Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணா, மகிந்தவிற்கு ஆலோசனை! மாகாண அதிகாரங்களையும் மத்திய அரசின் கீழ் கொண்டுவருமாறு கோரிக்கை!

Featured Replies

karuna_b1.jpg

 

 

13ஆவது அரசியல் திருத்தச் சட்டமூலத்தில் திருத்தம் ஏதாவது ஒன்றைச் செய்தால் நாட்டிற்குள் மொழிரீதியான பிரச்சினைகள் ஏற்படுமென பிரதியமைச்சர் கருணா அம்மான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.

 

மேலதிக விபரங்களுக்கு http://tamilworldtoday.com/?p=17122

கக்கீம் கிழக்கு தேர்தலின் பின்னர் அமெரிக்கா சென்ற போது  13ம் திருத்தத்திற்கு எதிரான அரசின் மனநிலையில் பேச்சுவார்த்தைகள் நிகழ்த்தினார். NAP அமெரிக்காவிடம் கொடுத்து, LLRC இன் பரிந்துரைகளில் 90%  நிறைவேற்றுபட்டத்தாகவும் மிகுதி  நிறைவேற்றபடும் என்றும் கூறினார். 13ம் திருத்தத்தால் தனது கட்சிக்கு வந்த முதன் மந்திரிப்பதவியை தூக்கி எறிந்தார். 13ம் திருத்ததை வலுவிழக்கச் செய்த திவிநெகும்ப சட்டத்திற்கு தானும் வாக்களித்தார். மாகாண சபைக்கு எதிரான இந்த திவிநெகும அமூலுக்கு வர ,மாகாணங்கள் முன் வந்து தமது அதிகாரத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தாதால், தனது கட்சிக்கு அமெரிக்காவிலிருந்து கட்டளை போட்டு கிழக்கு மாகாணத்தின் அதிகாரத்தை தாரை வார்த்துக்கொடுப்பித்தார். இதில் தலையிட முயன்ற நீதியரசர் சிராணியை பதவி நீக்க தனது நீதி அமைச்சையும் பாவித்தார். இதன் பின்னர் சிராணியை  பதவி நீக்கியது நியாயம் என்று வெளிநாட்டு தூதுவராலயங்களில் பிரச்சாரம் செய்தார். ஆனால் இன்று நாடகமாக எதிர்க்கிறார்.

 

பிள்ளையான் தன்னால் ஒரு எழுதுவினைஞர் பதவியை கூட நியமிக்க முடியாத அதிகாரமில்லாத பதவிதான் இந்த 13ன்றின் முதல் அமைச்சர் பதவி என்றார். இன்று சறுக்கிவிழுந்த சக்கடத்தாராக வாழ்கை நடத்தினாலும்  13ம் திருத்த எதிர்ப்புகளுக்கு எதிர்த்துக்குரல் கொடுக்கிறார். இவர் அரசின் ஆலோசகர். இவரின் ஆலொசனையை அரசு செவிமடுக்காது என்று கண்டால் என்ன பதி விலகவா போகிறார்.  எனவே இது அரசின் வேண்டுகோளாகவும் இருக்கலாம்.

 

காலாகாலமாக, தேவானந்தா, தான் வடக்கின் முதல் அமைச்சர் என்றுதான் கனவுகண்டு வந்தார். இதானால் இதற்கு போட்டியில் இறங்கிய சித்தார்தன், ஆனந்த சங்கரி போன்றொர் தமக்கு இவரால் உயிர் ஆபத்து இருப்பதாக கூட கூறினார்கள்.  ஆனால் அரசு இன்று வித்தியாசமான பாதையை எடுத்திருக்கு. அது கிழக்கு மாகாணத்தில் கக்கீமுக்கு காட்டிய பாதை. அரச பங்குதாரியாக இருந்த கக்கீம் தேர்தல் நேரம் அரசை எதிர்த்து தேர்தலில் நிற்க வைக்கப்பட்டார்.  தேர்தல் முடிய திரும்ப அரசுக்குள் இணைய வைக்கப்பட்டார். இந்த இரண்டு தந்திரங்களாலும் தானாக கிடைத்திருந்திருக்க வேண்டிய கிழக்கின் முதல் அமைச்சர் பதவியை அரசு மு.க விலிருந்து இலகுவாக திருடியது. மேலும் அவர் கேட்டு வந்த கப்பல் மந்திரி பதிவி கூட கைக்கு வரவில்லை.  இதே தந்திரம் தான் தேவானந்தா மீது கட்டவிழ்த்துவிடப்படுகிறது. தேவானந்தாவுக்கு வந்திருக்கும் கட்டளை இப்போது அரசை எதிர்க்க வேண்டும் என்பது. தேர்தல் முடிய தேவானந்தா  முதல் அமைச்சர் பதவி இல்லாமல் அரசுடன் திரும்ப இணைய வேண்டி வரும். கக்கீமையும் விட மிகவும் ஆபத்தான நிலைமைகளை சமாளிக்கத்தான் இவர் அரசில் ஒட்டிக்கொண்டிருக்கிறார். இவரின் 13ம் திருத்த எதிர்ப்புக்களை எதிர்க்கும் வசனங்கள் அரசு எழுதிக்கொடுத்தவை.  எனவே இவர் பழைய தலைமைகளை சாடிக்கொண்டு தான் என்ன செய்ய போகிறார் என்பது தெரியாமல் அரசை எதிர்க்கிறதாக நடிக்கிறார்.

 

தொண்டமான் இந்தியா சென்று 13ம் திருத்தத்தை நடை முறைப்படுத்தினால் அது மலையக மக்களுக்கு ஆபத்தாக மாறும் என்று சோனியாவுக்கு விளக்கம் அளித்தார். இது மகிந்தா அனுப்பிவைத்த பயணம். ஆனல் அது தோல்வியில் முடிந்த்தாகவும், தொண்டமானும், மகிந்தாவும் அதில் ஏமாந்துபோய்விட்டத்தாகவும் செய்திகள்.

 

இப்போது அரசு கருணா பக்கம் வந்திருக்கிறது.

த.க.வி.பு கட்சியை அமைத்த கருணாவை, அரசு அதை விடுவித்துப்போட்டுது. கருணாவுக்கு இனி மந்திரிப்பதவி தொடர வேண்டுமாயின் நியமனம் மட்டும்தான்.

 

அற நனைந்தால் குளிர் என்ன கூதல் என்ன என்ற ஆலோசனை ஒன்றை கொடுக்கிறார். அதுதாவது, இதுவும் அரசு எழுதிக்கொடுத்து வாசிக்க சொன்ன வாசகம்.

தயாமாஸ்டர்,  K.P, காணாகரத்தினம் மாதிரி சிறைக்குள் இருக்கும் அடிமைகளை விட,  அடிமைகளகளாக சிறைகளுக்கு வெளீயே வசித்துவரும் சிறைவாசிகளின் நடத்தைள்தாம்  இவை.

 

அடிமைகளையும், சிறைவாசிகளை அரசு இந்த வருத்து வருத்த வேண்டியிருப்பத்தால் அரசு இதில் நன்றாக வருந்தும் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் கருத்து.

மகிந்தவின் ஆலோசகர் பதவியில் கருணா இருக்குறார். கூடவெ  இப்பிடியான நல்ல ஆலோசனைகளையும் வழங்குகிறார். வாழ்த்துங்கள் முடிந்தால் புலம்பெயர் நாடுகளுக்கு அவரை அழைத்து கவுரவிப்பு செய்யலாம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.