Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு தருவிக்கப்பட்ட பால்மாவில் மனித உடலுக்கு ஒவ்வாத இரசாயனப் பொருள்!

Featured Replies

Milkpowder.jpg
 

இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் மனித உடலுக்கு ஒவ்வாத ''டைசயன் டயமைட்'' இரசாயனப் பொருள் கலக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

 

மனித உடலுக்கு ஒவ்வாத Dicyan Diamide இரசாயனப் பொருள் ஒன்று பால்மாவில் கலக்கப்பட்டுள்ளதா என்பது சிங்கப்பூருக்கு  அனுப்பப்ட்ட மாதிரிகளில் நடத்தப்பட்ட, பரிசோதனைகளிலிருந்து உறுதியாகியுள்ளது.

 

இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் இந்த இரசாயனப் பொருள் கலக்கப்பட்டுள்ளதா என்று எழுந்த சந்தேகத்தை அடுத்து நுகர்வோர் அதிகார சபையினால் ஐந்து பால்மா மாதிரிகள் சிங்கப்பூருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

 

இந்த பரிசோதனைகளின் முடிவுகள் கடந்த வாரம் நுகர்வோர் அதிகார சபைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஐந்து மாதிரிகளிலும் ''டைசயன் டயமைட்'' இரசாயனப் பொருள் உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஜே.எம்.ஏ. டக்ளஸ் தெரிவித்துள்ளார்.

 

குறித்த இரசாயனப் பொருள் இருப்பதாகக் கூறப்படுவதை உறுதி செய்வதற்கு குறித்த பால்மா மாதிரிகள் சுகாதார அமைச்சுக்கும், உலக சுகாதார மையத்திற்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

இந்தப் பால்மாவில் குறித்த இரசாயனப் பொருள் இருப்பதை உறுதி செய்யக் கூடிய வசதிகள் மாத்திரமே நுகர்வோர் அதிகார சபையிடம் இருப்பதாகவும், இந்த இரசாயனப்பொருள் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்குமா? என்பதை உறுதிசெய்யும் வசதிகள் தம்மிடம் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

எனவே, உலக சுகாதார மையம், சுகாதார அமைச்சு ஆகியவற்றின் அறிக்கைகள் கிடைத்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த ஆராயவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

நியூசிலாந்தில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மா குறித்து கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட பரிசோதனைகளுக்கு அமையவும், நியூசிலாந்து சந்தையில் இருந்து பெற்றுக்கொண்ட 371 பால் மாதிரிகளில் நடத்தப்பட்ட பரிசோதனைகளுக்கு அமையவும், அவற்றில் ''டைசயன் டயமைட்'' இரசாயனப் பொருள் இருப்பது உறுதியானதாக இலங்கை மருத்துவப் பரிசோதனை நிறுவனத்தின் மருத்துவர் அனில் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

 

இந்த பரிசோதனை முடிவுகளின்படி உலகப் புகழ்பெற்ற நியூசிலாந்தின் பால்மா நிறுவனத்தின் மீது நேரடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதாகவும் இந்த நிறுவனத்தில் இருந்தே இலங்கைக்கும் பெரும்பாலான பால்மா தொகை இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

அந்தச் சந்தர்ப்பத்தில் குறித்த உற்பத்திகள் அனைத்தையும் குறித்த நிறுவனம் அந்நாட்டுச் சந்தையில் இருந்து மீளப் பெற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

 

எனினும், இதற்கு முன்னர் அந்த நிறுவனத்திடமிருந்து எவ்வளவு தொகை பால்மா இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டது, எவ்வளவு தொகை கையிருப்பில் உள்ளது, இந்த இரசாயனப் பொருள் கலந்துள்ள எவ்வளவு தொகை பால்மாவை நுகர்வோர் பயன்படுத்தினர் போன்ற விபரங்கள் நுகர்வோர் அதிகார சபையிடம் இல்லையென அதிகார சபைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

 

http://tamilworldtoday.com/?p=9755

 

 

Edited by Kashni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.