Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனநிலை பாதிக்கப்பட்டு சவூதியிலிருந்து திரும்பியுள்ள சின்ன கலைமதி யார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனநிலை பாதிக்கப்பட்டு நாடு திரும்பியுள்ள பெண் - மக்களின் உதவி நாடப்படுகிறது

Monday, May 20, 2013 Jaffna Muslim 0

(தினகரன்)

சவூதியிலிருந்து நாடு திரும்பியுள்ள சின்ன கலைமதி என்ற இந்தப் பெண் தான் யார்? எங்கு இருக்கிறோம்? உறவினர்கள் யார்? எதுவுமே கூறத் தெரியாமல் மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிகிச்சை பிரிவில் உள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 29 திகதி சவூதியிலிருந்து தூதரகம் ஊடாக தற்காலிக கடவுச் சீட்டில் நாடு திரும்பினார். அவர் இலங்கை வந்த போது மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார்.

Page1_L.jpg

விமான நிலைய வைத்திய பிரிவினரிடம் இவர் ஒப்படைக்கப்பட்ட போது அவரை அங்கொட மனநல மருத்துவ மனையில் அனுமதிக்குமாறு டொக்டர்கள் சிபாரிசு செய்திருந்தனர்.

இதன்படி, அவர் அங்கொடயில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து அவர் மேலதிக சிகிச்சைக்காக நீர்கொழும்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மருத்துவமனையிலிருந்த அவர் ஊடாக இலங்கையிலுள்ள அவரது உறவினர்களின் விபரங்களை அறிய எவ்வளவோ முற்பட்ட போதும் அவரிடமிருந்து எவ்வித தகவல்களையும் பெற முடியாமல் போனது.

கட்டுநாயக்காவிலுள்ள பணியகத்தின் சகன பியச காப்பகத்திலிருந்த அவர் மீண்டும் நோய்வாய்ப்பட்டதால் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைகளை முடித்துக் கொண்டு மீண்டும் பணியகத்தின் சகன பியச காப்பகத்தில் பராமரிப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலை திருப்திபடும் அளவுக்கு தற்போது இல்லை என்பதுடன் எவ்வாறாயினும் அவரது பெற்றோர், அல்லது உறவினர்களை கண்டு பிடித்து அவரை ஒப்படைக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

படத்தில் காணப்பட்டுள்ள இவர் பற்றிய தகவல்கள் தெரிந்திருப்பின் உடனடியாக பணியகத்தின் சகன பியச காப்பகத்தின் 011-2259954 அல்லது 011-2259341 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறியத் தருமாறும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.