Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தந்தைமார் 35அடி உயரத்திலிருந்து குதிக்கும்போது புதல்வர்கள் 35000அடி உயரத்திலிருந்து குதிக்க முயற்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தந்தைமார் 35 அடி உயரத்தில் இருந்து குதிக்கும் போது, புதல்வர்கள் 35000 அடி உயரத்தில் இருந்து குதிக்க முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றஉறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துளளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அதேவளை எதிர்வரும் மாகாண சபை தேர்தலில்  அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களின் புதல்வர்கள் பலர் போட்டியிட உள்ளதாகவும் அமைச்சர்கள் பலரின் புதல்வர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் பல இடங்களில் தற்போது, உரத்திற்கான தட்டுப்பாடு நிலவுகிறது. 350 ரூபாவுக்கு உரத்தை வழங்குவதாக கூறி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. தற்போது உர பொதி ஒன்றின் விலை 1500 ரூபா.  இதனை விவசாயிகளால் கொடுக்க முடியாதுள்ளது. அத்துடன் 13 எனற புதிய திரைப்படம் களத்தில் இறக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்கவும் விமல் வீரவன்சவும் பங்களிப்பு வழங்கி வருகின்றனர். ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தை சேர்ந்த 21 மாணவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்பு தடை தொடர்பில் இதுவரை  எந்த தீர்மானமும் அரசாங்கத்தினால் எடுக்கப்படவில்லை. நாட்டில் உள்ள 69 வீதமான புதையிரத கடவைகள் பாதுகாப்பற்றவை, அவற்றை நிர்மாணிக்க 3 மில்லியன் ரூபா தேவைப்படுகிறது. ஆனால் அரசாங்கம் அமைச்சர்களை போஷிப்பதற்காக 04 பில்லியன் ரூபா பணத்தை செலவிடுகிறது எனவும் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/93663/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.