Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்குத் தேர்தலை தடுக்க உயர் நீதிமன்றத்தில் மனு ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்குத் தேர்தலை தடுக்க உயர் நீதிமன்றத்தில் மனு ?

நீதிமன்ற நடவடிக்கை மூலமாக வடமாகாண சபைத் தேர்தலைப் பிற்போடுவதற்கு அரசு திட்டமிட்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி அரசமைப்பின் 13 வது திருத்தம் மற்றும் மாகாண சபைகள் முறைமை என்பவற்றில் திருத்தங்களை மேற்கொள்ளாது, வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்படுமானால் அதன் மூலம் தென்பகுதி மக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும் எனக் குறிப்பிடப்படும் மனுவொன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதே அரசின் நோக்கமாக உள்ளது எனத் தெரிய வருகிறது.


இதற்கென அரசின் உயர் மட்டக் குழு ஒன்று தமது நவடிக்கைகள் குறித்து சந்தித்துப் பேசியுள்ளதாகவும் அத்தகைய மனுவொன்று சமர்ப்பிக்கப்படுவதாயின் அது பலம் பொருந்தியதொன்றாக அமைய வேண்டும் எனவும் அந்தக் குழுவினர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் மனு வலிதானதாக அமைவதற்கென சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதன் பொருட்டு மூத்த சட்டத்தரணிகள் ஐவர் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த மனு தயாரிக்கப்பட்டு உயர் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டால் அதன் விசாரணைகள் முடியும் வரை வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவதற்குத் தடை விதிக்குமாறும் உயர்நீதிமன்றத்திடம் மனுதாரர் சார்பாகக் கோரப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

http://onlineuthayan.com/News_More.php?id=476642136501559188

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.