Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமாதானத்தை இழக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம் - தயான் ஜயதிலக்க

Featured Replies

சமாதானத்தை இழக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம் - தயான் ஜயதிலக்க
10 May 2013
dayan%20jayatilake_CI.jpg

 

சமாதானத்தை இழக்க வேண்டிய நிலைமை ஏற்படக் கூடுமென பிரான்ஸிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவரும் சிரேஸ்ட ராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமக்கு நெருக்கமானவர்களுக்கு தேவையற்ற வகையில் அதிகாரங்களை பரவலாக்கியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
 
அரசாங்கத்தினை வழிநடத்தும் கொள்கைகளை யார் வகுக்கின்றார்கள் என்பது தமக்குப் புரியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டமை மிகப் பாரிய வெற்றியாகவே கருதப்பட வேண்டும் எனவும் அதில் மாற்றுக் கருத்து கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
எவ்வாறெனினும் யுத்த நிறைவின் மூலம் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த எமக்குக் கிட்டிய அரிய வாய்ப்புக்கள் பல கைநழுவவிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவைப் போன்றே ஆசிய பிராந்திய வலயத்தில் இந்தியாவும் முக்கியமான நாடு எனவும், அதனை ஆளும் தரப்பினர் சரியாக புரிந்து கொள்ளத் தவறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
1967ம் ஆண்டு இஸ்ரேல் பாரிய இராணுவ வெற்றியை ஈட்டியதாகவும் அப்போதைய அரசியல் தலைமை சமாதானத்திற்கான வழிகளை ஏற்படுத்தத் தவறியதன் விளைவுகள் இன்று வரையில் துன்பியல் அனுபவமாக தொடர்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை துரித கதியில் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
 
யுத்தத்தை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வந்த போதிலும் ஜனாதிபதி தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண உரிய முனைப்பு எடுக்கத் தவறியுள்ளதாக தயான் ஜயதிலக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleID/91598/Default.aspx

 

  • தொடங்கியவர்

மகிந்தாவை போற்றி வாழும் தயான் ஜெயதிலகா "அரசாங்கத்தை வழிநடத்தும்  கொள்கைகளை யார் வகுக்கிறார்கள் என்பது தெரிய வில்லை" என்று நடிக்கிறார்.   இவர் இலங்கை அரசின்  படுக்கையில் முள்ளு வைத்து பார்த்து மகிழும் ராஜதந்திரி.  சீனா பிரதமர் லீ கீகியாங் தான் இலங்கையின் கொள்கைகளை வகுக்கிறார் என்பது சர்வதேசமும் அறிந்திருக்கும் போது இப்படி ஒரு மூத்த ராஜதந்திரி அதை தெரியாமல் இருப்பது அவமானம்.

 

 

இவர் எப்படி மகிந்தாவை பாதுகாத்தாலும் சுதந்திரத்துக்கு பிறகு சிங்கள அரசுகள் போன பாதைகளில் தயான் ஜெயதிலகாவுக்கு தடுமாற்றம் இருக்க முடியாது. பண்டாரநாயக்கா, டட்லி, சிறிமவோ,  ஜெ.ஆர்., சந்திரிக்க வரை இதே கதைதான்.  அதே பாதைதான் ஜெயதிலகா போற்றும் மகிந்தாவுக்கும் காத்திருக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.