Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் அமளியுடன் நடைபெற்ற மனிதவுரிமை அமைப்பின்; கூட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டனில் சர்வதேச மனிதவுரிமைச் சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட "இலங்கையின் மனிதவுரிமை விடயங்களை பற்றிய புலம்பெயர்ந்த மக்களிடையான கலந்துரையாடல் தாங்கள் ஜனநாயவாதிகள் என்று சொல்லித்திரியும் ஆதரவாளர்களின குறுக்கீட்டினால் குழப்பத்துடன் நடந்து முடிந்தது. இன்று பிற்பகல் 2 மணிக்கு மத்திய லண்டனில் அமைந்துள்ள சர்வதேச மனிதவுரிமைச் சபை மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டம் "காணமற் போதல் பற்றிய கேள்வியும் விசாரணைகளற்ற கொலைகளும் உட்பட குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள்" என்ற தலைப்பில் ஐ.நா. சபை விசேட விசாரணையாளர் பிலிப் அல்ஸ்டன் என்பவரது ஆய்வறிக்கையை மையப்படுத்தியே நடாத்தப்பட்டது. இவ்வைபவத்தில் உரையாற்றிய திரு. பிலிப் அல்ஸ்டன் கடந்த வருட இறுதியில் கிழக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகள், வன்னிப் பெருநிலப்பரப்பு, மற்றும் அரச கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு தான் பயணம் செய்து நிலமையை நேரில் கண்டறிந்ததாகக் குறிப்பிட்டார். தனது அறிக்கையில் சிறிலங்கா அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் சில பரிந்துரைகளை செய்திருப்தாக குறிப்பிட்ட அவர், அவை பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார்.

திரு.அல்ஸ்டனை தொடர்ந்து அமெரிக்க Human Right Watch, Amnesty International ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இங்கு உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து வந்த ஒருமணி நேரமும் பார்வையாளருக்கான கேள்வி நேரமாக ஒதுக்கப்பட்டது. கூட்டத்தில் கமராவை வைத்திருந்த ஒருவரிடமிருந்து அதனை பறிக்க "பவுடர்" தீபன் என்பவர் முயற்சித்த போது கூட்டம் குழம்பிவிடும் நிலைக்கு சென்றது. இருப்பினும் கமரா உரிமையாளர் தான் எடுத்த படங்களை அழிப்பதாக உறுதியளித்த பின்னர் கேள்வி நேரம் ஆரம்பமாகினாலும் பெருத்த இடையூறுகளின் மத்தியிலேயே நடைபெற்றது. வயோதிபர் ஒருவர் "சுனாமி முகாம்களிலிருந்து தற்கொலைப் போராளிகள்" என்ற தலைப்பில் வெளியான கட்டுரையொன்றை மேற்கோள் காட்டி விடுதலைப்புலிகள் மீது ஆதரமற்ற விசமத்தனமான குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது என்பதை குறிப்பிட்ட போது, ஜனநாயகவாதிகள் என்ற பெயரில் நடமாடும் சிலர் அவரை பேசவிடாது குறுக்கிட்டனர். பின்னர் தமிழ் இளையோர் அமைப்பின் பிரதிநிதி ஒருவர் உரையாற்றிய போதும் இப்படியான குறுக்கீடுகள் தொடர்ந்தன. வடக்கு லண்டன் பகுதியை சேர்ந்த தமிழர் விடுதலைக்கூட்டணியின் பிரதிநிதியும் குடும்ப வைத்தியருமான நிக்கலஸ்பிள்ளை இப்படியான குறுக்கீடுகளை செய்ததோடு கெட்டவார்த்தைகளால் திட்டிக்கொண்டிருந்தார்.

பசீர் என்பவர் தனது கேள்வி நேரத்தில் முன்னர் காத்தான்குடியில் முஸ்லீம்கள் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டி கடந்த சில நாட்களில் 100 முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டதாக குறிப்பிட்ட போது. சபையிலிருந்து "பொய் பேசுகிறார்", "ரவூப் ஹக்கீமைக் கேட்டுப்பார்" லண்டன் பாபா எனப்படும் சுரேஸ் மற்றும் சபையிலிருந்தோர் சத்தமிட்டதை தொடர்ந்து அவமானத்தால் மண்டபத்தை விட்டு வெளியேறினார். பின்னர் அமிர்தலிங்கத்தின் மகன் தலையிட்டு அவரை அழைத்து வந்தார். தமிழர் விடுதலைக்கூட்டணியைச் சேர்ந்த நிக்கலஸ் பிள்ளை "கண்ணி வெடிகள்" "தொலைவிலிருந்து ,யக்கும் துப்பாக்கிகளை தடைசெய்ய முடியாதா (Black Listing) எனக் கேட்டபோது. சர்வதேச விதிகளுக்கமைய கண்ணி வெடிகள் தடைசெய்யப்பட்டுள்ளதையும் சிறிலங்காவும் அதனை பின்பற்ற வேண்டும் என பதில்வழங்கப்பட்டது. லண்டன் சிங்கள அமைப்பைச் சேர்ந்த டக்கிளஸ் விக்கிரமரத்ன என்பவர் யுத்த நிறுத்தகாலத்தில் விடுதலைப்புலிகள் கொழும்பில் நூற்றுக்கணக்கான தமிழர்களை கொன்றுள்ளதாக குறிப்பிட்டபோதும், அவரை நோக்கி எதிர்க் கேள்விகள் எழுப்பப்பட்டன. அல்ஸடனின் அறிக்கையை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது எனத்தெரிவித்த தமிழ் தொழிநுட்பவியலாளர்கள் சங்கப் பிரதிநிதியொருவர் தனது கேள்விகளை எழுத்து மூலம் கையளித்தார். கால அவகாசமின்மையால் அவற்றுக்கு பதில் வழங்க முடியாதுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

பசீரை மீள கேள்வி கேட்க அனுமதிக்குமாறு பெண்மணியொருவர் கேட்டுக்கொண்டபோதும் ஏற்கனவே சந்தர்ப்பம் வழங்கப்பட்டதால் அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

தொடர்ந்தும் பலர் கேள்விகளை கேட்டபோதும் குறுக்கீடுகள் தொடர்ந்த வண்ணமிருந்தது. குறுக்கிட்டு மற்றவர்களை பேசவிடாது தடுத்த ஒட்டுக்குழுக்களின் ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக கெட்ட வார்த்தைகளினால் திட்டியவண்ணமும் இருந்தனர். அங்கு வந்திருந்தோருக்கு விசனத்தை கொடுத்தது. இவர்களைவிட "gangsters" பரவாயில்லை என ஒரு வயதான பெண்மணி கூறினார்

கூட்டம் முடிவில் முன்னணிக்கு வந்த "பவுடர்" சாக்குத் தீபன் என்பவர் கமராவுடன் நின்ற இளைஞன் ஒருவனை சுட்டிக்காட்டி "உண்டியலான்" ஜெயதேவன் என்பவரிடம். "ஜெயா அண்ணா இவனின் வீடு தெரியும் வீடு புகுந்து செய்கிறேன்" என உரக்க கூறியதை கேட்கக்கூடியதாக இருந்தது. சர்வதேச மன்னிப்புச் சபையின் மண்டபத்திலேயே இந்த மிரட்டல் நடைபெற்றதை பார்த்து பலரும் வெட்கப்பட்டனர். இதுவிடயமாக Holborn பொலிஸ் நிலையித்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பின்னர் அந்த இளைஞர் தெரிவித்தார்.

இதேவேளை அங்கு வந்திருந்த தமிழ்த் தேசிய ஆதரவாளாகளை மிரட்டும் நோக்கில் பல கமராக்களை வைத்து புகைப்படங்கள் எடுத்த ஒட்டுக்குழுக்களின் ஆதரவாளர் ஒருவரை, அப்படங்களை நீக்குமாறு கூறி அங்கு நின்றிருந்த பெண் ஊழியர் ஒருவர் அணுகியபோது "நான் ஒரு வைத்தியர். இப்படியான புகைப்படங்கள் எடுக்கும் வேலையை நான் செய்வதில்லை" என்று அவரால் பதிலளிக்கப்பட்டது. அதற்கு அவ்வூளியரோ "நீங்கள் மூன்று கமராக்களை இங்கு கையில் வைத்திருக்கிறீர்கள். அவற்றை உண்பதற்கா இங்கு கொண்டு வந்தீர்கள்?" எனக் கேள்வியும் கேட்டு "சமுதாயத்தில் உயர் கல்வி கற்றவர்களும் கிறிமினல்களாக இருக்கிறார்கள்" என்று எடுத்துரைத்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

http://www.nitharsanam.com/?art=19934

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா...

உந்தக் கூட்டம் வழமையாக வருடா வருடம் கூலிக்கும்பல்களும், அவர்களது வடிகளும் மட்டும்தானாம் இருந்து நடக்கிறதாம். ஆனால் இந்த முறைதானாம் கொஞ்ச தமிழ்த் தேசிய ஆதரவாளர்களும் சென்றிருந்தார்களாம். ஆனால் வந்ததுகளில் முக்கால்வாசி கூலிக்கும்பல் தானாம். ஆனால் சென்ற சில தேசிய ஆதரவாளர்களோ, இக்கூட்டத்தில் தேசியத்துக்கு ஆதரவான பிரச்சாரமாக மாற்றி விட்டு வந்திருக்கிறார்களாம்.

இதில் குறிப்பிடும்படியாக, இக்கூட்டத்துக்கு முக்கால்வாசிப்பேர் கூலிகளின் அடிவருடிகள் சென்றிருந்தாலும், இரண்டு மூன்றுதானாம் கேள்வி கேட்டதாம்! உந்த இரண்டு, மூன்றைத் தவிர மிச்ச வந்த கூலிகளின் அடிவருடிகளெல்லாம் பி.எச்.டி முடித்த கும்பலாம்!! அவையளுக்கு ஆ.ங்.கி.ல.ம் எண்டால் புலமையோ புலமையாம்!! மற்றது ஆ...விலை கதைக்கவும் விருப்பமில்லையாம்! ஓஒ... அது த..விலை ஓவெண்ட பற்றாம்!! பூஊஊஊ...... மூச்சுக்குக் கூட உந்த ஆ...வு வராதாம்!!!

மற்றும் உந்தக் கூட்டத்துக்கு இலட்சக்கணக்கில் ஈழத்தமிழ் மக்கள் இருக்கும் பிரித்தாணியாவில் சிலரே வந்தது ஆச்சரியமாயும் இருந்தது. ஏன் இங்குள்ள பூசாரிகளுக்கு இக்கூட்டம் முக்கியமானதாகத் தெரியவில்லையோ???? இல்லை, இது வழமையாக பூசாரிகளின் கவனக் குறைவோ???? ... யாமறியோன் ஈ...பதீஸானே!!!

அரோகரா....

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப எங்கடை குருவிகளும் அந்த பக்கம் பறந்து திரிந்தவரா யெயதேவன் அண்ணா??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெயடேவன், எனக்கு வேலை காரணமாய இந்த கூட்டத்துக்கு வரேலாமல் போட்டுது. சில தகவல்கள் தேவையாயிருக்கு..

இந்த கூட்டததை பின்னணியில நிண்டு நடத்தினது நிர்;மலா நித்தியானந்தன் ராகவன் ராசசிங்கம் என்ற பெண் என சொல்லிறாங்கள் உண்மையா?

உண்டியலானும் அவனோடை சேரந்து சங்கு ஊதிற விவேக் பண்டாரமும் வந்தவயோ?

பிபிசி ஆனந்தி ஒசாமா பசிரை தாக்கியதாக விழிப்பு எண்ட வெப்சைட்டில் இருக்கு உண்மையா?

அடுத்த முறை இப்பிடியேது கூட்டம் நடந்தா யாழ் மூலமாக தெரியத்தாருங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.