Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெரிவுக்குழு பகிஷ்கரிப்புக்கான காரணங்களை இன்று மாலை வெளியிடுகின்றது கூட்டமைப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தெரிவுக்குழு பகிஷ்கரிப்புக்கான காரணங்களை இன்று மாலை வெளியிடுகின்றது கூட்டமைப்பு!

13வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக சிறிலங்கா அரசு நியமித்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்காதிருக்க தீர்மானித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பை இன்று சனிக்கிழமை மாலை அறிக்கையூடாக வெளியிடவுள்ளது.

இதில் தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு பங்கேற்காதமைக்கான காரணங்கள் குறித்து தெளிவாக அறிவிக்கப்படவுள்ளது.

கொழும்பு - பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள கூட்டமைப்பின் அலுவலகத்தில் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெறும் கூட்டத்தில் வைத்து கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன், இந்த அறிக்கையை வெளியிடவுள்ளார்.

தெரிவுக்குழுவில் பங்கேற்பதில்லையென கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற விசேட கூட்டத்தில் கூட்டமைப்பு தீர்மானித்துள்ள போதும், அதில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இன்று கூடி, இது தொடர்பில் ஆராய்ந்ததன் பின்னர், தலைவர் சம்பந்தன் அறிக்கை ஒன்றினூடாக கட்சியின் நிலைப்பாட்டை உத்தியோகபூர்வமாக வெளியிடவுள்ளார்.

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர்கள், செயலாளர்கள், முக்கியஸ்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூட்டமைப்பின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

அதேவேளை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவுக்குழுவில் பங்கேற்பதற்கு அரசிடம் நிபந்தனைகளை முன்வைத்துள்ளதுடன், இவற்றை அரசு ஏற்றுக்கொண்டால் மாத்திரமே அதில் தாம் பங்கேற்போம் எனவும், இல்லையெனில் பங்கேற்கமாட்டோம் எனவும் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளது.

அத்துடன், 13வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக அரசு நியமித்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்கமாட்டோம் என்று எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சியான ஜே.வி.பி. உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=b059e920-6531-4f22-b1d9-ea2c92dbcd25

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.