Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் படையினருக்கு கரும்புலிக் காச்சல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாளை கரும்புலிகள் தினம்! தயார் நிலையில் இலங்கை இராணுவம்!!

 

நாளைய தினம் உலகளாவிய ரீதியில் விடுதலைப் புலிகளது கரும்புலிகள் தினத்திற்கு பல தமிழ் அமைப்புகள் தயாராகிவருகின்ற நிலையில் இலங்கைப் படையினரும் அதற்கு தயாராகி வருகின்றனர். அதற்காக அவர்கள் தமிழ் பிரதேசங்கள் எங்கும் அலைந்து திரிகின்றனர்.

 

வல்வெட்டித்துறையினை சேர்ந்தவரான 46  வயதுடைய செல்லப்பன் அருமைரத்தினம் என்பவர் ஓட்டோ சாரதியாவார். புற்றுநோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்றைய தினம் தற்கொலை செய்து கொண்டிருந்தார். அவரிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வல்வெட்டித்துறை நகரப்பகுதியில் அவரது சகபாடிகளான ஓட்டோ சாரதிகள் தமது ஓட்டோ தரிப்பிடங்களில் கறுப்பு கொடிகளை கட்டி பறக்கவிட்டுள்ளனர்.

எனினும் அவ்விடத்திற்கு விரைந்து சென்ற வல்வெட்டித்துறை படை முகாமினை சேர்ந்த படையினர் ஓட்டோ சாரதிகளை தாக்க முற்பட்டதுடன் அங்கு கட்டப்பட்ட கொடிகளை அறுத்தெறிந்துள்ளனர். நாளைய கரும்புலி தினத்தை முன்னிட்டே இக்கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டதாக கூறி சாரதிகளை அவர்கள் மிரட்டியுமுள்ளனர். அத்துடன் அங்கு நின்றிருந்த ஓட்டோசாரதிகளிற்கு கொலை மிரட்டலை விடுத்துமுள்ளனர்.

 

எனினும் பின்னர் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்த ஒட்டோ சாரதிகள் அவரது வழிநடத்தலில் மீண்டும் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டுள்ளனர். அருகாக பொலிஸ் நிலையமென்பவை அமைந்துள்ள நிலையில் பதற்றமான சூழல் தற்போது வரை நீடிப்பதாகவும் பொலிஸார் பின்னர் குவிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரியவருகின்றது.

 

தமது உயிரிழந்த சகபாடிக்கு அஞ்சலி செலுத்துவதற்கான அனுமதி மறுக்கப்படும் வாழ்க்கையே இங்கிருப்பதாக ஓட்டோ சாரதிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

1987ம் ஆண்டின் யூலை 5ம் திகதி விடுதலைப்புலிகளது முதலாவது கரும்புலித் தாக்குதல் நெல்லியடி மத்தியமகா வித்தியாலயத்தில் நிலை கொண்டிருந்த இராணுவம் மீது நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/93660/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.