Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது கட்சி அரசுடன் இணைந்து செயற்பட்டாலும், இந்த அரசுமீது எனக்கு நம்பிக்கை இல்லை! - அமைச்சர் ஹக்கீம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எமது கட்சி அரசுடன் இணைந்து செயற்பட்டாலும், இந்த அரசுமீது எனக்கு நம்பிக்கை இல்லை! - அமைச்சர் ஹக்கீம்

'மஹிந்த ராஜபக்ஷ அரசுடன் எமது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணியான இணைந்து செயற்பட்டு வருகிறது. எனினும், இந்த அரசு மீது எமக்குப் போதியளவு நம்பிக்கை இல்லை. இதை நான் வெளிப்படையாகக் கூற விரும்புகின்றேன்.

13வது அரசமைப்பு திருத்தத்தை நீக்காது வடக்கு மாகாணசபைத் தேர்தலை அரசு நடத்தியே ஆகவேண்டும். இந்தத் தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும்'

இவ்வாறு 'பொங்குதமிழ்' இணையத்தளத்திற்குத் தெரிவித்தார் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம்.

இனவாதிகளின் கருத்துக்களுக்கு செவிசாய்க்காமல் வடக்கு மாகாணசபைத் தேர்தலை வன்முறை எதுவுமின்றி நடத்தி முடிக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாணசபைத் தேர்தல் திட்டமிட்டபடி செப்டெம்பர் மாதம் நடக்கும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அமைச்சர்கள் சிலரும் தெரிவித்துள்ளனர். அதேவேளை, இந்தத் தேர்தலை நடத்தினால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச ஆகியோர் உட்பட அரச தரப்பு அரசியல்வாதிகள் அரசுக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

இது இவ்வாறிருக்க வடக்கு மாகாணசபைத் தேர்தலை ஜனாதிபதி நடத்த விரும்பினால் அதற்கு முன்னர் 13வது அரசமைப்பு திருத்தத்தை நீக்கவேண்டும் என இனவாதக் கட்சிகள் சில அரசை வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் நீதியமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீமுடன் தொடர்புகொண்ட 'பொங்குதமிழ்' இணையத்தளம் வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக தங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன என்று வினவியது

இதற்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்தவை வருமாறு:

மஹிந்த ராஜபக்ஷ அரசுடன் எமது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணியான இணைந்து செயற்பட்டு வருகிறது. எனினும், இந்த அரசு மீது எமக்குப் போதியளவு நம்பிக்கை இல்லை. இதை நான் வெளிப்படையாகக் கூற விரும்புகின்றேன்.

வடக்குத் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறும் என்று ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். ஆனால், வர்த்தமானி அறிவித்தல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இதற்கிடையில் வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தக்கூடாது எனவும், அவ்வாறு தேர்தலை நடத்துவதாக இருந்தால் 13வது அரசமைப்பு திருத்தத்தை அரசு ஒழிக்கவேண்டும் எனவும் இனவாதிகள் கூச்சலிடுகின்றனர். ஏன் இவர்கள் இவ்வாறு செயற்படுகின்றாகள் என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால், வடக்கு மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படவேண்டும் என்பதில் எமது கட்சி உறுதியாகவுள்ளது.<

நாம் வடக்குத் தமிழர்களை எமது உடன் பிறந்த சகோதரர்களாகவே பார்க்கின்றோம். கடந்த காலங்களில் கசப்பான சம்பவங்கள் நடந்தன. எனினும், அதனை நாம் மறந்து தற்போது சகோதரத்துவமாக பழக ஆரம்பித்துள்ளோம்.

அண்மையில் யாழில் நடைபெற்ற தந்தை செல்வாவின் நினைவுதின நிகழ்வில் நான் உரையாற்றினேன். அதன் பின்னர் அங்குள்ள மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினேன். அனைவரும் வடக்கு மாகாணசபைத் தேர்தலை எதிர்பார்த்து இருக்கின்றார்கள்.

எனவே, 13வது அரசமைப்பு திருத்தத்தை நீக்காது வடக்கு மாகாணசபைத் தேர்தலை அரசு உடன் நடத்தியே ஆகவேண்டும்.

இனவாதிகளின் கருத்துக்களுக்கு செவிசாய்க்காமல் வடக்கு மாகாணசபைத் தேர்தலை வன்முறை எதுவுமின்றி நடத்தி தமிழ் மக்களின் மனதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடம்பிடிக்கவேண்டும்.

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடத் தீர்மானித்துள்ளது. நாம் வேட்பாளர்களையும் தயார் நிலையில் வைத்துள்ளோம் என்று தெரிவித்தார் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=768694f8-d44a-4061-8c47-5ee090d0792d

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.