Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூமாரி அம்மன் கோவிலுக்கு நடந்ததே பெரடைஸ் பிளேசுக்கும் நடக்கும்: பிரபா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கொள்ளுப்பிட்டி பூமாரி அம்மன் கோவில் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டதை கடைசி தினத்திலே அரசியல்வாதிகளுக்கு தெரிவித்து குறிப்பாக அரச தரப்பில் இருக்கும் ஒரே கொழும்பு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான எனக்கும் விக்கிரகங்களை அகற்றும் தினப்பூஜைக்கு அழைத்து இழைக்கப்பட்ட அநீதியை ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர். இதே கதிதான் இன்று கொழும்பு ஆமர் வீதி பெரடைஸ் பிளேசில் வசிக்கும் மக்களுக்கும் ஏற்படும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
 
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
 
கொள்ளுப்பிட்டி பூமாரி அம்மன் ஆலய விவகாரம் கடந்த 12ஆம் திகதி சிலைகளை அகற்றும் தினத்தன்று ஆலயத்திலிருந்து 50 மீற்றர் தூரத்தில் வசிக்கும் எனக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் ஏனைய எதிர்க்கட்சி அரசியல் தலைமைகளுக்கும் கடைசி நேரத்திலே தெரிவித்துள்ளார்கள் என அறிய முடிகிறது. நான் உடனடியாக நகர அதிகார சபை தலைவருடன் தொடர்பு கொண்டு அவர்களுக்கு வழங்கப்பட்ட மாற்று இடம் ஆலயம் கட்டுவதற்கான உகந்த இடமாக இல்லை என்பதை தெளிவுபடுத்தி மாற்று இடத்தை வழங்குமாறு கேட்டுள்ளேன். நகர அபிவிருத்தி சபை தலைவரும் ஆவண செய்து தருவோம் என உறுதியளித்துள்ளார். ஆலயம் கட்டுவதற்கு உகந்த இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. இருப்பினும் தங்களது பிரச்சினையை கடைசி நேரத்திலே அரசியல்வாதிகளுக்கு தெரிவித்துவிட்டு அரசியல்வாதிகளை குறை கூறுவது முறையானதல்ல என்பதை சம்பந்தப்பட்ட தரப்பினர் புரிந்துகொள்ள வேண்டும். இது சம்பந்தமாக ஜனாதிபதியின் இந்து மத ஆலோசகர் பாபுஷர்மா அவர்களுக்கு முழுமையாக தெளிவுபடுத்தியுள்ளேன். அதேநேரத்தில் அரசாங்க தரப்பில் இருக்கிறோம் என்பதற்காக ஆகாயத்தில் இருப்பவற்றை உடனடியாக பூமிக்கு கொண்டுவருவதற்கு இந்த அரசாங்கம் ஒருபோதும் இடங்கொடுக்காது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். 
 
அதேபோல் கொழும்பு ஆமர் வீதி பெரடைஸ் பிளேசிலும் கொழும்பு நகரசபையினர் மண் பரிசோதனை செய்கிறோம் என்றும் தொடர்மாடி கட்டிடம் கட்டித்தருகின்றோம் என்றும் அப்பகுதியிலே சலவைத் தொழிலாளர்களுக்கு பலவிதமான தொந்தரவினை கொடுத்து வருவதாக என்னிடம் அங்குள்ளவர்கள் புகார் செய்துள்ளனர். கொழும்பு மாநகரசபையினரும் அங்கு தாங்கள் என்ன செய்ய போகின்றோம் என்பதை தெளிவாக அப்பகுதி மக்களுக்கு தெரிவிக்காததினால் பலவித ஊகங்களினால் அவர்கள் மத்தியிலே அச்சம் எழுந்துள்ளது.
 
இது சம்பந்தமாக மாநகரசபை முதல்வர் முஸம்மில் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியபோது  அப்பகுதியிலே மண் பரிசோதனை செய்யப்பட்டு தொடர்மாடி கட்டிடம் கட்டுவதற்கு உகந்ததா என உறுதி செய்வதற்காகவே தாங்கள் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தொடர்மாடி கட்டிடம் கட்ட முடியுமாயின் நிச்சயமாக அங்குள்ளவர்களுக்குத்தான் வீடுகள் கொடுக்கப்படும் எனவும் உறுதி செய்துள்ளார். மண் பரிசோதனை செய்வதற்காக சலவை தொழிலாளர்களின் துணிகளை உலர்த்தும் இடத்திற்கு தற்காலிகமாக வேறு இடம் வழங்கப்பட்டுள்ளது. மண் பரிசோதனை மூலமாக தொடர்மாடி  கட்டிடம் கட்ட முடியாவிட்டால் அந்த இடத்தில் சலவை தொழிலாளர்களுக்கு மீண்டு தொழில் செய்வதற்கு கொடுக்கப்படும் எனவும், அதே நேரம் தொடர்மாடி கட்டிடம் கட்ட முடியுமாயின் தற்காலிகமாக வழங்கப்பட்ட இடத்தை நிரந்தரமாக வழங்குவோம் எனவும் உறுதியளித்துள்ளார். அது மட்டுமின்றி தொடர்மாடி கட்டிடம் கட்டப்படுமேயாயின் அங்குள்ளவர்களுக்கே வீடு வழங்கப்பட வேண்டும் எனவும், தற்போது ஒரு சில வீடுகளில் ஒரு குடும்பத்திற்கும் அதிகமானவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பதையும் கருத்திற் கொள்ளுமாறும் அதே நேரம் சிங்கள மக்களிடமிருந்து பல வருடங்களுக்கு முன்பு வீடுகளைப் பெற்றுக் கொண்டவர்கள் இன்னும் பெயர் மாற்றம் செய்யப்படாமல் இருப்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளேன். அதே நேரத்தில் புதிய வீடுகள் மட்டும் அவர்களுக்கு தீர்வுகள் ஆகாது. மாறாக எண்பது வருடங்களுக்கு மேலாக சலவை தொழில் செய்து வரும் இவர்களுக்கு தொழில் செய்வதற்கு தகுந்த இடம் வழங்கப்பட வேண்டும் எனவும் மாநகர முதல்வரிடம் கேட்டிருந்தேன். அவரும் முழுமனதுடன் இதனை ஏற்றுக் கொண்டார். இதனை இப்பகுதி மக்களுக்கு சென்று அறிவித்து மாநகர முதல்வர் மீது நம்பிக்கை வைத்து செயல்படுமாறும் கேட்டுக் கொண்டேன். இவை அனைத்தையும் செவி மடுத்து அங்குள்ள பெரியவர்கள், தாய்மார்கள், சகோதர, சகோதரிகள் செவிமடுத்தனர். ஆனால் இன்று அதையும் மீறி அங்குள்ள ஒரு சிலர் அவர்களை குழப்பி மனித உரிமை மீறல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்வதாக கேள்வியுற்றேன். 
 
கொழும்பு மாநகரத்தில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு ஏதேனும் அநீதிகள் இடம்பெறுமாயின் தலைநகரிலே அதிக நம்பிக்கைப் பெற்ற கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியிடமோ அல்லது கொழும்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான என்னிடமோ முன்கூட்டியே தெரிவித்து எங்களது ஆலோசனையின் படி சம்பந்தப்பட்ட மக்கள் செயல்படுவோர்களேயாயின் நியாயங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். அதை தவிர்த்து தான்தோன்றி தனமாக ஒற்றுமையின்றி மக்கள் செயல்படுவோர்களேயாயின் ஒருபோதும் தமக்குரிய தீர்விணை அவர்களால் பெற்றுக்கொள்ள முடியாது. மீண்டும் நவகம்புர 2 பகுதியில் இருக்கும் கோயில் நகர அபிவிருத்திசபை மூலமாக பாதிக்கப்படவுள்ளதாக அறிந்துள்ளேன். இதனையும் அப்பகுதி மக்கள் கருத்திற் கொண்டு எம்மிடமோ அல்லது மனோ கணேசனிடமோ வரவேண்டும். கடைசி நேரத்தில் அரசியல்வாதிகளை குறை கூறுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. என்னைப் பொறுத்தவரையிலே யார் தமிழ் மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுக் கொடுத்தாலும் அதனை முழுமையாக வரவேற்பேன். 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.