Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சூடான் - தர்ஃபுர் இனப்படுகொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சூடான் - தர்ஃபுர் இனப்படுகொலை 

 
நாட்டில் சிறுபான்மையர்களுக்கு வேலையே இருப்பதில்லை. எப்போ பார்த்தாலும் உரிமை வேண்டும், சம பங்கு தர வேண்டும், ஆட்சியில் இடம் பெற வேண்டும் என்று எதையாவது கேட்டுக் கொண்டே இருப்பார்கள். மறுத்தால் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்கள் போராட்டத்தை மதிக்கவில்லை என்றால் ஆயுதம் ஏந்திக் கேட்க தொடங்குகிறார்கள். ஏற்கனவே இரண்டு உள்நாட்டு யுத்தம் நடந்து முடிந்துவிட்டது. அதுவும் இரண்டாவது முறை நடந்த உள்நாட்டு யுத்தம் இருபது வருடங்களுக்கு மேல்….! அதில் இருந்து பாதிப்பிலே இன்னும் மீண்டு வரவில்லை. ஒரு பகுதி ஐ.நா உதவியோடு தனிச்சையாக இயங்க தொடங்கிவிட்டது. இருக்கும் பகுதியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

எந்த நாட்டில் தான் சிறுபான்மையர்களால் பிரச்சனையில்லை. ஆனால், இவர்கள் கொஞ்சம் அதிகமாகவே சீண்டிப்பார்த்து விட்டார்கள். உலகமே இஸ்லாமிய நாடுகளுக்கு பயப்பட, இவர்கள் எவ்வளவு தைரியம் இருந்தால் இஸ்லாமியர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்வார்கள்.

எதற்கு பிரச்சனை ? தயவு, தாட்சியினமின்றி எல்லா சிறுபான்மையினர்களையும் ஒழித்துக் கட்டவோம். குறிப்பிட்டு ஒரு இனத்தை அழித்தால் தானே தவறு. இஸ்லாமியர்களை தவிர்த்து எல்லோரையுமே அழித்துவிட்டால், இதுவும் உள்நாட்டு போர் தானே !! இதற்கு முன் நடந்த இரண்டு யுத்தம் போல், இது மூன்றாவது யுத்தம் என்று சொல்லிவிட வேண்டியது தான். அதை தான் செய்ய நினைத்தது சூடான்.

மேற்குறிப்பிட்ட அனைத்தும் சூடான் நாட்டின் ஆரபிய அரசு மனதில் ஏற்பட்ட கேள்விகளும், அதற்கான பதிலாக அரங்கேறிய இனப்படுகொலையும் தான்.

 
sudan_darfur_0809.gif

சூடான் - ஆப்ரிக்கா கண்டத்தில் மிகப் பெரிய தேசம். எகிப்து, சந்த், உகாண்டா மற்றும் மேலும் ஆறு நாடுகள் நடுவில் இருக்கும் தேசம். பக்கத்து நாடுகள் இரண்டு, மூன்று இருந்தாலே பிரச்சனை. இத்தனை நாடுகள் நடுவில் இருக்கும் சூடானுக்கு சொல்லவா வேண்டும். சூடானில் இருக்கும் தர்ஃபுர் மாநிலம் 60 லட்சப் பேர் மேல் வசிக்கிறார்கள். பக்கத்து நாட்டில் இருக்கும் பிரச்சனையை பலர் அகதிகளாக தர்ஃபுரில் அகதிகளாக வந்தார்கள். அங்கு தான் அவர்களுக்கு சனி உச்சத்தில் இருப்பது தெரியாமல் போனது.

எல்லா இனப்படுகொலையின் தொடக்கத்தில் கௌரவத் தோற்றத்தில் வந்துப் போகும் பிரிட்டன் இந்த இனப்படுகொலையிலும் வருகிறார். சூடானும் பிரிட்டனில் காலனி நாடாகத் தான் இருந்தது. 1956ல் பிரிட்டனிடம் இருந்து விடுதலைப் பெற்ற சூடான், இரண்டு உள்நாட்டு யுத்தத்தை சந்திக்க நேர்ந்தது.

 
முஸ்லிம் அல்லாதவர்களும், ஆரபிய அல்லாதவர்களும் ‘வெள்ளையர்கள்’ சென்ற பிறகு பெரும் வசதியுடனும், அரசியல் செல்வாக்கும், சமூகத்தில் நல்ல மதிப்புடன் இருந்தார்கள். குறிப்பாக, தெற்கு சூடானை விட வடக்கு சூடான் அவர்களின் ஆதிக்கம் தான் அதிகமாக இருந்தது. இரண்டு பகுதிக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வு…! இதுப் போதாதா… ஆரபிய அல்லாதவர்கள் மீதும், முஸ்லிம் அல்லாதவர்கள் மீதும் போர் தொடருப்பதற்கு. வடக்கு சூடானுக்கும், தெற்கு சூடானுக்கும் முதல் உள்நாட்டுப் போர் தொடங்கியது.

சூடானின் வடக்கு, தெற்கு பகுதிகள் சண்டையில் ஈடுப்பட்டிருக்க, மேற்கு சூடானில் இருக்கும் ‘தர்ஃபுர்’ நிலத்தில் எண்ணெய் வளம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. எண்ணெய் கண்டுபிடித்ததில், வடக்கு, தெற்கு பிரச்சனை மேலும் எண்ணெய் ஊற்ற உதவியாக இருந்தது. எப்படியோ ஒரு வழியாக 1972 உள் நாட்டு யுத்தம் முடிந்தது. இருந்தாலும் அந்த சந்தோஷம் நீண்ட நாள் நிலைக்கவில்லை. 1983ல் மீண்டும் உள்நாட்டு யுத்தம் (இரண்டாவது சூடான் யுத்தம்) வெடித்தது.

கிட்டதட்ட இருபது வருடங்களாக நடந்த இரண்டாவது உள்நாட்டு யுத்தம். வடக்கு, தெற்கு சூடான் சேர்த்து 20 லட்சப் பேர் மேல் இறந்தனர். 40 லட்சப் பேர் மேல் வீடு இழந்து நடுத்தெருவுக்கு வந்தனர். நாளுக்கு நாள் உயிர் சேதங்கள் அதிகமாகிறதே தவிர குறைவதாக தெரியவில்லை. பலர் பக்கத்து நாடான சந்த் பகுதிக்கு அகதிகளாக சென்றனர். உள்நாட்டு யுத்தத்தில் ‘தர்ஃபுர்’ பகுதியிலும் தாக்குதல் நடந்தது. எல்லா இடங்களிலும் வன்முறை நடைப்பெற்றதால், குறிப்பிட்டு எந்த பகுதியிலும் வன்முறையை அடக்க கவனம் செலுத்தப்படவில்லை.

ஒரு வழியாக, வடக்கு – தெற்கு பிரச்சனைக்கு முடிவு வந்து 2005ல் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டனர். அரசியல் ரிதியாக கூடுதல் அதிகாரத்தை தெற்கு சூடானுக்கு வழங்கப்பட்டதோடு மட்டும் இல்லாமல், தனிச்சையாக இயங்கவும் முடிவெடுக்கப்பட்டது. [ ஜூலை 9, 2011 நடப்பட்ட வாக்கெடுப்பில் 98.33 சதவிகிதம் ‘தெற்கு சூடான்’ தனி நாடாக போவதை ஆதரித்து வாக்களித்தனர். இதனால், ஐ.நாவும் தெற்கு சூடானை தனி நாடாக ஆங்கிரித்தது என்பது வேறு கதை.]

2005ல் வடக்கு – தெற்கு சூடானுக்கு நடந்த அமைதி ஒப்பந்தத்தில் தர்ஃபுர் தாக்குதலுக்கு உட்பட்ட இடங்களுக்கு நிவாரணம் அளிப்பது பற்றியோ, அதன் வளர்ச்சி பற்றியோ கையெழுத்திடப்பட வில்லை. அந்த ஒப்பந்தத்தில் ‘தர்ஃபுர்’ பற்றி முடிவு எடுக்க தவறியதில் எவ்வளவு பெரிய தவறுக்கு காரணமாக இருந்தது. தெற்கு சூடான் தனிச்சையாக இயங்கிய கோபத்தையும், ஆத்திரத்தையும் இவர்கள் மீது காட்ட சூடான் அரசு தயாரானார்கள்.

தர்ஃபுரில் எண்ணெய் இருந்தாலும், பெரிய வளர்ச்சி, முன்னேற்றம் அடையாத மாநிலம். ஆளும் ஆரபிய அரசு தங்கள் நாட்டை முஸ்லிம் நாடாக மாற்ற நினைத்தனர். அப்போது தான் எதிர்காலத்தில் தெற்கு சூடான் செய்த பிரச்சனைகள் போல் வராது. தன்னுடைய முதல் இலக்காக எண்ணெய் வளம் கொண்ட தர்ஃபுரை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர நினைத்தது சூடான் (தெற்கு சூடான் அல்லாதவர்கள்).

darfur.jpg

இதற்கென ஆயுதம் ஏந்திய ஆரபிய இராணுவங்கள் உருவாக்கியது சூடான் அரசு. அந்த இராணுவத்தின் பெயர் ‘ஜன்ஜவீத்’ .

 

2003 பிப்ரவரியில் தர்ஃபுர் புரட்சியாளர் வடக்கு தர்ஃபுரில் இருக்கும் ‘எல் பஷீர்’ விமான நிலையித்தில் தாக்குதல் நடத்தியதற்கு பதில் தாக்குதல் நடத்துவதாக சொல்லி ‘ஜன்ஜவீத்’ படையினர் தர்ஃபுரில் இருக்கும் அரபியர்கள் அல்லாத கிராமங்களில் தாக்குதல் நடத்தினர். பணம், பொருள் எல்லாம் சுரையாடினர். இங்கு நடைப்பெற ஜன்ஜவீத் கொள்ளை தாக்குதல், மனித உரிமை மீறல் மட்டுமல்லாமல் இனப்படுகொலைக்கு அடித்தளமாக அமைந்தது.

டெம்ளேட்டாக ஒரே மாதிரியான தாக்குதல் தான் சூடான் அரசு நடத்தியது. தர்ஃபுர் கிராமங்களில் தாக்குதலை முதலில் விமான தாக்குதல் மூலம் சூடான் அரசு தொடங்கும். அதன் பின் ஜன்ஜவீத் படையினர் கிராமத்துக்குள் புகுந்து உணவு, பணம், பொருள், பெண்களை கற்பழிப்பது போன்ற எல்லா காரியங்களையும் செய்து… வீடுகளுக்கு தீயிட்டு செல்வார்கள். பெரும்பாலான சூடான் அரசு தாக்குதல் இப்படி நடப்பதால், விமான தாக்குதல் நடந்தவுடன் ஜன் ஜவீத் தாக்குதலை எதிர்த்து போராட முடியாமல் தவித்தனர். 

sudan_Saving_Darfur.jpg

 
அரபியர் அல்லாதவர்கள் சூடான் அரசிடம் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள ஜஸ்டிஸ் அன்ட் இக்குவாலிட்டி மூவ்மென்ட் (JEM), சூடான் லிப்ரேஷன் மூவ்மென்ட் (SLM) போன்ற போராட்ட அமைப்புகள் உருவானது.  

நேரம் கிடைக்கும் போதெல்லாம், தர்ஃபுர் இருக்கும் போராளிகள் சூடான் லிப்ரேஷன் இயக்கத்தினர் கைது செய்வதாக வந்து எல்லாம் கலவாடி செல்வார்கள். கிராமங்களை எரித்தது. சூடான் போராளிகளும் தங்களை எதிர்த்து வரும் இராணுவத்தை எதிர்த்து தாக்குதல் நடத்தினர்.

சூடான் அரசு சீனாவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கி தர்ஃபுரில் தாக்குதல் நடத்தியது. அமெரிக்க அமைதியாக இருக்குமா ? இரண்டு உள்நாட்டுப் போர் நடக்கும் வரை அமைதியாக இருந்த அமெரிக்க, சீனா ஆயுதம் வழங்குவதை அறிந்து சூடானில் நடக்கும் இனப்படுகொலையை கண்டித்தது. சூடானில் அமைதி ஏற்படுத்த ஐ.நா மூலம் முயற்சிகள் மேற்கொண்டது.

Minni_Minnawi_and_George_W_Bush.jpg

2006 அபுஜாவில், அமெரிக்க உதவியோடு மே ஒப்பந்தத்திற்கு தர்ஃபுர் போராளிகளை பேச்சு வார்த்தைக்கு சூடான் அரசு அழைத்திருந்தது. அதற்கு முன் எத்தனையோ பேச்சு வார்த்தைகள் நடந்தும் பலனில்லை. ஆனால், இந்த முறை அமெரிக்காவின் தலையீட்டால் கொஞ்சம் நம்பிக்கை தரும்படியாக இருந்தது. மே ஒப்பந்தத்திற்கு சூடான் லிப்ரேஷன் அமைப்பு ஏற்றுக் கொண்டாலும், மற்ற சிறு அமைப்புகள் ஏற்றுக் கொள்ளாததால் அதுவும் தோல்வியில் முடிந்தது. ஒரு கட்டத்தில் போராட்ட அமைப்புக்குள்ளே சண்டைகள் மூண்டு வன்முறை வெடிக்க காரணமாக இருந்தது.

சூடானில் அமைதிக் கொண்டு வரும் ஐ.நா முயற்சியில் சீனாவும், ரஷ்யாவும் முட்டுக்கட்டையாகவே இருந்தனர். சீனா அதிக அளவில் சூடானின் எண்ணெய் நிறுவனங்கள் மீது முதலீடு செய்துள்ளது. அவர்களின் இராணுவ தடவாளங்களுக்கு சூடானின் எண்ணெய்கள் தான் பயன்படுத்தப்படுகிறது. அதனால், அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் சூடான் அரசு தான் ஆட்சியில் இருக்க வேண்டும். அதற்காக சூடான் அரசு தர்ஃபுர் மக்களுக்கு எதிராக பயண்படுத்தும் ஆயுதங்களையும் சீனா தான் வழங்கியது. அதனால், சூடானை விட சீனாவும், ரஷ்யாவும் தர்ஃபுர் சூடான் அரசு கட்டுப்பாட்டில் இருந்து தவறிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தது.

2008ல், 9000 பேர் கொண்ட அமைதிப்படை யை ஐ.நாவும், ஆப்பிரிக்க கூட்டுறவு அமைப்பினரும் குழுவாக சேர்ந்து சூடானுக்கு அமைதி ஏற்படுத்த அனுப்பி வைத்தார்கள். அவர்களுக்கு தேவையான ஆயுதங்கள், பொருட்கள் சரியாக கொடுத்து அனுப்பப்படவில்லை என்று விமர்சிக்கப்பட்டது. அமைதிப்படையினரும் ஒரு சிலர் கொல்லப்பட்டார்கள்.

அமெரிக்கா இராணுவம் அனுப்பியதில் சீனாவும் மிகுந்த வருத்தமாக இருந்தது. அங்கு இருக்கும் எண்ணெய்க்காக தான் இனப்படுகொலையை ஆதரப்பதும், நடத்துவதுமாக இருந்தது. உண்மையில் இரண்டு வல்லரசு நாடுகளும் பாதிக்கப்படும் தர்ஃபுர் மக்களுக்கு யாரும் கவலைப்பட வில்லை. ஜன்ஜவீத் தர்ஃபுர் மேல் நடத்திய தாக்குதலில் அகதிகளாக தங்கி இருக்கும் சந்த் நாட்டினர் மீதும் தாக்குதல் நடத்தியது.

தர்ஃபுர் இருக்கும் உணவு பஞ்சம் இப்போது எந்த நாட்டிலும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு சூடான் அரபிய படைகள் தாக்குதல் நடத்தியது. அமைதிப்படை உதவியானாலும், ஐ.நாவின் தலையீட்டாலும் தர்ஃபுர் பகுதியில் 2009ல் அமைதி ஏற்ப்பட தொடங்கியது. அதுமட்டுமில்லாமல், தர்ஃபுர் நடந்த இனப்படுகொலையை விசாரனை நடத்த உத்தரவிட்டது ஐ.நா.

மார்ச் 9, 2009, சர்வதேச குற்றப்பிரிவு நீதிமன்றம் சூடான் அதிபர் ஓமர் பஷிர் போர் குற்றவாளியாக அறிவித்து, கைது செய்ய வாரண்ட் வழங்கியது. ஜன்ஜவீத் படையினர்கள் மீது ‘போர் குற்றம்’ சுமத்தப்பட்டது. இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டாலும், பாதிக்கப்பட்ட தர்ஃபுர் பகுதி போராளிகள் சரணடையவில்லை. தங்கள் ஆயுதங்கள் கீழே போட யோசித்தனர்.

தர்ஃபுர் இனப்படுகொலைக்கு பிறகு, டிசம்பர் 2010ல் தொடங்கப்பட்ட அமைதி பேச்சுவார்த்தை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றமடைந்தது. பாதிக்க தர்ஃபுர் பகுதிகளுக்கும், மக்களுக்கும் 30 கோடி டாலர் நிவாரண நிதியாக வழங்கப்பட்டது. தர்ஃபுர் பகுதியில் இருந்து 18 அமைச்சர்களுக்கான இட ஒதுக்கீட்டு வழங்கப்பட்டது. அதே சமயம், துணை அதிபர் தர்ஃபுர் பகுதியில் இருப்பவர் வர வேண்டும் போன்ற கோரிக்கைகள் மறுக்கப்பட்டது. ஜூலை 2011, லிப்ரேஷன் அண்ட் ஜஸ்டிஸ் மூவ்மெண்ட் அமைப்பினர் சூடான் அரசோடு அமைதி உடன்படிக்கையான 'புது தர்ஃபுர் அமைதி ஒப்பந்தத்தில்' கையெழுத்திட்டது.

இனப்படுகொலையில் இருந்து எந்த நாடும், எந்த பகுதியும் அவ்வளவு எளிதில் வெளியே வர முடியாது. எனினும், தர்ஃபுர் பகுதி முன்னேற்ற பாதையில் முன்னோக்கி செல்கிறது.

References

Books

The Problem of Dar Fur - Fadlalla, Mohamed H. (2005)

UN Intervention in Dar Fur - Fadlalla, Mohamed H. (2007)

Websites 

http://en.wikipedia.org/wiki/Sudan http://en.wikipedia.org/wiki/War_in_Darfur http://en.wikipedia.org/wiki/Liberation_and_Justice_Movement http://news.bbc.co.uk/1/hi/world/africa/8224424.stm

 

http://guhankatturai.blogspot.ca/2012/12/2.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.