Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடத்துவோர் - வரி ஏய்ப்போர் - போதைப்பொருள் விற்பனையாளர் பாதாள உலக கோஷ்டியினர் அதிகளவானோர் முஸ்லிம்களே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடத்துவோர் - வரி ஏய்ப்போர் - போதைப்பொருள் விற்பனையாளர் பாதாள உலக கோஷ்டியினர் அதிகளவானோர் முஸ்லிம்களே
13 ஜூலை 2013

கலகொட அத்தே ஞானசார தேரரரின் ஞான உபதேசம் தொடர்கிறது


Gotabaya_Rajapaksa_with_Bodu_Bala_Sena_C
 
இலங்கையில் அதிக கடத்தலில் ஈடுபடுதல், வருமான வரி ஏய்ப்பவர்கள், போதைப்பொருள் விநியோகிஸ்த்தர்கள்;, பாதாள உலக ஜாம்பவான்கள்; பெரும்பாலானவர்கள் முஸ்லிம்களாகவே இருக்கிறார்கள் என பொது பலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞான சார தேரர் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.

முஸ்லிம் மக்களுக்கு எதிராக பொதுபலசேனா செயற்படுகின்றது என்ற கருத்து முற்றிலும் பிழையானதெனக் கூறிய அவர் தமிழ் மக்களுக்கெதிராகவோ, முஸ்லிம் மக்களுக்கெதிராகவோ அல்லது வேறு எந்த குழுக்களுக்கு எதிராகவோ தாம் செயற்படவில்லை என வலியுறுத்தி உள்ளார்.

'நாம் ஒரு பொதுவான அமைப்பு என்ற ரீதியில் முஸ்லிம் அடிப்படைவாதம் சம்பந்தமாக எமது கொள்கையொன்றை முன்வைத்துள்ளோம். சுமார் 30 வருடகாலமாக புலிப் பயங்கரவாதத்தால் தமிழ் மக்கள் மாத்திரம் அல்ல அனைத்து மக்களும் பல துன்பங்களை அனுபவித்தோம். ஓரிருவரால் முன்னனெடுக்கப்பட்ட அரசியல் முறையினால், தமிழ், சிங்கள மக்களுக்கிடையே பாரதூரமான பிளவு ஏற்பட்டது.

புலிப்பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட வேளையில், இலங்கையில் மாத்திரம் அல்ல உலகளாவிய ரீதியில் முஸ்லிம் அடிப்படை வாதம் பாரதூரமாக முன்னெடுக்கப்படுகின்றது. முஸ்லிம் அடிப்படைவாதத்தை பரப்புவதற்காக இந்நாட்டிலும் சிறு சிறு குழுக்கள் ஆரம்பித்துள்ளன.

இவ்வாறான நடவடிக்கைகளால் சிங்கள மக்களுக்கு மாத்திரம் அல்ல வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், நாம் ஒரு பொதுவான அமைப்பு என்ற ரீதியில் விஷேடமாக தேரர்கள் என்ற ரீதியில், எமது கொள்கையை முன்வைத்தோம். ஆனால், எமது முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிராக அவர்களை இலக்கு வைத்து நாம் கொள்கைகளை உருவாக்கவில்லை.
 
இது ஒரு பௌத்த சிங்கள நாடு என்பதை யாவரும் அறிவார். இருந்தாலும் மூவினத்தவரும் சுமூகமாக வாழ வேண்டும் என்பதையே நாம் விரும்புகின்றோம்.
அல்கொய்தா, தலிபான், தௌஹீத் ஆகிய அமைப்புக்கள் நாடுகளில் ஏகத்துவ கொள்கையை பரப்பு வதற்கு நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகின்றது.
இதற்குள் முஸ்லிம் சமூகத்தை நுழைப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அரசியல் வாதிகள் எவரும் வாய்திறப்பதில்லை.

பள்ளிவாசல்கள் மீது நாம் தாக்குதல் நடத்தவில்லை. முஸ்லிம்கள் அணியும் நிகாப், புர்கா அணிவதற்கு நிச்சயமாக தடை விதிக்க வேண்டும். இதில் அநியாயம் ஒன்றும் இல்லை.

இவ்வாறான ஆடைகளை அணிந்து கொண்டு பல்வேறுகுற்றச் செயல்கள் இடம்பெறுகின்றன. ஒருவர் நிகாப், புர்காவை அணிந்து வந்தால் அவர் ஆணா? பெண்ணா? ஏன் கொள்ளைக்காரரா என்று கூட எம்மால் அடையாளம் காணமுடியாது.
உதாரணமாக அண்மையில் மாளிகாவத்தையில் இடம்பெற்ற சம்பவத்தைக் கூறலாம். கொலை செய்யப்பட்ட மஸ்மி புர்கா அணிந்து முஸ்லிம் பெண்னொருவர் போல பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டார் என்றே கூறப்பட்டுள்ளது.

இதனால் விஷேட அதிரடிப்படையினருக்கு, சம்பந்தப்பட்ட நபரை விரைவில் அடையாளம் கண்டுகொள்வதில் பெரும் சிரமமாக இருந்தது. எம்மால் இந்த ஆடைக்குள் யார் இருக்கின்றது என்பதை அடையாளம் காண முடியாதல்லவா? இது ஒரு பாரதூரமான பிரச்சினை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி வீரகேசரி

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/93984/language/ta-IN/article.aspx

அது மட்டும் இல்லை...  தலைக்கு மேலை தொப்பி போடுகிற ஆக்களும் கணுக்காலுக்கு மேலை சாறம் கட்டுறதும் முஸ்லீம்கள் தான்...     

 

ஒரு காலத்திலை தமிழர் பயங்கர வாதிகள் எண்டு சொன்னது போல தான் இதுவும்...   என்ன  தமிழர்கள் போராடவாவது செய்தார்கள் முஸ்லீம்கள் தன்னை சொல்லவில்லை பக்கத்து வீட்டுக்காறனை எண்று போட்டு இருப்பார்கள்... இது நல்லதோ கெட்டதோ நான் அறியேன்... 

  • கருத்துக்கள உறவுகள்

கடத்துவோர் - வரி ஏய்ப்போர் - போதைப்பொருள் விற்பனையாளர் பாதாள உலக கோஷ்டியினர் அதிகளவானோர் முஸ்லிம்களே

 

பொதுமக்களைத்துன்புறுத்துதல்

கொல்லுதல்

உயிருடன் எரித்தல்

புதைத்தல்

வன்புணர்வு  செய்தல்

நிலங்களைப்பறித்தல்

அத்துமீறி புத்தவிகாரைகளை  அமைத்தல்

பாடசாலைகள் வைத்தியசாலைகள் மீது குண்டு போடுதல் மற்றும் சர்வதேசத்தால் ஒழிக்கப்பட்ட நாசகார குண்டுகளைப்பாவித்து போர் செய்தல் என்ற  பயங்கரவாத  செயல்களில் ஈடுபடல்..........

வெள்ளைவான் கடத்துதல்

கப்பம் கோருதல்

குண்டர்படையை  வைத்திருத்தல்

ஒட்டுக்குழுக்களை  வைத்திருத்தல்

தேர்தல்களில் இராணுவத்தை வாக்கு வேட்டைக்கு பாவித்தல்

வெளிநாட்டு தூதரங்களை அடித்து    நொருக்குதல்

.........................

................................  இவர்கள்  தான் சிங்களவர்கள். :(  :(  :(

 

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறான நடவடிக்கைகளால் சிங்கள மக்களுக்கு மாத்திரம் அல்ல வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஐயோ நெஞ்சு பொறுக்குதில்லை

Edited by putthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.