Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கரைச்சி பிரதேச சபை உறுப்பினருக்கு அச்சுறுத்தல்; ஸ்கந்தபுரத்தில் நேற்றுச் சம்பவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர் நேற்றுக் காலை அவர் கற்பிக்கும் பாடசாலையில் வைத்து மிரட்டப்பட்டுள்ளார்.

 
சுந்தரமூர்த்தி தயாபரன் (வயது38) என்ற பிரதேச சபை உறுப்பினரே அச்சுறுத்தப்பட்டுள்ளார். கரைச்சிப் பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான இவர், ஸ்கந்தபுரம், கண்ணகைபுரம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
 
இன்று (நேற்று) காலை 10.50 மணிக்கு பாடசாலைக்கு வந்த இராணுவத்தினர் பாடசாலை வாசலில் நின்றுகொண்டு என்னை வருமாறு அழைத்தனர். பாடசாலை அதிபர் இன்று வரவில்லை. என்னுடன் மூன்று ஆசிரியர்கள் மட்டுமே கடமையில் இருந்தனர். இராணுவத்தினரில் ஒருவர் என்னிடம் வந்து உங்களை கப்டன் சந்திக்க வேண்டும். பாடசாலை வாசலுக்கு வருமாறு தெரிவித்தார்.
 
பாடசாலை வாசலில் வைத்து இராணுவ அதிகாரி சிங்களம் தெரியுமா? எனக் கேட்டார். நான் சொல்வதை விளங்கும் அளவுக்குச் சிங்களம் தெரியும் என்றேன்.
 
அதன் பின்னர் குறித்த இராணுவ அதிகாரி, நீ என்ன அரசியல் செய்கிறது? என்று அரைகுறைத் தமிழில் கேட்டார். அத்துடன் அவர் சிங்களத்திலும் பேசினார்.
 
இதனையடுத்து நான், உங்களுக்கு ஏதாவது தேவையென்றால் அதிபருடன், வலயக் கல்விப் பணிப்பாளருடன் சென்று கதையுங்கள் என்று சொல்லிவிட்டுத் திரும்பிவர முற்பட்டேன். 
 
இதன்போது அவர்கள் என்னை மறித்து கடுமையாக எச்சரித்த பின்னர் தமது ஜீப்பில் புறப்பட்டுச் சென்று பாடசாலைக்கு அருகிலுள்ள கடையில் நின்றனர். அதன் பின்னர் அவர்கள் போய்விட்டனர் என்றார் தயாபரன்.
 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்படி பிரதேச சபை உறுப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்ட மக்கள் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் காரணமாக அவர் சிலவேளை அச்சுறுத்தப்பட்டிருக்கலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார்.

 

 

http://onlineuthayan.com/News_More.php?id=800152083405500153

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.