Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்சில் "மே. 18" - மாபெரும் நினைவுப் பேரணி

Featured Replies

தமிழின அழிப்பு நினைவு நாள் மே. 18 நான்காவது ஆண்டில் பிரான்சில் மாபெரும் நினைவுப் பேரணி 18.05.2013 நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும், அதன் உப கட்டமைப்புக்களும், தமிழீழ மக்கள் பேரவையும் இணைந்து இப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர்.

பிற்பகல் 2.50 மணிக்கு இராணுவ பயிற்ச்சிக்கல்லூரிக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட நினைவுப்பேரணி ஈபுள் கோபுரம் வழியாக மனித உரிமைச் சதுர்க்கம் முன்பாக சென்றடைந்தது. நினைவு நிகழ்வின் தொடக்க நிகழ்வாக பொதுச்சுடரினை மக்கள் பேரவை திரு. திருச்சோதி அவர்கள் ஏற்றி வைக்க அதனைத் தொடர்ந்து கேணல் பரிதி அவர்களின் பெற்றோர்கள் ஈகைச்சுடரினையும், மலர்வணக்கத்தையும் செய்ததை தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளும் சுடர் எற்றினர். அகவணக்கம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த மே 1ம் நாள் முதல் 18 ம் திகதி வரை அடையாள கவயீர்ப்பு உண்ணா மறுப்புப்போராட்டத்தை நடாத்திய மூதாளர்கள் மற்றும் மக்களாலும் மலர் வணக்கமும் செலுத்தப்பட்டது.

முள்ளிவாய்காhல் நான்காம் ஆண்டிலே பல பிரெஞ்சு பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். கடந்த 1ம் திகதி முதல் 18ம் திகதி வரை மூதாளர்களால் முன்னெடுக்கப்பட்ட உண்ணா மறுப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட மூதாளர்கள் அழைத்து வரப்பட்டனர். முள்ளிவாய்காலின் பேரவலத்தையும், இப்பேரணியின் நோக்கத்தையும் பிரஞ்சு அரசாங்கத்துக்கும், சர்வதேசத்துக்கும் தெரியப்படுத்தும் வகையில் உரையாற்றப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினரும், கட்சித்தலைவியும், மற்றும் கிளச்சி, லாக்கூர்னேவ், போன்ற மாநகர முதல்வர்கள் உதவி முதல்வர்கள் கலந்து கொண்டு உரையும் ஆற்றினர். குர்திஸ்தான் மக்கள் சார்பில் அதன் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு உரையும் ஆற்றினர். தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் திரு. சத்திதாசன் அவர்களும், தமிழீழ மக்கள் பேரவை சார்பாக திரு. கமல் அவர்களும், தமிழ் இளையோர் அமைப்பு சார்பாக செல்வி. பானுசா அவர்களும் உரையாற்றினார்கள்.

காலநிலை மாற்றத்தினால் பேரணி மனிதவுரிமைகள் சதுக்கத்தை வந்தடையும் போது ஏற்றப்பட்ட மழை தொடர்ந்தும் நினைவு வணக்க நிகழ்வு முடியும் வரை பெய்து கொண்டேயிருந்தது. ஆனாலும் மக்கள் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை முடியும் வரை நின்றிருந்தனர். பேரணியில் தமிழீழத்தில் இன்றைய நிலைப்பாடுகள் பற்றிய காட்சிப்படுத்தலை தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் தெருவழி நாடகமாக செய்து கொண்டு வந்திருந்தனர்.

குசன்வில் மாணவர்கள் காலத்தின் தேவைகருதிய பாடல் ஒன்று நடனவடிவம் தந்து அனைத்து மக்களுக்கும் ஓர் எழுச்சியை ஊட்டினர். இறுதியில் உறுதிமொழி எடுக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் 7.00 மணிக்கு நிறைவு பெற்றது. இவ் நினைவுப்பேரணி மூன்று கிலோ மீற்றர் தூரத்திற்கு தமிழீழ தேசிய கொடிகளை தாங்கி வந்திருந்தன.

923203_574265942618412_344471609_n.jpg
969132_574266065951733_944149312_n.jpg
935337_574266125951727_1575235133_n.jpg
931437_574266212618385_683457171_n.jpg
942496_574266269285046_1178086390_n.jpg
954784_574266355951704_2129306513_n.jpg
264547_574266402618366_871731388_n.jpg
970719_574266432618363_1729259457_n.jpg
969951_574266539285019_293556017_n.jpg
 

www.pathivu.com/news/24927/57/18/d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

கனடா உறவுகள், நடத்தியதை விட பெரிய பேரணியாக நடத்த,
பிரான்ஸ் உறவுகளான.... துளசி, விசுகு, சுபேஸ், இணையவன், சுவி அண்ணா, கோமகன், சாத்திரியார் எல்லாரும் ஒத்துளைக்க வேண்டும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

கனடா உறவுகள், நடத்தியதை விட பெரிய பேரணியாக நடத்த,

பிரான்ஸ் உறவுகளான.... துளசி, விசுகு, சுபேஸ், இணையவன், சுவி அண்ணா, கோமகன், சாத்திரியார் எல்லாரும் ஒத்துளைக்க வேண்டும்.

 

ஏன் தமிழ்சிறி முடிந்த நிகழ்வுக்கு போகச் சொல்றீங்கள் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

கனடா உறவுகள், நடத்தியதை விட பெரிய பேரணியாக நடத்த,

பிரான்ஸ் உறவுகளான.... துளசி, விசுகு, சுபேஸ், இணையவன், சுவி அண்ணா, கோமகன், சாத்திரியார் எல்லாரும் ஒத்துளைக்க வேண்டும்.

 

நான் சென்றிருந்தேன்

துளசியும் வந்திருந்தார் என்று இங்கு எழுதினார்

மற்றவர்கள் தெரியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.