Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ உதைப்பந்தாட்டக் கழகம்...

Featured Replies

942957_580368458680608_1367205018_n.jpg
தமிழீழ உதைப்பந்தாட்டக் கழகம்...

Tamil eelam Football association

  Tynwald Hill International Football Tournament - Tamileelam F.A Live Broadcast

Opening Ceremony

Thursday 4th July 2013- 12 Noon BST/ 7:00 AM EDT

Game 1

Thursday 4th July 2013- Sealand v Tamileelam- 7.30 PM BST/ 2:30 PM EDT

Game 2

Saturday 6th July 2013 - Occitania v Tamileelam- 7.00 PM BST/ 2:00 PM EDT

Finals Day

Sunday 7th July 2013 - Time: TBD

Tune into: www.tamileelamfa.org

 

  • தொடங்கியவர்

தமிழீழ கால்பந்தாட்ட அணி பங்கேற்கும் சர்வதேச போட்டி நேரடி ஒளிபரப்பு!

லண்டன்: தமிழீழ கால்பந்தாட்ட அணி (TEFA) பங்கேற்கும் முதல் சர்வதேசப் போட்டி இன்று நேரடியாக ஒளிபரப்பாகிறது.

தமிழீழ உதைபந்தாட்டக் கழகம் என்ற பெயரில் சர்வதேச அணி ஒன்றை ஈழத் தமிழர்கள் உருவாக்கியுள்ளனர்.

இந்த அணி சர்வதேச அணிகளுடன் மோதும் கால்பந்தாட்டப் போட்டி இன்று முதல் டின்வோல்ட் ஹில்லில் நடக்கிறது.

 

04-tamil-eelam-foot-ball-600.jpg

 

சென். ஜோன்ஸ், ஐல் ஒஃப் மான் (St.John's, Isle of Man) எனும் இடத்தில் நடைபெறும் இப்போட்டிகளில் தமிழீழ உதைபந்தாட்டக் கழகத்துடன் Sealand F.A., Alderney F.A., Raetia F.A., Occitania F.A. and St. John's United F.A. ஆகிய அணிகள் போட்டியிடுகின்றன.

தமிழீழ உதைபந்தாட்ட அணி இன்று Isle of Man என்ற இடத்தில் மற்றைய அணிகளுடன் மோதும் நிகழ்வை நேரடி ஒளிபரப்பு மூலம் அனைவரும் பார்க்க ஈழத் தமிழ் அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளன.

www.tamileelamfa.orgwww.tyouk.org ஆகிய தளங்களில் நேரடி ஒளிபரப்பைக் காணலாம். மேலும் விவரங்களுக்கு media@tyourk.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

இத்தகவலை அணியின் ஊடக ஒருங்கிணைப்பாளர் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

 

http://tamil.oneindia.in/news/2013/07/04/world-live-telecast-tamil-eelam-foot-ball-teams-match-178486.html

  • தொடங்கியவர்

உதைபந்தாட்டம் தமிழீழம் 5 - சீலாந்து 3 க்கு என்ற இலக்குடன் வெற்றி    

 
 

ஐக்கிய நாடுகள் சபையினால அங்கீகரிக்கபடதா நாடுகளுக்கான சர்வேதச கால்பந்து போட்டி இன்று  Isle of Man இல்  வெற்றிகரமாக தொடங்கியது.

குழு A 

4 July 2013 19:30 Sealand V Tamileelam FA

5 July 2013 19:30 Occitania V Sealand 

6 July 2013 19:00 Tamileelam FA V Occitania 

குழு B 

4 July 2013 14:30 St John’s UTD V Raetia 

5 July 2013 15:00 Alderney V St John’s UTD 

6 July 2013 14:00 Raetia V Alderney 

முதல் ஆட்டத்தில் குழு B  இல் இருந்து St John’s UTD அணியும் Raetia அணியினரும் மோதினர். St John’s UTD  அணியினர் ஆட்டம் முழுவதும் மேலோங்கி இருந்தனர். Raetia அணியனர் தங்களின் முழு பலத்துடன் போராடியும் இறுதியில் தோற்கடிக்கப்பட்டனர். St John’s தலா 3 goal களை தமதாக்கி போட்டியை வென்றது

இன்று மாலை எமது தமிழீழ அணி Sealand அணியுடன் மோதி இந்தபோட்டியை தொடங்கினார்கள் 

போட்டியில் பங்கு பெற்றியவர்களின் விபரம் பின்வருமாறு.

உமேஷ் சுந்தரலிங்கம் (பந்து காப்பாளன் ) 1

சிவரூபன் சத்தியமூர்த்தி (தடுப்பாளன் ) 5

கெவின் நாகேந்திரா (தடுப்பாளன் ) 18

அருண் விக்னேஸ்வராஜா (தடுப்பாளன் ) 6

மதன்ராஜ் உதயணன் (மத்திய விளையாட்டுனர் ) 14

கஜேந்திரன் பாலமுரளி (மத்திய விளையாட்டுனர் ) 15

மஹி நம்பியார் (மத்திய விளையாட்டுனர் ) 10

ரொன்சன் வல்லிபுரம் (மத்திய விளையாட்டுனர் ) 12

பிரஷாந்த் ராகவன் (எல்லை விளையாட்டுனர்) 20 (துணை அணித்தலைவர் )

 கவிந்தன் நவநீதகிருஷ்ணன் (எல்லை விளையாட்டுனர்) 9

மஜூரன் ஜெகநாதன் (முன்னேறி விளையாட்டுனர்) 7 அணித்தலைவர்

பனுஷந்த் குலேந்திரன் (முன்னேறி விளையாட்டுனர்) 8

ஷாசில்  நியாஸ் (முன்னேறி விளையாட்டுனர்) 4

மக்கள் நினைத்ததை விட எமது அணியினர் மிக உற்சாகமாக தமது திறமையை வெளிக்காட்டி உள்ளனர். அவர்களின் விளையாட்டு திறமை Isle of Man மக்களும் மற்றும் அனைத்து ரசிகர்களும் மெச்சும் வகையில் போட்டி விதிமுறைகளை மீளாது மிகவும்  கண்ணியமாக விளையாட்டை கையாண்டனர். 

இவர்களின் மிரட்டலான பந்து ஆளுமையால் எதிர் அணியினர் திக்குமுக்காடி போனதை கண்டு எமது ரசிகர்கள் பரவசம் அடைந்த காட்சிகள் ஏராளம்.

போட்டி அரை சுற்றில் தமிழ் ஈழ அணி 2 உதைபந்தாட்ட இலக்குகளையும் SeaLand அணியினர் 2 உதைபந்தாட்ட இலக்குகளையும் கொண்டு இருந்தனர் .

போட்டி இறுதியில் SeaLand அணியினர் 3 உதைபந்தாட்ட இலக்குகளையும் தமிழ் ஈழ அணியினர் 5 உதைபந்தாட்ட இலக்குகளையும் எடுத்து இந்த போட்டியை வெற்றிகொண்டு அடுத்த கட்டத்துக்கு முன்னேறி  உள்ளனர் 

உதைபந்தாட்ட இலக்கு அடித்த தமிழீழ அணி வீரர்களின் விபரம் வருமாறு 

பனுஷந்த் 2 உதைபந்தாட்ட இலக்கு களையும் (முதலாவது, இரண்டாவது)

மஜூரன் 3வது உதைபந்தாட்ட இலக்கையும் 

மதன்ராஜ் 4வது உதைபந்தாட்ட இலக்கையும் 

பிரஷாந்த் 5வது உதைபந்தாட்ட இலக்கையும்  கைப்பற்றி கொண்டனர்.

எமது அணியின் விளையாட்டு திறனை கண்ட மற்ற அணியினர் எமது அணி வீரர்களை பாரட்டியும் இனி வரும் போட்டிகளில் எமது அணி மிக பெரிய சவாலாக அமையும் என்று கூறி உள்ளனர்.

திரு. Malcom Blackburn, இந்த போட்டியின் ஒருங்கிணைப்பாளர் மெச்சி சொன்ன வார்தைகள் இங்கே "இது வரை நான் இங்கு பார்த்த விளையாட்டு எல்லாவற்றிலும் இன்று தமிழ் ஈழ அணியின் விளையாட்டு என்னை மிகவும் கவர்ந்தது" என்று தெரிவித்தார்.

1.jpg

2.jpg

3.jpg

4.jpg

5.jpg

6.jpg

7.jpg

8.jpg

9.jpg

10.jpg

http://www.sankathi24.com/news/31080/64/5---3/d,fullart.aspx

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிபெற்ற தமிழீழ அணியினருக்கு வாழ்த்துக்கள்..! :D

அட நாடு ஒன்றைத் தவிர மிச்சம் எல்லாம் இருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்

 

குழு A 
4 July 2013 19:30 Sealand V Tamileelam FA 
5 July 2013 19:30 Occitania V Sealand 
6 July 2013 19:00 Tamileelam FA V Occitania

குழு B 
4 July 2013 14:30 St John’s UTD V Raetia 
5 July 2013 15:00 Alderney V St John’s UTD 
6 July 2013 14:00 Raetia V Alderney

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.