Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமலை நகரசபையுடன் அமெரிக்கா உடன்பாடு – சிறிலங்கா அரசு விசனம்

Featured Replies

  [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 05:29 GMT ] [ கார்வண்ணன் ]

us-sl-flag.jpgசிறிலங்கா அரசாங்கத்தின் அனுமதியைப் பெறாமல், திருகோணமலையில் அமெரிக்கன் நிலையத்தை அமைப்பதற்கு திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்கத் தூதரகம் புரிந்துணர்வு உடன்பாடு செய்து கொண்ட விவகாரம், சிறிலங்கா அரசுக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருகோணமலை நகரசபையுடன் இணைந்து பொது தகவல் மற்றும் செயற்பாட்டு நிலையத்தை அமைப்பதற்கு கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் புரிந்துணர்வு உடன்பாட்டை செய்து கொண்டுள்ளது. 

இந்த உடன்பாட்டில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக கலாசார, கல்வி, ஊடக விவகாரங்களுக்கான பணிப்பாளர் கிறிஸ்ரொபர் டீலும், திருகோணமலை நகரசபை முதல்வர் கே. செல்வராசாவும் கையெழுத்திட்டனர். 

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக பொதுசன விவகார பிரிவுக்கும் திருகோணமலை நகரசபைக்கும் இடையிலான இந்த உடன்பாடு நேற்றுமுன்தினம் திருகோணமலை பொது நூலகத்தில் வைத்து கையெழுத்திடப்பட்டுள்ளது. 

இது குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு அறிவிக்கப்படவோ அல்லது, அதன் அனுமதி பெறப்படவோ இல்லை. 

அனைத்துலக நடைமுறைகளுக்கு அமைய, கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் உள்ளூர் அதிகாரிகளுடன் ஏதாவது இணக்கப்பாட்டை ஏற்படுத்த முன்னர், அது குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்குத் தெரியப்படுத்தவோ அல்லது அதன் அனுமதியைப் பெறவோ வேண்டும் என்று சிறிலங்கா அதிகாரிகள் கூறியுள்ளனர். 

எனினும் எந்த அனுமதியும் பெறப்படாமல் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் திருகோணமலை நகரசபையுடன் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு உடன்பாடு சிறிலங்கா அரசுக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருகோணமலை நகரசபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிர்வாகத்தின் கீழ் இருந்து வருகின்றது. 

அமெரிக்கன் கோணர் எனப்படும் பொது தகவல் மற்றும் செயற்பாட்டு நிலையங்களை அமெரிக்கா ஏற்கனவே யாழ்ப்பாணத்தலும் கண்டியிலும் நிறுவியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

/puthinappalakai

 

அமெரிக்கன் கோணர் என்ற அமைப்பு ஏற்கனவே வேறு நகரங்களில் இருப்பதால் அமெரிக்க தூதுவராலயம் திருகோணமலைக்காக பிரத்தியேக அனுமதி பெற வேண்டும் போலப் படவில்லை. இதில் சொல்லப்படும் நகர சபைகளில் திருகோணமலை ஒன்றுதான் கூட்டமைப்பினது. அதை ஒரு கள்ளத்தேர்தல் வைத்து கூட்டமைப்பிடம் இருந்து பறிப்பத்தற்கு போடும் ஒரு திட்டமாக இது இருக்கலாம்.

  • தொடங்கியவர்

அமெரிக்க அதிகாரிகளை விசாரணைக்கு அழைக்கிறது சிறிலங்கா அரசாங்கம்

Published on May 25, 2013-6:20 am   ·   No Comments

america2-150x150.jpgஅமெரிக்க தகவல் நிலையத்தை அமைப்பது தொடர்பாக, திருகோணமலை நகரசபையுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு குறித்து, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரக அதிகாரிகளிடம் விளக்கம் கோர சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலையில் பொது தகவல் மற்றும் செயற்பாட்டு நிலையத்தை (அமெரிக்கன் கோணர்) அமைப்பதற்கு கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம், திருகோணமலை நகரசபையுடன் கடந்த 22ம் நாள் உடன்பாடு ஒன்றைச் செய்து கொண்டது.

இந்த உடன்பாடு குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்குத் தெரியப்படுத்தப்படாதது சிறிலங்கா அரசாங்கத்துக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையிலேயே கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரக அதிகாரிகளிடம் விளக்கம் கோர சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு முடிவு செய்துள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்ட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலர் கருணாதிலக அமுனுகம,  உள்நாட்டில் எத்தகைய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதானாலும் சரி, உள்ளூராட்சி சபைகளுடன் உடன்பாடுகளை செய்து கொள்வதானாலும் சரி, அதுகுறித்து வெளிநாட்டு தூதரகங்கள் முதலில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

அதற்கு உரிய அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இது தான் உள்நாட்டு நடைமுறை.ஆனால் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்குத் தெரியப்படுத்தப்படாமலேயே திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்க தகவல் நிலையத்தை அமைக்கும் உடன்பாடு செய்து கொள்ளப்பட்டுள்ளது.

இந்த உடன்பாடு தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக அமெரிக்கத் தூதரக அதிகாரிகளை வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கவுள்ளேன்.

அத்துடன், அமெரிக்கத் தகவல் நிலையத்தை அமைப்பது தொடர்பான விபரங்களை வெளிவிவகார அமைச்சுக்குத் தரத் தவறியது ஏன் என்று அமெரிக்க அதிகாரிகளிடம் விளக்கம் கோரப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே திருகோணமலை நகரசபைத் தலைவர் செல்வராசாவுடன், இந்த உடன்பாட்டை செய்து கொண்ட அமெரிக்கத் தூதரக பேச்சாளரும், ஊடக, கலாச்சார, கல்வி விவகாரங்களுக்கான பணிப்பாளருமான கிறிஸ்ரொபர் டீல், தாம் எந்த நடைமுறைகளையும் மீறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.   “ஏற்கனவே அமெரிக்கத் தூதரகம் கண்டியிலும், யாழ்ப்பாணத்திலும் இதுபோன்ற தகவல் நிலையங்களை அமைத்துள்ளது.

அதற்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அனுமதி ஏதும் பெறப்படவில்லை.திருகோணமலையில் அமெரிக்க தகவல் நிலையத்தை அமைக்கும் விவகாரத்திலும் அதே நடைமுறையே பின்பற்றப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டதுடன்,  இது பொதுமக்களின் நலனுக்காக, குறிப்பாக மாணவர்களின் நலனுக்காகவே அமைக்கப்படுகிறது. விரைவில் இதுபோன்ற நிலையம் தெற்கிலும் நிறுவப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

 

thinakkathir

 

  “ஏற்கனவே அமெரிக்கத் தூதரகம் கண்டியிலும், யாழ்ப்பாணத்திலும் இதுபோன்ற தகவல் நிலையங்களை அமைத்துள்ளது. அதற்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அனுமதி ஏதும் மீறப்படவில்லை. திருகோணமலையில் அமெரிக்க தகவல் நிலையத்தை அமைக்கும் விவகாரத்திலும் அதே நடைமுறையே பின்பற்றப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டதுடன்,  

 

இது பகிடிதான். :lol:  :lol:  :lol:

 

 
 
விரைவில் இதுபோன்ற நிலையம் தெற்கிலும் நிறுவப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்
 
 
 

 

 

இலங்கை அரசை மிரட்ட இதை சொல்கிறதாகும் அமெரிக்கா. ஆனால் இலங்கை அசைந்து கொடுக்குமா?

 

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.