Jump to content

மட்டக்களப்பில் தையல் நிலையம் ஆரம்பம்.


Recommended Posts

மட்டக்களப்பில் தையல் நிலையம் ஆரம்பம்.

 

எம்மால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனத்தின் தொழில் முயற்சியின் முதலாவது முதலீட்டாளராக நேசக்கரம் அமைப்பின் நீண்ட கால ஆதரவாளரான யேர்மனியில் வசித்து வரும் திரு.சபேசன் அவர்கள் இணைந்துள்ளார்.

 

ஏற்கனவே போரில் பெற்றோரை இழந்த இரண்டு பெண் பிள்ளைகளுக்கு சபேசன் மாதாந்தம் உதவிக் கொண்டிருப்பதோடு அவசர உதவிகள் தொழில் முயற்சிகளுக்கும் உதவியுள்ளார். அத்தோடு தனது உறவினர்கள் நண்பர்களையும் நேசக்கரத்துடன் இணைத்து உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்.

DSCF5240_zpsac6d5550.jpg

அடுத்த கட்டமாக தையல் நிறுவனமொன்றை ஆரம்பிப்பதற்கான முதல் கட்ட உதவியையும் வழங்கியதோடு தையல் நிறுவனத்தை தொடர்ந்த வளர்ச்சியில் கொண்டு சென்று போரால் பாதிப்புற்றவர்களுக்கான ஆதரவை வழங்கும் நோக்கில் எம்முடன் இணைந்துள்ளார்.

 

சபேசனின் நிதியுதவியில் மட்டக்களப்பில் தையல் நிறுவனமொன்றினை கடந்தமாதம் ஆரம்பித்துள்ளோம். HAND MADE CREATORS (PVT) Ltd தையல் நிறுவனத்தில் 10பேர் தையல் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். பயிற்சியினைப் பெறுவோர் தொடர்ந்து வேலை செய்ய முடியும்.

DSCF5236_zpsb354b95c.jpg

அவர்கள் விரும்பாத பட்சத்தில் அல்லது தனியே தையல் தொழிலை மேற்கொள்ள விரும்பின் அதற்கான ஆதரவினையும் வழங்கி அவர்கள் அத்தொழிலைச் செய்வதற்கான ஆலோசனைகள் , இதர ஒழுங்குகளையும் செய்து கொடுப்போம்.

 

2வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் எம்முடன் இணைந்துள்ள சபேசன் தையல் நிறுவனத்தில் கிடைக்கும் வருமானத்திலிருந்து வேலை செய்வோருக்கான மாதாந்த கொடுப்பனவு மற்றும  20சதவிகிதம் நேசக்கரம் சமூக சேவைகளுக்கும் தருவதற்கு முன்வந்து தனது முதலீட்டை வழங்கியுள்ளார்.

 

தனது முதலீட்டினை போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வுக்கு வழங்கும் நோக்கில் தனது ஆதரவை வழங்கிய சபேசனுக்கு எமது நிறுவனத்தின் சார்பான நன்றிகள்.

DSCF5237_zps1bf6130f.jpg

DSCF5238_zps2c78594d.jpg

DSCF5241_zps11ee021c.jpg

DSCF5242_zpsb81132cc.jpg

DSCF5243_zps33936ec3.jpg

 

 

இத்திட்டத்தில் இணைந்து கொள்ள விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்.

Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

 

nesakkaram@gmail.com
Skype – Shanthyramesh

 

www.nesakkaram.org

 

Nesakkaram e.V
Hauptstr – 210
55743 Idar-Oberstein
Germany

முக்கிய குறிப்பு :- முதலீட்டாளர்களின் முதலீடுகளுக்கான கணக்கறிக்கைகள் முதலீட்டாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். அவர்கள் விரும்பும் பட்சத்தில் பொதுவெளியில் பகிரப்படும்.

 

முதலீடுகளில் தொடர்பற்ற 3ம் நபர்களுக்கு கணக்கறிக்கை விபரங்கள் பரிமாறப்படமாட்டாது. யாரும் தமக்கான சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள விரும்பினால் முதலீட்டாளர்களுடன் நேரடியான தொடர்பினை ஏற்படுத்தி விபரங்களை பெற்றுக் கொள்ளலாம்.

 

http://nesakkaram.org/ta/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு முன்னுதாரண  முயற்சி

தொடர்க  தங்கள் பணி

வாழ்த்துக்கள்.

 

உறவு சபேசனுக்கு  நன்றிகளும் வாழ்த்துக்களும்.

 

கொஞ்சம் அவகாசம்  கொடுங்கள்

என்னாலும்  ஏதாவது செய்யமுடியுமானால் நிச்சயம் செய்வேன்.

Link to comment
Share on other sites

சபேசன் அண்ணாவிற்கு நன்றி.

உங்கள் திட்டங்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

 

சபேசன் முதலாவதாக இத்திட்டத்தில் இணையும் போது சிலசமயம் இத்தொழில் முயற்சி நட்டத்தில் செல்லுமாயின் அதனையும் தானே பொறுப்பதாக முன் வந்து தனது ஆதரவை வழங்கியுள்ளார். ஒரு முயற்சியின் வெற்றியும் தோல்வியும் பற்றி ஆராயாமல் மக்களுக்கான பணியில் தனது உதவியை வழங்கிய சபேசனுக்கு உங்கள் சார்பாகவும் மீண்டும் நன்றிகள்.

 

நல்லதொரு முன்னுதாரண  முயற்சி

தொடர்க  தங்கள் பணி

வாழ்த்துக்கள்.

 

உறவு சபேசனுக்கு  நன்றிகளும் வாழ்த்துக்களும்.

 

கொஞ்சம் அவகாசம்  கொடுங்கள்

என்னாலும்  ஏதாவது செய்யமுடியுமானால் நிச்சயம் செய்வேன்.

 

மிக்க நன்றிகள்.

Link to comment
Share on other sites

நல்ல முயற்சி ,கள உறவு சபேசனுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும் .
நான் முதலிட்டு ,அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் இருந்துதான் 
நேசக்கரத்தின் சில திட்டங்களுக்கு உதவி செய்தனான் .நேசக்கரத்திட்கும் 
செய்துதர எண்ணியுள்ளேன் .சிறிய கால அவகாசம் தாருங்கள் .
நன்றி .

Link to comment
Share on other sites

பயனுள்ள பணிகள் சாந்தியக்கா!
உங்களுக்கும் உதவும் ஏனையோருக்கும் நன்றிகள்!

Link to comment
Share on other sites

நல்ல முயற்சி ,கள உறவு சபேசனுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும் .

நான் முதலிட்டு ,அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் இருந்துதான் 

நேசக்கரத்தின் சில திட்டங்களுக்கு உதவி செய்தனான் .நேசக்கரத்திட்கும் 

செய்துதர எண்ணியுள்ளேன் .சிறிய கால அவகாசம் தாருங்கள் .

நன்றி .

 

இதுவரையில் நீங்கள் செய்த உதவிகளால் பயனடைந்தவர்கள் ஏராளம். தொடர்ந்தும் உங்கள் உதவி கிடைப்பதில் மகிழ்ச்சி.

 

பயனுள்ள பணிகள் சாந்தியக்கா!

உங்களுக்கும் உதவும் ஏனையோருக்கும் நன்றிகள்!

 

உதவியென்றதும் ஓடிவந்து உதவுகிறவர்களுக்கே எல்லா நன்றியும் கருத்துக்கு நன்றிகள் சயனி.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவரும் தோற்கடிக்கப்படவேண்டியவரே. நான் அவருக்கும் வாக்கு போட்டிருக்க மாட்டேன். நிச்சயம் சிங்கபூரில் இருந்து டிக்கெட் போட்டு போய் அவருக்கு பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டிருக்க மாட்டேன். தவிரவும் அவரும் மட்டகளப்பு, அவர் வன்கொடுமை செய்ய பெண்ணும், மட்டகளப்பு, அவரை ஆதரித்த உள்ளூர் கட்சியினரும் மட்டகளப்பு  வாக்களித்த வாக்காளரும் மட்டகளப்பு எனும் போது இதில் பிரதேசவாதம், மையவாதம் என்ற கோணமே எழவில்லை. இல்லையே…அப்பட்டமாக பிரதேசவாதம் கக்காத தமிழ் தேசிய அரசியலும் செய்யாத பலர் அங்கே தேர்தலில் நின்றார்களே. தமிழ் தேசியத்தில் நம்பிக்கை இல்லை, சரி வேறு ஒரு தெரிவை எடுக்கலாமே? தென்னிலங்கை கட்சியில் கேட்ட ஒரு தமிழருக்கு போட்லாலாமே? நான் இன்றும் மேடைக்கு மேடை பிரதேசவாதம் கக்குபவருக்குதான் வாக்கு போடுவேப் ஆனால் நான் பிரதேசவாதி இல்லை என்பது நம்பும்படியாகவா இருக்கு? தெரியும். மட்டகளப்பு மாவட்டமும் பெரும்பான்மை தமிழர் பகுதிதான்.    பிரதர், நான் தமிழ் தேசிய வடையை நியாப்படுத்தவில்லை. அதை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை . நீங்கள் நன்னா டிரக்கை மாத்த வேண்டாம். தமிழ் தேசிய அரசியல் உதவாது என்ற நிலைப்பாடு = பிரதேசவாதம் என நான் எங்கும் எழுதவில்லை. ஆனால் அப்பட்டமாக செயலில், சொல்லில் இன்றுவரை பிரதேசவாதத்தை எழுப்புவரை, அவரின் கொள்கையை ஆதரிப்பது, இறங்கி வேலை செய்வது, நிச்சயம் பிரதேசவாதம்தான். இது நான் ஹிட்லரின் அனுதாபி, அவருக்கு வாக்கு போடுகிறேன், அவருக்கு வாக்கு போடுமாறு பிரச்சாரமும் செய்கிறேன் ஆனால் நான் நாஜி இல்லை என்பது போல ஒரு நிலைப்பாடு.
    • சங்கி ஆனந்தம் சொன்னது சம்பந்தமாக, மெதடிஸ்ட் (CSA, CoE, American Mission) இப்படி ஊருக்குள் போய் மதம் மாற்றுகிறார்களா? நான் அறிய 5ம் வேதம் என கூறப்படும், யெஹோவா சாட்சிகள், பெந்திகோஸ்த் ஆட்கள்தான் இப்படி செய்வது.
    • இதே போன்ற ஒன்றை மட்டக்களப்பு பெண்ணிற்கு இழைத்து இழைத்தவர் கூத்தமைப்பில் மட்டக்களப்பில் பா. ஊ வாக இருந்தார். ஒரு வேளை அவர் இதனை யாழில் செய்திருந்தால் கூத்தமைப்பில் நிறுத்தப்பட்டிருப்பாரா...? ஆகவே யாழ் மையவாதிகள் ஒன்றும் திறம் கிடையாது அடுத்தவனுக்கு பாடம் எடுக்க. ஆக என்ன சொல்ல வருகிறீர்கள் நீங்களும் நானும் பவுன்ஸிலும் டாலர்களிலும்  பாக்கெட்டிற்குள் போட்டுக் கொண்டு நம்ம அடுத்த வேலையை பார்க்கப்போக அங்கே இருக்கும் மட்டக்களப்பார்கள் மட்டும் யாழ் தேசியவாதிகளை நம்பி அடுத்த வேளை சோற்றுக்கு பிச்சையெடுக்க வேண்டும் அப்பிடியா...? முக்கால் வாசி தேசிய வியாதிகள் எல்லாம் ஒன்று புலம் பெயர், இல்லை தமிழர் பெரும்பான்மை பிரதேசத்தில் மட்டும் ஏன் இருக்கிறார்கள் என்று தெரியுமா..? சோற்றுக்கு வயிறு காயும் போதுதான் தெரியும் தேசியத்தின் பெருமை. தமிழர் பெரும்பான்மை பிரதேசங்களில் தேசியவாதிகள் சிறுபான்மை ஆகும் போது தெரியும் தேசியத்தின் பெருமை அதுவரை தேசியவாதிகள் வாயால் நன்னா வடை சுடலாம்
    • ""எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்"" என்பது உந்தக் கரடிக்குத் தெரியாதோ?  😁
    • என்னப்பா உந்தப்பிரச்சனை இன்னும் முடியேல்லையே?😂 நானெண்டால் இத்தடிக்கு கார பாட்ஸ் பார்ட்சாய் கழட்டி வித்திருப்பன்.😎
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.