Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனைத்து விதத்திலும் தோல்வி அடைந்த காங். அரசு அகற்றப்பட வேண்டும்: பா.ஜனதா காட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுடெல்லி: அனைத்து விதத்திலும் தோல்வியடைந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியிலிருந்து அகற்றப்பட வேண்டும் என பா.ஜனதாவின் தேசியச் செயலர் தமிழிசை சௌந்திரராஜன் காட்டமாக கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இன்று ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. கருத்து கணிப்பின்படி ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீது பெரும்பான்மையான மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளார்கள்.அவர்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீண்டும் ஆட்சிக்கே வரக் கூடாது என சொல்லி இருக்கிறார்கள்.

ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, அனைத்துக் கட்சியினருக்கும் பிரதமர் மன்மோகன் சிங் சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியிருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறுகிறார்கள்.. ஆனால், தொழில்துறை தொடங்கி அனைத்துத் துறைகளிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துவிட்டதாக பா.ஜனதா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம், ஆதார் திட்டம், அமைச்சர்கள் மீதான விமர்சனம் போன்றவற்றிலும் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி உள்ளன.

2014  மே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கும் நிலையில், பொய்யான வாக்குறுதிகளையும், சாதனைகளையும் காங்கிரஸ் அரசு பட்டியல் போட்டு மக்களை ஏமாற்றுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி உள்ளன.

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு காங்கிரஸ் கூட்டணி அரசு மீது ஊழல் புகார்கள் எழுந்தன. இதன் உச்சக்கட்டமாக பிரதமர் மன்மோகன் சிங் மீதே எழுந்த ஊழல் புகாரும், இதற்கு விளக்கம் அளிக்காமல் அவர் அமைதி காத்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

 

இந்த நான்காண்டில் காங்கிரஸ் ஆட்சி பற்றி பா.ஜனதாவின் தேசியச் செயலர் தமிழிசைtamil_isai%281%29.jpg சௌந்திரராஜனிடம் கருத்து கேட்டபோது, அவர் பொரிந்து தள்ளிவிட்டார்.

'' ஒரு நாடு வல்லரசாக வேண்டும் என்றால் அது நல்லரசாக இருக்க வேண்டும். அதற்கான எந்தத் தகுதியும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு இல்லை. இந்த ஆட்சியில் ஊழல்தான் மிக வேகமாக வளர்ந்திருக்கிறது.

ஆண்டுக்கு ஒரு ஊழல், மாததத்துக்கு ஒரு ஊழல், நாளுக்கு ஒரு ஊழல், மணிக்கு ஒரு ஊழல், நொடிக்கு ஒரு ஊழல் என வளர்ந்திருக்கிறது. நாளையின் நேரத்தை கடன் வாங்கி இன்றே ஊழல் செய்துவிடுவார்கள் போலிருக்கிறது. இந்த ஆட்சியின் முழு நேரத் தொழிலாக ஊழல்தான் இருந்து வருகிறது.

 

 

இந்தியாவில் இது வரைக்கும் இல்லாத வகையில் ஒரே நேரத்தில் இரு மத்திய அமைச்சர்கள் ஊழலுக்காக சிறையில் அடைக்கப்படுவதும் ஊழலுக்காக பதவி விலகுவதும் இந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான் நடந்திருக்கிறது. இந்த கூட்டணியில் இருந்து 13 கட்சிகள் விலகி இருப்பதிலிருந்தே இதன் செயல்பாட்டை தெரிந்துக் கொள்ளலாம்.

எந்த ஒரு பிரச்னையிலும் நடவடிக்கை இல்லை. தயக்கம் காட்டுவது தன் சிறப்பு தகுதி என்பது போல் போல் பிரதமர் மன்மோகன் சிங் நடந்து வருகிறார்.

காங்கிரஸ் ஆட்சி செல்லரித்த மரமாக இருக்கிறது. இந்த ஆட்சியில் விலை 200 மடங்கு அதிகரித்துள்ளது.  வெளிநாட்டுக் கடன் அதிகரிப்பு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு என பல உயர்வுகளை இந்த ஆட்சியில்தான் மக்கள் சந்தித்து உள்ளார்கள்.

அடுத்து இந்த ஆட்சியில் புதிதாக வேலை வாய்ப்பு உருவாக்குவதற்கு பதில் தொழில்துறையில் 50 லட்சம் பேர் வேலை இழந்திருக்கிறார்கள்.  விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருகிறது. விவசாய நாடான இந்தியாவில் விவசாயத்த்தை விட்டு விலகி இருங்கள் என்று சொல்லும் ஒரே பிரதமர் மன்மோகன் சிங்தான்.

உள்நாட்டிலும் பாதுகாப்பு இல்லை. வெளிநாட்டிலும் பாதுகாப்பு இல்லை. நம் ராணுவவீரர்களுக்கு கூட பாதுப்பு இல்லை. அனைத்து விதத்திலும் தோல்வி கண்ட

காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அகற்றப்பட வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு நல்லது நடக்கும்" என்றார் தமிழிசை சௌந்திரராஜன்.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=15154

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.