Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களை பற்றிய மஹிந்தவின் கருத்து; பொன்னம்பலத்தை நிராகரித்து கொப்பேக்கடுவவை ஆதரித்தவர்களாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"வடக்கு, கிழக்கு மக்களின் இதயங்களை நான் நன்கறிவேன். ஒரு தேர்தலில் பொன்னம்பலத்தை தோல்வியடையச் செய்து கொப்பேகடுவவுக்கு வாக்களித்து அவரை வெற்றிப்பெறச் செய்தனர்.''

 
இவ்வாறு காலிமுகத்திடலில் இடம் பெற்ற போர் வெற்றியின் நான்காண்டுகள் நிறைவிழா கொண்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
 
நாட்டிலிருந்து ஒரு அங்குலத்தையேனும் எடுப்பதற்கோ இன்றேல் நாட்டைப் பிரிப்பதற்கோ எவருக்கும் ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.   
 
மேலும், "எவர் எதை மறந்தாலும் நாம் பெற்றுக் கொண்ட வெற்றி சிறுவர்களின் இதயங்களுக்கு நன்றாகப் புரிகின்றது. ஆரம்ப காலங்களில் மரத்தடிகளில் அஞ்சி பதுங்கி யிருந்த சிறுவர்கள் எதிர் காலத்தில் வெற்றி வலராற்றைக் கூறவேண்டும். 
 
போர் செய்த வரலாறாக அல்ல போரை முடிவுக்குக் கொண்டு வந்த வரலாறாக மரண அச்சுறுத்தலிலிருந்து நாடு விடுபட்ட வரலாறாக நினைவு கூர வேண்டும். எனவே, சிறுவர்கள் இந்த வரலாற்றை மறக்க இடமளிக்க முடியாது. இது வரலாற்றில் பதியப்பட வேண்டும்'' என்றும் அவர் தெரிவித்தார்.
 
இந்த போர் வெற்றி விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரி வித்தவை வருமாறு,
 
தாய் நாட்டை மீட்டெடுத் தமைக்கான வெற்றி விழாவை நான்காவது ஆண்டாகவும் கொண்டாடுவதையிட்டு பெருமையடைகின்றேன்.
 
இலங்கை வரலாற்றில் தாய் நாடு ஒன்றிணைக்கப்பட்ட முக்கியத்துமான சந்தர்ப் பமாகும். அதுமட்டுமன்றி மக்களின் மரணபயம் நீக்கப்பட்டு அவர்கள் சுதந்திரமாக பயணிப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த முக்கியத்துவம் வாய்ந்த காலமாகும்.
 
அவற்றுக்கப்பால் மனித கேடயங்களாக தடுத்து வைக்கப்பட்ட மூன்று இலட்சம் மக்களை மீட்டெடுத்த முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பமாகும். தாய்நாட்டை மீட்டெடுப்பதற்காக இலட்சக்கணக்கானோர் உயிர்த்தியாகம் செய்ததை நாம் மறக்கமுடியாது. கண், காது, தலை உட்பட உடல் அவயங்கள், இரத்தம், வியர்வை ஆகியவற்றை நாட்டுக்காக எமது வீரர்கள் பூஜை செய்தனர்.
 
அவ்வாறான முக்கியத்துவமிக்க படையினரை சிலர் சர்வதேச நீதிமன்றத்துக்குக் கொண்டுச்செல்வதற்கு முயற்சித்தனர். இவ்வாறான நிலையில் எதிர்காலத்திலும் நம்பிக்கையுடன் நாட்டுக்கு சேவையாற்றுவோம் என்ற மனநிலையை நாம் உருவாக்கியுள்ளோம். அதற்கான சேவைகளையே நாம் முன்னெடுத்து வருகின்றோம். அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளோம்.
 
2009ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னர் நமது மக்களின் வாழ்க்கை முறை எப்படி இருந்தது? காலி முகத்திடலுக்கு சுதந்திரமாக சென்றுவர முடியாது. மூடப்பட்டிருந்தது.
 
மத்தியவங்கி கட்டடம் தரைமட்டமாக்கப்பட்டது. அதற்கு அருகிலிருக்கின்ற ஜனாதிபதி மாளிகைக்கும் குண்டு லொறி அனுப்பப்பட்டது. அத்துடன், அவற்றுக்கு அருகிலிருந்த  ஹோட்டல்களை புலிகள் குண்டுவைத்துத் தாக்கினர்.
 
1985ஆம் ஆண்டு அனுராதபுரம் மகாபோதி விஹாரையின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 1990 ஆண்டில் காத்தான்குடி முஸ்லிம்கள் தொழுதுகொண்டிருந்த பள்ளிமீது தாக்குதல் நடத்தப்பட்டது. 
 
மாத்தறையில் நடத்தப்பட்ட முஸ்லிம் பேரணியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த அமைச்சர் இன்னும் சுகமடையாத நிலையில் இருக்கின்றார்.
நாட்டில் பல இடங்கள் மற்றும் சந்திகள் புலிகளினால் தாக்குல்கள் நடத்தப்பட்ட சந்திகளாவும் இடங்களாகவுமே அடையாளம் காணப்பட்டன. 
 
அவ்வீதியாக இன்றேல் அந்த இடங்களை கடந்து செல்கையில் இந்த இடத்தில்தான் ஜனாதிபதி பிரேமதாஸ கொல்லப்பட்டார். இந்த சந்தியில் தான் பாரமி குலத்துங்க கொல்லப்பட்டார் என்று அடையாளப்படுத்துகின்றனர். என்னிடம் சில இடங்களை அடையாளப்படுத்தினர்.
 
நாட்டில் எங்கும் எவ்விடத்திற்கும் சென்று எதனையும் செய்யும் வகையில் புலிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்ட காலமொன்றும் இதயத்தில் மரணபயமிருந்த நாடாகவும் இந்நாடு இருந்தது. அப்போது நாட்டு மக்களை மீட்டெடுப்பதற்கு எவருமே முன்வரவில்லை.
 
சமாதானத்திற்காக அழைத்து வந்தவரை கொலை செய்தனர் 1977ஆம் ஆண்டு மக்கள் தாக்கப்பட்டபோது  5/6 பெரும்பான்மை அதிகாரத்துடன் இருந்த ஜனாதிபதி, புலிகளின் தாக்குதலிலிருந்து மக்களே தங்களை பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்று கூறிவிட்டார். 
 
அடுத்தடுத்த வந்த ஆட்சியாளர்களும் புலிகளுக்கு ஆயுதங்களை கொடுத்துதவினர்.  புலிகளுக்கு உதவிய ஜனாதிபதி புலிகளினாலேயே கொல்லப்பட்டார். புலிகளின் தலைவருக்கு குண்டு துளைக்காத ஆடையை வழங்கி சமாதானத்திற்கு அழைத்துவந்த இந்தியப் பிரதமரையும் புலிகள் தமிழ்நாட்டில் கொலைச்செய்தனர்.
 
புலிகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டவர்களால் குண்டுத் தாக்குதல்களிலிருந்து கொழும்பை மீட்க முடியாது போனது. புலிகளுடன்  மோதவேண்டாம். 
 
அவர்கள் கேட்பதைக் கொடுக்குமாறு சர்வதேசம் எங்களிடம் அடிக்கொரு தடவை கேட்டது. எனினும், நாம் இளைஞர்களின் சக்தி மற்றும் வீரத்தில் நம்பிக்கை கொண்டோம். பயத்தை இல்லாது செய்து அவர்களுக்கு நம்பிக்கையூட்டினோம்.
 
இப்போது இது மரண அச்சுறுத்தலிலிருந்து விடுபட்ட இராச்சியம். எவர் எதை மறந்தாலும் நாம் பெற்றுக் கொண்ட இந்த வெற்றி சிறுவர்களின் இதயங்களுக்கே நன்றாகப் புரிகின்றது. 
 
ஆரம்ப காலங்களில் அஞ்சி மரத்தடிகளில் பதுங்கியிருந்த சிறுவர்கள் எதிர்காலத்தில் இதைக் கூறவேண்டும். சிறுவர்கள் இந்த வரலாற்றை மறக்க இடமளிக்க முடியாது.
போர்நிறுத்த ஒப்பந்தம் மூலம் நாட்டைக் காட்டிக் கொடுக்க சிலர் முயற்சித்தனர்.
 
இலங்கைக்கு 16 குளங்களைக் கட்டிக்கொடுத்த மகாசேன மன்னனின் பெயரை சூறாவளிக்குச் சூட்டுமாறு 2003ஆம் ஆண்டு பரிந்துரை செய்தனர்.
 
மகாசேனன் யார்? மின்னேரிய தெய்வம். ஆனால் அந்த வரலாற்றை மறந்து நாசம் செய்ய தயாரானார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த யுகத்தையும் மறக்கடிக்கச் செய்வார்கள் என எமக்குச் சந்தேகம் உள்ளது.
 
இந்த யுகத்தை நாம் மறக்க முடியாது. மறக்கவும் கூடாது. யுத்தம் செய்த யுகமாக அல்ல, யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த யுகமாக நாம் இதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். 
 
இந்த யுகம் வரலாற்றில் பதியப்படவேண்டும். டயர்கள் போட்டப்பட யுகமாக அல்ல, யுத்தம் நிறைவடைந்த, இரத்த ஆறு நிறுத்தப்பட்ட யுகமாக, நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்லும் யுகமாக நாம் நினைவிற் கொள்ள வேண்டும்.
 
வடமாகாணத்தை பொறுத்தவரையில் 12 கட்சிகள் தங்களுடைய அரசியல் செயற்பாடுகளை சுதந்திரமாக முன்னெடுக்கின்றன. அன்று பயந்துக்கொண்டு கொழும்பிலிருந்து அரசியல் செய்தவர்கள் இன்று எவ்விதமான அச்சமும் இன்றி அரசியல் செய்கின்றனர்.
 
வடக்குக் கலாசாரத்தை நாசப்படுத்துவதற்கு பிரபாகரனும் புலம்பெயர்ந்தவர்களும் முயற்சித்தனர். மனித கேடயங்களாக தடுத்துவைக்கப்பட்ட மூன்று இலட்சம் வடக்கு மக்களை நாம் மீட்டெடுத்த போது அவர்களுக்கு ஒரு பொதி உணவு கொடுப்பதற்கு எவரும் முன்வரவில்லை. 
 
புலம்பெயர்ந்தவர்களும் முன்வரவில்லை. இராணுவம், அரசுடன் நீங்களுமே அவர்களுக்கு உணவு கொடுத்தீர்கள். இறுதி யுத்தத்தில் படையினரிடம் சரணடைந்த 11 ஆயிரம் முன்னாள் புலிப் போராளிகளுக்கு நாம் புனர்வாழ்வளித்தோம். அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு இடமளித்தோம். 
 
தூக்குமேடை வரை செல்லவேண்டியவர்களுக்கு நாம் மன்னிப்புக் கொடுத்தோம். பலர் புனர்வாளிவளிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் இவ்வாறான வாய்ப்புக் கிடைக்குமா?
சிவில் படைக்கு தமிழர்கள் 4 ஆயிரம் பேரை இணைத்துள்ளோம். 
 
முப்படைகளிலும் இணைவதற்கு அவர்கள் தயாராக உள்ளனர். படைகளில் தமிழர்கள் இணைவதை தெற்கில் உள்ளவர்கள் எதிர்க்கவில்லை. வடக்கில் உள்ள சிலரும் புலம்பெயர்ந்தவர்களுமே எதிர்த்தனர். 
 
அதனால்தான் அரசிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் பிரேரணை கொண்டுவரப்பட்ட போது கிளிநொச்சியில் அந்த பிரேரணைக்கு எதிராக மக்கள் அணிதிரண்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
வடக்கு, கிழக்கு மக்களின் இதயங்களை நான் நன்கறிவேன். ஒரு தேர்தலில் பொன்னம்பலத்தை தோல்வியடையச்செய்து கொப்பேகடுவையை வெற்றிப்பெறச்செய்தனர்.
 
காலத்திற்கு காலம் புரட்சி, ஊடக சுந்திரம் மற்றும் மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் குரல்கொடுப்பர். அதற்கெல்லாம் நாம் பதிலளித்துக் கொண்டிருக்கின்றோம். எனவே, நாட்டிலிருந்து ஒரு அங்குலத்தையேனும் எடுப்பதற்கோ இன்றேல் நாட்டைப் பிரிப்பதற்கோ ஒருபோதும் இடமளியேன்.
 
இப்படித் தெரிவித்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.