Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீன்பிடிக்க கடலுக்குச் சென்று சொந்த சகோதரர்களுடனேயே மோத வேண்டிய நிலை - இலங்கைத் தமிழ் மீனவர்கள் கவலை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
fishing-110513-seithy-150.jpg

கடலில் மீன்பிடிக்க செல்லும் போது எங்களது சொந்த சகோதரர்களுடனே மோத வேண்டிய நிலைமை ஏற்படுகிறது என்று இலங்கையை சேர்ந்த தமிழ் மீனவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இராமேஸ்வரம் மற்றும் நாகபட்டினம் பகுதியில் இருந்து கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் சர்வதேச எல்லையை கடந்து விட்டதாக கூறி இலங்கை கடற்படை சிறைபிடித்து செல்வதும், அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் அடிக்கடி நடந்து வருகிறது. சமீபத்தில் கூட இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 30 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு நேற்று முன்தினம் தான் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் தமிழக மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர் என்று இலங்கையைச் சேர்ந்த தமிழ் மீனவர்கள் கூறுகின்றனர்.

  

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி சில நேரங்களில் வந்து விடுகின்றனர். நாங்கள் அவர்களை சிக்னல் கொடுத்து வெளியேற சொன்னாலும் அவர்கள் வெளியேறுவதில்லை. ஆனால் அவர்கள் எங்கள் படகுகளை நெருங்கி விடுகின்றனர். நாங்கள் அவர்களிடம் பேசினாலும், அவர்கள் மனநிலையில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. இந்த பிரச்சினையால் எங்கள் மீன்பிடி வலைகள் சேதமடைகின்றன.இதனால் ஒரு நாளைக்கு ரூ.1000 செலவிட வேண்டி உள்ளது என இலங்கை தமிழ் மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=82423&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.