Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் அதிருப்தி கட்சிகள் முன்னுள்ள ஒரே தெரிவு - செய் அல்லது தமிழரசுக் கட்சிக்குள் செத்துமடி - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் அதிருப்தி கட்சிகள் முன்னுள்ள ஒரே தெரிவு - செய் அல்லது தமிழரசுக் கட்சிக்குள் செத்துமடி
யதீந்திரா


தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவு செய்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றனவா என்னும் விவாதம் இன்னும் முற்றுப்பெற்றுவிடவில்லை. பெரும்பாலும் விரைவில் இது முற்றுப்பெறக் கூடுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழரசுக் கட்சியை வழிக்கு கொண்டுவரும் ஒரு முயற்சியாக, மன்னார் ஆயர் இராயப்பு யோசப் சமீபத்தில் மந்திராலோசனை ஒன்றில் ஈடுபட்டிருந்ததாக நம்பிக்கைக்குரிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

எனினும் அம் முயற்சியும் வெற்றியளிக்கவில்லை என்றே அறிய முடிகிறது. தமிழரசுக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவு செய்ய முடியாமைக்கான காரணங்களை மன்னார் ஆயரிடம் தெரிவித்துள்ளதாகவும் மேற்படி தகவல் மூலங்கள் உறுதிப்படுத்துகின்றன. தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில், கூட்டமைப்பை ஒரு தேர்தல் கூட்டாக பேணிக் கொள்ளலாம், அதற்கு மேல் செல்ல முடியாதென்பதே அவர்களது திடமான நிலைப்பாடு ஆகும். தமிழரசுக் கட்சி தனது நிலைப்பாட்டில் மிகவும் நிதானமாகவும் தெளிவாகவும் இருப்பதாகவே தெரிகிறது. தமிழரசுக் கட்சி இவ்வாறானதொரு உடும்புப்பிடி நிலைப்பாட்டில் இருப்பதற்கு அதனளவில் சில தெளிவான காரணங்கள் உண்டு.

 

முதலாவது, ஏனைய கட்சிகளால் தமிழரசுக் கட்சியை தவிர்த்து இயங்க முடியாதென்றே அவர்கள் திட்டவட்டமாக நம்புகின்றனர். சமீபத்தில் புலம்பெயர் இணையம் ஒன்றிற்கு கருத்துத் தெரிவித்திருந்த தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் சி.வி.கே.சிவஞானம் இதனை மிகவும் தெளிவாக குறிப்பிட்டிருந்தார். உதயசூரியன் சின்னத்தை எடுத்துக் கொண்டு ஆனந்தசங்கரி சென்றார். பின்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சென்றார். ஆனால் அவர்களால் வெற்றிபெற முடிந்ததா? பொதுவாக இத்தகையதொரு பார்வையே தமிழரசுக் கட்சியின் உடும்புப்பிடி வாதத்திற்கு பின்னால் மறைந்திருந்திருக்கிறது. அவர்களைப் பொறுத்தவரையில் கூட்டமைப்பில் உள்ள ஏனைய நான்கு கட்சிகளும், தமிழரசுக் கட்சி என்னும் மரத்தில் படரும் சிறு கொடிகள் மட்டுமே. வேண்டுமானால் கொடிகள் படர்வதற்கு இடம் தரலாம். ஆனால் கொடிகள் ஒரு போதும் மரத்தில் பங்கு கேட்க முடியாது. ஏனெனில், அச்சிறு கொடிகள் உயிர்வாழ்வது மரத்தின் தயவிலாகும்.

 

இரண்டாவது, பதிவை வலியுறுத்தி வருகின்ற கட்சிகளைப் பொறுத்தவரையில், அவர்கள் மத்தியில் ஒருமித்த கருத்துடன் செலாற்றக்கூடிய ஆற்றல் இல்லையென்றே தமிழரசுக் கட்சி கருதுவதாக தெரிகிறது. இதன் காரணமாகவே, இன்றுவரை அறிக்கைகளுக்கு அப்பால் அவர்களால் செல்ல முடியவில்லை. இப்படியானதொரு பார்வையும் தமிழரசு கட்சியின் சிரேஸ்ட தலைவர்கள் மத்தியில் காணப்படுகிறது. தமிழரசு கட்சி, தொடர்ந்தும் கூட்டமைப்பு விடயத்தில் மிகவும் இறுக்கமான நிலைப்பாட்டில் தரித்து நிற்பதற்கு இப்படியான விடயங்களே காரணமாகும். தவிர அவர்கள் பதிவு தொடர்பில் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்ற கருத்துக்களும் இதனையே உறுதிப்படுத்துகின்றது.

 

எனவே இந்தப் பின்புலத்தில் நோக்கினால், இனி தமிழரசுக் கட்சியை நோக்கி விரல் நீட்டுவதில் அர்த்தமில்லை. ஏனெனில் தமிழரசு கட்சி, தன்னுடைய நிலைப்பாட்டில் மிகவும் தெளிவாகவே இருக்கிறது.

 

ஆனால் ஏனைய கட்சிகளிடம் அவ்வாறானதொரு தெளிவு இருக்கின்றதா என்னும் கேள்வியை இந்த சந்தர்ப்பத்தில் தவிர்க்க முடியவில்லை. இன்றைய நிலையில், ஏனைய கட்சிகள் மத்தியில் இரண்டு தெரிவுகள் மட்டுமே ஊசலாடுகின்றன. ஒன்று, தமிழரசுக் கட்சியை தவிர்த்து, தங்களுக்கான தனித்துவமான முடிவை தேடுவது. இல்லையேல், தமிழரசுக் கட்சியின் மேலாதிக்கத்திற்குள் அமைதியாக அடங்கிப் போவது. இதில் முதலாவது தெரிவை நோக்கி ஏனைய கட்சிகள் நகருவதாயின், அதற்கான தற்துணிவு ஏனைய நான்கு கட்சிகளிடம் இருக்கின்றதா என்பதே தற்போது மேலேழுந்திருக்கும் கேள்வியாகும். ஏனெனில், இதுவரை தமிமிழசுக் கட்சியிடம் கோரிக்கை வைத்ததைத் தவிர அவர்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் காண்பித்ததில்லை.

 

இந்த இடத்தில் பிறிதொரு விடயத்தையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. தமிழரசுக் கட்சியுடன் ஏனைய கட்சிகள் நடத்திக் கொண்டிருக்கின்ற மேற்படி பனிப்போரானது, இரண்டு முக்கியமான கேள்விகளை தமிழர் அரசியல் அரங்கிற்குள் தள்ளியிருக்கிறது. அதாவது, ஆயுத இயக்கங்கள் வழியாக அரசியலுக்கு வந்தவர்களை தமிழ் மக்கள் இனி ஏற்றுக்கொள்ள மாட்டார்களா? இரண்டு, ஆயுத இயக்கங்கள் வழியாக வந்தவர்களுக்கு தமிழர் அரசியலை வழிநடத்தும் தகுதிப்பாடு இல்லையா? ஏனெனில், விடுதலைப்புலிகளின் மறைவைத் தொடர்ந்து, தலைமையாக வெளித்தெரிந்த கூட்டமைப்பிற்குள் ஆரம்பத்திலிருந்து இடம்பெற்றுவரும் மேற்படி பனிப்போரானது, குறித்த இரு கேள்விகளின் அடிப்படையில்தான் தொடருகிறது.

 

தமிழரசுக் கட்சியா அல்லது கூட்டமைப்பா என்னும் விவாதத்தின் நடுவே மெல்லிதாக இந்த விடயமும் ஓடிக் கொண்டிருக்கிறது. பதிவை தவிர்ப்பதற்கு தமிழரசுக் கட்சித் தரப்பினர் கூறிவருகின்ற காரணங்களை ஆழ்ந்து நோக்கும் ஒருவர், இந்த விடயத்தை தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும். இந்த கேள்விகள் கூட்டமைப்பில் தற்போது அங்கத்துவம் வகித்துவரும் முன்னாள் இயங்கங்களுக்கு மட்டும் உரிய ஒன்றல்ல. போரின் இறுதிக்கட்டத்தில் அரச படைகளிடம் சரணடைந்து மீண்டும் சமூக நீரோட்டத்தில் இணைந்து கொண்டிருக்கும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் உரிய ஒன்றாகும். ஏனெனில், அவர்களில் சிலர் நாளை ஜனநாயக அரசியலுக்குள் வர எத்தனித்தாலும் மேற்படி கேள்விகளே அவர்களையும் துரத்தும்.

 

எனவே இந்த விடயங்கள் அனைத்தையும் தொகுத்து நோக்கினால், கூட்டமைப்பின் அதிருப்தி கட்சிகளின் முன்னாலுள்ள ஆக்கபூர்வமான, காலப்பொருத்தம் கருதிய தெரிவு ஒன்று இருக்குமாயின், அது நான்கு கட்சிகளும் இணைந்து கூட்டமைப்பாக இயங்குவது மட்டும்தான். ஏனெனில், இந்த விடயம் தொடர்ந்தும் இழுபறியில் இருக்குமாயின், குறித்த நான்கு அதிருப்தி கட்சிகளுக்கு மட்டுமல்ல, தமிழரசு கட்சியினர் மத்தியிலும் இது ஒரு தலையிடியாகவே அமையும். தவிர, தற்போது கூட்டமைப்பில் ஐந்து கட்சிகள் இருப்பதான தோற்றப்பாடு வெளித்தெரிந்தாலும், நடைமுறையில் தமிழரசு கட்சி தனித்தும், ஏனைய நான்கு கட்சிகளும் தமிழரசுக் கட்சி எதிர்மனோபாவத்துடனுமே இயங்கி வருகின்றன. இந்த அடிப்படையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது ஏலவே கருத்துரீதியாக உடைந்துவிட்டது. மேற்படி கருத்து ரீதியான உடைவிற்கு சட்ட வடிவம் கொடுக்கக் கூடிய ஆற்றல் ஏனைய நான்கு கட்சிகளுக்கும் இருக்கிறதா என்பதே அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வி ஆகும்.

 

இங்கு பிறிதொரு விடயத்தையும் குறித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒருவேளை, குறித்த நான்கு அதிருப்தி கட்சிகளும் கூட்டமைப்பை ஓர் அரசியல் கட்சியாக தரமுயர்த்துவது என்னும் இலக்கிலிருந்து பின்வாங்குமாயின், இதுவரை இவர்கள் பற்றி தமிழரசு கட்சியினர் குறிப்பிட்டுவந்த அபிப்பிராயங்கள் உறுதிப்படும். ஏனெனில் தமிழரசு கட்சியின் உயர்பீடத்தை பொறுத்தவரையில், அவர்களை தவிர்த்து ஏனைய கட்சிகளால் ஒரு தனிஅணியாக இயங்க முடியாதென்றே நம்புகின்றனர். ஏனெனில் இயக்கங்களுக்கென்று மக்கள் மத்தியில் குறிப்பான செல்வாக்கு இல்லையென்பதே தமிழரசு கட்சியின் நிலைப்பாடு. இவர்கள எல்லோரும் வேறு வேலைகள் கிடைக்காமையால் இயக்கமென்னும் வேலையற்றோர் சங்கங்களில் இணைந்து கொண்டவர்கள். இவ்வாறான கூட்டத்தினருக்கு அரசியல் குறித்தும் கட்சிக் கட்டமைப்பு பற்றியும் பேசுவதற்கு என்ன தகுதியிருக்கிறது. இது உண்மைதானா? நிரூபிக்க வேண்டிய பொறுப்பு கூட்டமைப்பில் பெயரளவு பங்காளர்களாக இருந்துவரும் முன்னாள் இயங்கங்களான ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் மற்றும் டெலோ ஆகிய இயக்கங்கங்களுக்குரியதாகும். எவ்வாறு நிரூபிக்கப் போகின்றனர்? தமிழரசு கட்சியின் நிழலில் இருந்தவாறு இதனை நிரூபிக்க முடியுமா?

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=65288cfe-12ce-489e-92cb-5aee323effc0

போரின் இறுதிக்கட்டத்தில் அரச படைகளிடம் சரணடைந்து மீண்டும் சமூக நீரோட்டத்தில் இணைந்து கொண்டிருக்கும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் உரிய ஒன்றாகும். ஏனெனில், அவர்களில் சிலர் நாளை ஜனநாயக அரசியலுக்குள் வர எத்தனித்தாலும் மேற்படி கேள்விகளே அவர்களையும் துரத்தும்.

கூட்டமைப்பின் பிழவு அரசால் தொழில்முறைபடுத்தப்படுகிறது என்பதைதான் இதில் யத்தேந்திரா சொல்ல வருகிறார். யாழ்ப்பலகலைக்கழக மாணவரை புனர் வாழ்வுக்கு அனுப்பிய அரசு அவர்கள் புலிகளின் பிரதிநிதிகள் என்று கூறித்தான் அனுப்பியது. அப்போது அதுதான் தமிழ் போராளிகளை சிங்கள போராளிகலுடன் சமமாக நடத்த முடியாது என்பதற்கான விளக்கத்தை அரசு அளித்தது. 

போராளிகளில் ஒருவரும் விடுதலை செய்யப்படவில்லை. அவர்களில் பலர் இன்னமும திறந்த வெளியில்  தோட்ட, கையாள், பாலியல், அரசியலில் ஆர்ப்பாட்டத்திற்கு பயன்படுத்தப்படும்  அடிமைகளாகாத்தான் இருக்கிறார்கள். அதை பற்றி கதைகள் அடக்கபட்டுகொண்டுபோகப்படுகிறது. வடமாகணத்தேர்தல் யத்தேந்திரா போன்றவர்களால் பிரபல்யப்படுத்தபடுகிறரது. அதாவது இவர்களை பாவித்து அரசும் யதேந்திரா போன்ற அடிவருடிகளும் போராளிகளின் யாழ்பாணத்தேர்தல் நடத திட்டம் போடுகிறார்கள் என்பதுதான் இங்கே சொல்லப்படும் திட்டம்.

 

இன்று அரசின் அடிவருடிகளான யதேந்திரா போன்ரோர் சம்பந்தர் சொல்லாத வசங்களை அவரின் வாய்க்குள் போட்டு சம்பந்தர் பொரில் பங்க்கு பற்றியோரை ரசியலில் ஈடுபடவிடாமல் தடுக்கிறார் என்று ஒப்பாரி வைப்பது தெட்ட தெளிவாக இத்ல் அரசில் கை இருப்பது தெரிகிறது. 

 

சம்பந்தரையும், சிறிதரனையும் 4 ம் மாடிக்கும் கோடுக்கும் அழைத்துக்கொண்டு கூட்டணி ஆனந்தசங்கரியின் உதய சூரியனின் தேர்த கேட்ட முறசிகளை முன் எடுப்பது அரசின் பக்கத்தால் நடப்படு மட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.