கு இரண்டுமுறை இவ்வாறு செய்யலாம் தழும்புகள் படிப்படியாக மறையத்தொடங்கும்.

அதேபோல் சந்தனப் பவுடருடன் கருப்பு உளுந்து பவுடரை கலந்து அதனுடன் சிறிதளவு ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்ட் போல செய்யவும். இந்தக் கலவையை இரவில் உறங்கும் போது அப்ளை செய்துவிட்டு மறுநாள் காலையில் கழுவலாம். வாரம் ஒருமுறை இவ்வாறு செய்து வர தழும்புகள் மறையும்.

துளசி இலையை எடுத்து நன்கு காய வைத்து பொடி செய்து அதில் மஞ்சள் தூள் கலந்து குளிப்பதற்கு முன்பு முகத்தில் அப்ளை செய்யவும். நன்கு உலர்ந்த பிறகு குளித்தால் சில நாட்களிலேயே பருக்களும், வடுக்களும் காணாமல் போய் விடும்.

வெந்தைய கீரையை அரைத்து அதை முகத்தில் போட முகப்பருக்கள் மாறி முகம் மென்மையாக மாறும்.

சின்ன ஐஸ் க்யூப்பை எடுத்து அதனை பாலித்தீன் கவரில் போட்டு முகத்தில் தடவி வர தழும்புகள் படிப்படியாக மறையும.
1425738_645410882147897_324775240_n.jpg

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted
குடிநீரில் எலுமிச்சை சாறு சிறுநீரக கல்லை தடுக்கும்

குடிநீரில் எலுமிச்சை சாறு கலந்து அருந்தினால், சிறுநீரக கல்லை தடுக்கலாம் என்று கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சிமிஷன் மருத்துவமனையில் சிறுநீரக நோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் நோயாளிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

இதில் டாக்டர் சம்பத்குமார் பேசியதாவது:

சர்க் கரை வியாதி, ரத்த கொதிப்பு நோயாளிகளுக்கு சிறுநீரக பாதிப்பு வர வாய்ப்பு அதிகம். இந்தியாவில் 5ல் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. இதில் 30சதவீத நபர்களுக்கு சிறுநீரக நோய் வருகிறது. சிறுநீரக நோய்க்கான அறிகுறியை எளிதில் அறிய முடியாது. தற்காலிக சிறுநீரக செயலிழப்பு உள்ள 100பேரில் 60பேரை காப்பாற்றலாம்.

முற்றிய நோயாளிகளை தொடர் சிகிச்சை, டயாலிசிஸ் மூலம் குணப்படுத்தலாம். நாளொன்றுக்கு 180 லிட்டர் ரத்தத்தை சுத்தம் செய்து, அதில் 2லிட்டரை சிறுநீராக வெளியேற்றும் வேலையை நமது சிறுநீரகம் செய்கிறது. சிறுநீரகத்தை பாதுகாத்தால் இதய நோய்களை கட்டுப்படுத்தலாம் என அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சிறுநீரில் புரதச்சத்து வெளியாதல் நோயின் ஆரம்ப கட்ட அறிகுறியா கும். ரத்தத்தில் கிரியாட்டி னின் அளவு 1.4மி.கிராமிற்கு பதில், 1.5மி.கிராம் இருந் தால் அடுத்த 5ஆண்டுகளுக்குள் சிறுநீரக நோய் வர வாய்ப்பிருக்கிறது. எளிய பரிசோதனைகளான யூரின் அல்புமின், யூரியா, புரோட்டின் மூலம் சிறுநீரக பாதிப்பினை கண்டறியலாம். தினமும் 3லிட்டர் தண்ணீர் அருந்துவது நல்லது.

வெயில் காலம் என்ப தால் குடிநீரில் எலுமிச்சை சாறு கலந்து அருந்தலாம். இதிலுள்ள சிட்ரேட் உப்பு சிறுநீரக கல் வருவதை தடுக்கும். தினம் 30நிமிடம் உடற்பயிற்சி அவசியம். ஆண்டுக்கு ஒருமுறை சிறு நீரக மருத்துவ பரிசோதனை வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
சிறுநீரகம் பாதுகாப்பு குறித்த சிடியை மதுரை கோட்ட ரயில்வே மேலா ளர் ரஸ்தோகி வெளியிட, சோலைமலை மாருதி நிறுவன இயக்குநர் கார்மேகமணி பெற்றுக்கொண்டார்.

ரயில்வே மருத்துவ மனை தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் சாகு, மீனாட்சிமிஷன் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, கல்வி இயக்குநர் ந.கிருஷ்ண மூர்த்தி, மார்க்கெட்டிங் முதுநிலை மேலாளர் பாண்டியராஜன் கலந்து கொண்டனர்.
1457732_421849061275486_1758981907_n.jpg

 


சித்த மருத்துவ குறிப்புகள்:-

தேமல்:

வெள்ளை பூண்டை(Garlic) வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

மூலம்:

கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

பப்பாளிக்காய்:-

விட்டமின் ஏ, கைபோ பாப்பைன் என்சைம்.

மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையை குறைக்க
விரும்புபவர்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும். இரு நல்லது

கர்ப்பிணிப் பெண்கள் முதல் எட்டு வாரங்களுக்கு தவிர்க்கவும்.

பலன்கள் : சருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கும். குடல் பூச்சிகளைச் அழித்துச் சுத்தம் செய்யும்.

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து

பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.

பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.

பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.

பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.

பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

சரும நோய்:

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

தீப்புண்:

வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்
1458502_645530915469227_2060311350_n.jpg

 


விளாம்பழம்

விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும். விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.
1472910_537391349687522_109109235_n.jpg

 


பேரீச்சம்பழம்

தினமும் இரவில் படுக்க செல்லும் முன்னர் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும், இரண்டு பேரீட்ச்சம் பழத்தினையும் உண்டு வந்தால் உடல் நல்ல பலம்பெறும். புதிய ரத்தமும் உண்டாகும். தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும். கண் சம்மந்தமான கோளாறுகளும், நரம்பு சம்மந்தமான கோளாறுகளும் நீங்கும். தொற்று நோய் கிருமிகள் நம்மை அணுகாது. பல் சம்மந்தமான வியாதிகளும் குணமடைந்து, பல் கெட்டிப்படும்.
1473031_203005773218765_195772755_n.jpg

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா
ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள். கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்: கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர் கூறும் பாடல்...

"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே.-

காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும். — with விஷ்ணு பிரியா செந்தாமரை கண்ணன்.

 

1426364_537781742981816_318486870_n.jpg


உடற்பயிற்சி என்பதை உச்சரிக்கும் பொழுதே உற்சாகம் தரக்கூடிய வார்த்தை. ஆனால் அந்த உற்சாகம் தொடர வேண்டுமெனில் அதன் பலன் நமக்கு முழுமையாக கிடைக்க வேண்டுமெனில் அதை நடைமுறைப் படுத்துவது உடற்பயிற்சியை செயல் படுத்துவது முக்கியம். ஆனால் அதை நம்மில் எத்தனைபேர் வழக்கமாய் கொண்டு உள்ளோம் என்ற கேள்விக்கான பதில் சொற்பம், ஏன் இப்படி?

எண்ணமே வாழ்க்கை என்ற ஞானிகளின் கூற்றும், நீ எதுவாக மாற வேண்டும் என்று விரும்புகிறாயோ அதுவாகவே மாறுகிறாய், உன் எண்ணம் உண்மையாக இருந்தால் என்ற தன்னம்பிக்கை வித்தகர் காப்மேயரின் வார்த்தைகளும் நிஜம் என்றால் நாளைக்கு காலையில் எழுந்தவுடன் மைதானத்திற்கு போகனும் என்ற வார்த்தை ஜாலங்களும், எனக்கு உடற்பயிற்சி செய்ய நேரமில்லை. நான் ரொம்ப பிஸி என அலட்சியம் காட்டும் இயலாத்தனமும் நான் காலையிலிருந்து ராத்திரி வரைக்கும் வேலை செய்கிறேன், மேலும் எதற்கு உடற்பயிற்சி என மருத்துவ உண்மையை ஏற்றுக் கொள்ளாத மனப்பாங்கும், தன்னுடைய உடலை சினிமா நடிகைகளைப் போல் ஆக்க வேண்டும் என்று இளம் பெண்கள் பட்டினி கிடந்து மெலிந்து கிடப்பதும், அதன் மூலம் உடலில் வரக்கூடிய பக்க விளைவுகளும் தொட்டதெற்கெல்லாம் மருந்துகளையும் மாத்திரைகளையும் நாடும் தாய்மார்களும் அதன் மூலம் குறையும் நோய் எதிர்ப்பு சக்தியும் நாம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் மேற்படி நபர்களின் சித்தாந்தங்கள்.

அவர்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு தருவதை விட பிரச்சனைகள் அதிகமாகவே ஆக்கும் என்பதை உங்களால் உணர முடியும். வெற்றி பெற்றவன் காரணத்தை தேடுவதில்லை. காரணத்தை தேடுபவன் வெற்றியை எட்டுவதேயில்லை இது பொன்மொழி. ஒவ்வொரு நொடி தாமதமும் ஒவ்வொரு கோடி ரூபாய் இழப்புக்குச் சமம் என்ற நடைமுறை வாசகமும் நமக்கு உணர்த்துவது எதுவெனில், ஒன்றே செய், நன்றே செய் அதுவும் இன்றே செய். நான் வாழ்க்கையில் வெற்றி பெற விரும்பவில்லை.

செல்வந்தனாக விரும்பவில்லை. அடுத்தவர் மதிக்கும் நபராக விரும்பவில்லை. என்று உலகில் எத்தனை வகை மனிதர் இருந்தாலும் ஒருவர் கூட நினைக்க மாட்டார். இந்த விசயத்தில் மட்டும் அனைவர் எண்ணமும் ஒன்றாக இருக்கும். அது வெற்றி என்ற ஒன்றுதான். நீங்கள் எந்த துறையை சேர்ந்தவராக இருந்தாலும், நீங்கள் எந்த துறையில் சாதிக்க வேண்டும் என்று விரும்பினாலும் உங்கள் மூளையில் சுறுசுறுப்பும் உங்களுடைய உடல் தகுதியும் மிகவும் முக்கியம். நம்முடைய உடல் எடை இருக்க வேண்டிய அளவை விட அதிகமாக இருந்தாலோ அல்லது குறைவாக இருந்தாலோ அது நமது உடற் தகுதியை நேரடியாக பாதிக்கும்.

ஒவ்வொருவர் உடல் எடை அதிகரிக்கவும், குறையவும் அவர்களுடைய உணவு பழக்கமே முக்கிய காரணமாக அமைகிறது. கொழுப்புச் சத்தான உணவுகளை குறைத்துக் கொள்வது உடல் உடையை குறைப்பதற்கான எளிய வழியாகும். நாம் ஒவ்வொரு நாளும் எடுத்துக் கொள்ளக் கூடிய உணவிலுள்ள புரத சத்தின் (கலோரியின்) அளவும் நாம் தினசரி வேலையின் காரணமாக செலவிடும் கலோரியின் அளவும் (உதாரணமாக 31லிருந்து 35 கலோரி முழுக்கத் தேவை.) சமமாக இருக்க வேண்டும்

நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய கலோரியும், செலவிடக் கூடிய கலோரியும் அதில் உபரியாக இருக்கக்கூடிய கலோரியின் அளவே கொழுப்பு ஆகும். அதனை குறைப்பதற்கு நாம் அன்றாடம் உடற்பயிற்சியை கீழ்க்கண்டவாறு நீங்கள் தொடங்கலாம்.
1. நடைப் பயிற்சி
2. ஓட்டப்பயிற்சி
3. நீச்சல் பயிற்சி
4. சைக்கிளிங்

எந்த ஒரு உடற்பயிற்சியும் நீங்கள் மெதுவாகவும், சீராகவும் தொடங்க வேண்டும். மேற்குறிப்பிட்டுள்ள பயிற்சிகள் ஏரோபிக் என்று அழைக்கப்படும். ஏரோபிக் என்றால் ஆக்சிஜன் ஏரோபிக் உடற்பயிற்சி என்பது எந்த வகையான உடற்பயிற்சிக்கு அதிகப்படியான ஆக்சிஜன் தேவையோ அதனை ஏரோபிக் உடற்பயிற்சி என்கிறோம் எனவே நமக்கு அதிக ஆக்சிஜன் கிடைக்க நமது உடற்பயிற்சியை அதிகப்படுத்துவதே சிறந்த வழியாகும். சீராகவும் முறையாகவும்., தொடங்கும் உடற்பயிற்சி உங்களுக்கு 3-ம் மாதம் முதல் 1 வருடத்திற்குள் முறையான பலனை கொடுக்கத் துவங்கும். விரைவான பலனுக்கு கொழுப்புச் சத்து குறைந்த உணவு பழக்க முறையும் (எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவு வகைகள்) முக்கிய அம்சம், வாரத்திற்கு 4 நாட்களாவது உங்கள் உடற்பயிற்சி நடைமுறையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். குறைந்த பட்சம் 10 நிமிடங்களாவது அன்றாடம் உடற்பயிற்சி செய்வது நிறைந்த பலனைத் தரும்.

இதிலிருந்து உங்கள் உடற்பயிற்சி நேரத்தை உயர்த்திக் கொள்வது நல்லது. உடற்பயிற்சிக்கு முன் உங்கள் மருத்துவரை ஆலோசிப்பது நலம்.

 

1460977_537779462982044_2063981570_n.jpg

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

உடலுக்கு உகந்த பாகற்காய்!!

பாகற்காய் பெரும்பாலும் உடலுக்கு நல்லது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதன் கசப்புச் சுவைக்காக பலர் அதனை விரும்புவதில்லை.

அவ்வாறு இல்லாமல், அறுசுவைகளில் நமது உடலுக்கு நல்லதைத் தரும் இந்த கசப்புச் சுவையிலான பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

பொதுவாக பாகற்காய் உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும். பாகற்காயில் இரண்டு வகைகள் உண்டு. பொடியாக இருக்கும் பாகற்காயை மிதி பாகற்காய் என்றும், நன்கு பெரிதாக நீளமாக இருப்பதை கொம்பு பாகற்காய் என்றும் அழைக்கிறார்கள்.

பாகற்காயை நாம் எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். புளியுடன் சேர்த்து பாகற்காயை சமைப்பது சிறந்தது என்று சொல்லப்படுகிறது.

நீரிழிவு வியாதி உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அவர்கள் மட்டுமல்லாமல் ஜூரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களும் பாகற்காயை உண்ணலாம்.

 

1468721_537788676314456_1901513560_n.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted
1240485_537397279686929_384412398_n.jpg

மருந்தாகும் உணவு வகைகள் - 2 * சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். * பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும். * சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும். * வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள். * பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.


இருமல், ஜலதோஷமா இயற்கை மருந்து:-

இஞ்சி வேர்

இயற்கை மருத்துவத்தில் சிறந்தது இஞ்சி. இதன் சாறு தொண்டை வலிக்கு சிறந்தது. இஞ்சியை இரண்டு அங்குலம் நன்கு சுத்தம் செய்து இஞ்சிக்கு தகுந்தாற் போல தண்ணீர்விட்டு கொதிக்க வைத்து இஞ்சித் துண்டுகளை அம்மியில் வைத்து விழுதாக அரைத்து கொதிக்கும் சுடுதண்ணீரில் போட்டு ஐந்து நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து பானம் தயாரித்து வடிகட்டி பருகலாம் சுவை சேர்க்க விரும்பினால் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து கொள்ளலாம். நோய்தொற்று இருப்பின் ஜலதோஷம் நீங்கும் வரை ஒரு நாட்களுக்கு மூன்று வேளை இந்த தேநீரை பருகினால் தொண்டை வலி எளிதில் குணமாகும்.

யூக்கலிப்டஸ் எசென்ஷல் ஆயில்

ஜலதோஷம் ஏற்பட்டால் மூக்கில் சளி வடிதல் பெரிய பிரச்சனையாக இருக்கும் இந்த பிரச்சனையை போக்க யூக்கலிப்டஸ் எசென்ஷல் ஆயில் பயன்படுத்தலாம்.. எப்படி பயன்படுத்தலாம் யூக்கலிப்டஸ் எசென்ஷல் ஆயிலை நன்கு கொதிக்கும் சூடான நீரில் ஐந்து முதல் ஆறு சொட்டுகள் சேர்த்து போர்வையால் ஆவி வெளியே போகாதவாறு மூடிக்கொண்டுஆவி பிடிக்க வேண்டும். இதை மூன்று வேளை செய்தால் தலையில் தேங்கி இருக்கும் தண்ணீர் ஆவி வழியாக வெளியாகிவிடும் சளி பிரச்சனை நீங்கிவிடும்..

எல்டர் ஃப்ளவர் தேநீர்

தேநீர் பருகியும் ஜலதோஷத்தை குணப்படுத்திவிடலாம். அதாவது எல்டர்ஃப்ளவரில் தயாரிக்கப்படும் தேநீர் ஜலதோஷத்தை குணப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது. எல்டர்ஃப்ளவரை மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்திய போது நேர்மறையான பண்புகளை கொண்டுள்ளது என தெரிவித்துள்ளனர். இதை சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கும் மருந்தாக பயன்படுத்தலாம். எல்டர்ஃப்ளவர் பூக்களை காய வைத்து சூடு நீரில் கொதிக்க வைத்து ஒரு கப் பூக்களை போட்டு தேயிலை சேர்த்து கொதி வந்ததும் இறக்கி பருகலாம் விருமம்பினால் சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்..

உடல் நலத்தை பாதுகாக்க வீட்டிலே இருக்குது பல மருந்துகள் அதனை தகுந்தவாறு பயன்படுத்தி நோய்களை போக்கலாம். பணத்தையும் சேகரிக்கலாம். இயற்கை மருத்துவத்தை விட சிறந்தது வேறெதுவும் இல்லை..
1426229_645988542090131_1635398239_n.jpg

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted
மூட்டு வலிக்கு இதமான உணவு!

l“தலைவலியும் பல் வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்”னு சொல்வாங்க. அதுகூட… மூட்டு வலியையும் சேர்த்துக்கலாம். அது கொடுக்கிற இம்சை அவ்ளோ பெரிசு. வயசானவங்களுக்கு வரக்கூடியது, ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ்னு சொல்ற மூட்டு வலி. மூட்டுல உள்ள திரவம் குறைஞ்சு, ஒருவித இறுக்கம் உண்டாகி, உயிர் போகிற மாதிரி வலிக்கும். நம்ம உடம்புல உள்ளே செல்லே, உடல் உறுப்புக்கு எதிரியாகி வேலை செய்யறதோட விளைவு இது.

30-40 வயசுல உண்டாகிறது ருமட்டாயிட் ஆர்த்ரைட்டிஸ்னு சொல்ற வலி. கை, கால் விரல்கள்ல உள்ள சின்னச்சின்ன மூட்டுகள்லகூட இந்த வலியை உணரலாம். முக்கியமா காலை நேரத்துல வலி அதிகமிருக்கும். இது சீசனுக்கு ஏத்தபடி மாறி மாறி வரும். பரம்பரையாகவும் தாக்கக்கூடியது.

எந்தவிதமான மூட்டு வலியா இருந்தாலும், அது நாம சாப்பிடற உணவோட ஓரளவு சம்பந்தப் பட்டதுன்னு கண்டுபிடிச்சிருக்காங்க மருத்துவர்கள். அதேசமயம் மூட்டு வலியால அவதிப்படற எல்லாருக்கும் அவங்களோட சாப்பாடுதான் காரணம்னும் சொல்லிட முடியாதுங்கிறாங்க அவங்க.

பரம்பரைத்தன்மையோ, வேற காரணமோ இல்லாம திடீர்னு மூட்டு வலியால பாதிக்கப்படறவங்க, முதல்ல கவனிக்க வேண்டிய விஷயம், அவங்களோட டயட்!

மூட்டு வலியால பாதிக்கப்பட்டவங்களை இப்படி ஒரு ஆராய்ச்சிக்கு உட்படுத்தினப்ப, அவங்கள்ல பலரும் அசைவ உணவுப்பழக்கம் உள்ளவங்களா இருந்தது தெரிய வந்ததாம். முதல் கட்டமா, அசைவத்துலேர்ந்து சைவ உணவுப் பழக்கத்துக்கு மாறச் சொன்னபோது, ஒரு சில நாட்கள்லயே வலி குறையறதை உணர்ந்திருக்காங்க அவங்க. மூட்டு வலியை உண்டாக்கி, அந்த இடத்துல வீக்கத்தையும் ஏற்படுத்தக்கூடியது அசைவ உணவு.

அப்படின்னா சைவம் மட்டுமே சாப்பிடறவங்களுக்கு மூட்டு வலி வர்றதில்லையான்னு கேட்கலாம். அவங்களும் கொழுப்பு குறைவான உணவை எடுத்துக்கிறப்ப, வலி குறையறதை உணர்வதா சொல்றாங்க.

சோளம், கோதுமை, ஆரஞ்சு, எலுமிச்சை, ஓட்ஸ், கேழ்வரகு, தக்காளி, பால் மற்றும் பால் பொருட்கள், மிளகு, சோயா, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, அதிகாரம், ஆல்கஹால், முட்டை, வேர்க்கடலை, அதிக சர்க்கரை, வெண்ணெய், மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி… இதெல்லாம் மூட்டுவலியை அதிகப்படுத்தற உணவுகளாம். மூட்டு வலியோட அறிகுறிகளை உணர்ந்ததுமே, முதல் கட்டமா மேல சொன்ன உணவுகள்ல ஒவ்வொண்ணா நிறுத்திப் பார்க்கலாம். உணவு அலர்ஜியால் உண்டான வலியா இருந்தா, அதை நிறுத்தினதுமே குணம் தெரியும்.

இதய நோய் இருக்கிற சிலருக்கு, மூட்டு வலி இருக்கலாம். அவங்க தினமும் 2 அல்லது 3 பூண்டை பச்சையா சாப்பிடறது இதயம், மூட்டு ரெண்டுக்குமே நல்லது. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ள உணவுகளும் மூட்டுக்கு நல்லது. ஃபிளாக்ஸ் சீட்ஸ்னு இப்ப கடைகள்ல கிடைக்கிற ஆளி விதைல, அக்ரோட், பாதாம்ல இது நிறைய இருக்கு. தவிர சில வகை மீன்கள்லயும் அதிகமா இருக்கு. வலியோட வீக்கமும் சேர்ந்திருந்தா, தினம் இஞ்சியை ஏதாவது ஒரு வகைல எடுத்துக்கிறதும் குணம் தரும்.

மூட்டுவலி வந்ததுமே என்னவோ ஏதோனு அலறத் தேவையில்லை. முதல்ல உங்க உணவை சரிபாருங்க. நீங்க அடிக்கடி விரும்பிச் சாப்பிடற ஏதோ ஒரு உணவுகூட அலர்ஜியாகி, வலியைக் கொடுத்திருக்கலாம். அடுத்து கவனிக்க வேண்டியது எண்ணெய், அதையும் அளவோட எடுத்துக்க வேண்டியது முக்கியம். எதுலயும் குணம் தெரியாதப்ப, மருத்துவரைப் பார்க்கலாம்.
1465260_538676672892323_84411645_n.jpg

 


புகை பழக்கத்தை விட வேண்டுமா??

தினமும் ஒரு பாக்கெட் சிகரட் வாங்கு வதற்கு பதில் உலர் திராட்சை பாக்கெட் அல்லது 100 கிராம் வாங்கி வைத்து கொள்ளுங்கள் . சிகரட் ஞாபகம் வரும் போது 2 உலர் திராட்சை வாயில் போட்டு சுவையுங்கள் .

மிகவும் அதிமிக முக்கியமான மருத்துவக் குணம் கொண்ட உலர் திராட்சை (கிஸ் மிஸ்) அது. புகை பிடிப்பவர்களை தடுக்கும் அருமருந்து ஆம் புகைபிடிப்பதால் ஏற்படும் நிகோடினை உலர்திராட்சை கரைத்து விடுகிறது, மேலும் புகைபிடிக்க மனதுக்கு தோன்றும் முன்பு சில உலர்திராட்சைகளை சாப்பிடும் பொழுது அதன் இனிப்பு கரைசல் புகைப்பிடிக்க தூண்டும் உணரவை கட்டுப்படுத்து கிறது, இது சைனாவில் பிரபலம் நமக்கு காசு கொடுத்தால் மட்டுமே நல்ல மருத்துவத்தை சொல்லும் சில சிறந்தநாட்டு மருத்துவர்கள் கூட இந்த உண்மையை சொல்வதில்லை, இதை நீங்களும், உங்கள் உயிரான உறவுகளிடம் சொல்லி புகைபழக்கத்தை ஒழிக்க சிறந்த வழி.
1451497_538677829558874_665346473_n.jpg

 


உனக்குள்ளே இருப்பது எது...?

மெளனம் என்பது என்ன?

சத்தமில்லாமல் ஓசை எழுப்பாமல் அமைதியாக இருப்பதை மெளனம் என்று நினைக்கிறோம். உண்மை அதுவல்ல யார் மனதில் எண்ண அலைகள் உற்பத்தி ஆகாமல் சஞ்சலம் சலனம் இல்லாமல் இருக்கிறதோ அங்கே மெளனம் குடிகொண்டிருக்கும் எண்ணங்கள் இல்லாமல் இருப்பதே மெளனம்.

ஒரு மனிதனால் எண்ணங்கள் இல்லாமல் மெளனமாக இருக்க முடியுமா?

உறங்கும் போதும் விழித்திருக்கும் போதும் ஏன் பிறந்தது முதல் இறப்பு வரையிலும் இதயம் துடித்து கொண்டே இருக்கிறது ரத்தமும் அப்படியே ஓடிகொண்டே இருக்கிறது. நாம் நினைத்தாலும் அவைகளை நிறுத்தி விட முடியாது. நிறுத்தி விட்டால் மரணம் சம்பவிக்கும் எண்ணங்கள் என்பது அப்படி அல்ல நினைவிலும் கனவிலும் அவைகள் உற்பத்தி ஆகிக்கொண்டே இருந்தாலும் நம்மால் அதை நிறுத்த முடியும். ஒன்றையே நினைத்து ஒன்றிலே கரைந்து ஒன்றிலேயே ஐக்கியமாகி விட்டால் அந்த ஒன்றும் மறைந்து எதுவுமற்ற மோன நிலை சித்திக்கும்

மோன நிலை அடைய என்ன செய்ய வேண்டும்?

அறிவு, ஆராய்ச்சி, கேள்விகள், பதில்கள் எல்லாவற்றையும் காலணிகளை கழற்றி போடுவதை போல் போடுங்கள் இப்படி சொல்வது எளிது செய்வது கடினம் கடினமானது என்றால் அதை விட்டு விடலாமா? விட்டு விட்டால் மோன நிலையை அடைய முடியாதே என்று கேட்பது புரிகிறது. அறிவும் ஆராய்ச்சியும் எதற்க்காக? எதோ ஒன்றை தெரிந்து கொள்வதற்காக. அந்த எதோ ஒன்று எது என்பதில் தான் போராட்டம் இருக்கிறது. எதை அறிந்தால் எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியுமோ அதை அறிய முயல வேண்டும். அறிந்த பிறகு மோன நிலை தானாக கிடைக்கும்.

எதை அறிந்தால் எல்லாவற்றையும் அறியலாம்?

பூமி சுற்றுவது எதனால்? சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள் ஒழுங்கு முறைப்படி இயங்குவது எதனால்? கண்ணுக்கு தெரியாமல் கருத்துக்கு புலப்படாமல் எங்கோ இருந்து இயக்குவிக்கும் ஒரு மூலபொருளே அதற்கு காரணம். அந்த மூல பொருளை அறிந்தால் அறிய முயற்சித்தால் எல்லாவற்றையும் அறியலாம்.

இதற்கு எளிய விளக்கம் என்ன?

கண்ணுக்கு தெரியாத கடவுளை காண முயலுங்கள் கருத்துக்கு அகப்பாத கடவுளை அகப்படுத்த அதாவது உள்ளத்திற்குள் உணர துவங்குங்கள் அறியாதது எல்லாம் அறியப்படும். அறிந்த பிறகு ஏன்? எதற்கு? என்ற கேள்விகள் வராது. கேள்விகள் இல்லை என்றால் சிந்தனை குளத்தில் அலைகள் இல்லை அதாவது எண்ணங்கள் இல்லை எண்ணங்கள் இல்லாத போது மெளனம் வரும். மெளனத்தின் உள்ளே மோன வடிவமாக கடவுள் இருப்பான். கடவுளை கண்டவன் கடவுளே ஆவான்.

அப்படி என்றால் மனிதனும் கடவுள் ஆகலாமா?

கடவுள் இருக்கிறார் அவர் இல்லை என்பதை வாதங்களால் எண்ணங்களால் வார்த்தைகளால் நிரூபிக்க முடியாது உணர்வுகளால் மட்டுமே நிரூபிக்க முடியும். கடவுள் உணர்வு மிக ஆழமானது அது உனக்குள்ளே புதைந்து கிடக்கிறது. உன்னை தோண்டி பார்த்தால் கடவுள் கிடைப்பார் அதாவது உனக்குள்ளே கிடைப்பார். அப்படி என்றால் நீயும் அவரும் வேறு வேறல்ல வேறு வேறாக தெரிகிறீர்கள் அவ்வளவே.
1441395_643150549076730_184483194_n.jpg

 


சுவையான... ஓட்ஸ் கஞ்சி..!

டயட்டை மேற்கொள்பவர்களுக்கு ஓட்ஸ் மிகவும் நல்ல உணவு. அதிலும் ஓட்ஸை வெறும் பாலுடன் சேர்த்து கலந்து, சாப்பிடுவதை விட, அதில் சிறிது பழங்களையும் சேர்த்து, காலையில் அலுவலகத்திற்கு செல்லும் முன் சாப்பிட்டால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

அந்த வகையில் இங்கு ஆப்பிள், வாழைப்பழம் மற்றும் ஓட்ஸ் கொண்டு வித்தியாசமான சுவையைக் கொடுக்கும் கஞ்சியை எப்படி எளிமையான முறையில் செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து, காலையில் செய்து நாளை ஆரோக்கியமாக தொடங்குங்கள்.

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் - 1/2 கப்
கோதுமை ரவை - 1/4 கப்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
பால் - 1 1/2 கப்
ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
ஆப்பிள் - 1 கப் (நறுக்கியது)
வாழைப்பழம் - 1 கப் (நறுக்கியது)
சர்க்கரை - 1 1/2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் போட்டு உருகியதும், ஓட்ஸ் சேர்த்து 3-5 நிமிடம் தீயை குறைவில் வைத்து வறுக்க வேண்டும்.

பின்னர் கோதுமை ரவையை சேர்த்து மீண்டும் 2 நிமிடம் வறுக்க வேண்டும்.

பின்பு அதில் பால் மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி வைத்து, 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.

விசிலானது போனதும், மூடியைத் திறந்து அதில் ஏலக்காய் தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறிவிட வேண்டும்.

இறுதியில் அதனை ஒரு பௌலில் போட்டு, நறுக்கிய ஆப்பிள் மற்றும் வாழைப்பழம் சேர்த்து பிரட்டி பரிமாறினால், சூப்பரான ஓட்ஸ் கஞ்சி ரெடி!!!
1422525_203798056472870_409544322_n.jpg

 


முதுமையை ஓட ஓட
விரட்டும் ஓட்ஸ்!

உடம்பில் நோய்கள் இருந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.

ஓட்ஸ் உணவு உட்கொள்வதன் மூலம் நோய்களை கட்டுப்படுத்தி சந்தோசமாக வாழமுடியும் என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓட்ஸ் உணவில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் குணப்படுத்தும் அம்சங்கள் நிறைய உள்ளன என்று கடந்த 200 ஆண்டுகளாக ஜெர்மானியர்களும், கடந்த 100 ஆண்டுகளாக சீனர்களும் கடந்த 32 ஆண்டுகளாக அமெரிக்கர்களும் நி பித்துள்ளனர்.

சர்வ ரோக நிவாரணி ஓட்ஸ் உணவில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

இதில் வைட்டமின் இ , துத்தநாகம், செலினியம், காப்பர், இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீஸ் போன்றவை காணப்படுகின்றன.
இதில் அதிக அளவு புரதமும் உள்ளது. நீரிழிவு நோயாளிகளும், கொழுப்பு சத்து, உடல்பருமன் கொண்டவர்களும், உயர் ரத்த அழுத்தம் உடையவர்களும் தினசரி ஒரு கப் ஓட்ஸ் உட்கொள்வதன் மூலம் இந்த நோய்களை கட்டுப்படுத்தலாம் என்று உணவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

தினமும் ஒரு கப் ஓட்ஸ் தினசரி காலை ஒரு கப் ஓட்ஸ் கஞ்சி பருகுவதன் மூலம் அதில் உள்ள நார்ச்சத்து புற்றுநோய் செல்களை அகற்றுகிறதாம்.

இதில் உள்ள ரசாயனம் புற்றுநோய் செல்களை எதிர்த்து அவற்றை அழிக்கின்றனவாம்.

கெட்ட கொழுப்புகளை நீக்குகிறதாம்.

நீரிழிவு நோயாளிகள் ஓட்ஸ் பருகுவதன் மூலம் அவர்களுக்கு ஜீரணம் மெதுவாக நடைபெற்று ரத்தத்தில் சர்க்கரை உடனே கலப்பது தடுக்கப்பட்டது.

இதயநோய் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினசரி ஓட்ஸ் உணவு கொடுத்து வந்ததன் மூலம் இதயத்தில் ரத்த நாளங்களில் படிந்திருந்த கெட்ட கொழுப்புகள் அகன்றன.

தமனி இறுக்கம் நீங்கி மூச்சு விடுவதில் இருந்த சிரமம் குறைந்தது.

உயர் ரத்த அழுத்தம் தவிர்க்கப்பட்டது.

உடலில் உடல் பலவீனம் மறைந்தது.

இறந்து போன செல்களுக்கு பதிலாக புதிய செல்கள் உருவானது.

இளமையை தக்கவைக்கும் ஒட்ஸ் சத்துக்கள் பெண்கள் அழகாக, இளமையாகத் தோன்ற ஓட்ஸ் உணவுடன் 50 கிராம் பச்சை வெங்காயத்தை பச்சையாக உணவில் சேர்த்து சாப்பிட்டு வரவும்.

கோதுமையும், பாதாம் பருப்பையும் ஓட்ஸ் சாப்பிடும்போது சேர்த்துச் சாப்பிடவும், இதனால் கோபமும், கவலையும் பறந்து போகும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

மகிழ்ச்சியான வாழ்க்கை 11, 12 ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்து மக்கள் ஓட்ஸ் சாப்பிட்டார்கள்.

அதற்குப் பிறகு கடந்த ஆறு ஆண்டுகளாகத்தான் இவர்கள் சீனர்களைப் பார்த்து ஓட்ஸ் சாப்பிட ஆரம்பித்தார்கள்.

இன்றும் உலகில் ஓட்ஸ் அதிகம் சாப்பிடுகிறவர்கள் சுவிஸ் மக்கள்தான். இவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நல்ல வருமானத்துடன், சேமிப்புடன் வாழ்கின்றனர். அதற்கு ஓட்ஸ் உணவு கொடுக்கும் உற்சாகம்தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஓட்ஸ் உணவானது குதிரையின் நரம்பு மண்டலத்தைப் போல மனிதனின் மத்திய நரம்பு மண்டலத்தையும் இது கிளர்ச்சியுடன் வைத்திருக்கிறது என்பதிலிருந்து கண்டுபிடித்துள்ளனர். எனவே தினசரி ஒரு கப் ஓட்ஸ் உணவை எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானது என்று அறிவுத்துகின்றனர் உணவியல் வல்லுநர்கள்..
1463741_538677126225611_450310064_n.jpg

 


மரத்தையெல்லாம் அழிச்சாச்சு. இனி, நல்ல காத்துக்கு எங்கே போறது?

இனிமே மரம் நட்டாலும் அது வளர்ந்து முழு மரமாகிறதுக்கு 20, 30 வருஷங்கள் ஆகுமே’ என்று சங்கடப்படுபவர்களே... உங்களுக் காகவே இந்த நல்ல செய்தி! வீட்டிலேயே வளர்க்கக் கூடிய சில குறுஞ்செடிகளில் காற்றில் உள்ள நச்சுக்களைச் சுத்தப்படுத்தும் குணம் நிரம்பி இருக்கிறது என்று நாசா விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி கூறுகிறது. தமிழ்நாட்டுச் சீதோஷ்ண நிலையில் வாழும் தன்மையையும், அதிக நன்மை களையும் கொடுக்கும் இந்தச் செடிகளைப் பற்றிய அறிமுகம் இதோ...

கற்றாழை (AloeVera): மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ள கற்றாழை, காற்றில் உள்ள ஃபார்மால்டிஹைட் என்னும் வேதிப் பொருளை நீக்கும். சருமத் தீப்புண்களுக்கும் மருந்தாகப் பயன்படும்!

சீமை ஆல் (Rubber plant): வெயில் படாத இடங்களில்கூட வாழும் தன்மைகொண்டவை. அதிகமாக அசுத்தக் காற்றை உள்ளிழுத்து அதிகப்படியான ஆக்சிஜனை வெளியிடும்.

வெள்ளால் (Weeping Fig): காற்றின் நச்சுக்களை நீக்கி சுற்றுப்புறத்தின் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தும்.

மலைப் பனை (Bamboo Palm) : காற்றில் கலந்துள்ள ஃபார்மால்டிஹைட் நச்சுக்களை நீக்குவதோடு இயற்கையான ஈரப்பதனியாகச் செயல்படும்.

ஸ்னேக் பிளான்ட் (snake-plant): நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் ஃபார்மால்டிஹைடைக் கிரகித்து ஆக்சிஜனை வெளிப்படுத்தும். வறண்ட சூழ்நிலை களில்கூட வாழும் தன்மைகொண்டவை.

கோல்டன் போட்டோஸ் (golden pothos): நாசா விஞ்ஞானிகளின் அறிக்கைப்படி காற்றைச் சுத்தப்படுத்தும் தாவரங்களின் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்திருக்கும் இந்தச் செடி, கார்பன் மோனாக்சைடு வாயுவை உறிஞ்சிக்கொண்டு காற்றின் அளவை அதிகரிக்கச் செய்யும்!

வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம். முடியாதபட்சத்தில், இப்படிப்பட்ட செடிகளையேனும் வளர்ப்போமே!


ஆங்கிலத்தில் ரிலாக்ஸ் ப்ளீஸ் Relaxplzz.
1467350_653700744680258_70439477_n.jpg

 


குடல் புற்றுநோயை உண்டாக்கும் பிராய்லர் கோழிகள்

பிராய்லர் கோழியால் ஏற்படும் உடல்நல பாதிப்பு பற்றி சென்னையில் பிரபல ஈரல் மற்றும் குடல்பை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேசன் கூறியதாவது:-

நாட்டுக் கோழிகளுக்கு பெரும்பாலும் தானியங்கள் போன்ற இயற்கையான உணவுகள் அளிக்கப்படுகிறது. இதனால் அவை குறிப்பிட்ட கால அளவில்தான் வளர்ச்சி பெறும். இதனால் அதில் புரோட்டீன், புரதச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

இந்த நாட்டு கோழியை சாப்பிடுவோருக்கு தேவையான புரோட்டீன், புரதச் சத்துக்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் நமக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது.

ஆனால் பிராய்லர் கோழி இறைச்சி மனிதனின் உடல் நலத்திற்கு பல்வேறு கேடுகளை விளைவிக்கிறது. தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள். இதற்கு காரணம் பிராய்லர் கோழியானது இயற்கையான முறையில் வளர்க்கப்படாததுதான்.

6 மாதத்தில் முழு வளர்ச்சி அடைய வேண்டிய இக்கோழிகள் பல்வேறு ரசாயணங்கள் மூலம் மிகவும் குறுகிய காலத்திலேயே முழு வளர்ச்சியை பெற்று விடுகின்றன.

ரசாயணங்கள் மூலம் வளர்ச்சி அடையும் பிராய்லர் கோழி சதையில் கெட்ட கொழுப்பு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.இதனை கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் என்கிறோம்.

பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவோரின் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம், ரத்த கொழுப்பு ஏற்படுகிறது.

நம் நாட்டில் ஏராளமானோர் பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவதால் 100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத் துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.

பொதுவாக கோழி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம். அதிலும் பிராய்லர் கோழியில் கெட்ட கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பதால் அதை தவிர்ப்பது நல்லது. நாட்டுக்கோழி இயற்கையாக வளர்க்கப்படுவதால் பெரிய அளவில் நமது உடம்பை பதம் பார்ப்பதில்லை.
946071_538680469558610_1208084027_n.jpg

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted
எப்படி உடம்பைக் குறைக்கலாம்? இதோ அதற்கான வழிமுறைகள் !

1. தாகத்திற்காக குடிக்கும் சாதாரண தண்ணீரைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். சோம்பு கலந்த தண்ணீரைக் குடிப்பதால் விரைவிலேயே உடம்பில் உள்ளதை அடிப்படியான சதைகள் குறைந்து, உடல் அழகான வடிவத்திற்கு வந்துவிடும்.

2. அமுக்கிரா வேர், பெருஞ்சீரகம் ஆகியவற்றை பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்துவர உடல் எடை குறையும்.

3. சுரைக்காய் வயிற்றுச்சதையை குறைப்பதில் அதிகப்பங்கு வகிக்கிறது. அதனால் சுரைக்காயை வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

4. உடலிலுள்ள கொழுப்புகள் கரைந்தாலே போதும். உடல் எடை வெகுவாக குறைந்துவிடும். கொழுப்புகளைக் குறைப்பதற்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் பூண்டு, வெங்காயம் பயன்படுகிறது. இவற்றை உணவுடன் சிறிது அதிகமாக பயன்படுத்தும்பொழுது, உடல் எடை குறையும்.

5. இது தவிர ப்ப்பாளிக் காயை சமையலாகச் செய்து சாப்பிடலாம்.

6. மந்தாரை வேரை நீர்விட்டு, நீர் பாதியாக குறையும் வரை காய்ச்சி தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் எடையில் பாதியாக குறைந்துவிடும்.

7. அன்றாடம் குடிக்கும் தேநீரில் பாலிற்கு பதிலாக சிறிது எழுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்துவர, விரைவில் உடல் மெலிவதை நீங்களே உணரலாம்.

8. வாழ்த்தண்டு சாறு பருகலாம். அரும்புல் சாறும் உடல் எடையைக் குறைக்கிறது.

9. இவற்றுடன் காலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் இயற்கையாகவே உடல் எடையை குறைப்பதற்குரிய சிறந்த வழிமுறைகளாகும்.

மேற்கண்ட வழிமுறைகள் அனைத்தும் இயற்கையான முறையில் நாம் உண்ணும் உணவால் எடையை குறைக்க முயற்சிக்கும் ஒரு வழிமுறைகளே...உடம்பைக் குறைக்க இன்னும் நிறைய வழிமுறைகள் உள்ளன.
995236_538848016208522_965655737_n.jpg

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted
மருந்தில்லா மருத்துவம்..!

முடிந்தவரை நடைபயிற்சி செய்யுங்கள் , உடல் நிறையை சீராக வைத்திருப்பதற்கு நடைப்பயிற்சி வெளிப்படையான காரணமாக இருந்தாலும் பாதத்தில் உடலின் நரம்புகள் ஓன்று சேரும் புள்ளிகள் காணப்படுகின்றன.

இவற்றை மசாஜ் செய்வதன் மூலம் அத்தகைய நரம்புகளை தூண்டி புத்துணர்வு பெறலாம். இடது காலில் இதயத்திற்கான புள்ளியும் ஏனையை பகுதிகளுக்குமான புள்ளிகளும் காணப்படுகின்றன.

சீனரின் அக்குபஞ்சர் சிகிச்சை முறையில் இத்தகைய புள்ளிகளிலேயே ஊசி குத்தப்படுகிறது, சிறிய கற்கள் நிறைந்த தரையில் வெறுங்காலுடன் நடப்பதும் நல்ல பலனைத் தரும்..
1459737_539126126180711_1635309459_n.jpg

 


இருதய நோயால் கஷ்டப்படுகிறீர்களா?

ஆஞ்சியோவுக்கோ அல்லது பைபாஸ் இருதய அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டள்ளதா?

நண்பர்களே கவனியுங்கள்----இது உண்மைச் சம்பவம்....இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தயவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள்.

நீங்கள் குணமடைவீர்கள்!

தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.

தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில்,இருதயஇரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார்.

மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில்
பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல்நாள்ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.

நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.
ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.

இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்.

1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.

எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.

நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள்.

மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும்.

நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
1454589_716700118348038_979478530_n.jpg

 


தமிழகத்தில் ஓர் உலக அதிசயம்!

'முத்திபெற சித்தர்களைக் காணவென்று மூதுலகில் வெகுகோடி மாண்பரப்பா நித்தியமும் எந்தனது கிரியை நாடி நிஷ்டையுடன் தவமிருக்க வருவார்பாரெ!’ -

அகத்திய மாமுனிவர்.

பொதிகை மலை. சித்தர்கள் வாழ்ந்த அதிசய பூமி! மனிதனின் காலடிகள் அதிகம் தடம் பதிக்காத இந்த மண்ணில் உலகின் அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன.

அகத்தியர் மலை தென்னிந்தியாவின் திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் என்ற ஊருக்கு அருகில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இது பொதிகை மலை, அகத்தியர் மலை, தமிழ் மலை, தென்மலை, மலையமா மலை, மலையம் போன்ற பல பெயர்களால் குறிக்கப்படுகிறது. இங்கு அகத்தியர் வாழ்ந்ததாகக் கூறப்படுவதால் இது அகத்திய மலை என்று வழங்கப்படுகிறது. இம்மலையில் பல சிற்றாறுகளும், அருவிகளும் உள்ளன.

1476492_643587779033007_1059885499_n.jpg


நம்மை சூழ்ந்துள்ள ஆபத்து என்ன?.
==========================
டெல்டா மாவட்டங்கள் முழுவதும் மீத்தேன் எனும் இயற்கை எரிவாயுவும், நிலக்கரியும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் மக்கள் மிக அதிகமாக வசிக்கிறார்கள் என்ற உணர்வு சிறிதும் இன்றி, தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை பகுதியின் விவசாயம் அடியோடு பாதிக்கப்படும் என்பது குறித்து அக்கறை சிறிதும் இன்றி, தமிழகத்தின் நீர் ஆதாரம் அடியோடு சீர்குலையும் என்ற கவலையும் இன்றி மத்திய அரசு தஞ்சை, திருவாரூர் மாவட்டங்கள் முழுக்க சுமார் இரண்டாயிரம் அடியில் ஆழ் துளை கிணறு தோண்டி மீத்தேன் எடுக்க திட்டமிட்டுள்ளது.

இது டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்தியே கிட்டத்தட்ட நீர்வளம் இல்லாத பாலைவனமாக்கும்.

மீத்தேன் குடிநீருடன் கலந்து நோய்கள் பெருகும். டெல்டா மாவட்ட மக்கள் வாழ முடியாத மயான பூமியாக மாறும்.

இதை எதிர்த்து போராட வேண்டியது டெல்டா மாவட்ட மக்களின் கடமை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழர்களின் கடமை. இயற்கையை நேசிக்கும் ஒவ்வொருவரின் கடமை.

-- டெல்டா புலிகள்.

{அவசியம் உங்கள் கருத்துக்களை பதிவிடவும்}*
1483207_627988200593289_1623053651_n.jpg

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted
மஞ்சளின் மகிமை--பாட்டி வைத்தியம்:-

1. மஞ்சளை உணவில் சேர்ப்பதால் பசியை உண்டாக்கும்.

2. மஞ்சளை உணவில் சேர்ப்பது வெறும் நிறத்திற்காக மட்டுமல்ல. மணத்திற்காகவும் உணவிலுள்ள தேவையற்ற கிருமிகளையும் நீக்கும் என்பதால் தான்.

3. மஞ்சளை சுட்டு முகர மூக்கில் நீர் வடியும் ஜலதோஷம் நிற்கும்.

4. அடிப்பட்டதினால் ஏற்பட்ட இரத்தக் கட்டு உள்காயங்களை நீக்க மஞ்சளை பற்று போடுவார்கள்.

5. வெறும் மஞ்சள் பொடியை புண்கள் மீது தூவ புண்கள் ஆறும்.

6. மஞ்சளுடன் வேப்பிலையை அரைத்துப் பூச அம்மையினால் ஏற்பட்ட கொப்புளங்கள் ஆறும்.

7. மஞ்சள், வேப்பிலை உடன் சிறிது வசம்பும் சேர்த்து அரைத்து பூச, மேகப்படை, விஷக்கடிகள் வட்டமான படைகள் போகும்.

8. மஞ்சளை இலுப்பை எண்ணெயில் குழைத்து, தடவ கால் வெடிப்பு குணமாகும்.

9. கஸ்தூரி மஞ்சளுடன், வெண்கடுகு சாம்பிராணி சேர்த்தரைத்து சுளுக்குகளுக்கு பற்று போட்டால் குணமாகும்.

10. மஞ்சள் சுட்ட சாம்பலுடன், ஊமத்தன் இலைச்சாறு குழைத்து பூச கட்டிகள் பழுத்து உடையும்.

11. மஞ்சளும், கடுக்காயும் பூச சேற்றுபுண் போகும்.

12. மஞ்சள் சுட்ட சாம்பலுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து பூச, ஆறாத புண்கள் ஆறும்.

13. மஞ்சளுடன், சாம்பிராணி, ஏலம் சுக்கு சேர்த்தரைத்து தலையில் பற்றிட தலைவலி போகும்.

14. மஞ்சளுடன் சுண்ணாம்பு மூலிகையும் சேர்த்து மிகவும் பிரபலமான புத்தூர் (ஆந்திரா) எலும்பு முறிவுக்கு கட்டப்படுகிறது.

15. மஞ்சள் தூளுடன், சிறிது கற்பூரத்தூளை சேர்த்து, கை கால்கள் சில்லிட்தற்கு பூச சூடேறும்.

16. கஸ்தூரி மஞ்சள், சந்தனம், சங்கு சம அளவு அரைத்து பூச முகப்பருக்கள் மறையும்.

17. பெண்கள் முக்கியமாக முகத்தில் மஞ்சளை பூசுவதற்குக் காரணம் முகத்தில் முடி வளருவதை தடுக்கிறது.

18. பெண்கள் மஞ்சளை பூசிக் குளிப்பதினால் அவர்கள் மேனி பொன்நிறம் பெறும்
1468810_647067855315533_417315203_n.jpg
 

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.