Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை இராணுவத்தினருக்கு மக்கள் அடி உதை .

Featured Replies

ஈழத்தில் முள்ளியவளை ஹிக்கிராபுரத்தில் வசிக்கும் முஸ்லிம் பெண்களை பாலியல் வல்லுறவிற்குட்படுத்தும் நோக்கோடு நேற்று முன்தினம் அதிகாலை வேளை அங்கு சென்ற இலங்கை படையினர் மூவர் பொதுமக்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் ஓடித்தப்பியுள்ளனர்.

ஆயினும் ஒரு படைச்சிப்பாய் பொதுமக்களால் பிடித்துக் கட்டி வைக்கப்பட்டார். படைச் சிப்பாய் கட்டி வைக்கப்பட்ட செய்தியறிந்த ஏனைய படையினர் நேற்று திங்கட்கிழமை காலை அந்த இடத்திற்கு வருகை தந்து பொதுமக்களை அச்சுறுத்திவிட்டு குறித்த சிப்பாயை மீட்டுச் சென்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

முள்ளியவளை ஹிக்கிராபுரத்தில் முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கும் கிராமத்திற்கு அண்மையில் சிறிலங்கா படையினரின் காவலரண் உள்ளது. இந்தக் காவலரணிலுள்ள மூன்று படையினர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்தக் கிராமத்தில் அழகான பெண்கள் வசிக்கும் வீடொன்றில் நுழைந்து அவர்களைப் பாலியல் வல்லுறவிற்குட்படுத்த முயன்றுள்ளனர்.

விழிப்படைந்த பெண்கள் கூக்குரலிட்டதைத் தொடர்ந்து அங்கு கூடிய பொதுமக்கள் குறித்த மூன்று இராணுவத்தினரையும் தாக்கத் தொடங்கினர். பொதுமக்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத படையினர் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். ஆயினும் பொதுமக்கள் ஒரு சிப்பாயை மடக்கிப் பிடித்தனர். அவனுக்கு முறையான பூசை செய்து மரத்துடன் கட்டி வைத்தனர்.

பொதுமக்களிடம் அடி வாங்கிக்கொண்டு ஓடிய ஏனைய இரண்டு படையினரும் குறித்த படையினனை பொதுமக்கள் கட்டி வைத்துள்ள விடயத்தை தமது தலைமை இராணுவ முகாமின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். நேற்றுக் காலை அந்த இடத்திற்கு வந்த பெருமளவான படையினர் அங்கு நின்ற மக்களை அச்சுறுத்தி அப்புறப்படுத்திவிட்டு குறித்த படையினனை மீட்டுச் சென்றனர்.

குற்றம் இழைத்த படைச் சிப்பாய்களுக்கு தண்டனை வழங்குவதற்கு பதிலாக அவனை பத்திரமாக மீட்டுச் சென்ற படையதிகாரிகளின் செயல் குறித்து மேற்படி பகுதியில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் கடும் அதிருப்தியடைந்ததுடன் கவலையும் வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே சமாதானப் படையாக ஹெய்டிக்குச் சென்ற இலங்கை  இராணுவம் அங்குள்ள பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நிலையில் கடுமையான குற்றச்சாட்டுக்களுடன் அங்கிருந்து வெளியேற்றப்பட்டது.

இதனைவிட வன்னியில் இறுதிப் போர் நடைபெற்ற வேளை சிறிலங்கா இராணுவம் தமிழ் யுவதிகளைப் பாலியல் வல்லுறவிற்குட்படுத்தி கொலை செய்த விபரங்களும் ஆதாரங்களுடன் வெளியாகியிருக்கின்றன.

இந்த நிலையில் தொடர்ந்தும்  இலங்கை  இராணுவம் இவ்வாறான பாலியல் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றமை தொடர்பில் சர்வதேச நாடுகள் மௌனம் சாதிக்கின்றமை  தமிழ்-முஸ்லிம் மக்களை கடும் அதிருப்தியடையச் செய்துள்ளது.http://www.dinaithal.com/tamilnadu/srilanka/16367-for-the-people-in-the-shot.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.