Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தடைகளை வென்று, விடுதலைக்கான பாதையில் நம்பிக்கையுடன் முன்செல்ல இந்நாளில் உறுதியேற்போம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தடைகளை வென்று, விடுதலைக்கான பாதையில் நம்பிக்கையுடன் முன்செல்ல இந்நாளில் உறுதியேற்போம்!

முள்ளிவாய்க்காலும் மே18 ம் திகதியும் தமிழர் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத பதிவுகளாகி நான்கு ஆண்டுகளாகிவிட்டன.

 

முள்ளிவாய்க்கால் என்பது தமிழர் மீது சிங்கள பேரினவாதம் நிகழ்த்திய இனப்படுகொலையின் அதியுச்ச வடிவமாக இன்று ஒரு குறியீட்டு முக்கியத்துவம் பெற்றுள்ளது. உலகெங்கும் இனப்படுகொலைக்கும் போர்க்குற்றத்திற்கும் உள்ளான மக்களின் குரல்களில் ஒன்றாக, உலகின் மனச்சாட்சியை நோக்கி கேள்விகளை எழுப்பும் ஒரு நிலம் அது.

 

அது மட்டுமன்றி, கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக தமிழர் அரசியலின் உந்துசக்தியாகவும் வழிகாட்டியாகவும் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வீரச்சாவடைந்ததை நினைவுகொள்ளும் நாளாகவும் காலத்தால் அழியாத பெருநினைவாக என்றும் நிலைத்திருக்கும் நாள் அது.

 

முள்ளிவாய்க்கால் பெரும்சமரில் வீரச்சாவடைந்த தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கும் ஏனைய தளபதிகள் போராளிகளுக்கும் பொங்குதமிழ் தனது நான்காவது ஆண்டு நினைவு வணக்கத்தைச் செலுத்தி நிற்கிறது.

 

இறுதி யுத்தத்தின் பேரில், முள்ளிவாய்க்கால் உட்பட வன்னிப் பெருநிலமெங்கிலும் நிகழ்ந்த இனப்படுகொலையின் வடுக்களை தமிழ் மக்கள் இலகுவில் மறந்துவிட முடியாது. கொலையுண்டு போனவர்கள், அங்கங்களை இழந்தவர்கள், உறவுகளை, உடைமைகளை இழந்தவர்கள், காணாமல் போனவர்கள், கைதானவர்கள் என ஒரு பேரினத்தின் ஆன்மாவே சிதைந்தும் சிதறுண்டும்போன அவலத்தை எப்படி மறப்போம் நாம்?

 

இன்றைய நாளில், முள்ளிவாய்க்கால் தந்த காயத்தையும் பெருவலியினையும் உலகத் தமிழ் மக்களுடன் இணைந்து பொங்குதமிழும் நினைவிற் கொள்கிறது.

 

கடந்த நான்கு ஆண்டுகளில், முள்ளிவாய்க்காலில் இருந்து புதிய அரசியலைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் தமிழர் அமைப்புகள் பெரியளவு பாய்ச்சல்களைக் காட்டவில்லை என்றாலும்கூட, தமிழர் அரசியல் சர்வதேச அரசியலின் பேசுபொருளாக இருப்பதையும் சிறிலங்கா சர்வதேச அரங்கில் அம்பலப்பட்டு நிற்பதையும் மறுப்பதற்கில்லை.

 

சர்வதேச சமூகத்தின் அக்கறைகள் குறித்தும் அவற்றின் பின்னாலுள்ள அரசியல் குறித்தும் கேள்விகள் இருப்பினும், சிறிலங்காவை தொடர்ச்சியாக அம்பலப்படுத்துவதிலும் அழுத்தத்தை கொடுப்பதிலும் சர்வதேச சமூகமும் சனல் 4 போன்ற ஊடகங்களும் வெளிப்படுத்திவரும் பங்களிப்பை நாம் மறுக்க முடியாது.

 

இவை தவிர, தமிழ்நாட்டு மாணவர்களின் பெரும் போராட்டங்களும் அவை ஈழ அரசியல் குறித்து வெளிப்படுத்திவரும் தாக்கங்களும் நம்பிக்கை தருவனவாக உள்ளன. புலம்பெயர் நாடுகளிலும் தமிழர் அரசியல் சரியான திசைவழி செல்வதற்கான மாற்றம் தெரிகிறது. ஆனாலும் சடங்கு அரசியலில் இருந்து புலம்பெயர் சமூகம் விடுபட்டு, புதிய சிந்தனைகளுடனும் புதிய அணுகுமுறைகளுடனும் தன்னை மீளவும் தகவமைத்துக் கொள்ளவேண்டும் என பொங்குதமிழ் எதிர்பார்க்கிறது.

 

தாயகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்யும் விடயம், மீண்டும் கட்சிகள் தமக்குள் கூறுபட்டு நிற்பதற்குக் காரணமாகி விடக்கூடாது என்பதில் பொங்குதமிழ் அக்கறை கொள்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 'பெரியண்ணன்' மனோபாவத்துடன் தனது கூட்டணிக் கட்சிகளை நடத்துவதும் கூட்டணிக் கட்சிகளுக்குரிய நியாயமான இடத்தை வழங்க மறுப்பதுமே இப் பிரச்சனைக்கான அடிப்படை என்பது தெரிந்ததே. இவ்விடயத்தில் கூட்டமைப்பு விட்டுக்கொடுப்புடனும் பெருந்தன்மையுடனும் நடந்துகொள்ள வேண்டும். அனைத்தையும் இழந்து, பலவீனப்பட்டு நிற்கும் ஒரு சமூகத்தின் அரசியலை பொறுப்பேற்று நிற்கும் ஒரு கட்சி, தனது பொறுப்பையும் கடமையையும் சரிவர உணரவேண்டும் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பு.

 

மேலும், அண்மையில் தமிழ் அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் சிறிலங்கா அரசின் இன ஒடுக்குமுறைக்கு எதிராக ஒரு பொதுவேலைத்திட்டத்தை அடையாளம் காண்பது பற்றி உரையாடியிருப்பதை பொங்குதமிழ் பெரிதும் வரவேற்கிறது. இது தொடர்பில் முக்கிய முடிவுகள் எதுவும் இதுவரை எட்டப்படவில்லை என்றபோதும் இது தொடர்பான முயற்சிகள் தமிழர் அரசியலுக்குப் பலம்சேர்க்கும் என்றே நம்புகிறோம்.

 

முள்ளிவாய்க்கால் பெருவலியினை நாம் சுமந்து நிற்கும் இத் தருணத்தில் இதுபோன்ற ஒன்றுபட்ட செயற்பாடுகள் முக்கியமானவை என்பதனை பொங்குதமிழ் மீண்டும் வலியுறுத்துகிறது.

 

இதேவேளை, தமிழ்மக்களின் கௌரவமான, கண்ணியமான வாழ்வுக்காகப் போராடிய போராளிகள் இன்று வறுமையுடன் போராடுவதாக வரும் செய்திகள் குறித்து புலம்பெயர் சமூகம் என்ன செய்யப்போகின்றது?

 

முள்ளிவாய்க்காலுக்குப் பின் அனைத்தையும் இழந்து, கைவிடப்பட்ட மக்களாக வாழ்ந்துவரும் எம் உறவுகளுக்கு புதிய நம்பிக்கையைக் கொடுக்கவும் அவர்களின் பிள்ளைகளை கைதூக்கிவிடவும் புலம்பெயர் சமூகம் முன்வரவேண்டும் என்ற வேண்டுகோளுடன், தடைகள் அனைத்தையும் வென்று, விடுதலைக்கான பாதையில் நம்பிக்கையுடன் முன்செல்ல இந்நாளில் உறுதியேற்போம்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=55021d91-af74-4570-8074-adb85f0c39f6

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.