Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தாபய ராஜபக்ஸ VS றோ (RAW)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் றோ உளவுப் பிரிவே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்கு பயிற்சி அளித்ததாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேசியப் பாதுகாப்பு விவகாரங்களில் முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்தன, ரணசிங்க பிரேமதாச மற்றும் சநிரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் சரியான தீர்மானங்களை எடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

1970களின் கடைக் கூற்றில் தமிழ் ஆயுதக் குழுக்கள் தலையெடுக்கத் தொடங்கியதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் விசாலமான ஓர் அமைப்பாக உருவெடுப்பதற்கு பிரதான ஏதுவாக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் அக்காலத்தில் நிலவிய உறவு விரிசலையே கருத வேண்டும். அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்திக்கும், இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவிற்கும் சுமூகமான உறவு காணப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது ஜனாதிபதிக்கு ஆலோசனைகளை வழங்கியவர்கள் தமிழ் இராணுக் குழுவொன்று தலைதூக்கி வருவதன் ஆபத்துக்களை துரதிஸ்டவசமாக புரிந்துகொள்ளவில்லை. 1980களில் தமிழகத்தில் பிரபாகரனும் குட்டிமனியும் கைது செய்யப்பட்ட போது இலங்கை அந்த விடயத்தை பெரிதாக பொருட்படுத்தத் தவறியது தெரிவித்துள்ளார்.

மேஜர் லயனல் பலகல்ல மற்றும் பிரதிக் காவல்துறை அத்தியட்சகர் புன்னியா டி சில்வா ஆகியோரை அரசாங்கம் இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது. எனினும் இந்தியா கைது செய்யப்பட்ட புலித் தலைவர்களை  விசாரணை செய்ய அனுமதிக்கவில்லை. அமைச்சரையோ உயர் அதிகாரியையோ அரசாங்கம் அனுப்பி வைக்கத் தவறியது. இவ்வாறான தவறுகளினாலேயே நாட்டின் சமாதானம் சீர்குலைந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கின் நிலைமைகள் குறித்து ஜெனரல் திஸ்ஸ வீரதுங்க, செய்த பரிந்துரைகளை ஜனாதிபதி ஜயவர்தன ஏற்றக்கொள்ள மறுத்துவிட்டார். 1983ம் ஆண்டு இனக்கலவரம் ஏற்படுவதற்கு ஜனாதிபதி ஜயவர்தனவே பொறுப்பு சொல்ல  வேண்டும். இனக் கலவரத்தை தடுக்காது, அனைத்து தமிழ் மக்களையும் யாழ்ப்பாணத்திற்கு கப்பல் மூலம் அனுப்பி வைத்தார். இதுவே, புலிகள் ஆட்களை திரட்டுவதற்கு வழியமைத்தது. யாழ்ப்பாண நூலக எரிப்பு போன்ற சம்பவங்களும் புலிகளுக்கு சாதகத்தன்மையை ஏற்படுத்தியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அதிகாரப் பகிர்வு யோசனைத் திட்டத்திற்கு இணங்கவில்லை, நாட்டை பிளவுபடுத்த வேண்டு;ம் என்றே விரும்பினார். பிரபாகரன் மாகாணசபை முறைமையை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்திய அமைதி காக்கும் படையினர் நாட்டுக்குள் பிரவேசித்தமை மேலும் பிரச்சினையை பூதாகாரமாக்கியது. தேவையான நேரத்தில் உரிய தலைமைத்துவம் வழங்கப்பட்டிருந்தால் 30 ஆண்டுகளாக யுத்தத்தை நீட்டிருக்க வேண்டியதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புச் செயலாளர் பதவியை பொறுப்பேற்ற போது நாடு இரண்டாக பிளவடைந்திருந்தது. வடக்கு கிழக்கின் பெரும்பான்மையான பிரதேசங்களை பிரபாகரனே நிர்வாகம் செய்திருந்தார். பிரபாகரன் இராணுவ அதிகாரங்களை கொண்டிருந்தார். அரசாங்க அதிகாரிகளுக்கு அரசாங்கம் சம்பளம் வழங்கிய போதிலும், அதிகாரிகள் பிரபாகரனின் கட்டளைகளை நிறைவேற்றினார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் அரசியல் ரீதியான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அபிவிருத்தியடைந்த ஜனநாயக நாடுகளாக குறிப்பிடப்படும் மேற்குலக நாடுகளிலும் சிறுபான்மையான மக்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு காண சில சட்டங்களை இயங்க வேண்டியது அவசியமாகின்றது. அரசாங்கம் இந்தப் பிரச்சினைகளக்கு தீர்வு காண வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. எனினும், இதனால்  வேறும் பிரச்சினைகள் ஏற்படாமல் இருப்பதனையும் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் அனைத்து பிரஜைகளையும் ஒரே விதமாக பார்க்க வேண்டும். சுதந்திரத்தின் பின்னர் பெரும்பான்மை மக்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். சிறுபான்மை மக்களை விடவும் பெரும்பான்மை மக்கள் அதிகளவு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். அநேகமான பிரச்சினைகளுக்கு அரசியல்வாதிகளே பொறுப்பு  சொல்ல வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

தமிழரா  அல்லது முஸ்லிமாக பிறந்த காரணத்தினால் ஏதேனும் நெருக்கடிகள் பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தால் அவற்றுக்கு தீர்வு காணப்பட வேண்டும். பேச்சுவார்த்தைகளின் மூலம் அந்தப் பிரச்சினைகளக்கு தீர்வு காணப்பட வேண்டும். சில பகுதிகளில் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் அதிகாரங்களை வழங்குவதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இலங்கையில் 100 வீதமான தமிழ், முஸ்லிம் அல்லது சிங்கள பிரதேசங்கள் கிடையாது. தமிழ் மக்கள் நாடு முழுவதிலும் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வாழ்வதற்கு எவ்வித தடைளோ இடையூறுகளோ கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

 

எந்தவொரு இலங்கையரும் நாட்டின் எந்தவொரு பகுதியிலும் வாழக்கூடிய சூழ்நிலை இருக்க வேண்டும். தமிழர்கள் நாட்டின் பல பகுதிகளில் வாழ்ந்து வரும் நிலையில் வடக்கு கிழக்கிற்கு மட்டும் அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதில் என்ன பயன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

கடந்த 30 ஆண்டுகளில் ஏனைய இன சமூகங்கள் வடக்கிற்குள் பிரவேசிக்க புலிகள் அனுமதியளிக்கவில்லை. புலிகள் வடக்கில் இனச் சுத்திரிப்பை மேற்கொண்டனர். தமிழர்கள் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் வந்து தங்க சந்தர்ப்பம் காணப்பட்டது. எனினும், சிங்களவர்கள் வடக்கிற்குள் பிரவேசிக்க அனுமதியளிக்கப்படவில்லை. 1980களில் திருகோணமலையில் பெருமளவில் சிங்களவர்கள் வாழ்ந்து வந்தனர், தற்போது அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

வடக்கில் 98 வீதமான காணிகளை தமிழர்கள் உரிமை கோருகின்றனர். இது நடைமுறைச் சாத்தியமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.

 

அதிகாரப் பகிர்வு தொடர்பில் எப்போதும் உடன்பாடு கிடையாது. நிர்வாக நோக்கத்திற்காக அதிகாரப் பகிரப்படுவதில் எவ்வித பிழையும் கிடையாது. எனினும், அதிகாரப் பகிர்வின் மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றால் அதில் எனக்கு உடன்பாடு கிடையாது. காவல்துறை அதிகாரங்களை வழங்குதவன் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்க முடியுமா. உதாரணமாக கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவரினால் முதலமைச்சராக முடியாது. ஜனாதிபதியின் விருப்பத்தின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். மலையகத்தில், ஊவா மாகாணத்தில், சபரகமுவ மாகாணத்தில் தமிழ் மக்கள் சிங்களவர்கள் மத்தியில் எவ்வித பிரச்சினையும்  இன்றி வாழ்ந்து வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

 

நாட்டின் தேசிய பிரச்சினைகளும் இராஜதந்திர உறவுகளும் இரு வேறுபட்ட விடயங்களாகும். அவற்றைக் குழப்பிக்கொள்ளக் கூடாது. இலங்கைப் பிரச்சினைக்கு இந்தியாவினால் தீர்வு வழங்க முடியாது. நாடுகளின் அழுத்தங்களுக்காக தேசத்தின் எதிர்காலத்தை சீர்குலைக்க இடமளிக்க முடியாது, அது நியாயமும் ஆகாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

13ம் திருத்தச் சட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். அதற்காக நான் அதிகாரம் பன்முகப்படுத்தப்படுவதனை நான் முழுமையாக எதிர்க்கவில்லை. அதிகாரம் பன்முகப்படுத்தப்படுவதன் மூலம் நாட்டின் ஸ்திரத்தன்மையும் சமாதானமும் ஏற்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இன,மத கலாச்சார அடையாளங்கள் தனித்துவமாக பேணுவதில் தவறில்லை என்ற போதிலும் ஒரே தேசம் என்ற கோட்பாட்டை முதன்மைப்படுத்த வேண்டும் என அவர்  தெரிவித்துள்ளார்.

 

அனைத்து வகையிலான கடும்போக்கு வாதங்களையும் எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

 

பொதுபல சேனா அமைப்பிற்கு  அடைக்கலம் வழங்குவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை. அரசியல்வாதிகள் தம்மீது சேறு பூசுவதற்காக இவ்வாறு குற்றம் சுமத்துகின்றனர். பொதுபல சேனா மட்டுமன்றி முஸ்லிம் அமைப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

 

பொதுபல சேனா அமைப்பை காப்பாற்ற முயற்சிக்கவில்லை எனினும் அநேகமான குற்றச் செயல்கள் பொதுபல சேனா அமைப்பினால் மேற்கொள்ளப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

 

எந்தவொரு தரப்பின் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட மாட்டாது என்ற உறுதி மொழியை வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் தமக்கு ஓரு வீடு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். சட்டவிரோத கடத்தல்கள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

வெள்ளைவான் கடத்தல்களுக்கும் தம் மீது குற்றம் சுமத்தப்பட்டதாகவும் நாட்டில் பாதாள உலகக் குழுக்களை இல்லாதொழிக்க கடமையாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

நாட்டின் நலனுக்காக சில கடுமையான தீர்மானங்களை எடுத்திருப்பதாகவும் இதில் பிழையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகவியலாளர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/93664/language/ta-IN/article.aspx

Naan nambeeddan !!!!!!!

 

Romba nallavaram....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.