Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் இராணுவத்தைக் குறைக்க வேண்டும் என்பது பைத்தியக்காரத்தனம்! அமைச்சர் வாசுவிற்கு கோதாபய சாட்டை!

Featured Replies

Wasudewa.jpg

செப்டம்பர் மாதத்தில் நடத்தப்படவுள்ளதாகக் கூறப்படும் வட மாகாண சபைத் தேர்தல் சுதந்திரமானதும், நியாயமானதுமாக நடத்தப்பட வேண்டுமாயின் வடக்கில் உள்ள இராணுவத்தினர் முகாம்களுக்குள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

 

வடக்கில் இராணுவத்தினரின் பிரச்சனம் தற்போதுள்ளதைப் போல தேர்தல் காலத்திலும் இருந்தால் சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல் நடத்தப்பட்டதாக சர்வதேச சமூகத்திற்கு கூற முடியாது போகும் என வாசுதேவ நாணயக்கார 'ராவய'' சிங்களப் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.

 

இந்தக் கருத்து குறித்து அந்தப் பத்திரிகை, பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவிடம் கேட்டபோது இதற்குப் பதிலளித்த அவர்,

 

வடக்கின் பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராணுவம் அகற்றப்படமாட்டாது எனக் கூறினார். வடக்கின் அபிவிருத்திக்காக மாத்திரமே இராணுவத்தினர் தற்போது பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

'''பாதுகாப்பு குறித்தும் இராணுவத்தினர் மீதும் குறித்த அமைச்சருக்கு சந்தேகம் இருக்கிறதோ தெரியவில்லை. இல்லையெனில், வடக்கில் இராணுவத்தினர் அரசியலில் ஈடுபடுவதாக அவர் கருதுகிறாரோ தெரியவில்லை?. 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் என்பது இலங்கை மீது பலவந்தமாக திணிக்கப்பட்ட ஒன்றாகும். 13ஆவது திருத்தத்தை வாசித்துப் பார்க்கவேண்டும். மாகாண முதலமைச்சருக்கு பொலிஸ் அதிகாரங்கள் கிடைக்கும். பொலிஸ்துறையை அரசியல்மயப்படுத்துவது சரியானதா என நான் கேட்கிறேன். இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு இவ்வாறான அமைச்சர்கள் வீரர்களாக முயற்சிக்கின்றனர்.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20 வருடங்கள் இதுகுறித்து பேசவில்லை. இது மக்களுக்குத் தேவையில்லை. சம்பந்தன், சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோருக்கே இது தேவைப்படுகிறது.

 

பாகிஸ்தானுக்கு சமாதானம் கிடைத்ததா? உலகிலுள்ள வேறு எந்த நாட்டிற்காகவது சமாதானம் கிடைத்ததா? இல்லை. இராணுவத்தை முகாம்களுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பது பைத்தியக்காரத்தனம்'' என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

http://tamilworldtoday.com/?p=11059

 

Edited by Kashni

  • கருத்துக்கள உறவுகள்

 

பாகிஸ்தானுக்கு சமாதானம் கிடைத்ததா? உலகிலுள்ள வேறு எந்த நாட்டிற்காகவது சமாதானம் கிடைத்ததா? இல்லை. இராணுவத்தை முகாம்களுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பது பைத்தியக்காரத்தனம்'' என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

தற்போது 3 லட்சமாக உள்ள இராணுவம்  2014 அளவில் 4 லட்சமாகும் என பத்திரிகை செய்தி கூறுகிறது.

யாழ் பல்கலைக்கழக சூழலில் இரவோடிரவாகப் படைக்குவிப்பு

9bdc0f45dd5e9aa67cb91b5f8d6b8239.jpg

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தினத்தை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழக சூழலில் நேற்றிரவு முதல் பெருமளவான சிறிலங்கா பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றிரவு முதல் பெருமளவான இராணுவத்தினர் பல்கலைக்கழகம் மற்றும் அதனை சூழ உள்ள பகுதிகளில் ஆயுதங்களுடன் நடமாடித் திரிகின்றமையினால், அச்சமடைந்த பல மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிகளிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளனர். குறிப்பாக சிங்கள மாணவர்கள் வெளியேறிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று ஏதாவது அஞ்சலிகள் இடம்பெறலாம் என்று தெரிவித்தே இவ்வாறான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதேவேளை பெருமளவான படை குவிப்பு காரணமாக பல்கலைக்கழக சூழலில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

http://onlineuthayan.com/News_More.php?id=628772045518420135

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.