Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால் பெருவலியினை நினைவேந்த தயாராகும் உலகத் தமிழினம்! - உச்சநிகழ்வாக தமிழீழ சுதந்திர சாசனம் முரசறைவு !!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  Murasaraivu-2013-may-18-150.jpg

ஈழத்தமிழினத்தின் மீது நடந்தேறிய போர்குற்றங்கள் - இனப்படுகொலை - மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியனவற்றின் குறியீடாக அமையும் மே-18 முள்ளிவாய்க்கால் பெருவலியினை நினைவேந்த உலகத் தமிழினம் தயாராகி வருகின்றது. வணக்க நிகழ்வுகள் , கவனயீர்ப்பு நிகழ்வுகள் , பரப்புரைகள் , கண்காட்சிகள் , கருத்தரங்குகள் , ஒன்றுகூடல்கள் என பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளின் உச்ச நிகழ்வாக தமிழீழ சுதந்திர சாசனம் உலகத் தமிழர்களால் முரசறையப்படவிருக்கின்றது.

  

ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழுகின்ற தேசங்களில் மட்டுமல்ல தமிழகம் மலேசியா தென்னாபிரிக்கா என பல்வேறு இடங்களிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தப்படுகின்றது.

 

தமிழர் அமைப்புக்கள் பலவும் மே-18 முள்ளிவாய்க்கால் நாளினை பல்வேறு பெயர்களில் நினைவேந்தி வரும் நிலையில் , இவையாவற்றினையும் உள்ளடக்கிய பெருங்குறியீடாக இந்நாளினை, நாடுகளைக் கடந்து வாழும் தமிழர்களை அனைத்துலக அரங்கில் பிரதிநிதித்துவப்படும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது, தமிழீழத் தேசிய துக்க நாளாக பிரகடனப்படுத்தியுள்ளது.

 

வரலாற்று முக்கியத்துவம் பெறும் மே-18ம் நாட்கள்

 

2009ம் ஆண்டு மே-18ம் நாளுடன் தமிழீழத் தாயகத்தில் நிறுவப்பட்டிருந்த நடைமுறைத் தமிழீழ அரசினை வென்றுவிட்டதன் ஊடாக, தமிழீழம் என்ற ஈழத்தமிழர்களின் அரசியல் பெருவிருப்பினை முள்ளிவாய்க்கால் மண்ணில் புதைத்துவிட்டதாக சிங்களம் வெற்றிக்களிப்பில் இருந்தவேளை, மே-18ல் நாளிலேயே 2010ம் ஆண்டு தோற்றம் பெற்றிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது சிங்களத்திற்கு சவலாக மாறியது.

 

இன்று(2013) அதே மே18ம் நாளில் தமிழீழ சுதந்திர சாசனத்தினை முரசறைந்து, தமிழீழம் நோக்கிய தங்களது விடுதலைப்பாதையினை அனைத்துலகின் முன் தெளிவாக முன்வைக்க உறுதிபூண்டுள்ளனர்.

நாதம் ஊடகசேவை

 

Murasaraivu-2013-450-TGTE-001.jpg

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=82247&category=TamilNews&language=tamil

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அன்று ஜெயசிக்குறு காலத்தில் தமிழருக்கு இருந்த ஒரே நிலைப்பாடு செய் அல்லது செத்து மடி. இன்றைய காலமும்.. எமக்கான இன்னொரு ஜெயசிக்குறு.. செய் அல்லது செத்துமடிதான் எம்மை வெற்றியின் விளிம்புக்குக் கொண்டு செல்லும்..!

 

அதீத எண்ணங்களை வளர்க்காமல்.. கள நிலைக்கு ஏற்ப.. உலக ஓட்டத்தின் திசையில்.. நாம் உலகின் போக்கறிந்து செய்யும் செயலே இன்றைய தேவை..!  எமது உயிர்க்கினிய.. மாண்ட மாவீரர்களின் மக்களின் இலக்கே செய்கையின் வழிகாட்டி..!

 

நாடு கடந்த தமிழீழ அரசின் முன் முயற்சிக்குப் பாராட்டுக்கள். :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.