Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈஸ்டர் தீவு சிலைகளின் இரகசியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் தீவு சிலைகளின் இரகசியம்

 
easter-island-night4.jpeg

 
 
பசிபிக் பெருங்கடலின் தென்கிழக்கில் அமைந்துள்ள தீவு ஈஸ்டர் தீவு.
இத்தீவு ஜகோப் ரோகுவீன் எனும் டச்சு மாலுமியால் (Dutch  explorer )
வெளியுலகுக்கு அறியபடும் பகுதியானது.
Easter-island-map.jpeg

இத்தீவின் பெரும் அதிசயமாக கருதப்படுபவை ஒரே வடிவமைப்பில் சிறிதும் பெரிதுமான 887 கற்சிலைகள்.  இந்த சிலைகளை ”மோய்” (Moai) என குறிப்ப்பிடப்படுகின்றன. ரப்பா நூயி (Rapa Nui) எனும் பழங்குடிகளால் இது வடிவமைக்கப்பட்டது. 
tahai.jpg

10000 ஆண்டுகளுக்கு முன்பு இத்தீவில் எரிமலை சீற்றம் இருந்ததாக மதிப்பிடப்படுகிறது.

ஈஸ்டர் தினத்தில் (1722) டச்சுக்காரர்கள் இத்தீவில் இறங்கியதால் ஈஸ்டர் தீவு என அழைக்கப்படுகிறது. பழைய பெயர் (Rapanui) ரபானூய். சிந்து, ஹரப்பா இப்படி வரிசையில் இது “கடைசி நாகரீகம்” என அழைக்கப்படுகிறது. இவர்களின் கலாச்சாரமும் ஒரு புதிர். ஒரே வடிவமைப்பில் உள்ள இந்த கற்சிலை ஏன் எதற்காக என்ற கேள்விக்கு பல வியாக்கியானங்கள் கொடுக்கப்படுகிறது.
AhuTongariki.JPG

ஒவ்வொரு சிலையும் சராசரியாக 12 அடிகள் உள்ளன. 
30 முதல் 40 டன் எடையுள்ள 30 அடி உயரசிலைகளும் உண்டு. 
முழு உருவச் சிலைகள் என்றில்லாமல் மார்பளவு மற்றும் இடுப்பு வரைக்குமான சிலைகள் இவை. 
7896593.jpg

உருவங்களின் சாயல் ஒரே மாதிரியாக இருக்கின்றன. சிலைகளின் பின் புறம் குறியீடு அல்லது சித்திர எழுத்துகள் செதுக்கப்பட்டு உள்ளன.

சில எரிமலை கற்களால் வடிவமைக்கப்பட்ட சிலைகள்.

சிலைகளின் அமைப்பை வைத்து இத்தீவில் இரண்டு இன பழங்குடிகள் இருந்திருக்கலாம் என உறுதிப்படுத்துகிறார்கள்.  சிலைகளில் ஒருவகை குட்டை காதுகளை கொண்டும் இன்னொரு வகை நீண்ட காதுகளை கொண்டும் இருக்கிறது. 
Easter-Island-6.jpg

நீண்ட காதுகளை கொண்டவர்கள் ஆட்சி அதிகாரத்தை கொண்டிருக்கலாம்.  குட்டைகாதுகளை கொண்டவர்களை இவர்கள் அழித்திருக்க கூடும்.

இவர்கள் அமெரிக்க இந்தியர்கள் அல்ல பாலினீஸியன்கள்.
மூலக்கூறு (டிஎன் ஏ) ஒப்பீட்டின் படி பாலினீஸியன்களோடு ஒத்துப்போகிறது.
இவர்கள் சுமார் 400 A.D வாக்கில் இங்கு குடியேறி இருக்கலாம்.
Easter-Island-7.jpg


சில எரிமலை வாய்ப்பகுதியில் தீவை நோக்கி நிறுத்தப்பட்டுள்ளன. பல டன் கொண்ட இவை எப்படி நிறுவப்பட்டது என்பது அடுத்த மர்மம்.

ஈஸ்டர் தீவு தீவின் தொன்மையான பெயர் ரப்பாநூயி, 15மைல் நீளமும் 10மைல் அகலமும் கொண்ட  ஒரு முக்கோணத்தீவு, பரப்பளவு 163 சதுர கிலோமீட்டர்கள். சிலியின் கட்டுப்பாட்டில் இத்தீவு உள்ளது.
Easter-Island-4.jpg


இத்தீவில் சுமார் பதினோராயிரம் பழங்குடிகள் (பூர்வ குடிகள்) இருந்திருக்கலாம் எனவும்,ஐரோப்பியர்கள் நுழைந்த போது (1877) சில நூறு மட்டுமே இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. 

சில கணிப்புகள் :

இச்சமூகத்தில் நரமாமிசம் உண்ணும் பழக்கம் அல்லது நரபலி இருந்திருக்கிறது.

இந்த சிலைகள் தமது கடவுளுக்கு பிரியமானது என்று நிறுவப் பட்டிருக்கலாம்.

வேற்று கிரக வாசிகளுக்கும் இத்தீவிற்கும் தொடர்பு இருந்து இருக்கவேண்டும். 

சக்கரைவல்லிக் கிழங்கு இங்கு இருந்திருக்கிறது 2300 மைல் தொலைவில் சிலியில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம். 

வானியல் பற்றிய அவர்கள் அறிந்திருந்தனர். 

மிக கனமான இந்த கற்சிலைகளை எப்படி உயரமான இடங்களில் கொண்டு சென்று நிறுத்தினர் என்பதே ஆச்சர்யமான ஒன்று. இது குறித்து பல ஆண்டுகளாக பலவிதமான ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன ( Easter Island Statue Project.) உருளைகள், நீண்டகயிறுகள், சறுக்கு பலகைகள் இப்படி இவற்றை கொண்டு சோதித்து பார்க்கப்பட்டன. சுழற்றி சுழற்றி இவை கொண்டுசெல்லப்பட்டிருக்குமா?

moai-stand0.jpeg

(ஆராய்சியின் விழைவாக சில சிலைகள் உடைந்து போய் இருக்கின்றன)

ஹவாய் பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் டெரிகன்ட் என்பவரும், கலிபோர்னிய மாகாண பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் கார்ல் லிப்போ மற்றும் தொல்லியல் ஆய்வாளர் சர்ஜிகோ ராபு இவர்கள் 12 ஆண்டுகால தொடர் ஆய்வின் இறுதியில் கற்சிலைகள் இப்படித்தான் நிறுவப்பட்டிருக்கும் என்ற முடிவிற்கு வந்ததோடு 18 பேர்களை கொண்டு செயல்படுத்தியும் காட்டினர். (இதற்கு முன் பல குழுக்கள் இது குறித்த உறுதியான முடிவை எட்ட வில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்)

இந்த சிலையின் அடிப்பாக அரைவட்ட அமைப்பு, ஈர்ப்பு விசைக்கு தகுந்தாற்போல் செதுக்கப்பட்ட அளவீடு இவை சிலைகளை அவர்கள் நகர்த்தி செல்ல முடிந்திருக்கிறது.

imagesizer.jpeg

12 அடி உயரமுள்ள 5டன் மோய் சிலையை, இக் குழு படத்தில் உள்ளது போல் மூன்று நீண்ட கயிறுகள் சிலையின் தலையில் கட்டப்பட்டு சிலையின் பின்புரம், பக்கவாட்டின் இருபுறமும் ஏற்படுத்தும் அசைவுகள் இந்த சிலையை பல மீட்டர்கள் தூரத்திற்கு உருளைகள் இன்றி நகர்த்தி காட்டியது. 
Untitled+1.jpg
                                                             விளக்கப்படம்

முன்பு கடின நார்போன்ற ஒருவகை புற்கள் இங்கு இருந்திருக்கின்ற அவற்றை அக்கால மக்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும். (இப்போது இல்லை)
457imagesizer.jpeg
                                 கார்ல் லிப்போ மற்றும் பேராசிரியர் டெரிகன்ட்

பேராசிரியர் டெரிகன்ட் [Terry Hunt ] எழுதிய The Statues that Walked: [unraveling the mystery of Easter Island ] எனும் புத்தகத்திற்கு அமெரிக்க தொல்லியல் சொசைட்டியின் 2011 ஆம் ஆண்டிற்கான விருது கிடைத்துள்ளது.

 காணொளி 

 

 

http://eniyavaikooral.blogspot.com/2013/04/blog-post_11.html

 

 

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

உங்க‌ள் ப‌திவு மூல‌ம், ஈஸ்ட‌ர் தீவைப் ப‌ற்றிய‌... ந‌ல்ல‌ த‌க‌வ‌ல்க‌ளை அறிந்து கொண்டேன்.
இந்த‌ப் பூமியில், ம‌னித‌ன் ப‌ல‌ ஆயிர‌ம் வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பே... எல்லா இட‌மும் கால் ப‌தித்துள்ளான் என்ப‌தையும், 2006 ம் ஆண்டு சுனாமி வ‌ந்த‌ போது, த‌மிழ‌க‌த்தில் க‌ட‌ல் உள்வாங்கிய‌ நேர‌ம்... அங்கு ப‌ல‌ க‌ட்டிட‌ங்க‌ள் தென்ப‌ட்ட‌தையும்... பல‌ர் க‌ண்டுள்ளார்க‌ள்.
நல்லதொரு.... அருமையான பதிவு பெருமாள். :)

 

  • கருத்துக்கள உறவுகள்

சுவாரசியமான தகவல்கள்... பகிர்வுக்கு நன்றி!

 

'Lateral thinking' திரிக்கு என்னாச்சு, திருமால் ? :(

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுவாரசியமான தகவல்கள்... பகிர்வுக்கு நன்றி!

 

'Lateral thinking' திரிக்கு என்னாச்சு, திருமால் ? :(

நன்றி!

வெட்டி ஒட்டதான் நேரம் உள்ளது வாரவிடுமுறையில் மறுபடியும் தொடங்குவம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.