Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெற்கில் மதமாற்றம் குறித்து பேசுபவர்கள் வடக்குக் கிழக்கில் என்ன செய்கின்றனர்? - சுரேஸ் கேள்வி!

Featured Replies

 

தெற்கில் மதமாற்றம் குறித்து பேசுபவர்கள் வடக்குக் கிழக்கில் என்ன செய்கின்றனர்? - சுரேஸ் கேள்வி!

0342116f-eac0-4cb5-9b66-24a79b79b59c1.jp

முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் ஏனையோரை மதம் மாற்றுவதாக குற்றம் சாட்டுபவர்கள் வடக்குக் கிழக்கில் என்ன செய்கின்றனர் என தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பின்  ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு எந்தவித  பிரச்சினைகளும் இல்லை. யுத்தத்திற்குப் பின்னர் வடக்கு, கிழக்கில் புதிதாக ஒரு விகாரையேனும்  அமைக்கப்படவில்லை எனவும், முடிந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற  உறுப்பினர்கள் நிரூபிக்கட்டும் எனவும் மகிந்த அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர் கூறியிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாதன சுரேஸ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது  தொடர்பில்  அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

'யுத்தத்திற்குப் பின்னர் வடக்கில் கனகராஜன்குளம்,  கிளிநொச்சி நகர், யாழ்.நகர் ஆகிய இடங்களிலும், ஏ - 9 வீதிகளிலும், கிழக்கில்  திருகோணமலை நகர்,  மட்டக்களப்பு நகர் ஆகிய இடங்களிலும்  புத்தர்  சிலை வைக்கப்பட்டுள்ளது. மாங்குளத்தில்  பௌத்த விகாரை கட்டப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலையில் விகாரைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

சங்கமித்த வந்திறங்கியதாகக் கூறிக்கொண்டு எந்தக் காலத்திலும் இல்லாதளவில் வடக்கு, கிழக்கில் விகாரைகள் கட்டப்பட்டுள்ளன.  பிற்காலத்தில் அவை வரலாற்றில் இருந்ததாகக் கூறப்படலாம்.

தமிழ் பௌத்தத்தின் பிற்பாடே சிங்களம் வந்தது. பௌத்த மதம் அசோகன் காலத்தில் இருந்தபோது சிங்களம்  இருக்கவில்லை. பிற்பட்ட  காலத்திலேயே வந்தது.

 

இலங்கை வரலாற்றில் காலியில் சிவன் கோவில்  இருந்தது. எனவே சைவமும், தமிழும் இருந்ததாகக் கூறி நாம்  சென்றால் அங்குள்ள சிங்களவர்கள்  ஏற்பார்களா?

சிங்களப் பெயர் சூட்டப்பட்டுள்ள சீதா எலிய என்ற இடம் சீதையை இராவணன் சிறைவைத்த இடம். இராவணன் சிவன் பக்தன். இதற்குப் பௌத்தத்துக்கும் என்ன சம்பந்தம். எனவே, எல்லாவெல மேதானந்த தேரரின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நித்திரை கொள்பவர்கள் போல் கண்ணை மூடிக்கொண்டிருப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது. இவ்வாறான விடயங்கள் அங்கு நடைபெறுவது என்பது உண்மை.

இம்முறை தென்பகுதியில் இல்லாதளவு  இராணுவத்தின் வெசாக் கொண்டாட்டங்கள் வடக்கு, கிழக்கில் நடத்தப்பட்டுள்ளன. வீதியில் சென்ற தமிழர்கள் மறிக்கப்பட்டு பானம்  வழங்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மதம் மாற்றுவதாகக் கூறும் இவர்கள் வடக்கு, கிழக்கில் என்ன செய்கின்றனர்' என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=0342116f-eac0-4cb5-9b66-24a79b79b59c

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.