Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொந்த ஊர்க் கோயிலில் பொங்கலிட்ட கேப்பாபிலவு மக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவ தேவைக்காகக் கையகப்படுத்தப்பட்டுள்ள கேப்பாப்பிலவு பிரதேச மக்களை அங்குள்ள ஆலயம் ஒன்றிற்கு, ஒரு தடவை சென்று வழிபடுவதற்கு இலங்கை இராணுவம் ஞாயிறன்று அனுமதி வழங்கியிருந்தது.

இதனையடுத்து, தற்போது கேப்பாபிலவு மாதிரி கிராமம் என்றழைக்கப்படுகின்ற வேறிடத்தில் குடியமர்த்தப்பட்டுள்ள சுமார் 300 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பத்து உழவு இயந்திரங்கள் உள்ளிட்ட வாகனங்களில் அங்கு சென்று வழிபட்டுவிட்டுத் திரும்பியிருக்கின்றார்கள்.

 

கேப்பாப்பிலவு மாதிரி கிராமத்தில் கிறிஸ்தவ ஆலயம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள இந்துக்கள் தாங்கள் வழிபடுவதற்கு ஆலயம் ஒன்று தேவை என்பதை உணர்ந்து இராணுவத்தினர் ஆலயம் ஒன்றை அமைத்து அதில் வைப்பதற்கென பிள்ளையார் சிலையொன்றை வழங்கியிருப்பதாக அந்தப் பகுதியின் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் இராசையா பரமேஸ்வரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

 

இவ்வாறு வழங்கப்பட்ட பிள்ளையார் சிலையைத் தாங்கள் பூர்வீகமாக வழிபட்டு வந்த கேப்பாப்பிலவு கிராமத்தில் உள்ள பிள்ளையார் ஆலயத்திற்கு எடுத்துச் சென்று அந்த ஆலயத்தில் வழிபாடுகள் செய்து கொண்டு வந்து புதிய கோவிலில் பிரதிஸ்டை செய்ய வேண்டும் என்ற ஊர் மக்களின் விருப்பத்தையடுத்தே, அதியுயர் பாதுகாப்பு வலயத்தின் உள்ளே உள்ள கேப்பாப்பிலவு பிள்ளையார் ஆலயத்திற்குச் சென்று வருவதற்கான அனுமதி இராணுவத்தினரால் வழங்கப்பட்டதாக கேப்பாப்பிலவு மாதிரி கிராமத்தின் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் இராசையா பரமேஸ்வரன் கூறினார்.

2008-ம் ஆண்டில் சொந்த இடத்தைவிட்டு இடம்பெயர்ந்த கேப்பாபிலவு மக்கள் கோவிலைத் தவிர சொந்த குடிமனைகளைப் பார்க்க படையினர் அனுமதிக்கவில்லை

 

இதனையடுத்து உழவு இயந்திரங்கள் உள்ளிட்ட வாகனங்களில் ஊர் மக்கள் புதிய பிள்ளையார் சிலையை அங்கு எடுத்துச் சென்று பொங்கலிட்டு வழிபாடுகள் செய்து, பின்னர் கொண்டு வந்து மாதிரி கிராம கோவிலில் பிரதிஸ்டை செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.

பூர்வீக ஊர் கோவிலில் மக்கள் அழுது அரற்றி வழிபட்டதைக் கண்ட இராணுவ அதிகாரிகள் அந்த மக்கள் மாதம் ஒரு தடவை வெள்ளிக்கிழமைகளில் அங்கு சென்று வழிபடுவதற்கான அனுமதியை வழங்குவதாக உறுதியளித்திருப்பதாகவும் பரமேஸ்வரன் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த 2008 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்ததையடுத்து முதற் தடவையாக ஞாயிறன்று தமது ஊருக்குள் தாங்கள் சென்றதாகவும் எனினும் ஊரில் வீடுகளையோ காணிகளையோ பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் மாதர் அபிவிருத்திச் சங்கத் தலைவி சந்திரலீலா கூறினார்.

 

ஊரில் கல்வீடுகள் அப்படியே இருப்பதாகவும் சில வீடுகள் மேலும் செப்பனிடப்பட்டிருப்பதாகவும், ஆனால் மண் வீடுகள் அழிக்கப்பட்டிருப்பதாகவும் வான் பயிர்கள் எவ்விதமான சேதமுமின்றி இருப்பதாகவும் சந்திரலீலா குறிப்பிட்டார்.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/06/130603_kepapilavu.shtml

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.