Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவில் இழுபறி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

tna60x60(13)(11).jpg

வடமாகாண சபைத்தேர்தலுக்கான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரை தெரிவுசெய்வது இழுபறியில் முடிந்தமையினால், முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் எவ்விதமான தீர்மானமும் எடுக்கப்படாமல் நேற்றையக்கூட்டம் நிறைவடைந்தது.

இந்நிலையில், முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை கூடி ஆராய்ந்து முடிவெடுப்பதற்கு நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் கொழும்பில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைச் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. 

இந்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன், செல்வராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் சங்கையா, கிருஷ்ணபிள்ளை, ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச்சந்திரன், சர்வேஸ்வரன். ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், சிறீகாந்தா, ஹென்ரி மகேந்திரன், கருணாகரன், புளொட் சார்பில் அதன் தலைவர் த.சித்தார்த்தன், க.சிவநேசன் (பவன்), ராகவன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இந்தக் கூட்டத்தில் தேர்தல் நியமனக் குழுவும், நிதிக்குழுவும் பிரச்சாரக்குழுவும் நியமிக்கப்பட்டது.

பின்னர் வடமாகாண தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சம்பந்தமாக நீண்டநேரம் ஆராயப்பட்டது.

முன்னாள் பிரதம நீதியரசர் விக்னேஸ்வரனை வடமாகாண முதலமைச்சர்  வேட்பாளராக கூட்டமைப்பின் சார்பில் களமிறக்கவேண்டும் என்று இரா.சம்பந்தன் முன்மொழிந்ததுடன். அவரையே நியமிக்கவேண்டுமென ஆணித்தரமாக கூறிநின்றார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளையில், ஏனைய கட்சிகளைச் சேர்ந்த பிரதநிதிகள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கவேண்டும் என்று கோரிநின்றதுடன் தங்களுடைய கோரிக்கையை  ஆதரித்து கருத்துக்களை மிகவும் ஆணித்தரமாக முன்வைத்தனர்.

இந்நிலையில், முதலமைச்சர் வேட்பாளராக கூட்டமைப்பின் சார்பில் யாரை நிறுத்துவது என்று ஏகமனதாக முடிவெடிக்கமுடியாமையினால்   ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்றுவரை பிற்போடப்பட்டது.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/74687-2013-07-11-17-13-44.html

  • கருத்துக்கள உறவுகள்

இது நடக்கும்....இவை இப்படி சண்டைபோட...மகிந்த சுலபமா அடிப்பான்...எப்ப விட்டது கதிரை ஆசை..

மாவை அவ்வளவு கெதியாக சம்பந்தர் சொல்லவதை முறிக்க மாட்டார். ஆனால் தமிழரசுக்கட்சி மட்டுமல்ல மற்றகட்சிகளும் தமக்குள் தாம் தேவை இல்லாத போட்டியில் இறங்குகிறார்கள். போட்டிப்பயத்தால் தான் சம்பந்தரின் சொல்லு ஏறுதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

2090029504858707Sampanthan.gif

விக்னேஸ்வரனே முதலமைச்சர் வேட்பாளர்: விடாபிடியில் சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று மாலை 5 மணியளவில் கொழும்பில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது. 


தமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராஜா, சுமந்திரன், செல்வராஜா, தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் சங்கையா, கிருஷ்ணபிள்ளை, ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச்சந்திரன், துரைரெத்தினம், சர்வேஸ்வரன், ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், சிறீகாந்தா, ஹென்ரி மகேந்திரன், கருணாகரன், புளொட் சார்பில் அதன் தலைவர் த.சித்தார்த்தன், க.சிவநேசன் (பவன்), ராகவன் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். 


இந்தக் கூட்டத்தில் தேர்தல் நியமனக் குழுவும், நிதிக்குழுவும் பிரச்சாரக்குழுவும் நியமிக்கப்பட்டது. பின்பு முதலமைச்சர் வேட்பாளர் சம்பந்தமாக நீண்டநேரம் ஆராயப்பட்டது. 

விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக வரவேண்டும் என்பதை இரா.சம்பந்தன் மிகவும் ஆணித்தரமாக ஆதரித்து நின்றார். 

அதேவேளையில் மற்றைய கட்சிகளைச் சேர்ந்த பிரதநிதிகள் மாவை சேனாதிராஜா முதலமைச்சர் வேட்பாளராக வரவேண்டும் என்பதை ஆதரித்து தங்களுடைய கருத்துக்களைக் மிகவும் ஆணித்தரமாக கூறினார்கள். 

இந்தப் பிரச்சினை இழுபறி நிலையை அடைந்ததால் ஒரு முடிவில்லாமல் கூட்டம் இன்றுவரை பிற்போடப்பட்டுள்ளது. 
 

மாவை வந்தால் இந்தியா சொல்வதற்கு தலை ஆட்டுவார். விக்னேஸ்வரன் அவர்கள் வந்தால் நீதியா செயல்படுவார். சர்வதேச மட்டத்திலும் ஒரு நல்ல பெயர் இருக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.