Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் இயங்கி வந்த விபச்சார விடுதியை முற்றுகையிட்ட பிரதேச செயலாளரை கைது செய்ய காவல்துறையினர் முயற்சி!

Featured Replies

யாழில் இயங்கி வந்த விபச்சார விடுதியை முற்றுகையிட்ட பிரதேச செயலாளரை கைது செய்ய காவல்துறையினர் முயற்சி! 

[Wednesday, 2013-05-15 09:07:12]
police_seithy-150.jpg

யாழ். நீதிமன்றிற்கு அருகில் தனியார் விடுதியொன்றினால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி தொடர்பாக கலாசார சீரழிவுகளை தடுத்து நிறுத்திய யாழ்.பிரதேச செயலரைக் கைது செய்ய பொலிஸார் முயற்சித்துள்ளனர். குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டிய யாழ். பொலிஸார் குற்றவாளிகளை கைது செய்யாது அவர்களுக்கு இசைவாக செயற்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் சிஹேரா நேற்று காலை யாழ்.பிரதேச செயலாளர் திருமதி சுகுணரதி தெய்வேந்திரத்தை அவரது அலுவலகத்தில் வைத்து கைது செய்ய முயற்சித்துள்ளார். இதன்பின்னர் இச்சம்பவம் தொடர்பில் விபச்சார விடுதி நடத்தியவர்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் யாழ்.பிரதேச செயலாளரிடம் அவர்கள் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் சில மாதங்களுக்கு முன்னர் நது என்ற விபச்சார விடுதியும் பிடிக்கப்பட்ட போது பொலிஸார் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க சம்பவ இடத்திற்கு வருகைதரவே இல்லை. யாழ்ப்பாணத்தில் இயங்கும் இவ்வாறான விடுதிகளை ஒட்டுக்குழுக்களும் இராணுவம் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து நடாத்தி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=82715&category=TamilNews&language=tamil

 

 

நம்மோடைதான் சபை நிற்கிறாங்க. கத்தி அவங்க பக்கம். 

பிழையை மட்டுதான் எழுத வேணும் என்று இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இயங்கி வந்த விபச்சார விடுதியை முற்றுகையிட்ட பிரதேச செயலாளரை கைது செய்ய காவல்துறையினர் முயற்சி! 

யாழ்ப்பாணத்தில் சில மாதங்களுக்கு முன்னர் நது என்ற விபச்சார விடுதியும் பிடிக்கப்பட்ட போது பொலிஸார் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க சம்பவ இடத்திற்கு வருகைதரவே இல்லை. யாழ்ப்பாணத்தில் இயங்கும் இவ்வாறான விடுதிகளை ஒட்டுக்குழுக்களும் இராணுவம் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து நடாத்தி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

 

ஒட்டுக் குழுக்கள் விபச்சாரவிடுதி நடத்தத் தான்... லாயக்கு.

  • தொடங்கியவர்

சனங்களின் முறைப்பாடுகளை வேண்டுமென்றெ கவனியாமல் விடும் பொலிஸ் இந்த ----- காப்பாற்ற இரண்டு மாத திருமணம் என்றெல்லாம் பொய் வாக்கு மூலங்களை பதிந்து விட்டு புலம் பெயர் நாடுகளில் விபச்சார விளம்பரமாக அதை சரியான பக்கங்களூடாக அனுப்பி வைக்கிறது புலம் பெயர் தேசங்கள் வந்து சேர. இதனால் எயர் லங்கா பயணிகள் தமது வாடகை இடங்களுக்கு போகும் போது இலங்கையின் சட்டங்களைப்பற்றி பீதி கொள்ளத்தேவை இலை என்பது பொருள் என்றுதான் அந்த பயணிகள் எடுத்துக்கொள்வார்கள்.

 

பெரும்பாலான இலங்கை சட்டங்கள் வெளிநாட்டவரை இலங்கை ஜனநாயக நாடகவும் காட்டி ஏமாற்றவுமேதான்.

 

-

Edited by நிழலி
நீக்கப்பட்டுள்ளது

  • 1 month later...
  • தொடங்கியவர்

பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுகிறார்கள். இனி இவர்கள் வெளியே வரவேண்டுமாயின் வடமாகாணசபைத்தேர்தலில் SLFP க்கா நிற்க வேண்டிவரும்.

 

 

யாழில் விபச்சார விடுதியை முற்றுகையிட்ட முன்னாள் மாநகரசபை உறுப்பினர் கைது!

[Monday, 2013-07-01 17:38:44]

Arrest-seithy-3-150.jpg

யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சிறிகரன் நிஷாந்தனை கைதுசெய்துள்ளதாக யாழ். தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்தார். யாழ். பிரதான வீதியிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில், விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறி யாழ். பிரதேச செயலாளர் மற்றும் நிஷாந்தன் ஆகியோர் சென்று ஜோடியொன்றை பிடித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக குறித்த விடுதி உரிமையாளர் தனது விடுதிக்குள், யாழ். பிரதேச செயலாளர் மற்றும் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஆகியோர் அத்துமீறி நுழைந்ததாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டின் பிரகாரம், முன்னாள் மாநகரசபை உறுப்பினரைக் கைதுசெய்துள்ளதாகவும் இவரை யாழ். நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

 

 

 

 

 

யாழ்ப்பாணத்தினில் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் தப்பிவிடுகின்றனராம்- பொலிஸ் தரப்பு தகவல்!

Jun 29, 2013
 

யாழ்.மாவட்டத்தில் கொள்ளை, களவு, நம்பிக்கை மோசடிச்சம்பவங்கள் சரமாரியாக அதிகரித்துள்ளதையடுத்து கடந்த ஒருவாரத்தில் மட்டும் 92 இலட்சம் ரூபா வரையினில் அபேஸ் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஆயினும் மேற்படிக் குற்றங்கள் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும், புலனாய்வு ரீதியில் விசாரணைகள் மேற்கொள்ளட்டு வருவதாகவும் அப்புள்ளிவிபரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

yalll-m.jpg

நேற்றுக்காலை யாழ்.பொலிஸ் நிலையத்தில் வாரந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இச் சந்திப்பில் கலந்து கொண்ட யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மொகமட் ஜெப்ரி கடந்த வாரத்தில் யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை  பொலிஸ் பிரிவுகளின் கீழ் உள்ள அனைத்துப் பொலிஸ் நிலையங்களிலும் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பான புள்ளிவிபரங்களை ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். அப்புள்ளிவிபரங்களின் அடிப்படையிலேயே மேற்படித் தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.pathivu.com/news/25549/57//d,article_full.aspx

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.