Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்கிரகங்கள் உடைக்கப்பட்ட கோவிலை பார்வையிட்டார் அமெரிக்க அதிகாரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் விக்கிர உடைப்பு இடம்பெற்ற குருக்கள்மடம் ஸ்ரீ செல்லக் கதிர்காமர் ஆலயத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தலைமையில் அமெரிக்க தூதுவரலாயத்தின் அரசியல் பிரிவின் அரசியல் அதிகாரி மைக்கல் ஏவின், இணை அரசியல் அதிகாரி சந்தீப் குரூஸ் ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆலயத்திற்கு சென்று நிலைமையை பார்வையிட்டனர்.

இதன்போது இவர்களிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இவ்விடயமாக தெரிவித்ததாவது!

வடக்கு கிழக்கு மாகாணங்களிலே கடந்த சில காலங்களாக ஆலயங்களில் கொள்ளையிடும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. பொதுவாக மட்டக்களப்பு மாவட்டத்திலே பல ஆலயங்கள் கொள்ளையிடப்பட்டிருக்கின்றன. அதேபோன்று அம்பாறை, திருகோணமலை போன்ற வடக்கு, கிழக்கு மாகாணத்திலுள்ள ஆலயங்களிலும் நடைபெற்றிருக்கின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற கொள்ளைகள் சார்பாக ஆலய தர்மஹர்த்தாக்கள் பொலிஸ் நிலையங்களுக்கு சென்று முறையிடுகின்றனர். அதேவேளை பொலிஸார் ஆலயங்களுக்கு வருகை தந்து பார்வையிடுகின்றனர். ஆனால் இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற பிரதானமான எந்த கொள்ளைச் சம்பவம் சார்பாகவும் அதாவது ஆலய விக்கிரம் உடைக்கப்பட்டவை சார்பாகவோ? தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டவை சார்பாகவோ? யாரும் கைது செய்யப்படவில்லை என தெரியவருகின்றது. அதற்கு பிற்பாடு அதுசார்பாக அவர்கள் விசாரணை நடத்துவதுமில்லை.

கடந்த வருடம் வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் பெருந்தொகையான நகைகள் இரவு வேளையிலே களவாடப்பட்டது. ஆனால் அதன் முறைப்பாடு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் உண்டு. ஆனால் இதுவரை எந்தவித விசாரணைகளையும் பொலிஸார் மேற்கௌ;ளவில்லை.

நானும் இவ்விடயமாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் முறைப்பாடு செய்திருக்கின்றேன். ஆனால் இதுசார்பாக எந்த நடவடிக்கையையும் இன்னும் எடுத்ததாக அறியவில்லை.

அத்தோடு இவ்வாலயம் உட்பட மாங்காடு பிள்ளையார் ஆலயத்திலும் இந்து விக்கிரகங்கள் உடைக்கப்பட்டு, தங்க இயந்திரத் தகடுகள் கொள்ளையிடப்பட்டிருந்தது. குருக்கள்மடம் ஐயனார் ஆலயத்தில் உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. யுத்த காலத்திலே இச்சம்பவம் இடம்பெறவில்லை. தற்போதைய காலத்திலே தான் இவ்வாறான சம்பவம் இடம்பெறுகின்றமை இந்து மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

http://www.virakesari.lk/article/local.php?vid=5488

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.