Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்: மனோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரப் பகிர்வு என்ற சிந்தனையே இறக்குமதி செய்யப்பட்ட மேற்குலக வெளிநாட்டு சிந்தனை என்று சொல்லி சிங்கள மக்களை தவறாக வழி  நடத்தி ஏமாற்றும் அரசியலை சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச, குணதாச அமரசேகர மற்றும் ஞானசார தேரர் ஆகியோர் செய்கிறார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

1965லும் இந்நாட்டு சிங்கள பிரதமர்கள் தமிழ் தலைவர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் அதிகாரப் பரவலாக்கல் கொள்கையை  மிகத் தெளிவாக  ஏற்றுக்கொண்டு இருந்தன. அந்த சந்தர்ப்பங்களில் இந்நாட்டின் மீது எந்தவித அமெரிக்க மற்றும் மேற்குலக அழுத்தங்களும் இருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே அதிகாரப்பகிர்வு என்பது இறக்குமதி செய்யப்பட்ட  மேற்குலக வெளிநாட்டு சிந்தனை என்பது பொய்யாகும். இந்த உண்மையை நாம் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டுசென்று கொண்டிருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய ஊடக மாநாட்டில்
உரையாற்றும்போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"இந்த கடினமான காரியத்தை புரிந்துகொண்ட இந்நாட்டில் வடக்கு, கிழக்கு,  மேற்கு, தெற்கு மற்றும் மற்றும் மலைநாடு ஆகிய அனைத்து பிரதேசங்களிலும்   வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களும் வெளிநாட்டு புலம்பெயர்ந்த தமிழர்களும் எமக்கு உதவிட வேண்டும்.

அதிகாரப் பகிர்வு என்பது மேற்குலக வெளிநாட்டு இறக்குமதி என்கிறார்கள். அதை இல்லை என்று நாம் நிரூபித்தால் இந்தியா தமிழர்களின் சார்பாக செயல்படுகிறது என்கிறார்கள். அதனால்தான் 13ஈம் திருத்தம் தொடர்பாக  இந்திய தலைவர்கள்  அழுத்தம் தருகிறார்கள் என்கிறார்கள்.

இந்தியா எங்கே தமிழர் சார்பாக செயல்படுகிறது? யுத்தத்தை நடத்தியதே இந்தியாதான் என்று யுத்தம் முடிந்ததும் ஜனாதிபதியே சொன்னார். அது மட்டும் அல்ல, கடைசி நேரத்தில் சில மேற்குலக நாடுகள் செய்த சில முயற்சிகளையும் தடுத்து நிறுத்தி உதவி செய்ததும் இந்தியா என அரசாங்கம் சொன்னது.

இன்று ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை வலுவிழக்க செய்ததும் இந்தியா என அரசாங்க அமைச்சர்கள் சொன்னார்கள். இதெல்லாம் என்ன தமிழர் சார்பான செயல்பாடுகளா? உண்மையில் இந்த இனவாதிகள், இந்த 13ஆம் திருத்தத்தை கூட ஏற்றுகொள்ள மறுப்பதற்கு வேறு இரண்டு காரணங்கள்தான் உள்ளன.

தேர்தல் நடந்தால் வட மாகாண சபை தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் சென்று விடும். தமிழர் பெரும்பான்மையாக வாழும் வடக்கில் தமிழர்களின் கட்சியான கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதை இந்த  இனவாதிகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இது முதல் காரணம்.

அடுத்தது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்கு வெளியே எந்த ஒரு எதிர்கட்சியும் இந்நாட்டில் எந்த ஒரு மாகாண சபையையோ மாநகர சபையையோ பிரதேச சபையையோ கைப்பற்றி விடக்கூடாது என்பது இவர்களது சித்தாந்தம்.

இந்த இவர்களது இனவாதம் காரணமாகவும் கட்சி அரசியல்வாதம் காரணமாகவும் இவர்கள் 13ஆம் திருத்தத்துக்கு எதிராக இல்லாத கட்டுகதைகளையெல்லாம் பேசுகிறார்கள்.

இதை  விடுத்து இந்த அரசு ஒன்றை செய்ய வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பாக தயா மாஸ்டரை முதலைமைச்சர் வேட்பாளராக போட்டு வடக்கு தேர்தலில் வெற்றி பெற்று காட்ட வேண்டும். அது முடியாது என்பதால்தான் இத்தனை ஆர்ப்பாட்டங்களும் செய்கிறார்கள். 

13ஆம் திருத்தம் தொடர்பில் அரசாங்கத்துக்கு உள்ளே மூன்று பிரிவினர் உள்ளார்கள் என்பதை நாம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அரசுக்கு உள்ளே 13ஆம் திருத்தம் அப்படியே இருக்க வேண்டும் என்று சொல்பவர்களும் உள்ளார்கள். 13ஆல் இருந்து காணி, பொலிஸ் அதிகாரங்களை அகற்றிவிட்டு அமுல் செய்ய வேண்டும் என சொல்பவர்களும் உள்ளார்கள்.

13ஐ ஒட்டு மொத்தமாக குழி தோண்டி புதைத்துவிட வேண்டும் என சொல்பவர்களும் உள்ளார்கள். இந்த மூன்றாவது பிரிவினர்தான் இன்று காட்டு கூச்சல் போடும் விமல் வீரவன்சவின் கட்சி, ஹெல உறுமய, பொதுபல சேனா மற்றும் சிங்கள ராவய,  ராவண பல சேனா மற்றும் தேசப்பற்று தேசிய இயக்கம் ஆகியோர் ஆகும்.

இவர்களுடன் பேசி பயன் இல்லை.  இவர்கள் 13ஆம் திருத்தத்தை முழுமையாக குழி தோண்டி புதைக்க நினைக்கிறார்கள். எந்த வித அதிகாரங்களும் தமிழ், முஸ்லிம்  மற்றும் சிங்கள கத்தோலிக்கர்களுக்கும்கூட பகிர்ந்து வழங்கப்படக்கூடாது என்பதுவே இவர்கள் கொள்கை. இவர்களுக்கு எதிரானதே எமது போராட்டம்" என்றார்.    

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/72471-2013-06-26-11-10-32.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.