Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13ஆவது திருத்தச்சட்டத்தை ஒழிப்பதற்கோ, திருத்தங்களை மேற்கொள்வதற்கோ இடமளியோம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

13ஆவது திருத்தச்சட்டத்தை ஒழிப்பதற்கோ திருத்தங்கள் மேற்கொள்வதற்கோ மாகாண சபை முறைமையை இல்லாதொழிப்பதற்கோ இடமளிக்கப்போவதில்லை. அதற்கு பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்கப்போவதுவுமில்லை என அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, டாக்டர் ராஜித சேனரத்ன, டியூ.குணசேகர, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, ரெஜினோல்ட் குரே, சந்திரசிறி கஜதீர ஆகியோர் நேற்று திங்கட்கிழமை கூட்டாக சூளுரை விடுத்தனர்.

rajitha-senaratne-FB.jpg

இலங்கையை பாதுகாக்க சீனா ஒருபோதும் முன்வரமாட்டாது என்பதை சிங்கள அடிப்படைவாதிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்று இவ்வமைச்சர்கள் தெரிவித்தனர்.

மாகாண சபைகளுடன் கூடிய ஒற்றையாட்சி அரசுக்கூடாக ஐக்கிய இலங்கையை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் நேற்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள சமசமாஜக்கட்சி அலுவலத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டி லேயே இது தெரிவிக்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய சிரேஷ்ட அமைச்சர் டியூ.குணசேகர,

13ஆவது திருத்தம் மக்கள் ஆதரவுடன் கொண்டுவரப்படவில்லை. எனவே, அதனை ஒழிக்கவேண்டுமென அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச உட்பட சிங்கள பௌத்த அடிப்படைவாதிகள் குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளனர். அரசியல் அமைப்பில் 18 திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஆனால், இத்திருத்தங்கள் எதற்கும் மக்கள் ஆதரவு பெறப்படவில்லை. மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவே பெறப்பட்டுள்ளன.

அன்று இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினையை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தீர்த்துவைத்தார். அதன் பின்னர் 1983 வரை இந்தியா எமது பிரச்சினையில் தலையிடவில்லை. ஸ்ரீமாவோ அன்று அந்தப்பிரச்சினையை தீர்க்காவிட்டால் இன்று ஈழப்பிரச்சினை அகலவத்தைவரை வந்திருக்கும்.

இன்று விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தியாவின் தலையீடு இருக்கத்தான் செய்கிறது. பிரபாகரன் உயிரிழக்கும் வரை இந்திய மத்திய அரசாங்கமோ கருணாநிதியோ, ஜெயலலிதாவோ இலங்கைக்கு எதிராக எதனையும் பேசவில்லை. யுத்தத்தை முடிப்பதற்கு இந்தியா வழங்கிய ஆதரவு அளப்பரியதாகும். அன்று இதனை புகழ்ந்தனர். ஆனால், இன்று இந்தியாவின் 13ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

13ஆவது திருத்தம் நீக்கப்பட்டால் கச்சதீவு உடன்படிக்கை தானாகவே செயலிழந்துவிடும். இலங்கையின் பாதுகாப்புக்கு சீனா உதவியளிக்கும் என்பதில் எந்தவிதமான நிச்சயமும் இல்லை. ஏனெனில், அண்மையில் இந்தியாவிற்கு விஜயத்தை மேற்கொண்ட சீனாவின் புதிய பிரதமர், வரலாற்று நட்புறவுடனான இரண்டு நாடுகள் இணைந்துள்ளன. இனிமேல் நாம் இருவரும் இணைந்து தீர்மானங்கள் எடுப்போம் என கூறியுள்ளார். எனவே, சீனா எமக்கு உதவுமென்பதில் எந்தவித உண்மையும் இல்லை.

26 வருடங்களுக்கு பின் வட மாகாண சபை தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதனை எதிர்ப்பதன் தமிழ் மக்கள் ஓரங்கட்டப்படுவதை சர்வதேசத்துக்கு எடுத்துக்காட்டாக அமையும்.

அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண

மாகாண சபை முறைமையில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், அதற்காக 13ஆவது திருத்தத்தை ஒழிக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. இத்திருத்தம் கொண்டுவந்த பின்னர் விடுதலைப் புலிகளை தவிர ஏனைய அனைத்து ஆயுதக் குழுக்களும் ஜனநாயக அரசியலில் இணைந்தன. எனவே, 13ஆவது திருத்தத்தை பலப்படுத்தி வடமாகாண தேர்தலை நடத்த ேவண்டும்.

அமைச்சர் ராஜித சேனாரத்ன

13ஆவது திருத்தச் சட்டம் வட பகுதி மக்களுக்கு வழங்கிய உணவாகும். ஆனால், அதனை பறித்தெடுத்து தென் மாகாணத்தில் 16 வருடங்களாக அனுபவித்து வந்தனர். இன்று வட மாகாண ்தமிழ் மக்களுக்கு உரித்தான 13ஆவது திருத்தச்சட்டம் வழங்கப்பட தீர்மானித்திருப்பதை எதிர்ப்பது எவ்விதத்தில் நியாயமாகும்?

இத்திருத்தச் சட்டத்தை ஒழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். அதற்கு பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்கப்போவதுமில்லை.

அமைச்சரவையில் இதற்கு எதிராக அமைச்சர்களான விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க ஆகியோர் குரல் கொடுக்கையில் எந்தவொரு சிரேஷ்ட அமைச்சரும் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. இதுதான் உண்மை.

இந்திய உயர்ஸ்தானிகர் இல்லத்தில் முன்னாள் தூதுவர் நிரூபமா ராவ் வழங்கிய விருந்துபசாரத்தின்போது யுத்தத்தை முடிப்பதற்கு சீனாவும் இந்தியாவும் சம அளவில் எமக்கு உதவி செய்தன. ஆனால், சீனா அதற்கான கொடுப்பனவுகளை பெற்றுக்கொண்டது. ஆனால், இந்தியாவோ அதற்காக ஒருசதத்தையும் பெறவில்லையெ ன பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஆனால் இதனை வெளியே சொல்ல முடியாது. ஏனென்றால், தமிழக அரசின் எதிர்ப்புக்கள் கிளம்பும் என்றும் அவர் தெரிவித்தார் என்றும் அமைச்சர் ராஜித கூறினார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர்களாக ரெஜினோல்ட் குரே, சந்திரசிறி கஜதீர , வாசுதேவ நாணயக்கார ஆகியோரும் கலந்துகொண்டனர்.

http://www.virakesari.lk/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.